#6 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ஷிரக3ளைதை3தெ3ரடு பா3ஹுக3
ளெரடு3 பாத3க3ளொந்து3 மத்4யோ
த3ரதி3 ஷோபி4ப வாங்மனோமய னெனிஸி நித்யதலி |
கரண தா4து1க3ளல்லி எப்ப
த்தெரடு3 ஸாவிர நாடிக3ளலி
ப்பரவிதூ3ரனு பா4ரதப்ரதிபாத்3ய னெந்தெ3னிஸி ||6
ஷிரகளைது = பஞ்சபூதங்கள் என்னும் 5 தலைகள்
ஐதெரடு பாஹுகளு = ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள்
என்னும் 10 தோள்கள்
எரடு பாதகளு = புண்ணிய, பாவம் என்னும் 2 பாதங்கள்
ஒந்து மத்ய = அஹங்காரா என்னும் 1 இடுப்பு
உதரதி = புத்தி என்னும் 1 வயிறு
ஷோபிப = ஒளிர்ந்து கொண்டிருக்கும்
வாங்மனோமய நெனிஸி = வாங்மனோமய என்னும் பெயரால்
அழைக்கப்பட்டு வரும் ஸ்ரீஹரி
நித்யதலி = எப்போதும் / தினந்தோறும்
கரண = பத்து இந்திரியங்களிலும்
தாதுகளல்லி = 7 தாதுகளில்
எப்பத்தெரடு சாவிர நாடிகளலி = 72,000 நாடிகளில்
இப்ப = இருக்கிறான்
அரவிதூரனு = தோஷங்கள் அற்றவன்
பாரத்ப்ரதிபாத்ய நெந்தெனிஸி = வேதத்தைவிட உத்தமமான
பாரதத்தில் புகழப்படுபவன்
வாக்கு, மனது இவற்றின் ரூபியாக இருக்கும்
பரமாத்மனின் உபாசனா கிரமத்தை சொல்கிறார். அனைத்து பிராணிகளின் முக்கிய
இந்திரியங்களான வாக்கிலும், மனஸ்ஸிலும் இருந்து, அனைத்து காரியங்களையும் செய்கிறான் ஆகையால், வாங்மய என்றும், மனோமய என்றும் பரமாத்மனுக்குப் பெயர். இந்த் வாங், மனோமய ரூபங்களை உபாசனை செய்யும் கிரமம் என்னவெனில்,
* பஞ்சபூதங்களே இந்த ரூபங்களுக்கு 5 தலைகளாக,
* பத்து இந்திரியங்களே 10 கைகளாகவும்,
* புண்ய பாப என்னும் இரு கர்மங்களே
இரு பாதங்களாகவும்,
* அஹங்கார 1, புத்தி 1 இவை இரண்டும் மத்திய பிரதேச வயிறு எனவும்,
சிந்திக்க வேண்டும்.
இத்தகைய ரூபத்தினால் அனைத்து இடங்களிலும்
இருக்கிறான். இப்படியாக தினமும், இந்திரியங்களிலும், நாடிகளிலும் இருந்தாலும், புண்ய பாபாதி கர்மங்களை
செய்விப்பவனாகவும் இருந்தாலும், தான், ‘அரவிதூர’ நிர்லிப்தனாக (எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாமல்) இருப்பதால், நிர்தோஷியாக இருக்கிறான். வேதங்களில் புகழப்படுகிறான் என்று அனைத்து
சாஸ்திரங்களும் கொண்டாடும்போது, பாரதத்தால் புகழப்படுபவன் என்று
தாசராயர் சொன்னது எதற்கு என்றால், வேத அத்யயனம் செய்திருந்தாலும், உண்மையான அர்த்தம் உணர்வதற்கு கஷ்டமாகையால், மற்றும் ஸ்த்ரீ மற்றும் நான்காம் வர்ணத்தவர்க்கு அதைப் படிக்கும் தகுதி
இல்லாததாலும், வேதங்களில் இருக்கும் பகவந்தனின் மகிமைகளை மக்கள் அனைவரும் அறிவது கஷ்டம்
என்று வேதங்களில்கூட சொல்லப்படாத பகவன் மகிமைகளை பாரதத்தில் சேர்த்திருக்கின்றனர், என்னும் ஆசார்யரின் வாக்கியமே உள்ளது.
வேதார்த்தங்களால் கூடிய பாரதத்தால் புகழப்படுபவன்
என்ற பிறகு வேதாதிகளும் அதிலேயே அடங்கியிருக்கின்றன என்ற சிந்தனையில் இப்படி சொல்லியிருக்கிறார்.
அல்லது,
வேதாதிகளை படித்தாலும் மத்வ சாஸ்திரத்தை அறிந்தாலே, வேதங்கள் சரியாக அர்த்தம் ஆகும் என்பதால், பாரதத்தால் புகழப்படுபவன் என்று சொன்னதால், மத்வ சாஸ்திரத்தால் புகழப்படுபவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அது
எப்படியெனில்:
பாகவத ஸ்ருதிகீதையில் - ‘பரதமதஸ்சகாஸி’ - வாயுமதத்தைப் பின்பற்றுபவர்களால் சொல்லப்படும் பேதஞானத்திலேயே ஒளிர்வாய் என்று
சொல்லப்பட்டிருக்கிறது. ’பரதமத’ என்று சொன்னால் அதை வாயு மதம் என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டால்,
ரதத்வாத்பாத்மகே விஷ்ணுவதாவாபி ஸ்வயம்ப்ருதே |
பரதோ வாயுருத்திஷ்ணோ பாரதீதத்ஸரஸ்வதே ||
என்னும் பதத்தினால், ப என்றால் பரமாத்மன். அவனில் ரதராக இருப்பதால், பாரத என்று வாயுதேவருக்குப் பெயர் வந்தது. ஆகையாலேயே, ‘பரதஸ்ய ஸதே பாரதீ’ என்று வாயுதேவரின் மனைவிக்கு பாரதி என்று பெயர் வந்தது. ஆகையால், பாரத என்றால் பரத சம்பந்தி பாரத வாயு சம்பந்தப்பட்ட கிரந்தங்களுக்கு பாரத
என்று பெயர். வாயுதேவரே மத்வாசார்யர் ஆகையால், பாரத ப்ரதிபாத்யன் என்றால், மத்வ சாஸ்திர பிரதிபாத்யன் என்று
பொருள். அப்படியில்லை என்றால், தவறான ஞானத்தால் கெட்டுப்
போவார்களே தவிர, உண்மையான ஞானம் பெறுவதில்லை. ஆகையால், இந்த அர்த்தமே சரியானது என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment