ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, May 11, 2020

#6 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#6 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


மத்தெ1 யோஷாக்3னியொளு திளிவுது3
பஸ்த21த்வவெ சமிதெ4 காமோ
த்பத்தி பரமாதுக3ளெ தூ4மவு யோனி மஹத3ர்ச்சி |
தத்ப்ரவேஷங்கா3ர கி1டிக3ளு
உத்ஹக3ளுத் ர்ஜனவு புரு
ஷோத்தமனி க3வதா3னவெனெ கைகொண்டு3 மன்னிஸு||6


மத்தெ = அடுத்து
யோஷாக்னியொளு = ஸ்த்ரி என்னும் அக்னியில்
திளிவுது = காஷ்டாதிகளை இப்போது சொல்லப்போகும் விதங்களை அறியவேண்டும்
உபஸ்த தத்வவெ = மல ஜல உறுப்புகள்
சமிதெ = காஷ்டங்கள்
காமோத்பத்தி பரமாதுகளே = காமத்தினால் பெண்களிடம் ரதி சம்பந்தமான பேச்சுக்களை பேசுவதே
தூமவு = புகை
யோனி 
மஹதர்ச்சி = மஹா ஜ்வாலை
தத்ப்ரவேஷ = அதில் நுழைவதே
அங்கார = கங்குகள்
உத்ஸஹகளு = ரதியில் உற்சாகமே தீப்பொறிகள்
உத்சர்ஜனவு = வீர்யத்தை விடுவது
புருஷோத்தமனிகெ = புருஷோத்தமனுக்கு
அவதானவெனெ = ஆஹுதிகள் என்று சமர்ப்பித்தால்
கைகொண்டு = அவற்றை ஏற்றுக்கொண்டு
மன்னிஸுவ = நம் அபராதங்களை மன்னிக்கிறான். 

ஸ்த்ரி என்பவரே அக்னி. அதற்கு காஷ்டாதிகளை சொல்கிறார். அனைவருக்கும் வேண்டியவனாக இருப்பதால், பரமாத்மனுக்கு யோஷா என்று பெயர். ஸ்த்ரியர்களில் அனிருத்த ரூபத்தை சிந்திக்க வேண்டும். ‘ஸ்த்ரீகதோ னிருத்தோக்னி’ ஸ்த்ரியர்களில் இருக்கும் அனிருத்தனே அக்னி. ‘தஸ்யா:யோஷித்கதா னிருத்தாக்யாக்னே: உபஸ்த: உபஸ்திதே: உபஸ்தா நாமா உபஸ்தகத: அனிருத்த நாராயணாத்மா ஸமித்’. அருகிலேயே வசிப்பதால் பரமாத்மனுக்கு உபஸ்த என்று பெயர். ஸ்த்ரியரில் இருக்கும் அனிருத்தன் என்னும் அக்னிக்கு, உபஸ்த நாமகனான உபஸ்தவில் இருக்கும் அனிருத்த நாராயண ரூபமே காஷ்டம். 

‘உபமந்த்ரயதே, ரத்யர்த்த சம்பாஷதே இதியத்ஸ: |
தத்ரத்ய: அனிருத்த வாசுதேவாத்மோபமந்த்ரண நாமாதூம:’

காமத்திற்கான ரகசிய சம்பாஷணைகளை புருஷர்களில் இருந்து செய்வதால், பரமாத்மனுக்கு உபமந்த்ரண என்று பெயர். அங்கிருக்கும் அனிருத்த வாசுதேவ ரூபன் புகை. ’யுனக்தி மிஸ்ரிகரோதீதி யோனினாமா யோனிஸ்தோsனிருத்த சங்கர்ஷணாத்மர்ச்சி:’ கலப்பதனால் பரமாத்மனுக்கு யோனி என்று பெயர். யோனியில் இருக்கும் அனிருத்த சங்கர்ஷண பரமாத்மனே ஜ்வாலை. உள்ளே நுழைக்கும் செயல்களை செய்விப்பவனான அனிருத்த ப்ரத்யும்னரூபனே கங்குகள்.

அபினந்ததீத்யபி நந்தானாமா அபினந்தகதோs நிருத்தா நிருத்தாத்மா விஸ்புலிங்கா:’. ரதியில் உற்சாகத்தைக் கொடுப்பவன், அபினந்தன நாமகனில் இருக்கும் அனிருந்தா அனிருத்த ரூபமே தீப்பொறிகள். புருஷோத்தமனான ஸ்ரீபரமாத்மனுக்கு ரேதத்தைக் கொடுப்பதே ஆஹுதி என்று நினைத்து பகவத் பூஜையென்று சமர்ப்பித்தால், அதையே அவன் பூஜையென்று ஏற்று, நம் தவறுகள் அனைத்தையும் மன்னிக்கிறான். 

யோஷாவாவ கௌதமாக்னிஸ்தஸ்யா உபஸ்த ஏவ சமித் - இத்யாதி உபநிஷத் வாக்கியங்களே இவற்றிற்கு ஆதாரம். 

***

No comments:

Post a Comment