#35 - விபூதி சந்தி
பி3ம்ப3ரெனிபரு ஸ்வோத்தமரு ப்ரதி
பி3ம்ப3ரெனிபரு ஸ்வாவரரு ப்ரதி
பி3ம்ப பிம்பக3ளொளகெ3 கேவல பி3ம்ப3 ஹரியெந்து3 |
ஸம்ப்4ரமதி3 பா1டுத1லி நோடு3த
உம்பு3டுவுதி3டுவுது3 கொ1டு3வுதெ3
ல் லம்பு3ஜாம்ப3க1னங்க்4ரி பூஜெக3ளெந்து3 நலிதா3டு3 ||35
ஸ்வோத்தமரு = தன்னைவிட உத்தமர்
பிம்பரெனிபரு = பிம்பர் என்று சொல்லிக் கொள்வர்
ஸ்வாவரரு = தன்னைவிட குண, ஞானங்களை குறைவாகக் கொண்டவர்
பிரதிபிம்ப = பிரதிபிம்பர் என்று அறியவேண்டும்
பிரதிபிம்ப பிம்பரொளகெ = பிரதிபிம்ப ஜீவர், பிம்பரின் உள்ளே
கேவல பிம்ப = பிம்பரூபி
ஹரியெந்து = ஸ்ரீபரமாத்மனே என்று
ஸம்ப்ரமதி = மகிழ்ச்சியுடன்
பாடுதலி = பாடும்போது
நோடுத = பார்க்கும்போது
உம்புடுவது = உண்வது மற்றும் வஸ்திராதிகளை உடுத்துவது
இடுவுது = ஆபராணாதிகளை அணிவது
கொடுவுது = மற்றவர்களுக்கு தானம் கொடுப்பது
எல்ல = இந்த அனைத்து செயல்களையும்
அம்புஜாம்பகன = தாமரைக் கண்ணனான ஸ்ரீபரமாத்மனின்
அங்க்ரிபூஜெகளெந்து = பாதபூஜை என்று
நலிதாடு = குதித்துக் கொண்டாடு.
எங்கெங்கு, பிம்பபிரதிபிம்ப ரூபங்களை சிந்திக்க வேண்டும் என்பதை சொல்கிறார். மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில், 1ம் அத்தியாயத்தில்:
ஆபாஸ கோஸ்யபவன: பவனஸ்ய ருத்ர: ஷேஷாத்மகோ கருட ஏவச ஷக்ரகாமௌ |
வீந்த்ரேஷயோஸ் ததபரேத்வனயோஷ்ச தேஷாம்ருஷ்யாதய: க்ரமஷ ஊனகுணா: ஷதாம்ஷாத் ||
பரமாத்மனின் நேரடி பிரதிபிம்பர் - வாயுதேவர். வாயுதேவரின் பிரதிபிம்பர் ருத்ரதேவர். அந்த ருத்ரதேவரே அடுத்து சேஷ பதவிக்கு வருபவர். கருடனும் வாயுதேவரின் பிரதிபிம்பரே. கருடசேஷாதிகளின் பிரதிபிம்பர் இந்திர மன்மதர்கள். இவர்களின் அடுத்தவர்கள் இவர்களுக்கு பிரதிபிம்பர் என்று இப்படியே 100 குணங்கள் குறைவாக இருப்பவர்கள், ரிஷிமுனிகள். இவர்கள் அனைவரும் ஸோத்தமரின் பிரதிபிம்பர்கள் என்று சொல்கிறார். இதே விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார்.
நம்மைவிட உத்தமர்களை (சிறந்தவர்களை) நமக்கு பிம்பரூபி என்றும், நம்மைவிட குணத்தில் சிறந்தவர்களை நமக்கு பிரதிபிம்பர் என்றும், நாம் ஸோத்தமருக்கு பிரதிபிம்பர், ஸ்வாவரருக்கு பிம்பரூபி என்றும் சொல்கிறார். இந்த பிம்பஜீவிகளுக்கும், பிரதிபிம்ப ஜீவிகளுக்கும், முக்கியமான பிம்பரூபி பரமாத்மன் என்று அறிந்து, நாம் உண்பதை, உடுத்துவதை, வாங்குவதை, கொடுப்பதை - அதாவது செய்யும் அனைத்தையும் நம் அந்தர்யாமியான பிம்பரூபியான தாமரைக் கண்ணனின் பூஜை என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே பொருள்.
***
No comments:
Post a Comment