ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, June 30, 2020

11-15 சர்வ பிரதீக சந்தி

பதியொட3னெ மனப3ந்த தெரத3லி

ப்ரதி தி3வசத3லி ரமிஸி மோதி3ஸி

ஸுதர படெ3தி3ளெயொளு ஜிதேந்த்ரியளெந்து3 கரெஸுவளு |

க்ருதிபதி கதா2ம்ருத சுபோ4ஜன

ரத மஹாத்மரிகி3தர தோ3

ப்ரததிக3ளு ம்ப4ந்திஸுவுவெsச்யுதன தாரிகெ3 ||11

 

பதியொடனெ = தன் கணவனுடன்

மனபந்த தெரதலி = தன் இஷ்டத்திற்கேற்ப

ப்ரதிதிவசதலி = தினந்தோறும்

ரமிஸி = போகித்து

மோதிஸி = சுகத்தை அடைந்து

ஸுதரபடது = மக்களைப் பெற்று

இளியொளு = பூமியில்

ஜிதேந்த்ரியளெந்து கரெஸுவளு = ஜிதேந்த்ரியள் (இந்திரியங்களை வென்றவள்) என்று அழைக்கப்படுகிறாள்

க்ருதிபதி = க்ருதி நாமக லட்சுமியின் பதியான ப்ரத்யும்ன நாமக ஸ்ரீபரமாத்மன்

கதா = கதை என்னும்

அம்ருத = அமிர்தத்தை

ஸுபோஜன = உத்தமமான போஜனத்தை

ரத = ஆத்திகரான

மஹாத்மரிகெ = மகாத்மரான

அச்யுதன தாசரிகெ = அச்யுதனின் பக்தர்களுக்கு

இதர தோஷ ப்ரததிகளு = வேறு விதமான பாப ராசிகள்

சம்பந்திசுவுவெ = சம்பந்தமாகுமா? (இல்லை என்று அர்த்தம்)

 

முந்தைய பத்யத்தில் தேவதைகளுக்கு பாப சம்பந்தம் இருப்பதில்லை என்றார். இங்கு பரமாத்மனின் பக்தர்களான ஸ்த்ரி, புருஷர்களுக்கு வேறு பாப சம்பந்தம் இல்லை என்று சொன்னபிறகு, தேவதைகளுக்கு என ஏன் தனியான சொன்னார் என்னும் சந்தேகத்தை இங்கு தெளிவாக்குகிறார். பரமாத்மனின் கதா அம்ருத பானத்தில் மூழ்கியிருக்கும், என்றால், எப்போதும் கதா ஸ்ரவணாதிகளை செய்தவாறு, பாடியவாறு இருக்கும் ஸ்த்ரீயர், தினமும் கணவனுடன் தேவையான போகங்களை அனுபவித்து, சுகங்களைப் பெற்று, மக்களைப் பெற்றிருந்தாலும், அவளை, ஜிதேந்திரியள் (இந்திரியங்களை வென்றவள்) என்பர். ஆகையால், மகாத்மரான பகவத் தாசருக்கு பாவ சம்பந்தங்கள் இருப்பதில்லை.

 

சூஸி3 நதி3யொளகெ3 தன்ன

ஹாஸ தோருவெனெந்து3 ஜலகெது

ரீசிதரெ கைஸோது1 முளுகு3வ ஹரிய பி3ட்டவனு

க்லேஷ வைது3வனாதி3யலி ச

ர்வேஷ க்லுப்தி1ய மாடி3து33 பி3

ட்டாஷெயிந்த3லி அன்யராராதி3ஸுவ மானவனு ||12

 

ஸீஸிபக = வேகமாகப் பாயும் ஆற்றின் வேகம்

நதியொளகெ = ஆற்றில்

ஹரிய பிட்டவனு = பிம்ப ரூபி பரமாத்மனை விட்டவன் அல்லது பிம்பரூபியின் கருணையைப் பெறாதவன்

தன்ன ஸாஹஸ தோருவெனெந்து = தன் திறமையைக் காட்டுகிறேன் என்று

ஜலகிதிரிகெ = பாயும் நீரில் அதற்கு எதிராக

ஈஸிதரெ = நீச்சல் அடித்தால்

கைஸோது முணுகுவனு = சோர்ந்து, மூழ்குவான்

ஆதியலி = துவக்கத்தில்

சர்வேஷ = சர்வ லோகத்திற்கும் ஈஸ்வரனான ஸ்ரீபரமாத்மன்

க்லுப்திய மாடிதுது = இவன் இவ்வளவே சுக துக்கங்களை அனுபவிக்கட்டும் என்று தீர்மானம் செய்திருப்பதை

பிட்டு = விட்டு

ஆஷெயிந்தலி = ஆசையில்

அன்யர = பிற தேவதைகளை

ஆராதிஸுவ = ஆராதிக்கும்

மானவனு = மனிதன்

க்லேஷயைதுவனு = கஷ்டப்படுவான்

 

பரமாத்மனை விட்டு பிற தேவதைகளை வணங்குவோர் கஷ்டப்படுவர் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார்.

