#13 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
ஐத3வித்யெக3ளொளகெ3 இஹ நா
கா3திக3 ளதி4ஷ்டானத3லி லகு1
மீத4வனு க்ருத்தோ3ல்க1 மொத3லாதை3து3 ரூபக3ள |
தா த4ரிஸி சஜ்ஜனர வித்3யெய
ச்சேதிஸுவ தாமஸரி க3க்ஞா
நாதிக3ள கொட்டவரவர ஸாத4னவ மாடி3ஸுவ ||13
ஐதுவித்யெகளொளகெ = தர்க, வ்யாகரண, மீமாம்ஸ, சாந்தஸ, அலங்காரம் என்னும் 5 வித்யைகளுக்குள்
இஹ = இருக்கும்
நாகாதிகள = நாகாதி பஞ்சபிராணர்களின்
அதிஷ்டானதலி = அந்தர்யாமியாக
லகுமீதவனு = லட்சுமிபதி
க்ருத்தோல்க மொதலாத = க்ருத்தோல்க, மஹோல்க, வீரோல்க, த்யுல்க, ஸஹஸ்ரோல்க என்னும்
ஐது ரூபகள = ஐந்து ரூபங்களை
தா = தான்
தரிஸி = ஸ்வீகரித்து
சஜ்ஜனர அவித்யெய = சஜ்ஜனர்களின் தவறான ஞானங்களை
சேதிஸுவ = பரிகரிக்கும்
தாமஸரிகெ = தாமசர்களுக்கு
அஞ்ஞானாதிகள = அஞ்ஞானாதிகளை
கொட்டு = கொடுத்து
அவரவர = முக்தி யோக்ய, தமோ யோக்யர்களின் தகுதிக்கேற்ப
ஸாதனவ = சாதனையை
மாடிஸுவ = செய்விக்கிறான்.
முந்தைய பத்யத்தில் நாகாதி பஞ்சப்ராணர் அனைத்து மக்களின் ஷப்தாதிகளில் இருக்கிறார்கள் என்று சொல்லி, இவர்களின் அந்தர்யாமி பரமாத்மன், அயோக்யர்களில் தமோபிமானி துர்காபதி ரூபனாக இருந்து, அன்யதா ஞானத்தை (தவறான ஞானத்தை) கொடுக்கிறான் என்றார். அடுத்து, அதே நாகாதி பிராணரின் அந்தர்யாமியாகி சஜ்ஜனர்களில் பரமாத்மன் என்ன செய்கிறான் என்று சொல்கிறார்.
அயோக்கியர்கள் 5 விதமான கெட்ட விஷயங்களில் மனதை செலுத்துமாறு செய்து, சஜ்ஜனர்கள் தர்க்க, வ்யாகரண, மீமாம்ஸ, சந்தஸ், அலங்காரம் என்னும் பஞ்சவித்யைகளை கற்றவர்களாக செய்து, நாகாதி பஞ்சபிராணர்களுக்குள் ஸ்ரீலட்சுமிபதி, க்ருத்தோல்க, மஹோல்க, வீரோல்க, த்யுல்க, ஸஹஸ்ரோல்க என்னும் 5 ரூபங்களால் இருந்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப, அதாவது முக்தி யோக்யர்களுக்கு முக்தி சாதனையை செய்விக்கிறான். தமோ யோக்கியர்களுக்கு தமஸ் சாதனையையும், மத்யமர்களுக்கு மிஸ்ர லோகத்தின் ஸாதனையை செய்விக்கிறான்.
***
No comments:
Post a Comment