#7 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
ஐது3 வித3த3க்னியலி மரெயதெ3
ஐது3 ரூபாத்மக1ன இப்ப
த்தைது3 ரூபக3ளனுதி3னதி3 நெனெவரிகெ3 ஜனுமக3ள |
ஐதி3ஸனு நளினாக்ஷ ரணதொ3ளு
மைது3னன காய்த3ந்தெ1 ஸலஹுவ
வைத3வகெ3 க3தியித்த ப4யஹர ப4க்தவத்ஸலனு ||7
ஐது வித அக்னிகளல்லி = ஆகாஷ, மேகம் முதலான ஐந்து வகையான அக்னிகளில்
மரெயதெ = மறக்காமல்
இது ரூபாத்மகன = நாராயணாதி 5 ரூபங்களை
இப்பத்தைது ரூபகளனு = நாராயண நாராயணாதி 25 ரூபங்களை
அனுதினதி = எப்போதும் / தினந்தோறும்
நெனெவரிகெ = நினைப்பவர்களுக்கு
ஜனுமகள = பிறவிகளை
யைதிஸலு = கொடுக்க மாட்டான்.
நளினாக்ஷ = தாமரைக் கண்ணனான ஸ்ரீகிருஷ்ணன்
ரணதொளு = பாரதப் போரில்
மைதுனன = தன் தங்கையின் கணவனான அர்ஜுனனை
காயிதந்தெ = காப்பாற்றியதைப் போல
ஸலஹுவ = காப்பாற்றுபவன்
பயஹர = பக்தர்களின் பயங்களை பரிகரிப்பவன்
பக்தவத்ஸலன், வைதவகெ = தன்னை திட்டிக்கொண்டிருந்த சிசுபாலனுக்கு
கதியித்த = முக்தியைக் கொடுத்தான்.
இப்படி மேற்சொன்ன 5 பத்யங்களில் கூறியதைப் போல, ஆகாயம், மேகம், பூமி, புருஷ, ஸ்த்ரி என்னும் 5 அக்னிகளில் நாராயண, வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 5 ரூபங்களை சிந்தித்து, மறக்காமல், அதே நாராயண என்னும் ஒவ்வொரு ரூபத்திலும் நாராயணாதி 5 ரூபங்களை, ஆக மொத்தம் 25 ரூபங்களை தினந்தோறும் நினைத்திருப்பவர்களுக்கு மறுபிறவியைக் கொடுக்காமல், ஸ்ரீகிருஷ்ணன், தன் தங்கை புருஷனான அர்ஜுனனை போர்க்களத்தில் சாரதியாக இருந்து எப்படி காப்பாற்றினானோ, அது போலவே காப்பாற்றுவான். பக்தர்களுக்கு வரும் பயங்களை பரமாத்மன் பரிகரிக்கிறான். எப்போதும் தன்னை திட்டிக்கொண்டிருந்த சிசுபாலன், அவன் ஜயன் என்னும் த்வாரபாலகனாகையால், முக்தியைக் கொடுத்து காப்பாற்றினான். ஆகையாலேயே, பக்தவத்ஸலன் என்னும் விருது அவனுக்கு இருக்கிறது.
***
No comments:
Post a Comment