 

இரு கரைகளையும் தொட்டு வேகமாகப் பாயும் நதியில், தன் சாமர்த்தியத்தைக் காட்டுவேன் என்று சொல்லி, ஒருவன் அந்த நீர் பாயும் திசையை நோக்கி எதிர்நீச்சல் அடித்தால், சிறிது நேரத்திலேயே கை தளர்ந்து, சோர்ந்து, அதே நீரிலேயே மூழ்கிவிடுவான். அதுபோலவே, ஈஸ்வரன் நமக்கு முதலிலேயே கொடுத்திருக்கும் போகங்களில் சுகப்படாமல், பேராசையினால், பரமாத்மனை விட்டு அன்ய தேவதைகளை பஜிப்பவர்கள், இறுதியில் இஹபரங்களில் கஷ்டப்படுவர்.

 

நானு நன்னது எம்ப3 ஜட3மதி

மானவனு தி3னதி3னதி3 மாடு3

ஸ்னான ஜப தே3வார்ச்சனெயெ மொத3லாத3 கர்மக3|

தா3னவரு ஸெளெதொ3ய்வரல்லதெ3

ஸ்ரீனிவானு ஸ்வீகரி

த்தானெ பக்வ கபித்த22ல ப4க்‌ஷிஸி3வோலஹுது ||13

 

நானு நன்னது எம்ப ஜடமதி மானவனு = நான், எனது, இவற்றை நானே செய்தேன் என்று சொல்லும் கர்வம் கொண்ட முட்டாள் மனிதன்

தினதினதி = தினந்தோறும்

மாடுவ = செய்யும்

ஸ்னான ஜப தேவாச்சனெயெ = ஸ்னான, ஜப, பூஜைகளே

மொதலாத கர்மகள = ஆகிய செயல்களின் பலன்களை

தானவரு = தைத்யர்கள்

செளெதொய்வரல்லதெ = பலாத்காரத்தினால் அபகரித்துச் செல்வதுடன்

ஸ்ரீனிவாசனு = ஸ்ரீனிவாசன்

ஸ்வீகரிஸ = ஏற்றுக்கொள்ள மாட்டான்

மத்தானெ = மதம் பிடித்த யானை

பக்வ = பழுத்த

கபித்த பல = விளாம்பழம்

பக்‌ஷிஸிதவோலஹுது = தின்பதைப் போல பலன் இல்லாதது.

 

அனைத்து கர்மங்களையும் பகவந்தனே செய்வித்தான் என்னும் அறிவு இல்லாமல், அனைத்தையும் நானே செய்தேன் என்னும் ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானத்தைக் கொண்டவன் செய்த பூஜை முதலான செயல்கள் அனைத்தும், நிஷ்பலன் - பலன்களைக் கொடுக்காதவை என்று சொல்கிறார்.

 

நாஹம் கர்த்தா ஹரி: கர்த்தா என்னும் வாக்கியத்தால், அனைத்து காரியங்களையும் பரமாத்மனே செய்விக்கிறான் நான் எதுவும் செய்யவில்லை என்னும் ஞானத்தை மறந்து, அனைத்து செயல்களையும் ஸ்வதந்த்ரத்துடன் நானே செய்தேன்,

இந்த பொருட்கள் அனைத்தும் என்னுடையதே என்னும் அபிமானத்தைக் கொண்ட முட்டாள் செய்யும் ஸ்னான, ஜப, பூஜை முதலான அனைத்து கர்மங்களின் பலன்களையும் தைத்யர்கள் அபகரித்துப் போகிறார்களே தவிர, அவற்றை பரமாத்மன் ஏற்றுக் கொள்வதில்லை. அது எப்படியெனில், விளாம்பழத்தை தின்றால், அதன் உள்ளிருக்கும் பழம் மட்டும் மாயமாகி, அதன் ஓடு மட்டும் வெளியே வந்து விழுவதைப் போல.

