#3 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ஜீவ லிங்க3னிருத்த ஸ்தூ2ல க
ளேவரக3ளலி விஷ்வ து1ரக3
க்3ரீவ மூலேஷாச்யுத த்ரய ஹம்ஸ மூர்த்திக3ள |
ஈ வித3 சதுஸ்தா2னத3லி ஷா
ந்தீவரன ஈரெரடு3 ரூபவ
பா4விஸுவுதே3கோன விம்ஷதி மூர்த்தி சர்வத்ர ||3
ஜீவலிங்கனிருத்த ஸ்தூல கலேவரகளலி = ஜீவனின் ஸ்வரூப
தேகத்தில், லிங்க தேகத்தில், அனிருத்த தேகத்தில், ஸ்தூல தேகத்திலும்
விஷ்வ = விஸ்வரூபத்தினால்
துரகக்ரீவ = ஹயக்ரீவ ரூபத்தினால், அனிருத்த ரூபத்தினாலும்
மூலேஷ = நாராயண அல்லது பத்பனாப ரூபத்தினாலும்
அச்யுதத்ரய = அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் மூன்று ரூபங்களால்
ஹம்ஸ மூர்த்திகள = ஹம்ஸ என்னும் 4 மூர்த்திகளை
ஈ வித சதுஸ்தானதலி = மேற்சொன்ன 4 தேகங்களில்
சாந்திவரன = சாந்திபதியான அனிருத்தன்
ஈரெரடு ரூபதி = 4 ரூபங்களை
பாவிசுவுது = நினைக்க வேண்டும்.
சர்வத்ர = மேற்சொன்ன அனைத்து இடங்களிலும்
ஏகோன விம்சதி மூர்த்தி = 19 மூர்த்திகளை. அதாவது, ஷப்தாதி தன்மாத்ரா குணங்களுடன்
கூடிய பஞ்சபூதங்களில், அனிருத்தாதி 5 ரூபங்களை, ஞானேந்திரிய 5ல் 5 ரூபங்களை, கர்மேந்திரிய 5ல் அனிருத்தாதி 5 ரூபங்களை, என 15,
அவ்யக்த, மஹத்,
மனஸ்,
அஹங்கார என்னும் 4ல் அச்யுத, அனந்த, கோவிந்த, ஹம்ஸ என்னும் 4 ரூபங்களையும் சேர்த்து, 19 ரூபங்களையும், ஒவ்வொரு சரீரங்களிலும் சிந்திக்க வேண்டும்.
இந்த பத்யத்தில், நான்குவித தேகங்களிலும், உபாசனை செய்யவேண்டிய பகவத்ரூபங்களை
சொல்கிறார்.
ஜீவனின் :
* ஸ்வரூப தேகத்தில் விஸ்வரூபத்தையும்,
* லிங்க சரீரத்தில் ஹயக்ரீவ
ரூபத்தையும்
* அனிருத்த தேகத்தில் அனிருத்த
ரூபத்தையும்
* ஸ்தூல தேகத்தில் நாராயண
ரூபத்தையும்
* அனிருத்தனே இருக்கிறான்; அல்லது,
அச்யுத, அனந்த, கோவிந்த, ஹம்ஸ என்னும் 4 ரூபங்களை தரித்து மேற்கண்ட 4 தேகங்களில் இருக்கிறான்.
இப்படி, சாந்திபதியான அனிருத்தன் 4 ரூபங்களால் 4 ஸ்தானங்களில் இருப்பதே பஞ்சபூத 5, கர்மேந்திரிய 5, ஞானேந்திரிய 5, என மொத்தம் 19 தத்வங்களில் அனிருத்தாதி 5*3=15 ரூபங்களாலும், அச்யுதானந்த கோவிந்த என்னும் 3 ரூபங்கள், ஹம்ஸ 1 என மொத்தம் 19 ரூபங்களால், நான்கு தேகங்களிலும் வசிக்கிறான் என்று சிந்திக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment