ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, March 31, 2020

#27 - வியாப்தி சந்தி

#27 - வியாப்தி சந்தி


கா131ப்பிண ஹிடி3து33டி3யலு
வேத3னெயு லோஹக3ளிக3ல்லதெ3
ஆதுதே1னை அனலகா3வ்யதெ ஏனமாடித3ரு |
ஆதிதே3வனு சர்வஜீவர
கா1து கொண்டிஹனொளஹொரகெ3 து:
க்கா2திக3ளு சம்பந்தவாகுவவேனு சின்மயகெ3 ||27


காதகப்பிண = நெருப்பில் நன்றாக காய்ச்சிய இரும்பினை
ஹிடிது படியலு = பிடித்து அடித்தால்
வேதனெயு = அந்த அடியின் வலி, அந்த இரும்புக்கு மட்டுமே வலிக்கும்
ஏனு மாடிதரு = என்ன செய்தாலும்
அனலகெ = நெருப்புக்கு
ஆதுதேனை = என்ன ஆகப்போகிறது? (ஒன்றும் ஆகாது என்று பொருள்).
ஆதிதேவன் = அனாதி காலத்திலிருந்தும் இருக்கும் ஸ்ரீபரமாத்மன்
சர்வஜீவர = அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே
காதுகொண்டிஹ = காத்துக் கொண்டிருக்கிறான்
சின்மயகெ = சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மனுக்கு
துக்காதிகள சம்பந்தவு = தேக சம்பந்தமான துக்கங்களின் சம்பந்தம்
ஆகுவுதேனை = என்றைக்கும் ஆகாது (வராது).

இரும்பை நீளமாக்க வேண்டுமெனில், அதனை நன்கு காய்ச்சி அடிப்பர். அப்போது அந்த அடியானது, அந்த இரும்பிற்கு வலிக்குமே தவிர, அதற்குள் இருக்கும் அந்த நெருப்பிற்கு ஒன்றும் / எதுவும் ஆகாது. அதுபோலவே, பரமாத்மனும் அனைத்து ஜீவர்களின் உள்ளே வெளியே வியாப்தனாக இருந்தாலும், அவர்களுக்கு சம்பந்தப்படாமல், ஜீவர்களின் தேகங்களுக்கு ஆகும் துக்காதிகள், அந்த தேகத்தில் இருக்கும் பரமாத்மனுக்கு சம்பந்தப்படுவதில்லை.

***


#26 - வியாப்தி சந்தி

#26 - வியாப்தி சந்தி


பொ1ந்தி3கொ1ண்டி3ஹ சர்வரொளு ச
ம்ப3ந்த வாக3தெ சக1லக1ர்மவ
ரந்த33லி தா1 மாடி மாடிஸி தத்ப2லக3ளுணதெ3 |
கு1ந்த3தெ3 அணு மஹத்தெ1னிப க31
மந்தி3ரதி3 சர்வத்ர து1ம்பி3
பா3ந்த3ளத3 தெ1ரனந்தெ1 இருதிப்பனு ரமாரமண ||26


ரமாரமண = லட்சுமிபதியான பரமாத்மன்
சர்வரொளு = அனைத்து பிராணிகளிலும்
சம்பந்தவாகதெ = ஸ்தூலதேக சம்பந்தம் இல்லாமல்
சகல கர்மவ = அனைத்து கர்மங்களையும்
அவரந்ததலி = அந்த பிராணி செய்வதைப் போல தானும் செய்து, செய்வித்து
தத்பலகள = அந்த கர்மங்களின் பலன்களை
உணதே = தான் அனுபவிக்காமல்
அணுமஹத்தெனிப = சிறியதும், பெரியதுமான
கடமந்திரதி = குடம், பாத்திரம் ஆகியவற்றின் உள்ளே வெளியேயும்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹ = நிலைத்திருக்கும்
பாந்தளத தெரனந்தெ = ஆகாயத்தைப் போல
இருதிப்பனு = இருக்கிறான்

ஸ்ரீபரமாத்மன், அனைத்து பிராணிகளிலும், அவர்களின் தேக இந்திரியங்களின் சம்பந்தம் இல்லாமல், ஜீவர்களிலும்  இந்திரியங்களிலும், அவர்களின் ஸ்தூல தேகத்தில் வியாப்தனாக இருந்து, அவரவர்கள் செய்யும் கர்மங்களை அவர்களைப் போல தானே செய்து, அவர்களிடமிருந்து செய்வித்து, அந்த பலன்களை தான் உண்ணாமல், அவர்களுக்கே கொடுப்பான். சிறிய குடமோ, பெரிய குடமோ, அவற்றின் உள்ளே முழுவதுமாக ஆகாயம் எப்படி நிரம்பியிருக்கிறதோ அப்படியே ஸ்ரீபரமாத்மன் சூக்‌ஷ்மரான (சிறியவர்) ஜீவர்களிலும், பெரியவர்களின் ஜீவர்களிலும், தனக்கும் அதற்கும் சம்பந்தப்படாமல் (நிர்லிப்தனாக) வியாபித்திருக்கிறார்.

