ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, May 20, 2020

#25 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#25 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


ஆரதி413ஷ ரூபதி3ந்த3லி
தோ1ருதி1ப்பனு விஷ்வ லிங்க3
ரீரதொ3ளு தை1ஜஸனு ப்ராக்3ஞனு து1ரிய நாமகனு |
மூரயிது3 ரூபக3ள த3ரிஸு
ஈரயிது3 கரணத3லி மாத்ரதி3
கே2ர ஷிகி2 ஜல பூ4மியொளகி3ஹனாத்ம நாமத3லி ||25

ஆரதிகதஷ ரூபதிந்ததலி = 16 ரூபங்களால்
விஷ்வலிங்க சரீரதொளு = 16 கலைகளால் கூடிய, மூன்று குணங்களால் கூடிய, லிங்க சரீரத்தில்
தோருதிப்பனு = ஞானிகளுக்குக் காண்பித்துக் கொள்கிறான்
(அதாவது, 16 ரூபங்களால் லிங்கதேகத்தில், 16 கலைகளால் கூடியவனாக இருக்கிறான் என்று பொருள். விஸ்வ நாமகனாக, லிங்கதேகத்தில், லிங்க சரீரத்தின் 16 கலைகளில், தைஜஸ, ப்ராக்ஞ, துரிய நாமகனாக இருக்கிறான்).
மூரயிது ரூபகள தரிசுத = மூன்று ரூபியான பரமாத்மன், ஒவ்வொரு ரூபத்தினாலும் அனிருத்தாதி ஐந்தைந்து ரூபங்களை தரித்து, அதாவது 3 * 5 = 15 ரூபங்களால்,
ஈரயிது கரணதலி = கண், காது முதலான 10 இந்திரியங்களில்
மாத்ரதி = ஷப்தாதி மாத்ர குணங்களாலான
கேர = க+ஈர = க-ஆகாஷ, ஈர-வாயு
ஷிகி = அக்னி
ஜல, பூமியொளு = ஆகாயம், வாயு, அக்னி, ஜல, பூமி என்னும் இந்த பஞ்ச பூதங்களில்
இஹ = இருக்கிறான் .
ஆத்ம நாமதலி = என்னும் சொல், அடுத்த பத்யத்துடன் சேர்த்து படிக்க வேண்டும்.

இந்த பத்யத்தில், லிங்க சரீரத்தில் இருக்கும் பகவத்ரூபங்களை சொல்கிறார். இந்த பரமாத்மன், 16 கலைகளால் கூடிய லிங்க சரீரத்தில், 16 ரூபங்களால் வியாப்தனாக இருக்கிறான் என்று சொல்கிறார். இதன் விவரமானது. லிங்க சரீரமானது, 16 கலைகளால் கூடியது. ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, தன்மாத்ரா குணங்களால் ஆன பஞ்சபூதங்கள் 5, மனஸ் 1 என மொத்தம் 16. இவற்றில் பரமாத்மனின் 16 ரூபங்கள் எவை என்றால், முதலில் விஷ்வ என்னும் ரூபத்தால் லிங்க சரீரத்தில் இருக்கிறான். இது இல்லாமல், 16 கலைகளில், 16 ரூபங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. அவற்றின் விவரம்.

தைஜஸரூபியான பரமாத்மன், அனிருத்தாதி 5 ரூபங்களால் கர்மேந்திரியங்களிலும்,
துர்யரூபியான பரமாத்மன், அனிருத்தாதி 5 ரூபங்களால் பஞ்சபூதங்களிலும் இருக்கிறான்.

ஷப்த, ஸ்பர்ஷாதி குணங்கள், பஞ்சபூதங்களின் குணங்களே ஆனதால், வெவ்வேறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதில் விஷ்வ தைஜஸ ப்ராக்ஞ ரூபங்கள், ஜீவர்களுக்கு சத்வாதி குணங்களைக் கொடுப்பவர்களாக ஜாக்ர, ஸ்வப்ன, சுஷுப்திகளைக் கொடுக்கிறார்கள் மற்றும், துர்ய நாமகன் சரீரத்தைப் பாதுகாப்பவனாக இருக்கிறான் என்று பொருள். இந்த பத்யத்தில் மூரைது ரூபங்களை (15) மட்டுமே சொல்லியிருக்கிறார். ஆத்ம நாமதலி என்னும் சொல், அடுத்த பத்யத்தோடு சேர்த்து படிக்க வேண்டும்.


***

No comments:

Post a Comment