#29 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
லோஷ்டகா1ஞ்சன லோஹ ஷைலஜ
காஷ்ட மொத3லாத3கி2ல ஜட பர
மேஷ்டி மொத3லாதெ3ல்ல சேதனரொளகெ3 அனுதினவு |
சேஷ்டெக3ள மாடி3ஸுத1 திளிஸதெ3
ப்ரேஷ்டனாகி3த் தெ3ல்லரிகெ3 ஸ
ர்வேஷ்டதா3யக ஸந்தயிஸுவனு சர்வஜீவரனு ||29
லோஷ்ட = களிமண்
காஞ்சன = தங்கம்
லோஹ = இரும்பு
ஷைலஜ = மலைகள், அதில் இருக்கும் கற்கள், பாறைகள் ஆகிய
காஷ்ட முந்தாத = மரக்கட்டைகள்
அகிளஜட = அனைத்து ஜடப் பொருட்களில்
பரமேஷ்டி முதலாத = பிரம்ம முதலான
எல்ல சேதனரொளகெ = அனைத்து சேதனர்களிலும்
அனுதினவு = தினந்தோறும்
சேஷ்டெகள = செயல்களை
மாடிசுத = செய்வித்தவாறு
திளிஸதெ = தான் செய்யும் செயல்கள் என்னவென்று
யாருக்கும் தெரியாமல்
ப்ரேஷ்டனாகித்து = பிராணிகளுக்குப் ப்ரியனாக இருந்து
எல்லரிகெ = அனைவரின்
சர்வேஷ்ட தாயக = அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி
சர்வஜீவரன = அனைத்து பிராணிகளையும்
ஸந்தயிசுவனு = திருப்திப்படுத்துவான்.
ஜட, சேதனாதி அனைத்து பொருட்களின்
செயல்கள்,
ஸ்ரீபரமாத்மனாலேயே நடக்கிறது என்று சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இரும்பு, தங்கம், மலை,
பாறைகள், கற்கள் ஆகிய அனைத்து ஜடப்பொருட்களிலும், பிரம்மாதி அனைத்து சேதனர்களிலும் இருந்து, தினந்தோறும் அவருக்கு தெரியாமலேயே, அனைத்து செயல்களையும் செய்து, செய்வித்தவாறு, அனைவருக்கும் ப்ரியனாக இருந்து, அவரவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவாறு, அனைத்து ஜீவர்களையும் காப்பாற்றுவான்.
***
No comments:
Post a Comment