#2 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ப்ரணவ ப்ரதிபாத்3ய த்ரிநாமதி3
த1னுவினொளு த்ரிஸ்தா2னக3 னிரு
த்த4னு த்ரிபஞ்சக ஏகவிம்ஷதி1 சதுரவிம்ஷதி1க
நெனிஸி எப்பத்தெரடு3 ஸாவிர
இனிது1 நாடிக3ளொளு நியாமிஸு
தின கப4ஸ்திக3 லோகதொ3ளு சர்வத்ர பெ3ளகு3வனு ||2
ப்ரணவ ப்ரதிபாத்யனு = ஓம்காரத்தால் புகழப்படுபவன்
த்ரிநாமதி = ஓம்காரத்தில் இருக்கும் எழுத்துக்கள், அ+உ+ம.
* ஆனந்த ஸ்வரூபன் ஆகையால் ஆ என்று
பெயர்.
* ஆனந்த த்வாதனாமாஸௌ, உத்க்ருஷ்டத்வாது நாமக: - என்னும் வாக்கியத்திற்கேற்ப மிகச்சிறந்தவன் ஆகையால், உ என்று பெயர்.
* அனைவராலும் பூஜிக்கப்படுபவன்
ஆகையால் ம என்று பெயர்.
இத்தகைய மூன்று ரூபங்களால்,
தனுவினொளு = தேகத்தில்
த்ரிஸ்தானக = லிங்க, அனிருத்த, ஸ்தூல சரீரங்களில் இருந்து, அல்லது ; அ,உ,ம இவை மூன்று எழுத்துக்களும் தோன்றும் ஸ்தானங்கள் அ= அடி வயிற்றிலிருந்து. உ =
கழுத்திலிருந்து; ம = உதடுகளிலிருந்து. இந்த விதமாக, மூன்று ஸ்தானங்களில்,
அனிருத்தனு = அனிருத்த ரூபியான பரமாத்மன்
த்ரிபஞ்சக = 15 ரூபங்களாலும்
ஏகவிம்ஷதி = 21 ரூபங்களாலும்
சதுர விம்ஷதிக = 24 ரூபங்களாலும் இருக்கிறான் என்று அழைக்கப்பட்டு
இனிது = இதைப் போலவே
எப்பத்தெரடு சாவிர நாடிகளொளு = தேகத்தில் இருக்கும் 72,000 நாடிகளில்
நியாமிஸுத = நிலைத்திருந்து, அந்தந்த செயல்களை செய்தவாறு
இனகபஸ்திக = இதைப்போல, சூர்யனின் கிரணங்களிலும் இருந்து
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
பெளகுவனு = ஒளிர்கிறான்.
இந்த தேகத்திலும், நாடிகளிலும் உபாசனை செய்யவேண்டிய பகவத்ரூபங்களைப் பற்றி தாசராயர் சொல்கிறார்.
ப்ரணவ ப்ரதிபாத்ய - ஓம்கார ப்ரதிபாத்யனு த்ரினாமதி
என்றால்,
அ+உ+ம என இந்த மூன்று எழுத்துக்களை சேர்த்து, ஓம் என்று ஆகிறது. இதன் பொருள்: சாந்தோக்ய உபநிஷத்தில்
அகாரேணாதிகம் ப்ரோக்த முகாரேணோச்ச முச்யதே |
ததாமிதம் சர்வவேதைர் மகாரேணாபி தீயதே |
அதிகோச்சமிதி ஞாதமோமித்யஸ்ய ஈரித: ||
அதிகமானவனாகையால் (மிகச்சிறந்தவன் ஆகையால்), அ-நாம என்றும் , உச்சம் ஆனதால் உ-நாம என்றும், அனைத்து வேதங்களைவிடவும்
உயர்ந்தவன், அதாவது, அவற்றினால் அறிந்துகொள்ளப்படுபவன் ஆகையால் ம-காரத்தால் அறியப்படுபவன்
பரமாத்மன்.
ஓம் நாமானமுபாஸீத ததர்த்தகுண பூர்வகம் ஓதத்வாதவ
நாம்னானாதரிகோச்சத்வ காரணாத் |
அனந்தாதோஜஸஸ்சைவ பரணாதோ முதாஹ்ருத: ||
ஓம்காரத்தால் அறியப்படுபவனான பரமாத்மனை தெளிவான
ஞானத்துடன் உபாசிக்க வேண்டும். பிரபஞ்சம் அனைத்தும் பரமாத்மனில், ஆடையின் நூல்களைப் போல சேர்ந்திருப்பதால், அந்த பிரபஞ்சம் அனைத்தையும் காப்பாற்றுவதால், அனைவராலும் வணங்கப்படுபவன் ஆகையால், அதிகமான உச்சத்தில் இருப்பவன்
ஆகையாலும், ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும், பலசாலியாகையாலும், உலகத்தையே தன்னுள் வைத்திருப்பதாலும், பரமாத்மனுக்கு ஓம் என்று பெயர் -- என்று கூறுகிறார்.
இதே போல, மூன்று பெயர்களில், லிங்க சரீரத்திலும், அனிருத்த சரீரத்திலும், ஸ்தூல சரீரத்திலும், இந்த தேகத்தின் மூன்று
ஸ்தானங்களில் அனிருத்தன் வசிக்கிறான். அல்லது, அகார,
உகார,
மகாரங்களின் பிறப்பிடமான அடிவயிறு, கழுத்து, உதடுகள் என்னும் மூன்று இடங்களில் வசிக்கிறான். இது மட்டுமல்லாது,
* அனிருத்தன், ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பஞ்சபூதங்கள் 5 என 15 இடங்களில் அனிருத்தன், அனிருத்தாதி 5 ரூபங்களால் 3*5 இடங்களில், 3*5=15 ரூபங்களில் லிங்கதேகத்திலும்,
* இந்த 15ல் பஞ்சதன்மாத்ரா குணங்கள் 5, மனஸ் 1 என இந்த 6ஐயும் சேர்த்து, 21ல் அனிருத்த தேகத்தில், ஷக்தி பிரதிஷ்டா 11 + தசாவதார 10 = 21 ரூபங்களாலும்,
* ஸ்தூல சரீரத்தில் இந்த 21 தத்வங்களில் அவ்யக்த, மஹத், அஹங்கார இந்த மூன்றையும் சேர்த்து, 24ல், கேசவாதி 24 ரூபங்களிலும் இருக்கிறான்.
மேலும், 1 மாதத்திற்கு, 30 பகல் 30 இரவுகள் இருப்பதைப் போல, ஒரு ஆண்டிற்கு 360 இரவு 30 பகல்கள் மனித ஆயுளின்படி, 100 ஆண்டுகளுக்கு 36,000 பகல்கள், 36,000 இரவுகள் ஆகின்றன. இவையே சூரியனில் தட்சிணாயனத்தில் 36,000 உத்தராயனத்தில் 36,000 கிரணங்களாக ஆகின்றன. இந்த கிரணங்களே நம் சரீரத்தில் இடது பக்கத்தில் 36000 வலது பக்கத்தில் 36000 என 72000 நாடிகளாக இருக்கின்றன. அந்த நாடிகளில் அவ்வளவே ரூபங்களால் நியாமகனாக இருந்து, சூர்யனின் கிரணங்களில் கூட இருந்து, அனைத்து இடங்களிலும் ஒளியைப்
பாய்ச்சுகிறான்.
***
No comments:
Post a Comment