ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, May 20, 2020

#24 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#24 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


இந்தி3ராத4க்திமொத3லா
தொந்த3தி4 3ஷ ரூபதி3ந்த3லி
பொந்தி3ஹனு 1லேந்தி3ரியக3ளலி புருஷனாமக1னு |
ஸுந்த3ரப்ரத3 பூர்ணஞானா
நந்த3மய சித்தே3ஹதொ3ளு தா1
நொந்த3ரேக்‌ஷண அக3லத3லெ பரமாப்தனாகி3ப்ப1 ||24

இந்திராதவ = லட்சுமிபதி
சக்திமொதலாத = லட்சுமி முதலான
ஒந்ததிக தஷ ரூபதிந்தலி = 11 ரூபங்களால்
சகலேந்த்ரியகளலி = அனைத்து இந்திரியங்களிலும்
பொந்திஹனு = வியாபித்திருக்கிறான்
சுந்தரப்ரத = அழகான ரூபங்களாகட்டும்
பூர்ணஞானானந்தமய = பூர்ணமான ஆனந்தத்தைக் கொண்டிருக்கும்
புருஷ நாமகனு = புருஷ நாமக ஸ்ரீபரமாத்மன்
சித்தேஹதொளு = ஜீவனஸ்வரூப தேகத்தில்
தா = தான்
ஒந்தரக்‌ஷண = ஒரு அரைக் கணமும்
அகலதலெ = விட்டு அகலாமல்
பரமாப்தனாகி = ஜீவர்களுக்கு பரம ஆப்தனாக
இப்ப = இருக்கிறான்

ஸ்ரீலட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன், ஜீவர்களின் கண், காது முதலான 10 இந்திரியங்கள் மற்றும் மனஸ் என்று 11 இந்திரியங்களில், ஷக்தி, ப்ரதிஷ்டா, சம்வித், ஸ்பூர்த்தி, ப்ரக்ருதி, கலா, வித்யா, மதி, நியதி, மாயா, கால என்னும் 11 ரூபங்களால் வியாபித்திருக்கிறான். மக்களுக்கு அழகான ரூபத்தையும், அல்லது அழகான வைகுண்டாதி லோகங்களை அவரவர்களின் தகுதிக்கேற்ப கொடுக்கும், பூர்ணஞானானந்தமயனான ஸ்ரீபுருஷ நாமகன், ஜீவர்களின் ஸ்வரூப தேகத்தில், ஒரு அரைக்கணமும்கூட அவர்களை விட்டு அகலாமல், அவர்களுக்கு பரம ஆப்தனாக இருப்பான்.


***

No comments:

Post a Comment