#17 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
தனுவிஸிஷ்டதி3யிப்ப நாரா
யணனு க1டி1 பாதா3ந்த1 சங்கரு
ஷணனு ஷிர ஜக4னாந்த1வாகி3ஹ வாசுதேவாக்2ய |
அனிமிசேஷனிருத்த4 ப்ரத்யு
ம்னன எட3தி ப3லபா4க3த3லி சி
ந்தனெய மாள்ப1ரிகு3ண்டெ1 மைலிகெ3 விதி4 நிஷேத4க3ளு ||17
தனுவிசிஷ்டதி = அனைத்து சரீரங்களிலும், அதாவது, இந்த தேகத்தில் முழுமையாக
இப்ப நாராயணனு = நாராயணன் இருக்கிறான்
கடிபாதாந்த சங்கர்ஷணன் = வயிற்றிலிருந்து பாதங்கள் வரை சங்கர்ஷணன் இருக்கிறான்
ஷிரஜகனாந்தவாகி = தலை முதல் வயிற்றிலிருந்து நாபி வரைக்கும்
வாசுதேவ நாமகனு இஹ = வாசுதேவன் வியாபித்திருக்கிறான்
அனிமிசேஷ = தேவேஷனான
அனிருத்த = அனிருத்தன்
பிரத்யும்ன யடதி = இடது பக்கத்தில் அனிருத்தனையும்
பலபாகதலி = வலது பக்கத்தில் பிரத்யும்னனையும்
சிந்தனெய மாள்பரிகெ = சிந்திப்பவர்களுக்கு
மைலிகெ விதி நிஷேதகளு = விழுப்பு, விதிமீறல்கள் போன்ற தோஷங்கள் இருக்கிறதா? (இல்லை என்று அர்த்தம்).
நாராயணன், தன் அகண்ட ரூபத்தினால், நம் தேகம் முழுமையாக வியாபித்திருக்கிறான். மேலும், கண்ட ரூபத்தினால் வயிற்றிலிருந்து கீழ் பாகத்தில் பாதம் வரைக்கும் சங்கர்ஷண, வயிற்றிலிருந்து மேல் பாகத்தில் தலை வரைக்கும் வாசுதேவ மூர்த்தியாக, இடது, வலது பாகங்களில் தேவேஷனான அனிருத்த, பிரத்யும்னர்கள் இருக்கிறார்கள் என்று சிந்திப்பவர்களுக்கு, விழுப்போ, விதிமீறல்களுக்காக வரும் தோஷங்களோ வருவதில்லை.
தாசராயர் இப்படி சொல்லியதால், அனைவரும் ஸ்னான, நித்ய கர்மானுஷ்டானங்களை விட்டுவிட வேண்டும் என்பதில்லை. உண்ணக்கூடாததை உண்டால், செய்யக்கூடாதவற்றை செய்தால் பாவங்கள் வராது என்று ப்ரஷ்டன் (நீசன்) ஆகவேண்டியதில்லை. அது ஏனெனில், இதே ஸ்ரீஜகன்னாததாசர் இயற்றிய இன்னொரு பதத்தில்
ஸோசித கர்மகளாசரிஸுத, பலு நீசரல்லிகெ போகி யாசிஸதெ
கேசரவாத சராசர பந்தக மோசக நஹுதெந்து யோசிஸு திப்புதே -
பலவிது பாள்துதக்கே
என்றிருக்கிறார். இந்த பத்யங்களைப் பார்த்தால், ஸ்வ தர்மத்திற்கேற்ப கர்மங்களை செய்யவேண்டும் என்று ஒரு பதத்தில் சொல்லி, இன்னொரு இடத்தில், விதிமீறல்களால் பாவங்கள் வருவதில்லை என்றால் கர்மங்களே செய்யவேண்டியதில்லை என்றும் சொல்கிறாரே என்றால் அது சரியல்ல. இதைத்தவிர, கீதையில் :
யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேர்ஜுன |
கர்மேந்த்ரியை: கர்மயோக மஸக்த: ஸவிஷிஷ்யதே ||
நிரந்தர குரு கர்மத்வம் கர்மஜ்யாயோஹ்ய கர்மண ||
இப்படியான பற்பல ஆதாரங்களால், நித்யகர்மானுஷ்டாங்களை செய்தே ஆகவேண்டும் என்றும், விதிமீறல்களை செய்யவே கூடாதென்றும் புரிகிறது. அதாவது, நமக்குத் தெரிந்து (சுய சிந்தனையுடன்), செய்யக்கூடாதவற்றை செய்யக்கூடாது என்று அர்த்தம்.
நாம் மெய்மறந்து நாமஸ்மரணையில் ஈடுபட்டிருக்கும்போதோ, ஆனந்தத்தில் ஆடிப்பாடி தேவர நாமாக்களை பாடிக்கொண்டிருக்கும்போது, நமக்கே தெரியாமல் பிராணிகளை இம்சித்துவிட்டாலோ, கிருமி, பூச்சிகளை மிதித்துவிட்டாலோ, பகவத்ரூபங்களை சிந்தித்திருக்கும் நம்மை அந்த பாவங்கள் அண்டாது.
விதிக்கு உட்பட்ட செயல்களே ஆனாலும் ‘பூர்வாம் ஸந்த்யாம் ஸ நக்ஷத்ராம்’ என அந்தந்த காலங்களில் செய்யவேண்டிய செயல்களை நாம் பரமாத்மனை வணங்கியவாறு இருந்ததால், அந்த காலங்களில் செய்யாமல் விட்டுவிட்டால், அதற்கான தோஷங்கள் நமக்குக் கிடையாது என்று பொருள். ஸ்னானாதிகளை செய்து, மெய்மறந்து பரமாத்மனை பஜித்துக் கொண்டிருக்கும்போது, நாய், பூனைகளோ, யாராவது சிறுவர்களோ நம்மைத் தொட்டுவிட்டாலும், அந்த விழுப்பில் நாம் பஜிப்பது சரியல்ல என்று சந்தேகப்படாமல் மேலும் சிறிது காலம் வரைக்கும் பஜிக்கலாம். பஜனைகளை செய்யும்போது அந்த விழுப்புகள் நம்மை அண்டாது என்று நினைக்க வேண்டுமே தவிர, ஸ்னான சந்தியாவினை விட்டாலும் தோஷம் இல்லை என்றும், செய்யக்கூடாத செயல்களை செய்தாலும் கூட நமக்கு தோஷங்கள் இல்லை என்றும் நினைக்கக்கூடாது.
***
No comments:
Post a Comment