#18 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
பது3மனாப4னு பா1ணியொளகி3ஹ
வத3னத3லி ஹ்ருஷிகே1ஷ நாஸிக1
ஸத3னத3லி ஸ்ரீத4ரனு ஜிஹ்வெயொளிப்ப வாமனனு |
ம்ருது3ல த்வக்3தே3ஷதி3 த்ரிவிக்ரமனு
மது4 விரோதி4யு லோசனதி3 க
ர்ணத3லி இப்பனு விஷ்ணு நாமக ஸ்ரவணனெந்தெ3னிஸி ||18
பதுபனாபனு = பத்பனாப மூர்த்தி
பாணியொளகெ = கைகளில்
இஹ = இருக்கிறான்
வதனதலி ஹ்ருஷிகேஷ = முகத்தில் ஹ்ருஷிகேஷனும்
நாஸிக சதனதலி ஸ்ரீதரனு = மூக்கு என்னும் குகையில்
ஸ்ரீதரன்
ஜிஹ்வெயொளிப்ப வாமனனு = நாக்கினில் வாமனன்
இருக்கிறான்
ம்ருதுளத்வக்தேஷதி = மிருதுவான த்வக் இந்திரியத்தில்
த்ரிவிக்ரமனு = த்ரிவிக்ரம மூர்த்தி
நேத்ரதி மதுஹ = கண்களில் மதுசூதனன்
கரணதலி விஷ்ணு நாமக = காதுகளில், விஷ்ணு நாமக பகவந்தன்
ஸ்ரவணனெந்தெனிஸி = ஸ்ரவண நாமகனாக
இந்த பத்யத்திலிருந்து துவங்கி, 21ம் பத்யம் வரைக்கும், 24 தத்வங்களில் கேசவாதி 24 மூர்த்திகளை சிந்திக்கும் விதங்களை சொல்கிறார் தாசராயர்.
இரு கைகளில் பத்பனாப மூர்த்தி;
முகத்தில் ஹ்ருஷிகேஷ;
ப்ராணேந்திரியத்தில் ஸ்ரீதர;
நாக்கினில் வாமன;
த்வக் இந்திரியத்தில் த்ரிவிக்ரம;
கண்களில் மதுசூதனன்;
காதுகளில் விஷ்ணு ரூபத்தையும் சிந்திக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment