ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, July 31, 2020

26-31 பித்ருகண சந்தி

தீ3பதி3ந்தீ3பக3ளு பொரம

ட்டாபணாலயக3த திமிரக3

தா பரிஹரிஸி தத்க3த பதா3ர்த்த23ள தோர்ப்பந்தெ |

ஸௌபரணி வரவஹன தா ப3ஹு

ரூப நாமதி3 எல்ல கடெ3யலி

வ்யாபிஸித்து3 யதே2ஷ்ட மஹிமெய தோர்ப்ப திளி3லெ ||26

 

தீபதிம் = ஒரு தீபத்தினால்

தீபகளு = பல தீபங்கள்

பொரெமட்டு = முதலிலிருந்து

ஆபண = கடைகள்

ஆலயகத = வீடு, இவற்றில் இருக்கும்

திமிரகள = இருட்டினை

தா = தான்

பரிஹரகைஸி = பரிகரித்து

தத்கத = அங்கிருக்கும்

பதார்த்த = பொருட்களை

தோர்ப்பந்தெ = காட்டுவதைப் போல

ஸௌபரணி வரவாஹனனு = ஸௌபர்ணிதேவியின் பதியான, கருடனை வாகனமாகக் கொண்டிருக்கும் ஸ்ரீஹரி

பஹு ரூப நாமதி = பல ரூபங்களாலும், பல பெயர்களாலும்

எல்ல கடெயலி வியாபிஸித்து = எல்லா இடங்களிலும் வியாபித்து

திளிஸதலெ = தான் இருப்பதை தெரிவிக்காமல்

யதேஷ்ட மஹிமெய = விசேஷ மகிமைகளை

தோர்ப்ப = மக்கள் செய்ததுபோல காட்டுகிறான்.

 

ஒரு தீபம் இருந்தால், அதிலிருந்து இன்னொன்று தீபம், அதிலிருந்து மற்றொன்று என தொடர்ச்சியாக ஏற்றி, கடைகளில், வீடுகளில் வைத்தால், அங்கங்கு இருக்கும் இருட்டினைப் போக்கி அங்கிருக்கும் பதார்த்தங்களை அந்த தீபம் மக்களுக்கு காட்டுகின்றன. அதைப்போல, ஸ்ரீபரமாத்மன் தன் மூலரூபமான பத்மனாபரூபத்தினால், அவதாரரூப, அம்ஷரூப முதலான அனேக ரூபங்களால், ஸ்ரீபரமாத்மனே அனைத்து கர்மங்களையும் செய்தான் என்று சாதாரண மக்களுக்கு தெரிவிக்காமல், ராஜகுருகளில் இருந்து ராஜகாரியங்களை, சேவகர்களில் இருந்து சேவக காரியங்களை செய்வித்து, ஞானிகளுக்கு மட்டும் தன் மகிமைகளை காட்டிக் கொள்கிறானே தவிர, தீபம், குருடர்களுக்கு எப்படி பொருட்களை காட்டாதோ, அதுபோலவே, பரமாத்மன் தன் மகிமைகளை ஞானிகளுக்கு மட்டுமே காட்டுகிறான். அஞ்ஞானிகளுக்கு காட்டுவதில்லை.

 

நலினமித்ரகெ3 இந்த்3ரத4னு ப்ரதி

2லிஸுவந்தெ ஜக3த்ரயவு க

ங்கொ3ளிபுத3னு பாதி4யலி ப்ரதிபி3ம்பா3ஹ்வயதி3 ஹரிகெ3 |

திளியெ த்ரிககுத்3தா4மனதி

ங்க3ஸுரூபவ ர்வடா2விலி

பொளெவ ஹ்ருத3யகெ ப்ரதிதிவஸ ப்ரஹ்லாத3 போஷகனு ||27

 

நலினமித்ரகெ = சூரியனுக்கு

இந்திரதனு = இந்திரனின் தனுஸ் (காமனின் வில்) என்று புகழ் பெற்றிருக்கும் வானவில்

ப்ரதிபலிஸுவந்தெ = வானில் தெரிவதைப்போல

ஹரிகெ = ஸ்ரீஹரிக்கு

ஜகத்ரயவு = இந்த மூன்று உலகங்களும்

அனுபாதியலி = மேற்சொன்ன விதத்தில்

ப்ரதிபிம்பாஹ்வயதி = பிரதிபிம்பமாக

கங்கொளிபுதனு = தெரிகிறது

த்ரிககுத்தாமன = ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களை வீடாக வைத்திருக்கும் ஸ்ரீபரமாத்மனின்

அதிமங்கல ஸுரூபவ = மங்கலகரமான மிகச்சிறந்த ரூபத்தை

ஸர்வ டாவிலி = அனைத்து இடங்களிலும்

திளியெ =அந்த பிரதிபிம்பத்தில் அந்தர்யாமியாக பிம்பமூர்த்தியான பரமாத்மனே தத்ரூப அந்த உருவமாக இருக்கிறான் என்று அறிந்தால்,

ப்ரஹ்லாத போஷகனு = பிரகலாதனுக்கு அருளியவன்

ப்ரதிதிவஸ = எப்போதும்

ஹ்ருதயகெ = இதய கமலத்தில்

பொளெவ = அபரோக்‌ஷத்தில் ஒளிமயமாக காட்டிக் கொள்கிறான்.

 

ஸோபாதிரனுபாதிஸ்ச ப்ரதிபிம்போத்விதீயதே |

ஜீவ ஈஷஸ்யானுபாதி இந்த்ரசாபோயதாரவே: ||

 

என்று பிரம்மசூத்ர பாஷ்யத்தின்படி, ஸோபாதி பிரதிபிம்பம் மற்றும் அனுபாதி பிரதிபிம்பம் என்று இரு வகைகள் உண்டு. அதில் வானவில் எப்படி சூரியனுக்கு பிரதிபிம்பமோ, அப்படியே பரமாத்மனுக்கு ஜீவன் அனுபாதி பிம்பர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஸோபாதி என்றால் என்ன?

 

உபாதிஸத்வே ப்ரதிபிம்பஸ்ய ஸத்வம் |

உபாதினாஷே ப்ரதிபிம்பஸ்யனாஷ: ||

 

உருவம் இருந்தால் பிரதிபிம்பம் தெரியும். உருவம் இல்லையெனில், பிரதிபிம்பமும் தெரிவதில்லை. கண்ணாடி இருந்தால் நம் முகத்தின் பிரதிபிம்பம் தெரியும். கண்ணாடி இல்லையெனில், பிரதிபிம்பமும் இல்லை. இதைப்போல, சூரியன் கிழக்கில் அல்லது மேற்கில் இருக்கும் நேரத்தில் நீருள்ள மேகங்கள் சூரியனுக்கு எதிராக இருந்தால், சூரியனின் பிம்பம் அந்த மேகங்களில் பிரதிபிம்பமாக ஒரு வில்லினைப் போல பல வண்ணங்களில் தெரிகிறது. இதற்கு ஸோபாதி ப்ரதிபிம்பம் என்று பெயர். அத்தகைய மேகம் இல்லாத காலத்தில், வானவில் தெரிவதில்லை.

 

அனுபாதி என்றால், ஜீவனின் ஸ்வரூபதேகமே உருவமாக இருக்க, என்றும் நாசம் இல்லாத பரமாத்மனின் பிரதிபிம்பம், இந்த ஸ்வரூப தேகத்தையே பிரதிபிம்பம் என்கிறது. ஆனால், அங்கும் ஸ்வரூபதேகம் என்னும் உருவம் இருந்தாலும், அந்த உருவம், கண்ணாடி, மேகம், தண்ணீர் போல அழியும் பொருள் அல்ல. பாஹ்யோபாதி என்றும், அந்தரூபாதி என்றும் கீதையில் இரு விதங்களைக் கூறி, பாஹ்யோபாதிக்கு நாசம் உண்டு, அந்தருபாதிக்கு நாசம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நாசமில்லாத உபாதியே அனுபாதி பிரதிபிம்பம் ஆகும். நாசமுள்ள உபாதியினால் வந்த பிரதிபிம்பம் ஸோபாதி என்று அறியவேண்டும்.

 

தாசராயர், அனுபாதி பிரதிபிம்பத்திற்கு, ஸோபாதி பிரதிபிம்பத்தை உவமையாக கொடுத்திருக்கிறார். பாகவத 9ம் ஸ்கந்தத்தில்: ய:ஸேதேனிஷி ஸந்த்ரஸ்தோ யதானாரீதிவாபுர்யா’ - புரூரவஸ் ராஜனிடம் ஊர்வசி கூறியது இது. பகலில் ஸ்த்ரி எப்படி பயப்படுகிறாளோ, இரவில் புருஷர் பயந்து படுத்திருக்கிறான். இந்த உவமையைப் போல இங்கும் சூரியனின் பிரதிபிம்பம் வானவில்லாக எப்படி தோன்றுகிறதோ, அதைப்போலவே, பரமாத்மனின் பிரதிபிம்பம் ஜீவன் என்று அறியவேண்டும். இப்படி அனைத்து இடங்களிலும் இருக்கும் ஜீவரை, பரமாத்மனின் பிரதிபிம்பம் என்று அறிந்து, பிம்பரூபியான பரமாத்மனை அனைத்து இடங்களிலும் சிந்திக்க, பரமாத்மன் அபரோக்‌ஷத்தில் ஒளிமயமாக தரிசனம் அளிக்கிறான்.

 

விஸேஷ தொ3ளதி விமலஸி

ன தோயிஸி அக்3னியொளகி3டெ3

ரிஸுவுது ப்ரகாஷ நஸுகுந்த33லெ ர்வத்ர |

த்ரிஷிர தூ3ஷணவைரி ப4க்தி ஸு

தி தோய்த3 மஹாத்மரனு பா3

தி4வு ப4வதொ3ளகி3த்த3ரு ரியெ து3ரித ராஷிக3ளு ||28

 

அதிவிமல = மிகத் தூய்மையான

ஸிதவஸனவனு = தூய்மையான வஸ்திரத்தை

ரஸவிசேஷதொளு = நெருப்பின் சம்பந்தம் ஆனாலும் எரியாத எண்ணெய்

அக்னியொளகிடெ = நெருப்பில் போட்டால்

நஸுகுந்ததலெ = வஸ்திரத்தை கொஞ்சமும் சுடாமல்

ஸர்வத்ர = வஸ்திரத்தில் அனைத்து இடங்களிலும்

ப்ரகாஷ = அக்னி ஜ்வாலை

பஸரிஸுவது = பரவும்

த்ரிஷிர = த்ரிஷிர என்னும் அசுரன்

தூஷண = அவனின் தம்பியான தூஷண என்னும் அசுரன் ஆகிய அசுரர்கள்

வைரி = இவர்களின் எதிரியான ஸ்ரீராமதேவர்

பக்தி = பக்தி என்னும்

ஸுரஸதி = உத்தமமான ரஸத்தில்

தோய்த மஹாத்மரன = மூழ்கிய மகாபக்தர்கள்

பவதொளகித்தரு சரி = ஸம்சாரத்தில் இருந்தாலும் சரி

துரிதராஷிகளு = பாபராசிகள்

பாதிஸவு = அவர்களை பாதிக்காது.

