#27 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
சதுரவிம்ஷதி த1த்வதொளு தத்பதிக3
ளெனிஸுவ பி3ரம்மமுக2 தே3
வதெக3ளொளு ஹதி3மூரு ஸாவிரதெ3ண்டு நூரதி4க1 |
சதுரவிம்ஷதி ரூபதி3ந்த3லி
விததனாகித் தெ3ல்லரொளு ப்1ரா
க்ருத1 புருஷனந்த3த3லி பஞ்சாத்மக1னு ரமிஸுவனு ||27
சதுரவிம்ஷதி தத்வதொளு = 24 தத்வங்களில்
தத்பதிகளெனிஸுவ = தத்வாபிமானிகள் என்று அழைக்கப்படும்
பிரம்மமுக தேவதெகளு = பிரம்மரே முதலான தேவதைகளில்
ஹதிமூரு சாவிர தெண்டு நூரதிக சதுரவிம்சதி ரூபதிந்ததலி
= 13,824 ரூபங்களால்
எல்லரொளு = அனைவரிலும்
விததனாகித்து = நிலைத்திருந்து
பஞ்சாத்மகனு = அனிருத்தாதி 5 ரூபாத்மகன்
ப்ராக்ருத புருஷனந்ததலி = சாமான்யமான புருஷர்களைப்
போல
ரமிசுவனு = நடமாடுவான்
இந்த பத்யத்தில், ஸ்தூல சரீரத்தில் வியாபித்திருக்கும், இந்த சந்தியில் இதுவரை சொல்லியிருக்கும், அனைத்து பகவத்ரூபங்களையும், மறுபடி தொகுத்து
சொல்லியிருக்கிறார். மொத்தம் 13,824 ரூபங்கள். எழுத்தின்
எண்ணிக்கையின்படியே இவற்றை அறியவேண்டும்.
அவ்யக்த - 251
மஹத் - 185
தாமஸ - 751
மனஸ் - 755
பத்து இந்திரியங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை : 2353
பஞ்சபூதங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை - 1000
பஞ்சதன்மாத்ர மொத்த எழுத்து எண்ணிக்கை - 1080
மொத்தம் : 6365
ஆத்யாத்ம, ஆதிதெய்வ, ஆதிபூதங்களின் மொத்த எழுத்து எண்ணிக்கை - 4326 பத்து இந்திரியங்களில், ஒவ்வொன்றிலும் அனிருத்தாதி 5 ரூபங்கள் என, 30 ரூபங்களையும், ஆக : 10*30=300
இதைப் போல தஷ ப்ராணரில் ஒவ்வொருவரிலும் 30 ரூபங்கள், ஆக 10 பிராணர்களில், 10*30=300 24 தத்வங்களில் ஒவ்வொரு தத்வத்திலும்
அ-காராதி 51 எழுத்துக்கள். 24 * 51 = 1224
க-முதல் க்ஷ-வ்ரை இருக்கும் எழுத்துக்கள் 35. இவை க, கா,
கி,
... கம். க: என்று 13 எழுத்துக்களையும் கொண்டவை. இப்படி 35 எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை :
35 *
13 = 420
க், ச், என மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை : 51
ஷக்தி பிரதிஷ்டா முதலான ரூபங்கள் : 12
அனைத்து தேகங்களிலும் இருக்கும் அனிருத்தாதி பஞ்சரூப
: 5
ஆக மொத்தம் : 13,824 ரூபங்கள்.
பரமாத்மன், இவ்வளவு ரூபங்களால் அனைவரிலும்
இருந்து அனிருத்தாதி ரூபங்களால், சாதாரண மனிதர்களைப் போல
நடமாடுவான்.
***
No comments:
Post a Comment