ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, May 9, 2020

#2 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#2 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


33ன பா1வக1 மிதெ3 ரவி ர
ஷ்மிக3ளெ தூ4மவு அர்ச்சியெனிபுதெ3
ஹக3லு நக்‌ஷத்ரக3ளெ கி1டிக3ளு சந்த்3ரமங்கா3|
ம்ருக3வரோத3ர னொளகெ3 ஐரூ
பக3ள சிந்திஸி ப4க்திரஸ மா
துக3ள மந்த்ரவ மாடி ஹோமிஸுவரு விபஸ்சிதரு ||2


ககன = ஆகாயம்
பாவக = அக்னி
ஸமிதெ = காஷ்டம் (சமித்து)
ரவி = சூரியன்
ரஷ்மிகளெ = சூரியனின் கிரணங்கள்
தூமவு = புகை
அர்சியெனிபுதெ = ஜ்வாலை என்று அழைக்கப்படுகிறது
ஹகலு = பகல் (சூரிய உதய காலத்து)
நட்சத்திரகளே கிடிகளு = நட்சத்திரங்களே தீப்பொறிகள்
சந்திரமா = சந்திரன்
அங்கார = நெருப்பு
ம்ருகவரோதரனொளகெ = சந்திரனுக்குள்
ஐரூபகள சிந்திஸி = அனிருத்தாதி 5 ரூபங்களை சிந்தித்து
பக்திரஸ மாதுகளெ = பக்தியுடன் கூடிய பேச்சுக்களே
மந்த்ரவு மாடி = மந்திரமாக ஆக்கிக்கொண்டு
ஹோமிஸுவரு = ஹோமம் செய்வார்கள்
விபஸ்சிதரு = ஞானிகள்

முந்தைய பத்யத்தில், தாய் தந்தை முதலான பஞ்சாக்னிகளில் அனிருத்தாதி ரூபங்களையும், அந்த ஒவ்வொன்றிலும் மேலும் ஐந்து ரூபங்களையும் என மொத்தம் 30 ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று கூறினார். இப்போது அந்த பஞ்சாக்னிகளை ஒவ்வொன்றாக ஐந்து பத்யங்களில் சொல்லி, அவற்றில் சிந்திக்க வேண்டிய 30 ரூபங்களின் விவரத்தை சொல்கிறார் தாசராயர். 

”அஸௌவாவலோகோ கௌதமாக்னிஸ்தஸ்யாதித்ய ஏவ ஸமித்ரஷ்மயோ தூமோஹரர்ச்சிஷ்சந்த்ரமா அங்காரா நக்‌ஷத்ராணாம் விஷ்ணுலிங்கஸ்தஸ்மின்னே தஸ்மின்னக்னௌ தேவா: ஸ்ரத்தாம் ஜுஹ்வதி தஸ்யா: ஆயுதே: ஸோமோ ராஜா ஸம்பவதி” என்று சாந்தோக்ய உபநிஷத் ஐந்தாம் அத்தியாயம் சொல்கிறது. இதன் அர்த்தத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருப்பதால், உபநிஷத் வாக்கியத்திற்கு தனியாக அர்த்தம் எழுதவில்லை. 

ககன என்றால் ஆகாயம். 
பாவக என்றால் அக்னி. 
சூரியனே சமித்து. 
சூரியனின் கிரணங்களே புகை. 
பகல் ஜ்வாலை. 
நட்சத்திரங்கள் தீப்பொறிகள். 
சந்திரனே கங்கு. 

சந்திரனில் அதாவது சந்திரனுக்குள் அனிருத்தாதி 5 ரூபங்களை சிந்தித்து, பக்திரஸபூர்ணமான பேச்சுக்கள் என்னும் ஹோம த்ரவ்யங்களை ஞானிகள் ஹோமம் செய்வார்கள். அக்னி, காஷ்டம், புகை, ஜ்வாலை, தீப்பொறிகள், கங்கு என்னும் ஆறிலும் அந்தந்த பெயர்களால் அழைக்கப்பட்டு, ஆகாயத்தில் நாராயண, சூர்யனில் நாராயண நாராயண, கிரணங்களில் நாராயண் வாசுதேவ, பகல்களில் நாராயண சங்கர்ஷண, நட்சத்திரங்களில் நாராயண பிரத்யும்ன, சந்திரனில் நாராயண அனிருத்த என அகண்டமான ஆகாஷ-அக்னியில் நாராயண ரூபத்தை, மற்ற காஷ்டாதிகளில் நாராயணாதி 5 ரூபங்களை அறிந்து மொத்தம் 6 ரூபங்களை சிந்திக்க வேண்டும். 