 

ஒரு மூலிகை ரசத்தில் ஒரு நல்ல தூய்மையான ஆடையை நனைத்து, பின் அதனை எரித்தாலும், பார்ப்பவர்களுக்கு அந்த ஆடை எரிவதைப்போல தெரியும் ஆனால், நெருப்பு குறைந்தபிறகு பார்த்தால், அந்த ஆடைக்கு சேதம் ஆகியிருக்காது. மந்திரவாதிகள் இதை பயன்படுத்தி மக்களை மயக்குவர்.

 

இதைப்போலவே, ஜகதீஸ்வரனான பரமாத்மனிடம் த்ருடமான பக்தி என்னும் ரசத்தில் மூழ்கிய மனதை பகவத்பக்தர்கள், சுகதுக்க மிஸ்ரமான சம்சாரம் என்னும் நெருப்பின் நடுவில் இருந்தாலும், சம்சார சம்பந்தமான பாபராசிகள் என்னும் அக்னி ஜ்வாலைகள் அவர்களை எதுவும் பாதிப்பதில்லை. பகவந்தனின் பாதாரவிந்தங்களில் திடமான பக்தி உள்ளவர்களை, சம்சாரம் எதுவும் பாதிப்பதில்லை என்பது கருத்து.

 

வாரிநிதி4யொளக3கி2ல நதி33ளு

பே3ரெபே3ரெ நிரந்தரத3லி வி

ஹாரகை3வுத பரம மோத33லிப்ப தெரனந்தெ |

மூருகு3ணக3ள மானி எனிஸு

ஸ்ரீரமாரூபக3ளு ஹரியலி

தோருதிப்புவு ர்வகாலதி3 மரஹிதவெனிஸி ||29

 

வாரிநிதியொளகெ = கடலில்

அகிள நதிகளு = அனைத்து நதிகளும்

நிரந்தரதலி = நிரந்தரமாக

பேரெபேரெ விஹாரகையுத = தத்தம் அம்சங்களால் பிரவகித்தவாறு

பரம மோததலி = மிகுந்த மகிழ்ச்சியுடன்

இப்பதெரதந்தெ = இருப்பதைப் போல

மூருகுணகளமானி எனிஸுவ = ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு அபிமானி என்று அழைக்கப்படும்

ஸ்ரீரமாரூபகளு = ஸ்ரீரமாதேவியரு

ஹரியலி = பரமாத்மனிடம்

ஸர்வகாலதி = அனைத்து காலங்களிலும்

ஸமரஹிதவெனிஸி = சமம் இல்லாதவள் என்று நினைத்து

தோருதிப்பவு = தெரிகிறது

 

அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் கடலில் கங்கை, கோதாவரி முதலான நதிகள் வெவ்வேறு இடங்களில் போய் சேர்கின்றன. பின் அவை மகிழ்ச்சியுடன் கடலில் பாய்வதைப் போல என்று இங்கு உவமை கொடுத்திருக்கிறார். இங்கு கங்கையின் சங்கம ஸ்தானம் வேறு, யமுனையின் சங்கம ஸ்தானம், கிருஷ்ணா துங்கா முதலான நதிகள் சேரும்போது அவை தனித்தனியாக (வெவ்வேறாக) தெரிகின்றன. இவ்வளவு நதிகளும் கடலில் இருக்கின்றன என்று சொல்லலாமே தவிர, ஜடமான நதிகளுக்கு மகிழ்ச்சி என்னும் குணத்தை எப்படி சொல்லலாம் என்று சந்தேகப்படக்கூடாது. நதிகளின் அபிமானி தேவதைகள், தங்களின் பதியான சமுத்திரஜ ராஜனிடம் சேர்ந்து மகிழ்கின்றனர் என்பது கருத்து.

 

அதைப்போல, த்ரிகுணாத்மகரான ரமாதேவியரும், சமுத்திரத்தில் தண்ணீர்த்துளிகள் இருப்பதைப்போல, அனேக இடங்களில் அனேக ரூபங்களால் வியாப்தராக இருக்கிறார். ஒரு சரீரத்தில் ஸ்வரூபதேகம், லிங்கதேகம், அனிருத்ததேகம், ஸ்தூலதேகம் என்று நான்கு சரீரங்கள் இருக்கின்றன. இந்த நான்கு தேகங்களிலும் அங்கங்கு இருக்கும் தத்வாபிமானி தேவதைகள் அனைவரும், அந்த தேவதைகளின் 24 தத்வங்களிலும் பகவத்ரூபங்கள், கடலில் தண்ணீர் துளிகள் வியாபித்திருப்பதைப்போல அனந்தானந்த ரூபங்களால் வியாபித்திருக்கின்றன.

 

இத்தகைய பகவந்தனின் ஒவ்வொரு ரூபங்களிலும் ரமாரூபம் பரமாத்மனின் வக்‌ஷஸ்தலத்தில் ஒளிர்கின்றன. பரந்து விரிந்த கடலில் ஒவ்வொரு நதியும் தனித்தனியாக ஒரே நேரத்தில் மட்டும் மகிழ்கின்றன. இத்தகைய குணம் வேறு யாரிடமும் இல்லை. லட்சுமிதேவியரைவிடவும் பரமாத்மன் உத்தமன். பிரம்மாதிகள் அதமர்கள். இவர்களுக்கு சமம் யார்? ஆகையால், சமம் இல்லாத இத்தகைய அனேக ரூபங்கள் பரமாத்மனின் ஏகதேச அங்கங்களில் அடங்கியிருக்கின்றது என்பது கருத்து.

 

கோ3கனத3 2னுதய கூ3கவ

லோகனகெ ஸொ3திரெ பா4ஸ்கர

தா களங்கனெ க்ருதிப ஜகன்னாத2னித3ரொளிரெ |

ஸ்வீகரிஸி ஸு2பட3லரியத3 வி

வேகிக3ளு நிந்திஸி3ரேனஹு

தீகவித்வவ கே1ளி ஸு2படதிஹரெ கோவித3ரு ||30

 

கோகனத சகனு = தாமரையின் நண்பனான சூரியன்

உதய = உதயம்

கூக = ஆந்தை

ஆலோகனகெ = பார்வைக்கு

ஸொகஸதிரெ = நன்றாக இல்லாவிட்டாலும்

பாஸ்கர = சூரியன்

தா = தான்

களங்கனெ = அது சூரியன் செய்த தவறா?

ஈ க்ருதியலி = இந்த காவியத்தில்

ஜகன்னாதனிரெ = தாசராயரின் உபாசனை மூர்த்தியான ஜகன்னாத ஸ்ரீபரமாத்மனின் ஸன்னிதானம் விசேஷம் இருப்பதால்

ஸ்வீகரிஸி = இதனைப் படித்து இதன் சாரத்தை புரிந்துகொண்டு

சுகபடலரியத = மகிழத் தெரியாத

அவிவேகிகளு = முட்டாள்கள்

நிந்திஸிதரெ = திட்டினால்

ஏனஹுது = என்ன ஆகும்? (இந்த கிரந்தத்திற்கு எந்த களங்கமும் வராது)

கோவிதரு = அறிஞர்கள்

ஈ கவித்வவ = இந்த காவியத்தை

கேளி = கேட்டு

சுகபடதெ = சுகப்படாமல்

இஹரெ = இருப்பார்களோ? (சுகப்படுவார்கள் என்று அர்த்தம்).

 

பகலில் கண் தெரியாத ஆந்தையானது, சூரியனின் உதயத்தைக் கண்டு கோபப்பட்டால் அதனால் சூரியனுக்கு ஏதும் தோஷம் வருமோ? அப்படியே சில அ-விவேகிகள் இந்த கிரந்தத்தில் இருக்கும் பகவன்மகிமைகளின் சாரத்தை ஏற்றுக்கொள்ளும் யோக்யதை இல்லாமல், இது ஒரு ப்ராக்ருத கிரந்தம், இதை படிக்கக்கூடாது என்று திட்டினால், அதனால் இந்த கிரந்தத்திற்கு ஏதும் களங்கம் வருகிறதா?

