ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, May 8, 2020

#40 - விபூதி சந்தி

#40 - விபூதி சந்தி


1ரி இடா3 வத்ஸரனு சம்வ
த்ஸர தொ3ளனிருத்தா3தி3 ரூப1
4ரிஸி பார்ஹஸ்ப1த்1ஸௌரப4 சாந்த்3ரமனு எனிஸி |
இருதி1ஹ ஜகன்னாத2விட்டல
ஸ்மரிஸுப3வரனு ந்தயிசுவனு
உருபராக்ரமனுசித சாத4னெ யோக்3யதெயனரிது1 ||40


பரி இடா வத்ஸரனு சம்வத்ஸரதொளு = பரிவத்ஸர, இடாவத்ஸர, வத்ஸர, அனுவத்ஸர, ஸம்வத்ஸர என்று இருக்கும் ஐந்து விதமான சம்வத்ஸரங்களில், 
அனிருத்தாதி ரூபவ = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களை தரித்து
பார்ஹஸ்பத்ய = பார்ஹஸ்பத்ய-மான என்று
ஸௌர = ஸௌர-மான என்று
ப = நட்சத்திர-மான என்று
சாந்த்ரமனு = சாந்திர-மான என்று (மொத்தம் 5 விதமாக)
எனிஸி = என்று பெயரைக் கொண்டு
இருதிஹ = இருக்கிறான்
உருபராக்ரம = பஹு பராக்ரமசாலியான
ஜகன்னாதவிட்டல = ஜகன்னாத விட்டலனு
ஸ்மரிசுவரன = நினைப்பவர்களை
உசித சாதனெ யோக்யதெயனரிது = அவரவர்களின் தகுதிக்கேற்ப சாதனையை அறிந்து
எந்தூ = எப்போதும்
ஸந்தயிப = காப்பாற்றுவான்

சந்தியை முடிக்கும் இந்த ஸ்லோகத்தில், காலரூபியான பரமாத்மனின் விபூதியை விவரிக்கிறார் தாசராயர். பாகவதம் 3ம் ஸ்கந்தம் 12ம் அத்தியாயம் ஸ்லோகம் 14ல் : 

ஸம்வத்ஸரம் பரிவத்ஸர இடாவத்ஸர ஏவச |
அனுவத்ஸரோ வத்ஸரஷ்ச விதுரைவம்ப்ரபாஷ்யதே |

இங்கு 5 வித வத்ஸரங்களின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தின் பாகவத தாத்பர்ய வாக்கியம் :

இடாவத்ஸர நாமாஸௌ நக்‌ஷத்ர த்வாதசேஸ்தித: |
திதீனாந்த்வாதசாவர்த்தேயோ ஹரி: ஸோனுவத்ஸர: ||
வத்ஸரோய: ஸ்திதஸ்தன் ஹாம்ஷஷ்ட்யுத்தர ஷதத்ரயே |
குர்வாவர்த்தத்வாதஷாம்ஷோய: ஸ்தித: பரிவத்ஸர: ||
ஸௌரத்வாதஷமாசேஷு ய:ஸ்தித: ஸம்வத்ஸரோ ஹரி: |
ஏவம் ஸ கால நாமாபிகாலஸ்த: பரமேஷ்வர இதி ||

அஸ்வினி முதலான நட்சத்திரங்களில், அஸ்வினியோ வேறு எந்த நட்சத்திரமோ, 12 முறை வந்தால், அது ஒரு ஆண்டு ஆகிறது. இதற்கு இடா வத்ஸரம் என்று பெயர். 

12 அமாவாசைகள் முடிந்தால் ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு அனுவத்ஸர என்று பெயர்.

360 நாட்கள் முடிந்தால் ஆகும் ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு வத்ஸர என்று பெயர். 

(குரு) பிருஹஸ்பதி ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு செல்லும் காலமான ஒரு ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு பரிவத்ஸர என்று பெயர். 

சூரியன் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமான ஒரு ஆண்டின் நியாமகனான பரமாத்மனுக்கு சம்வத்ஸர என்று பெயர். 

இப்படி, கால நியாமகனான பரமாத்மனுக்கு காலன் என்று பெயர். இப்படியாக சொன்ன விதத்தில், பார்ஹஸ்பத்ய, ஸௌர, அனுஸௌர, நட்சத்திர, சாந்திரமான என்னும் ஐந்து விதமாக கணிக்கும் பரிவத்ஸராதி ஐந்து பெயர்களைக் கொண்டிருக்கிறான். இந்த 5 ரூபங்களில் அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் ஐந்து ரூபங்களால் வசிக்கிறான். இதில் அனுஸௌர என்றால் 360 பகல்களைக் கொண்ட ஆண்டிற்கு பெயர். இப்படிப்பட்ட சிறந்த பராக்ரமியான அஸ்மத் அந்தர்யாமியான பிம்பரூபி ஸ்ரீமத் ஜகன்னாதவிட்டலனை நினைப்பவர்களின் தகுதிக்கேற்ப அவர்களால் சாதனையை செய்வித்து, அவர்களுக்கு சுகங்களைக் கொடுத்து அருள்வான்.

விபூதி சந்தி என்னும் 5ம் சந்தி முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

No comments:

Post a Comment