மேற்சொன்ன சாந்தோக்ய உபநிஷத்தின் பாஷ்யத்தில் :

நாராயணாதய: பஞ்ச க்ரமாத் பஞ்சக்னய: ய:ஸ்ம்ருதா: |
அதனாதங்க நேத்ருத்வான் னிதராமசலத்வத: ||
ஸமேதனாத் ஸமித் விஷ்ணுத்தூத்காராத்தூம உச்யதே |
அரஞ்சிதத் வாதர்ச்சிஷ்சஸோங்காரோங்கரதே ரபி ||
விவிதம் ஸ்புரணாச்சைவ விஷ்ணுலிங்க இதீரித |
புனர்னாராமணாத்யத்மா ப்ரத்யேகம் பஞ்சரூபர்வா ||
ஆதித்ய: ஸததாsதானாத்ரஷ்மீரதி ஷம்ரூபத: |
தமஸாஹன னீருத்வாதஹஷ் சந்த்ர: பரம்ஸுகம் அனன்ய ராஜோ நக்‌ஷத்ரம் ||

இதன் அர்த்தம்:
ஆகாயம், மேகம், பூமி, தந்தை (ஆண்), தாய் (பெண்) - இந்த பஞ்சாக்னிகளில், நாராயணாதி 5 ரூபங்களையும், அதாவது, நாராயண, வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்னும் பஞ்சரூபங்களை சிந்திக்க வேண்டும். மேலும் அக்னி முதலான பெயர்கள் பகவந்தனுடையது என்று அறியவேண்டும். எப்படியெனில், ஆ-கா-ஷ சொல்லினால், நன்றாக ஒளி தரக்கூடியவனாக இருப்பதால், ஆகாஷன் என்று நாராயணனுக்குப் பெயர். அதே நாராயணன், அக்னி என்றும் அழைக்கப்படுகிறான். ‘அத்தேத்யக்னி:’ பிரபஞ்சத்தையே உண்பவனாகையால், அதாவது, பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை தன் உதரத்தில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆகையால், மேலும், அனைத்து காலங்களிலும் பிரபஞ்சமானது பரமாத்மனின் உதரத்தில் இருந்தே இருக்கிறது என்பதாலும், அல்லது, அக்னி ரூபத்தினால் அனைத்தையும் எரிப்பவன் (உண்பவன்) ஆகையால், அக்னி என்று நாராயணனுக்குப் பெயர். 

‘தஸ்யாதித்ய ஏவஸமித்’ இந்த ஆகாசனுக்கு ஆதித்யனே சமித், அதாவது, காஷ்டன் என்று சொல்கிறார். 'ஆதித்ய: ஆதத்த இத்யாதித்யனாமா ஆதித்யஸ்தோ நாராயண நாராயணாத்மா’ - அனைத்து மக்களும் செய்யும் பூஜாதிகளை ஏற்றுக்கொள்கிறான். அல்லது, பூமியில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் எடுத்துக் கொள்வதால் ஆதித்யன் என்று பெயர். இத்தகைய ஆதித்ய நாமக பரமாத்மன், ‘நாராயண நாராயண’ ஸ்வரூபன் என்று அறியவேண்டும். சமித் என்றால் அதுவும் பரமாத்மனே. ‘ஸமேதனாத் ஸமிதித்யுச்யுதே’ அனைவரையும் வளர்ப்பதால் (அனைவருக்கும் அருள்வதால்) பரமாத்மனுக்கு சமித் என்று பெயர். ’ரஷ்மயோதூம:’ ரஷ்மிகள் என்றால் கிரணங்கள். புகை என்று பொருள். ‘ரதிஷம்ரூபத்வேன ரஷ்மினாமா: ரஷ்மிகதோ நாராயணோ வாசுதேவாத்மா தூத்கரோதி நிராகரோதீத் யஞ்ஞானா தீனிதி தூமனாமோச்யதே’. ரதி சுகரூபனாகையால் பரமாத்மனுக்கு ரஷ்மி என்று பெயர். இந்த ரஷ்மியில் இருக்கும் ரூபம், நாராயண வாசுதேவ ஸ்வரூபம் என்று அறியவேண்டும். அஞ்ஞானாதிகளை போக்குவதால், பரமாத்மனுக்கு ‘தூம’ என்று பெயர்.

