ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, May 13, 2020

#10 - பஞ்சமஹயக்ஞ சந்தி

#10 - பஞ்சமஹயக்ஞ சந்தி


ஈரயிது3 ஸாவிரத3யிப்ப
த்தாரதி4க முன்னூரு ரூப13
ளீரெரடு3 ஸ்தா2னத3லி சிந்திபரனுதி3னதி3 பு33ரு |
நூரயிப்பத் தே1ளதி4க மூ
ராருஸாவிர ரூப1தி3ம் த3
மாருதரொளித் த3வரவர பெரிந்த31ரெஸுவரு ||10


ஈரயிது சாவிரத = 10,000
இப்பத்தாரதிக முன்னூரு ரூபகள = 26+300=326 (மொத்தம் 10,000+326 = 10,326)
ஈரெரடு ஸ்தானதலி = அனைத்து பிராணிகளின் இதயம் ஒரு இடம். ஆத்யாத்மாதி 3 ஸ்தானம் என மொத்தம் 4 ஸ்தானங்களில்
அனுதினதி = தினந்தோறும் / எப்போதும்
புதரு = ஞானிகள்
சிந்திபுது = சிந்திக்கின்றனர்
நூர இப்பத்தேளதிக மூராரு சாவிர ரூபதிம் = 127+18000 = 18127 ரூபங்களால்
தஷமாருதரொளித்து = பிராணாபானாதி ரூபங்களால், அந்தந்த பெயர்களால் அழைக்கப்படுவான். 

முந்தைய பத்யத்தில், பத்பனாபன் தன் ஸ்வரூபத்தால் ஒரு ரூபனாகவும், 10 ரூபங்களாகவும், 3 ரூபங்களாகவும் பிரித்து அவற்றில் இருக்கிறான். மேலும், பிரம்மாதி அனைத்து சேதனர்களின் இதயத்தில் ஏக ரூபனாக இருந்து, அத்யாத்மாதிகளில் மூன்று ரூபங்கள், தச பிராணரில் தச ரூபங்களாக இருக்கிறான் என்கிறார். இப்போது, 1, 10, 3 என்னும் இந்த ஸ்தானங்களில், ஒவ்வொன்றிலும் அனேக ரூபங்களை சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். 

பிரம்மாதி சேதர்களின் இதயங்களில் இருக்கும் ரூபம் 1.
அத்யாத்மாதி மூன்றில் அச்யுதாதி மூன்று ரூபங்கள்
இவற்றை எண்ணிக்கையின்படி பார்த்தால், கிடைக்கும் ரூபங்கள், 10,326 ரூபங்கள். அது எப்படியெனில்:

பெயர் - எண்ணிக்கை - மொத்தம் - வலதிலிருந்து பார்த்தால்

ஏகாத்ம - ஏ=11 கா=1 த்+ம=6 1116 6111
அச்யுத அ=1 ச்+யு=1+1=2, த=1 121 121
அனந்த அ=1 ந=5 ம்=0 த=1 1501 1051
கோவிந்த கோ=3 வி=4 ந்=0 த=3 3503 3053
மொத்த பகவத் ரூபங்கள் : 10,326

இப்படி 5 ஸ்தானங்களில் மொத்தம் 10,326 ரூபங்களை ஞானிகள் சிந்திக்க வேண்டும். மேலும், தச பிராணர்களில் எண்ணிக்கையை பார்த்தால், இவ்வளவு ரூபங்கள் இருக்கின்றன. 

பிராண ப்+ரா=3 ண=5 35 53
அபான அ=1 பா=1 ந=5 115 511
வியான வ்+யா=5 ந=5 55 55
உதான உ=5 தா=3 ந=5 535 535
ஸமான ஸ=7 மா=5 ந=5 755 557
நாக நா=5 க=3 53 35
க்ருகள க்ரு=3 க=1 ள=9 319 913
கூர்ம கூ=1 ர்ம=7 17 71
தேவதத்த தே=3 வ=4 த=3 த்த=2 3432 2343
தனஞ்சய த=4 ந=5 ம்=0 ஜ=3 ய=1 45031 13054

இப்படி, பிராணாதி 10 ஸ்தானங்களின் ரூபங்கள் : 18127 ரூபங்களில் இருந்துகொண்டு, பிராண, அபான முதலான பெயர்களாலேயே அறியப்படுகிறான். 

***


No comments:

Post a Comment