***


Monday, March 30, 2020

#25 - வியாப்தி சந்தி

#25 - வியாப்தி சந்தி


ஜலவ னப1ஹரிசுவ க3ளிகெ33
ட்ட1லனுளிது3 ஜைக4ண்டெ கை1பி1டி3
தெ3ளெது3 ஹொடெவந்த33லி சந்த111ர்த்ரு தா1னாகி3 |
ஹலத4ரானுஜ புண்ய பாபத
2லக3ளனு தேவாசுரர க3
தொளு விபா43வ மாடி உணிசுத சாக்‌ஷியாகிப்ப ||25


ஜலவனபஹரிசுவ = நீர் பிடிக்கும்
களிகெ பட்டலு = நாழிகையைக் குறிக்கும் கிண்ணம் (பாத்திரம்)
உளிது = விட்டு
ஜைகண்டெ = ஜாங்கட வாத்தியத்தை
கைபிடிதெளெது = கை பிடித்து தன்னிடம் இழுக்கும்
ஹொடெவந்ததி = அடிப்பதைப் போல
ஸந்தத = எப்போதும்
தானு = ஸ்ரீபரமாத்மன்
கர்த்ரு = செய்பவனாக
ஹலதரானுஜ = பலராமனின் தம்பியான ஸ்ரீபரமாத்மன்
புண்யபாபத பலகளனு = அவரவர்களின் புண்ணிய பாவங்களின் பலன்களை
தேவாசுரர கணதொளு = தேவதைத்யர்களின் குழுவில்
விபாகவமாடி = பிரித்து
உணிசுத = கொடுப்பான்
சாக்‌ஷியாகிப்ப = அதற்கு தானே சாட்சியாகவும் இருப்பான்.

கடிகாரம் இல்லாத அந்த காலத்தில், காலத்தைக் கண்டுபிடிப்பதற்காக 4 அங்குல அகலம், 4 அங்குல ஆழமும், அடியில் ஒரு சிறிய துளை கொண்ட ஒரு பாத்திரத்தை (அதன் பெயரே ‘களிகெ பட்டலு’ - நாழிகையை சொல்லும் பாத்திரம்) வேறொரு பெரிய நீருள்ள பாத்திரத்தில் மூழ்குமாறு செய்வர். அந்த துளையுள்ள பாத்திரம் எப்போது முழுமையாக நீரில் மூழ்குகிறதோ, அப்போது ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள். 

இந்த பாத்திரத்தை செய்யும் விதத்தை பாகவதத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர்.

த்வாதஷார்த்த பலோன்யானஞ் சதுர்பிச்ஷ துரங்குலை: ||
ஸ்வர்ணமாப்யை: க்ருதச்சித்ரம் யாவத் ப்ருஸ்தம் ஜலம்பிபேத் ||

ஆருபலகாளு என்றால் 18 தோலா (1 தோலா = 11.66கிராம்) அரிசி பிடிக்கும் ஒரு பித்தளை அல்லது தாமிர பாத்திரம். அதன் நடுவில் 4 அங்குல நீளத்திற்கு ஒரு துளையைப் போட்டு அந்த பாத்திரத்தை மேலிருந்து பிடிப்பதற்கு ஒரு கயிறு கட்டவேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் இந்த பாத்திரத்தை விட்டால், நடுவில் இருக்கும் துவாரத்தின் மூலமாக இதில் நீர் நிரம்பும். துளையுள்ள பாத்திரம் முழுதாக முழுகிவிட்டால், ஒரு நாழிகை ஆகிவிட்டது என்று பொருள். இப்படி ஒரு நாழிகை முடிந்தவுடன், பக்கத்தில் இருக்கும் நேரம் காப்பாளர், 1,2,3 என்று நாழிகைகளுக்கேற்ப ஜாங்கடையில் சத்தம் செய்து நேரத்தை தெரிவிப்பார். இப்படி நீர் நிரம்புகிறது என்பதை அந்த காப்பாளருக்குத் தெரியுமே தவிர, அந்த பாத்திரத்திற்கு தெரிவதில்லை. அப்படியே அந்த பாத்திரம் முழுகியபிறகு, மறுபடி அதை வெளியில் எடுத்து, நீரைக் கொட்டிவிட்டு, மறுபடி அந்த பெரிய பாத்திரத்தில் வைப்பார்.

