ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, May 18, 2020

#20 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#20 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

நெலதொ3ளிப்ப1னு க்ருஷ்ணரூப1தி3
ஜலதொ3ளிப்ப1னு ஹரியெனிஸி ஷிகி2
யொளகெ3 இப்ப1னு பரசுராமனுபேந்த்3ர னெந்தெ3னிஸி |
எலரொளிப்ப ஜனார்த்த3னனு பா3
ந்த3ள தொ3ளச்யுத13ந்த4 நரஹரி
பொளெவதோ4க்‌ஷஜ ர3ளொளு ரரூப தா1னாகி3 ||20

நெலதலி = ப்ருத்வியில்
க்ருஷ்ணரூபதி = கிருஷ்ண ரூபத்தினால்
இப்பனு = இருக்கிறான்
ஜலதொளு = அபு தத்வத்தில் (தண்ணீர்)
ஹரியெனிஸி = ஹரி நாமகனாக
நிப்பனு = இருக்கிறான்
ஷிகிவளகெ = அக்னியில் (தேஜஸ்ஸில்)
பரசுராமனு உபேந்திர நெந்தெனிஸி = உபேந்திர நாமகனாக
யலரொளு = வாயு தத்வத்தில்
ஜனார்த்தனனு = ஜனார்த்தனன் இருக்கிறான்
பாந்தளதொளு = ஆகாஷத்தில்
அச்யுத = அச்யுதன் இருக்கிறான்
கந்த = கந்த குணத்தில்
நரஹரி = நரஹரி ரூபி
ரஸகளொளு = ரச குணங்களில் ரச ரூபமாக
அதோக்‌ஷஜ = அதோக்‌ஷஜன்
பொளெவ = ஒளிரூபமாக இருக்கிறான்.

பஞ்சமஹா பூதங்களிலும், தன்மாத்ரா குணங்களிலும், மலமூத்ர இந்திரியங்களிலும், சிந்திக்க வேண்டிய பகவத் ரூபங்களை இந்த & அடுத்த பத்யங்களில் தெரிவிக்கிறார் தாசராயர்.

ப்ருத்வியில் கிருஷ்ண ரூபத்தையும்;
தண்ணீரில் ஹரியையும்;
அக்னியில் (தேஜஸ்ஸில்) பரசுராமன், உபேந்திர நாமகனையும்;
வாயு தத்வத்தில் ஜனார்த்தனரூபியையும்;
ஆகாஷத்தில் அச்யுதரூபியையும்;
என பஞ்சமஹா பூதங்களில் பகவந்தன் இருக்கிறான் மற்றும்

தன்மாத்ரா குணங்களில்,
கந்தத்தில் நரசிம்ஹ ரூபத்தையும்;
ரஸத்தில் அதோக்‌ஷஜனையும்; சிந்திக்க வேண்டும்.

***

No comments:

Post a Comment