‘அஹரர்ச்சி:’ பகல், ஜ்வாலை. ‘தமஸா அஹனனீயாத் வாதஹர்னாம கதோ னாராயண சம்ரக்‌ஷணாத்மா’ - இருட்டினால் அவனுக்கு எவ்வித பிரச்னைகளும் ஆகாததால், பரமாத்மனுக்கு ‘அஹ:’ அதாவது பகல் என்று பெயர். அர்ஹ (பகலுக்குள்) இருப்பது நாராயண சங்கர்ஷண ரூபம் என்று அறியவேண்டும். எவ்வித குறைபாடுகள் இல்லாமல், எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால், பரமாத்மனுக்கு அர்ச்சி என்று பெயர். 

சந்த்ரமா அங்காரா: - சந்திரன் கங்கு என்பதன் பொருள் இதுவே.
சுகரூபத்வாச்சந்த்ரனாமா சந்த்ரகத: நாராயண ப்ரத்யும்னாத்மா |
அங்காரா: அங்கேஷு ரமண ஹேதுத்வதங்காரா இத்யுக்த: ||

சுகஸ்வரூபன் ஆகையால், பரமாத்மனுக்கு சந்திரன் என்று பெயர். இந்த சந்திரனில் இருக்கும் ரூபம் ‘நாராயண ப்ரத்யும்ன’ ரூபம். 

கங்கிற்கு அங்கார என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அங்கார என்றால் அங்கங்களில் (சரீரத்தில்) நிலைத்திருப்பதால், பரமாத்மனுக்கு அங்கார என்று பெயர். ‘நக்‌ஷத்ராணி விஷ்புலிங்கா:’ நட்சத்திரங்களே தீப்பொறிகள் என்கின்றனர். இதன் பொருள்: ‘அனன்ய ராஜத்வேன நக்‌ஷத்ரானாமா: நக்‌ஷத்ரகத: நாராயணா னிருத்தாத்மா, மத்ஸ்யாதி ரூபேண விவிதம் ஸ்புரணாத் விஸ்புலிங்கா இத்யுக்த:’ - இவனைவிட உத்தமமான ராஜன் யாரும் இல்லை என்பதால், பரமாத்மனுக்கு ‘நக்‌ஷத்ரன்’ என்று பெயர்.  நட்சத்திரத்தில் இருக்கும் ரூபம் நாராயண அனிருத்த ரூபம். 

பொதுவாக மீனை தண்ணீரிலிருந்து எடுத்து தரையில் போட்டால், அது தாவிக் குதிப்பதுண்டு. இதற்கு ‘ஸ்புரண’ என்று பெயர். பரமாத்மன், மத்ஸ்யாதி ரூபங்களை எடுத்து செயல்களை செய்வதால், அவனுக்கு ‘விஸ்புலிங்க’ என்று பெயர். இத்தகைய ஆகாஷ நாமக நாராயணாக்னியில் நாராயண நாராயணாதி 5 ரூபங்களையும் சேர்த்த 6 ரூபங்கள் உள்ள அக்னியில், யார் மிகுந்த பக்தியுடன் பரமாத்மனை வணங்குகின்றனரோ, அத்தகையவர்களை, தேவதைகள் 6 ரூபங்களைக் கொண்ட நாராயணாக்னியில் ஆஹுதி கொடுக்கின்றனர். அந்த ஆஹுதி ரூபமான சஜ்ஜனர்கள், சோமராஜனை அதாவது சந்திரனை சேர்வார்கள். 

***

No comments:

Post a Comment