ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 23, 2020

#30 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#30 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


வாஸுதே3வனிருத்த3 ரூபதி3 பும்ஷ
ரீர தொ3ளிஹனு ர்வத3
ஸ்த்ரீ ரீரதொ3ளிஹனு சங்கருஷணனு ப்ரத்3யும்ன |
த்3வாசுபர்ணா ஸ்ருதி வினுத
ர்வாஸு நிலய நாராயணன சது3
பானெய கை3வவரு ஜீவன்முக்தரெனிஸுவரு ||30

வாசுதேவ அனிருத்த ரூபதி = வாசுதேவ, அனிருத்த என்னும் இரு ரூபங்களில்
பும்ஷரீரதொளு = புருஷர்களின் சரீரத்தில்
ஸர்வத = எப்போதும்
இஹனு = இருக்கிறான்
ஸ்த்ரீசரீரதொளு = பெண்களின் சரீரத்தில்
சங்கர்ஷணனு பிரத்யும்ன = சங்கர்ஷண, பிரத்யும்ன என்னும் இரு ரூபங்களில்
இஹனு = இருக்கிறான்
த்வாசுபர்ணா ஸ்ருதி வினுத = த்வாசுபர்ணா என்னும் ஸ்ருதியால் போற்றப்படும்
சர்வாசு நிலய = அனைவரின் பிராணனிலும் நிலைத்திருக்கும்
நாராயணன = ஸ்ரீமன் நாராயணனின்
சதுபாசனெய கைவவரு = பரமாத்மன் தன்னிலிருந்து வேறுபட்டவன், சர்வஸ்வதந்த்ரன், ஜீவன் அஸ்வதந்த்ரன் ஆகியவற்றை சிந்தித்து உபாசனையை செய்பவர்கள்
ஜீவன்முக்தர் = முக்தர்களாக இருந்தாலும், சத்யாதி லோகங்களில் முக்தர்களைப் போல சுகமாக இருப்பதால், ஜீவன் முக்தர் என்று
எனிஸுவரு = அழைக்கப்படுவர்.

ஸ்த்ரி புருஷர்களின் சரீரத்தில் வாசுதேவாதி பஞ்ச ரூபங்களை உபாசனை செய்யும் கிரமத்தை விளக்குகிறார்.

வாசுதேவ, அனிருத்த என்னும் இரு ரூபங்களால் ஸ்த்ரி, புருஷர்களின் சரீரத்தில் இருக்கிறான். ஸ்த்ரி சரீரத்தில், சங்கர்ஷண, ப்ரத்யும்ன என்னும் இரு ரூபங்களால் வசிக்கிறான். ஸ்ரீநாராயண ரூபத்தினால், அனைவரின் பிராணர்களில் வசிக்கிறான். இத்தகைய பரமாத்மனை, சதுபாசனை என்றால், ஜீவ பரமாத்ம பேத ஞானத்தைப் பெற்று, பரமாத்மனின் தாசன் தான் என்று உபாசனை செய்வது. ஜீவ பரமாத்மருக்கிடையே பரஸ்பர பேதத்தை சொல்லும்

த்வாசுபர்ணா சயுஜாசகாய: சமானம் வ்ருக்‌ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்தத்தி அனஷ்னன்யோ அபிசாகஷீதி ||

இந்த ஸ்ருதியால் வணங்கப்படுகிறான் என்று கூறுகிறார் தாசராயர். இந்த ஸ்ருதி, ஜீவ பரமாத்மனின் பேதத்தை, தாரதம்யத்தைக் காட்டுகிறது என்னும் விஷயத்தில், பாகவத 10ம் ஸ்கந்தம், 11ம் அத்தியாயத்தில்

அதபத்தஸ்ய முக்தஸ்ய வைலக்‌ஷண்யம் வதாமிதே |
விருத்த தர்மிணோஸ்தாத ஸ்திதயோரேஷ தர்மிணி ||

இங்கிருக்கும் பத்தமுக்த என்னும் பதங்களுக்கு பத்தன் என்றால் ஜீவன் என்றும், முக்தன் என்றால் விஷ்ணு என்றும், விஜயத்வஜீயத்தில் வியாக்யானம் செய்து, அதற்கு ஆதாரமாக, பாகவத தாத்பர்யத்தில் ஸ்ரீமதாசார்யரின் வாக்கியத்தை உதாரணம் காட்டியிருப்பார். அது என்னவெனில்:

பத்தா ஜீவா இமேஸர்வே பூர்வபந்த ஸமன்வயாத் |
நித்யமுக்தஸ்தமோ விஷ்ணுர் முக்தா நாமாஸதோதித: ||
அபத்தத்வாத மோக்‌ஷோபி தீப்யதே ஸௌரவிர்யதா ||

ஜீவர்கள் முக்திக்கு செல்வதற்கு முன், பத்தராக இருந்து, பின்னர் பகவத் பிரசாதத்தினால் முக்தர் ஆகின்றனர். ஜீவர்கள் பத்தர்களாக இருப்பதால், அவர்களுக்கு பத்தர் என்றே பெயர். நமே மோக்‌ஷோன பந்தனம்என்னும் பகவத் வாக்கியத்திற்கேற்ப, முக்தி என்பதற்கு, பந்தனத்திலிருந்து முக்தி என்று அர்த்தம் ஆகிறது. யார் பத்தரோ அவரே முக்தர் ஆகிறார். பரமாத்மனுக்கு பந்தனம் இல்லை; பின் முக்தி எங்கிருந்து வந்தது என்றால், சூரியனுக்கு சில காலம் பிரகாசம் உண்டு, சில காலம் இல்லை என்று எப்படி சொல்வதில்லையோ, அது போல, பரமாத்மன் நித்ய முக்தனாக இருப்பதால், பரமாத்மனுக்கு முக்தன் என்று பெயர் வந்திருக்கிறதே தவிர, அவருக்கு பந்தனத்திலிருந்து முக்தி என்று இல்லை.

சூரியன் எப்போதும் பிரகாசமானவனாகவே இருந்தாலும், கால தேசத்திற்கு ஏற்றவாறு, சில இடங்களில் அதிக வெப்பத்தையும், சில நாடுகளில் வெளிச்சம் குறைவாகவும் காணப்படுகிறான். அதாவது, மக்களுக்கு அதிக வெப்பம், குறைவான சூடு, மிதமான வெப்பம் எனத் தோன்றும். சில இடங்களில் சூர்ய அஸ்தமன காலத்திலேயே ஒளி இல்லாமல் ஆகிவிடும். உதயத்தில் வெளிச்சக் குறைவு, மதியத்தில் அதிக ஒளி என பலவிதமாக தோன்றுவது, தேச காலத்திற்கேற்ப இருப்பதே தவிர, சூரியனின் ஒளியில் எப்போதும் அதிகமோ குறைவோ இருப்பதில்லை.

அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன், ராம கிருஷ்ணாவதாரத்தில் வித்தவன் முக்தவச்சைவ கேஷவோ வேதனார்த்தவத்என்னும் நிர்ணய வாக்கியத்திற்கேற்ப, அடி வாங்கியவனைப் போலவும், தனக்கு எதுவுமே தெரியாதவனைப் போல இருப்பதும், உலகத்தை ஏமாற்றுவதற்காகவே என்றும், பரமாத்மனுக்கு என்றைக்கும் பந்தனம் இல்லை என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார். பந்தனமும் இல்லை; அதிலிருந்து முக்தியும் இல்லை. நித்ய முக்தன் ஆகையால், அவனுக்கு முக்தன் என்று பெயர் மட்டுமே.


***

No comments:

Post a Comment