 

தா4த்ரியொளகு3ள்ளகி2ல தீர்த்த2

க்‌ஷேத்ர சரிஸித3ரேனு பாத்ரா

பாத்ரவரிதன்னாதி3 தா3னவ மாடி32லவேனு |

கா3த்ர நிர்மலனாகி3 மந்த்ர

ஸ்தோத்ர படி2ஸித3ரேனு ஹரி

ர்வத்ர க3தனெந்த3ரியத3லெ தா கர்த்ரு எம்பு3வனு ||14

 

தாத்ரியொளகுள்ள = பூமியில் உள்ள

அகிள தீர்த்த க்‌ஷேத்திர = அனைத்து தீர்த்த க்‌ஷேத்திர யாத்திரைகளை

சரிஸிதரேனு = செய்தால் என்ன?

பாத்ராபாத்ரவனரிது = பாத்ரா பாத்ரங்களை அறிந்து

தானவ மாடி பலவேனு? = அன்ன தானம் முதலான தானங்களை செய்து என்ன பலன்?

காத்ர நிர்மலனாகி = ஸ்னானாதிகளால் சரீரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு

மந்த்ர ஸ்தோத்ர படிஸிதரேனு = மந்திர ஸ்தோத்திரங்களை படித்தால் என்ன?

ஹரி சர்வத்ர கதனெந்து = ஸ்ரீஹரி அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என்று

அரியதலெ = தெரியாமல்

தா கர்த்ரு எம்புவனு = (மேற்கண்ட செயல்களை) செய்தவன் நானே என்று சொல்பவன்

 

பரமாத்மனே அனைத்து இடங்களிலும் இருந்து கொண்டு, அனைத்து காரியங்களையும் செய்விக்கிறான் என்று அறியாமல், தானே ஸ்வதந்த்ரனாக அனைத்தையும் செய்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ, அத்தகையவர் பூமியில் உள்ள அனைத்து தீர்த்த க்‌ஷேத்திரங்களையும் சென்று பார்த்து விட்டு வந்தால்தான் என்ன? தகுந்தவர்களுக்கு அன்னாதி தானங்களை செய்தும் என்ன பலன்? ஸ்னானாதிகளை, மந்திர ஸ்தோத்திரங்களை சொல்லியும் என்னதான் பலன்? ஒன்றும் இல்லை என்று பொருள்.

 

கண்ட3 நீரொளு முளுகி3 தே3ஹவ

3ண்டிலு ப2லவேனு த3ண்ட3

மண்டலுக3ளனெ த4ரிஸி யதியெந்தெ3னிஸி ப2லவேனு |

அண்டஜாதி4பனம்3ன பத3

புண்டரீகதி3 மனவஹர்னிஷி

3ண்டு3ணியவோலிரிஸி சுக233தி3ப்ப மானவனு ||15

 

அண்டஜாதிபன = பக்‌ஷி ராஜனான கருடனின்

அம்ஸகன = முதுகில் அமர்ந்திருக்கும் ஸ்ரீஹரியின்

பத புண்டரீகதி = பாத கமலங்களில்

அஹர்னிஷி = இரவும் பகலும்

மனவ = மனதை

பண்டுணியவோல் = ஒரு தேனியைப் போல

இரிஸி = வைத்து

சுக படதிப்ப = சுகங்களை அனுபவிக்கும்

மானவனு = மனிதன்

கண்ட நீரொளு முளுகி = அனைத்து தீர்த்தங்களில் ஸ்னானம் செய்து

தேஹவ தண்டிஸலு பலவேனு? = அந்த பயணங்களில் தேகத்தை தண்டித்து என்ன பயன்?

தண்ட கமண்டலுகளெ தரிஸி = தண்ட, கமண்டலங்களை தரித்து

யதியெந்தெனிஸி = சன்யாசி என்று சொல்லிக் கொண்டு

பலவேனு? = என்ன பலன்?

 

தேனி எப்படி மலர்களையே சுற்றி வந்து கொண்டிருப்பதைப் போல, யார் எப்போதும் கருடாரூடனான ஸ்ரீபரமாத்மனின் பாத கமலங்களில் தன் மனதை வைப்பதில்லையோ, அத்தகைய மனிதன் கண்ணுக்குத் தெரியும் தண்ணீர் அனைத்திலும் மூழ்கி, குளிர் முதலானவைகளால் தேகத்தை தண்டித்தவாறு இருப்பதில் என்ன பலன்? தண்ட, காஷ்ட, கமண்டலம் ஆகியவற்றை தரித்து தான் ஒரு சன்னியாசி என்று புகழ்பெற்றால் அதனால் ஆகும் பலன்தான் என்ன?