 

வெறும் பகவத் சரித்திரத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் இந்த கிரந்தத்தின் சாரத்தை ஏற்றுக்கொண்டு, சுகப்படும் யோக்யதையுள்ள, இந்த கிரந்தத்தைப் பார்த்து படித்து மகிழ்ச்சியடையாமல் இருப்பார்களோ?

 

அவிவேகிகளுக்கு இந்த கிரந்தத்தின் பயன் புரியாமல் இருந்தாலும், விவேகிகள் இதை படிப்பதால், இந்த கிரந்தத்தை இயற்றியதற்கான நற்பலன் கிடைத்துவிட்டது என்பது கருத்து.

 

சேதனா சேதனக3ளலி கு3ரு

மாதரிஷ்வாந்தர்க3த ஜக3

ந்னாத2விட்டல நிரந்தரதி3 வ்யாபிஸி திளிஸிகொளதெ3 |

காதரவ புட்டிஸி விஷயத3லி

யாதுதா3னர மோஹிஸுவ நி

ர்பீ3த நித்யானந்த3மய நிர்தோ3ஷ நிரவத்3||31

 

சேதனா சேதனகளலி = சேதன மற்றும் ஜடாத்மகமான அனைத்து உலகங்களில்

குரு மாதரிஷ்வாந்தர்கத = லோக குருகளான பாரதிரமண முக்ய பிராணாந்தர்கத

ஸ்ரீஜகன்னாதவிட்டல,

நிரந்தரதி = எப்போதும்

வியாபிஸி = நிலைத்திருந்து

திளிஸதலெ = காட்டிக் கொள்ளாமல்

விஷயதலி = விஷய சுகங்களில்

காதுரவ புட்டிஸி = விருப்பத்தை உருவாக்கி

யாதுதானர = தமோயோக்யர்களான தைத்யர்களை

மோஹிஸுவ = மோகம் கொள்ளச் செய்வான்

நிர்பீத = பயம் இல்லாதவன்

நித்யானந்தமய = எப்போதும் ஆனந்தமயமானவன்

நிர்தோஷ = பிறப்பு / இறப்பு போன்ற தோஷங்கள் அற்றவன்

நிரவத்ய = ப்ராக்ருத குண சம்பந்தமான தோஷங்கள் அற்றவன்

 

பிரம்மாதி சேதனர்களிலும், மரம் முதலான ஜட சேதனர்களிலும், ஸ்தாவரமான மலைகளிலும், பரமாத்மன் வியாப்தனாகி , சாமான்யர்கள் கண்களுக்குத் தெரியாமல் ஞானிகளின் கண்களுக்கு மட்டும் தெரிபவனாக இருக்கிறான். எப்போதும் பயம் அற்றவன். நித்யானந்த ஸ்வரூபன். பிறப்பு, இறப்பு முதலான தோஷங்கள் அற்றவன். சத்வ ரஜஸ் தமோ குணாத்மக ப்ராக்ருத தேக சம்பந்தமான சுக துக்கங்கள் இல்லாதவன்.

 

இத்தகைய ஸ்வாமி, அன்யதோ உபாசகர்களான தைத்யர்களுக்கு, சம்சார சம்பந்தமான விஷய சுகத்தில் அதிக விருப்பத்தை உருவாக்கி, தன்னில் த்வேஷாதிகளை செய்வித்து, அபார துக்கத்தையே கொடுக்கிறான். சத்-உபாசனை செய்பவர்களுக்கு மட்டும் நித்யானந்தமயமான முக்தியைக் கொடுக்கிறான் என்பது கருத்து.

 

பித்ருகணவிசார சந்தி என்னும் 14ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***