#27 - விபூதி சந்தி
ஆப1ணாலயக3த பதா3ர்த்த2வு
ஸ்த்ரீ புருஷருக3 ளிந்திரியக3ளலி
தீ3ப பா1வக1தொ3ளிருதிஹ தை1லாதி3 த்3ரவ்யக3ளு |
ஆ பரமக3வதா3னவெந்து3 ப
தே3பதே3 மரெயத3லெ ஸ்மரிஸுத
பூ4ப1னந்த3தி3 சஞ்சரிஸு நிர்ப4யதி3 சர்வத்ர ||27
ஆபணாலயகத = ஆபண = கடைக்குள். ஆலய = வீட்டில். கத = இருக்கும்
பதார்த்த = அரிசி, பருப்பு ஆகிய பதார்த்தங்கள்
ஸ்த்ரீ புருஷர் = ஆண் பெண்கள்
இந்திரியகளலி = காது, மூக்கு, கை, கால்கள் ஆகிய இந்திரியங்களில் அணியும் ஆபரணங்களில்
தீப பாவகரொளு = தீபம், நெருப்பு ஆகியவற்றில்
இருதிஹ = இருக்கும்
தைலாதி த்ரவ்யகளு = எண்ணெய் போன்ற த்ரவ்யங்கள் இவை அனைத்தும்
ஆ பரமகெ = பரமாத்மனுக்கு
அவதானவெந்து = ஆஹுதி என்று
பதேபதே = திரும்பத்திரும்ப
மரெயதலெ ஸ்மரிஸுத = மறக்காமல்; நினைத்தவாறு
பூபனந்ததி = அரசனைப் போல
சஞ்சரிஸு = ஓடியாடு
நிர்பயதி = பயம் இல்லாமல்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்
ஆமயோsயஞ்ச பூதானாம் ஜாயதேயேனஸுவ்ரத |
ததேவஹ்யாமயத்ரவ்யம் தத்புனாதிசிகித்ஸிதம் |
ஏவன்ன்ருணாங்க்ரியாயோக: ஸர்வே சம்ஸ்க்ருதி ஹேதவ: |
த யோவாத்மவினாஷாய கல்பந்தே கலிபிதா:பரே ||
(பாகவத முதல் ஸ்கந்தம்)
நோய்க்கு காரணமான பதார்த்தங்களை தின்றால், அது அந்த மனிதனையே கொன்றுவிடும். ஆனால், அந்த பதார்த்தங்களையே மருத்துவர்கள் சுத்தம் செய்து, நோயாளிக்குக் கொடுத்தால், அது மருந்தாகிவிடுகிறது. அதுபோல, நாம் செய்யும், ஸ்னான, அலங்கார, போஜனாதிகளை, நம் நலனுக்காக என்னும் சிந்தனையுடன் தின்றால் அதுவே நம் சம்சாரத்திற்குக் காரணமாகி விடுகிறது. ஆனால், பரமாத்மனின் வீடான இந்த சரீரத்தை, பரமாத்மனின் ப்ரீதிக்காக கழுவுகிறேன், அலங்கரிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்று அனைத்தையும் பரமாத்மனின் பூஜை என்று நினைத்தால், அதுவே முக்திக்கான சாதனை என்று (மேற்கண்ட ஸ்லோகத்தில்) சொல்லியிருப்பர். அதையே இங்கு தாசராயரும் கூறுகிறார்.
கடையில் இருக்கும் பதார்த்தங்கள், வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு முதலான பதார்த்தங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஆபரணங்கள், தீபத்திற்கு விடும் எண்ணெய், நெருப்பில் போடும் கட்டைகள், ஆகிய அனைத்தும் பரமாத்மனின் பூஜாத்மக யாகத்தில் விடும் ஆஹுதி என்று நினைத்து, ஒவ்வொரு கணமும் இந்த சிந்தனையை விடாமல், எப்போதும் நினைத்தவாறு, மகாராஜாவானவன் எப்படி யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிக்கிறாரோ அதுபோல, நீயும் யாருக்கும் பயப்படாமல் சஞ்சரிப்பாயாக.
***
No comments:
Post a Comment