ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 9, 2020

#3 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#3 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


பாவக1னு பர்ஜன்ய மிதெ4யு
ப்ராவஹீபதி தூ4மக3ளெ மே
கா4வளிக3ளர்ச்சி க்‌ஷணப்ரபெ33ர்ஜனவெ கிடி3யு |
பா4விசுவுதங்கா3ஸிடி3லெ
ந்தீ3வித3க்4னியொளப்தி4 ஜாத1
கோ1வித3ரு ஹோமிஸுவரனுதி3ன பரமப4கு3தி1யலி ||3


பாவகனு = அக்னி
பர்ஜன்ய = மேகத்திற்கு அபிமானி
சமிதெயு = சமித்து
ப்ராவஹீபதி = ப்ராவஹிபதியான வாயு
தூமகளெ = புகை
மேகாவளிகளெ = மேகக் கூட்டங்களே
அர்ச்சி = ஜ்வாலைகள்
க்‌ஷணப்ரபெ = மின்னல்
கர்ஜனவெ = இடி
கிடியு = தீப்பொறி
அங்கார = கங்கு
ஈ வித அக்னியொளு = இந்த விதமான அக்னியில்
அப்திஜாதன = சந்திரனை வணங்கும் ஜீவர்களை
கோவிதரு = ஞானிகள் (தேவதைகள்)
அனுதின = தினந்தோறும் (எப்போதும்)
பரமபகுதியலி = மிகுந்த பக்தியுடன்
ஹோமிஸுவரு = ஹோமம் செய்வார்கள்

மேகாக்னியில் ஹோமம் செய்யும் விதத்தையும், அங்கு இருக்கும் பகவத் ரூபங்களையும் தாசராயர் இங்கு விளக்குகிறார். 

பர்ஜன்யோவாவ கௌதமாக்னிஸ்தஸ்ய வாயுரேவ சமிதப்ரந்தூமோ வித்யுதர்சிர ஷனிரங்காரஹ்ராதுனயோ விஸ்ப்ருலிங்கா: ||
தஸ்மின்னே தஸ்மின்னக்னௌ தேவாஸ்ஸோமா ராஜானம் ஜுஹ்வதி தஸ்யா ஆஹுதேவர்ஷ: ஸம்பவதி ||

இது சாந்தோக்ய உபநிஷத் வாக்கியம். இதன் பொருள்:

ஹே கௌதமா! வாவேத்யவதாரணெ என்னும் நியாயத்தினால் ‘பர்ஜன்ய ஏவ’ அதாவது மேகங்களே அக்னி என்று பொருள். ‘பர்ஜன்ய: பரமஸ்யஜன்ய மஸ்தேதி பர்ஜன்ய:’ ஜனனம் ஆகும் பதார்த்தங்களுக்கு பர்ஜன்ய என்று பெயர். பரமனின் சேவைக்காக பிறக்கும் பதார்த்தங்களுக்கு பர்ஜன்ய (பரமாத்மன் என்று) என்று பெயர். இந்த பர்ஜன்யனில் இருக்கும் ரூபம் வாசுதேவ ரூபம். இத்தகைய வாசுதேவன் அக்னியில் இருப்பவன். அக்னி முதலான சொற்களுக்கான அர்த்தங்கள் முந்தைய ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இத்தகைய பர்ஜன்யனில் இருக்கும் வாசுதேவ அக்னிக்கு ‘வாயுரேவ சமித்’ வாயுவே சமித்தாக இருக்கிறார். ஞான ரூபியான காரணத்தாலும், இவருக்கு வாயு என்று பெயர். வாயுவில் இருக்கும் பகவத்ரூபம் வாசுதேவ நாராயண ஸ்வரூபம். ‘அபந்தூம:’ மேகக் கூட்டங்களே புகை. ‘அபாம்பரணாத ப்ரனாமாsப்ரகதோ வாஸுதேவ வாஸுதேவாத்மா தூம:’. தண்ணீரை நிரப்பிக்கொண்டு அனைவரையும் காப்பதினால், அப்ர என்று மேகக்கூட்டங்களில் இருக்கும் பரமாத்மனுக்குப் பெயர். அந்த அப்ரனில் இருக்கும் பகவத்ரூபம் வாசுதேவ வாசுதேவ ரூபம். இந்த புகைக்கே, முன்பு சொன்னதுபோல, தூம ஷப்த வாச்யனாக இருக்கும் பரமாத்மன் என்று பொருள்.

‘வித்யுதர்ச்சி:’ ‘வித்யோதனாத் வித்யுன்னாமா வித்யுத்கத: வாசுதேவ சங்கர்ஷண நாமாsர்ச்சி:’ சிறப்பாக ஒளிர்பவனாகையால், வித்யுத் (மின்னல்) என்று பரமாத்மனுக்குப் பெயர். அந்த வித்யுத்-தில் இருக்கும் பரமாத்ம ரூபம் வாசுதேவ சங்கர்ஷண ரூபம். இந்த ரூபத்தின் ஸ்வரூபமே அர்ச்சி அதாவது ஜ்வாலை. 

அஷனாத ஷனினாமாs ஷனகதோ வாசுதேவ ப்ரத்யும்னாத்மா அங்காரா: = அன்னத்தில் இருப்பவன் ஆகையால் பரமாத்மனுக்கு அஷனி என்று பெயர். அஷனியில் இருக்கும் பகவத்ரூபம் வாசுதேவ ப்ரத்யும்னனே கங்கு. ‘ஹ்ராதுனயோ விஸ்புலிங்கா:’ மேகங்களின் கர்ஜனையே தீப்பொறிகள். ‘நிர்ஹாதனாத் ஹ்ராதுனினா மௌஹ்ராதுனி ஷப்தித மேகனாதகதோ வாசுதேவானி ருத்தாத்மா விஸ்புலிங்கா:’ பயங்கரமான சத்தத்தை செய்வதனால், மேகங்களின் கர்ஜனைக்கு ‘ஹ்ராதுனி’ என்று பெயர். அதில் இருக்கும் வாசுதேவ அனிருத்த ரூபமே தீப்பொறிகள். 

இப்படி வாயு முதலானவர்களில் நாராயணாதி 5 ரூபங்களில், முந்தைய பத்யங்களில் கூறிய ஆகாயத்தில் இருக்கும் நாராயணனில் ஹோமம் செய்து, சோமராஜனைப் பெற்ற சோம (சந்திர) என்னும் பெயருள்ள ஜீவனை தேவதைகள் ஆஹுதி கொடுக்கிறார்கள். 

இந்த உபநிஷத் அர்த்தத்தையே தாசராயரும் இந்த பத்யத்தில் விளக்கியிருப்பதால், அதனை மறுபடி இங்கு விளக்கவில்லை. ஆனால், உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் பஞ்சமஹாயக்ஞ விஷயத்திற்கும், தாசராயர் கூறியிருக்கும் சந்தர்ப்பங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். 

உபநிஷத்தின்படி, ப்ரவஹ என்னும் ராஜன், கௌதமரிடம் ‘ஜீவர்கள் பூமியில் யோக்யனாக, பகவத்பக்தனாக, பிறப்பது எப்படி?’ என்று கேட்க அதற்கு கௌதமர் பதிலைக் கூறுகிறார். ’சிரத்தை பக்தியுடன் யாகாதிகளை செய்யும் ஜீவர்களுக்கு ‘ஷ்ரத்தா’ என்று பெயர். அத்தகைய ஷ்ரத்தா நாமக ஜீவனை தேவதைகள், ஆகாஷாக்னியில் ஹோமம் செய்வார்கள். அந்த ஜீவன் சந்திரனை அடைகிறான். சந்திரனில் இருக்கும் ஜீவனை, மேக அக்னியில் ஹோமம் செய்வார்கள். அந்த ஜீவன் மழையை அடைகிறான். மழையில் சேர்ந்த ஜீவனை, ப்ருத்வி அக்னியில் ஹோமம் செய்வார்கள். அவன் அன்ன ஆகிறான். அன்ன ரூப ஜீவனை புருஷாக்னியில் ஹோமம் செய்கிறார்கள். அவன் வீர்யம் ஆகிறான். அந்த ரேதஸ் ரூபி ஜீவனை ஸ்த்ரி நாம அக்னியில் ஹோமம் செய்வார்கள். அவன் பூமியில் பிறக்கிறான். இந்த பஞ்சாஹுதி வித்யையை யார் அறிகிறார்களோ, அவன் பிரம்மனை அடைகிறான்’ என்று சொல்கிறார். 

இங்கு தாசராயர், பஞ்சமஹாயக்ஞ சந்தர்ப்பத்தில் சொல்வதால், இப்படி ஆகாஷாதி அக்னியில் 30 பகவத்ரூபங்களை, அந்தந்த ஸ்தானத்தில் இருக்கும் பகவத்ரூபங்களை சிந்திப்பதே, முக்தி சாதனம் என்று சொல்கிறார். இப்படி சந்தர்ப்பத்திற்கேற்ப இருவரும் விளக்கியிருப்பதால், சிறிது கருத்து வேறுபாடு இருவருக்கும் வந்திருக்கிறது என்று அறியவேண்டும். 

‘அப்திஜாதன ஹோமிஸுவரு’ என்னும் வாக்கியத்தால் சந்திரனே, ஹோம த்ரவ்யம் என்று வாயு முதலான காஷ்டங்களால் கூடிய பர்ஜன்ய அக்னியில், சந்திரனையே ஆஹுதி கொடுக்கிறார்கள் என்கிறார். உபநிஷத் பாஷ்யத்தில் ஜீவனுக்கு சந்திரன் என்று பெயர் என்றிருக்கிறது. ஜீவனின் உற்பத்தி கட்டத்தில் இவ்வாறு சொல்லியிருப்பதால், பரஸ்பரம் இங்கு விரோதம் இல்லை என்று அறியவேண்டும். 

***

No comments:

Post a Comment