ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 31, 2020

#12 - பஞ்சதன்மாத்ர சந்தி

#12 - பஞ்சதன்மாத்ர சந்தி


பா4ரப்4ருன் நாமக1ஸாவிர
தா3ருனூரிப்பத்து நாலகு1
மூருதிக3ளு சராசரதி3 ர்வத்ர தும்பி3ஹவு |
ஆரு நாலகு ஜடக3ளலி ஹதி3
நாரு சேதனக3ளலி சிந்திஸெ
தோரிகொம்ப3னு தன்னரூபவ கல டா2வினலி ||12

பாரப்ருன் நாமகன = பாரப்ருத் என்னும் பெயருள்ள (பரமாத்மனின்)
சாவிரதார நூரிப்பத்து நால்கு = 1624
மூருதிகளு = ரூபங்கள்
சராசரதி = சராசரங்கள் நிறைந்த உலகத்தில்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹவு = வியாபித்துக் கொண்டிருக்கிறார்
ஆரு நாலகு ஜடகளலி = ஸ்தூல தேகத்தில் இருக்கும், 6*4=24 ஜடபூதமான ப்ருதிவ்யாதி தத்வங்களில்
ஹதினாரு சேதனகளலி = 16 கலாபிமானிகளான 16 தத்வங்களில்
சிந்திஸெ = சிந்தித்தால்
சர்வடாவினலி = அனைத்து இடங்களிலும்
தன்னரூபவ = தன் ரூபங்களை
தோரிகொம்பனு = அபரோக்‌ஷத்தில் காட்டுகிறான்.

பாரப்ருத் என்னும் பெயருள்ள பரமாத்மனின் பெயர் எண்ணிக்கையின்படி = பா=4 ர=2 ப்ரு=6 த்=1, 4261 இதை வலப்பக்கமாக படித்தால், 1624 ஆகிறது. சராசராத்மக உலகத்தில் இவ்வளவு மூர்த்திகள் இருக்கின்றன. பிரபஞ்சத்தையே தாங்கியிருப்பதால், அதிலிருந்தும் பிராணிகளின் யோகக்‌ஷேம பாரத்தையும் தாங்குகிறான் என்று பொருள். ஆகையாலேயே, பரமாத்மனுக்கு பாரப்ருத்என்று பெயர். மற்றும் ஸ்தூல சரீரத்தில் இருக்கும் 24 தத்வங்கள், ப்ருதிவ்யாதி ஜடமாகையால் அவற்றில் தத்ரூபனாக இருக்கிறான். 16 கலைகளால் கூடிய லிங்க சரீரத்திலும், ஸ்தூல சரீரத்திலும்கூட ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, மகாபூதங்கள் 5, மனஸ் 1, இவற்றின் அபிமானி தேவதைகள் சேதனராகையால், ’16 சேதனர்களில்என்று சொல்கிறார்.

24ல் 16 சேதனர்களை மட்டும் ஏன் எடுத்துக்கொண்டார் என்றால், பஞ்சபூதங்களை எடுத்துக்கொண்டால், சூரியனை விட்டு அதன் கிரணங்கள் எப்படி வேறாவதில்லையோ, அதுபோல தன்மாத்ரா குணங்கள், ப்ருதிவி ஆகியவற்றை விட்டு தனியாக இருக்காமல், ப்ருதிவியின் குணம் கந்த, தண்ணீரின் குணம் ரஸ, இப்படி இவை ஒன்றுக்கொன்று சேர்ந்தே இருக்கின்றன. அவற்றிற்கு ஞானம் தனியாக இருக்காமல், ஞானேந்திரியங்களே இருப்பிடமாக இருப்பதால், அதாவது, கந்த குணத்தைக் கொண்ட பூத தத்வத்திற்கு மூக்கு இருப்பிடமாகவும், தேஜஸ் குணத்தைக் கொண்ட பூத தத்வத்திற்கு கண் இருப்பிடமாகவும் இருப்பதால், அந்த தன்மாத்ரா குணங்களை விட்டுவிட்டார்.

ஷோடஷ கலைகளில் இருப்பது புருஷ ரூபமாக இருக்கும் என்பதாலேயே, பரமாத்மனுக்கு ஷோடஷாத்மகஎன்னும் பெயர் வந்து என்று சொல்லும் பாகவத வசனங்களை அனுசரித்தே தாசராயரும் ஹதினாரு சேதனகளலிஎன்று சொல்கிறார் எனலாம்.

இப்படியே அனைத்து இடங்களிலும் இருந்து, நம் அனைவரின் யோகக்‌ஷேம நலன்களின் பாரத்தை சுமந்து, நம்மை காப்பாற்றுவான் என்று நம்பி, ஸ்வ-கர்த்ருத்வ-அபிமானத்தை துறந்து, பரமாத்மனை தியானிக்க வேண்டும். வீடு, காடு என்னும் இட வேறுபாடு இல்லாமல், அல்லது பிரம்மசார்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாஸ என்னும் வேறுபாடு இல்லாமல் எந்த நிலையில் இருந்தாலும், பக்தியுடன் பஜிப்பவர்களுக்கு அபரோக்‌ஷத்தில் தன் ரூபத்தைக் காட்டுவார்.


***

No comments:

Post a Comment