ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 10, 2020

#5 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#5 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


புருஷ ஷிகி2 வாக்மிதெ4 தூ4மவு
கரண அர்ச்சியு ஜிஹ்வெ ஸ்ரோத்ரக3
ளெரடு3 கி1டிக3ளு லோசனக3 ளங்கா3ர வெனிஸுவுவு |
நிருத1 பு4ஞ்சிசுவன்ன யதுகு1
வரனிக3வதானக3ளு எந்தீ3
பரி சமர்ப்பணெகை3யெ கைகொண்டனுதி3னதி3 பொரெவ ||5


புருஷ = ஆண்கள்
ஷிகி = அக்னி
வாக் = வாக் இந்திரியம்
ஸமிதெ = காஷ்டம் (சமித்து)
கரண = கர்மேந்திரியங்கள்
தூம = புகை
அர்ச்சியு = ஜ்வாலை
ஜிஹ்வெ = நாக்கு
ஸ்ரோத்ரகளெரடு = இரு காதுகள்
கிடிகளு = தீப்பொறிகள்
லோசனகளு = கண்கள்
அங்காரவெனிஸுவுது = கங்குகள் எனப்படுகின்றன
நிருத = தினந்தோறும் (எப்போதும்)
புஞ்சிஸுவ = நாம் உண்ணும்
அன்ன = அன்னத்தை
எதுகுலவரனிகெ = யதுகுல ஸ்ரேஷ்டனான ஸ்ரீபரமாத்மனுக்கு
அவதானகளெந்து = ஆஹுதி என்று
ஈ பரி அனுதினதி = இந்த மாதிரி, தினந்தோறும்
சமர்ப்பணெகையெ = சமர்ப்பித்தால்
கைகொண்டு = ஏற்றுக்கொண்டு
அனுதினவு = தினந்தோறும்
பொரெவ = நமக்கு அருள்வான்.

புருஷாக்னியின் லட்சணங்களை சொல்கிறார். ’புருத்வாத் பூர்ணத்வாத் புருஷ நாமா’ அனந்தமானவன் ஆகையாலும், பூர்ணமானவன் ஆகையாலும், பரமாத்மனுக்கு புருஷன் என்று பெயர். இந்த புருஷனில் இருக்கும் ப்ரத்யும்னரூபியே அக்னி. ‘தஸ்ய புங்கதஸ்ய ப்ரத்யும்னஸ் த்யுத்வாத்வாக நாமாவாசி ஸ்தித: ப்ரத்யும்ன நாராயணௌத்ம ஸமித்’ - அனைவருக்குள்ளும் இருந்து பேசுபவனாகையால் பரமாத்மனுக்கு வாக் என்று பெயர். இந்த புருஷ நாமகனான ப்ரத்யும்னரூபி அக்னிக்கு வாக்கில் இருக்கும் பிரத்யும்ன நாராயணனே சமித்துகள். நடவடிக்கைகளை செய்வதால், பிராண நாமகன். இந்த பிராணனில் இருக்கும் பிரத்யும்ன வாசுதேவ ஸ்வரூபனே புகை. 

‘ஹோமதே, அத்யதே அனேனேதி ஜிஹ்வானாமா ஜிஹ்வாகத பிரத்யும்ன ஸங்கர்ஷனாத்மா அர்ச்சி:’ ஹோமம் செய்துகொள்பவனும், அதன் பலன்களை உண்பவனும் ஆகையால், பரமாத்மனுக்கு ஜிஹ்வா என்று பெயர். நாக்கினில் இருக்கும் ப்ரத்யும்ன சங்கர்ஷண ரூபமே ஜ்வாலை. ‘சஷ்டேபஷ்யதி சர்வமிதி சக்‌ஷுர் நாமா சக்‌ஷுஸ்த ப்ரத்யும்ன ப்ரத்யும்னாத்மா அங்காரா:’ அனைத்தையும் கண்களில் வைத்து பார்ப்பவன் ஆகையால், பரமாத்மனுக்கு சக்‌ஷுஸ் என்று பெயர். கண்களின் உள் இருப்பவன் ப்ரத்யும்ன - கங்குகள். கேட்பதால் பரமாத்மனுக்கு ஸ்ரோத்ர என்று பெயர். காதுகளுக்குள் இருக்கும் ப்ரத்யும்னானிருத்த ரூபமே தீப்பொறிகள். 

இத்தகைய புருஷ நாமக பிரத்யும்ன அக்னியில், நாராயணாதி 5 ரூபங்களை சிந்தித்து, ஷட்ரூபியான யதுகுலோத்தமனான ஸ்ரீபரமாத்மனின் விருப்பப்படி தினந்தோறும் நான் உண்ணும் உணவே ஆஹுதிகள் என்று சமர்ப்பணம் செய்தால், அதனை ஏற்றுக்கொண்டு நமக்கு உத்தமகதியைக் கொடுத்து அருள்வான். 

‘புருஷோவாவ கௌதமாக்னி ஸ்தஸைவாகேவ சமித்’ இத்யாதி உபநிஷத் வாக்கியங்களே இவற்றிற்கு ஆதாரம். உபநிஷத் பாஷ்யத்தையும், உபநிஷத் கண்டார்த்தத்தையும் அனுசரித்து, இந்த பத்யங்களுக்கு அர்த்தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 

***

No comments:

Post a Comment