ஜீவர்களின் விஷயத்தில் பரமாத்மனும் இந்த நேரம் காப்பாளரைப் போல இருப்பான். பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரே, புண்ணிய பாவங்கள். ஜீவர்களின் ஸ்வபாவத்தை அறிந்து, அவர்களின் ஸ்தூல தேகத்தை ஸ்ருஷ்டித்து, பாத்திரத்து நடுவில் துளை போட்டு, அதில் நீர் நிரம்புவதைப்போல, பரமாத்மனும் ஜீவர்களின் ஸ்தூல தேகத்தில் அவர்களுக்கு சிறிது ஸ்வாதந்த்ர்யம் என்னும் துளையைக் கொடுத்திருக்கிறார். அதனால், சிறிது ஆசை மட்டும் தோன்றுகிறது. 

பாத்திரம் தானாகவே நீரை நிரப்பினாலும், பாதுகாப்பாளர் அதன் அருகில் அமர்ந்து அது எவ்வளவு நீர் கொண்டிருக்கிறது என்பதை அறிவானோ, அது போல, ஜீவனும் அஸ்வதந்த்ரனாக பரமாத்மனால் அருளப்பட்டு, தேகத்தில் அவன் அளித்த அல்ப ஸ்வாதந்த்ர்யத்தால், தன் கர்மபலன்களுக்கு ஏற்ப,  புண்ணிய பாவங்களை ஏற்றுக்கொள்கிறான். பாத்திரம் நிரம்பிவிட்டது என்பதை அறியும் காப்பாளர், ஜாங்கடவை அடிப்பது போல, பரமாத்மன், ஜீவர்களின் சாதனை முடிந்துவிட்டது என்பதை அறிந்து, அவர்களின் தகுதிக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறார். 

ஜாங்கடையில் எவ்வளவு முறை சத்தம் வருகிறது என்பதை வைத்து நேரத்தை மனிதர்கள் அறிவதைப் போல, ஜீவர்கள் தத்தம் புண்ணிய பாவ கர்ம பலன்களை அனுபவிக்கின்றனர். இப்படி நேரத்தை தெரிவிக்கும் காப்பாளர், அதற்கு எப்படி சாட்சியாக இருக்கிறாரோ, அதுபோலவே பரமாத்மனும், பலன்களை தேவ தைத்யர்களுக்கு பிரித்துக்கொடுத்து, தான் அதற்கு சாட்சியாக இருக்கிறார். 

***


#24 - வியாப்தி சந்தி

#24 - வியாப்தி சந்தி


வாரிஜாப்த1ன கி1ரண மணிக3
ஸேரி தத்த1த்வர்ணகளனு வி
கா1ரகை3தெ3 நோள்ப1ரிகெ31ங்கொ3ளிசுவந்த33லி |
மாரமண லோக1த்ரயதொ3ளிஹ
மூருவித3 ஜீவரொளகி3த்து3 வி
ஹார மாடு3வனவர யோக்யதெ11ர்மவனுரிஸி ||24


வாரிஜாப்தன = தாமரைக்கு இஷ்டமான சூரியனின்
கிரண மணிகள = கிரணங்கள், சிகப்பு, பச்சை, நீலம் முதலான வண்ணங்களைக் கொண்ட ரத்னங்களின்
ஸேரி = மேல் விழுந்து
தத்தத்வர்ணகளனு = அந்தந்த ரத்னங்களின் வர்ணங்களுக்கேற்ப
விகாரகைசதெ = நிறங்களின் வித்தியாசங்களை செய்யாமல் (பார்க்காமல்)
நோள்பரிகெ = பார்க்கும் மனிதர்களுக்கு
கங்கொளிசுவந்ததலி = பளபளவென்று தெரிவதைப் போல
மாரமண = லட்சுமிபதியானவன்
லோகத்ரயதொளிஹ = மூன்று உலகங்களிலும் இருக்கும்
மூருவித ஜீவரொளகித்து = சாத்விக முதலான மூன்று வித ஜீவர்களிலும் இருந்து
அவர = அந்தந்த ஜீவர்களின்
கர்மவ = தகுதியை அனுசரித்து (அதற்கேற்ப)
விஹார மாடுவனு = நிலைத்திருப்பான் / சஞ்சரிப்பான்.

சூரியனின் கதிர்கள், சிகப்பு, நீல, பச்சை முதலான ரத்னங்களில் எந்தவித வித்தியாசமும் பார்க்காமல் விழுந்து, அந்தந்த ரத்னங்களின் நிறத்தை எப்படி மேம்படுத்திக் காட்டுகிறதோ, அது எப்படி பார்க்கும் மக்களுக்கு பளபளவென்று தெரிகிறதோ, அதுபோல, லட்சுமிபதியான பரமாத்மனும், சாத்விகாதி மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, அந்தந்த ஜீவர்களின் தகுதிக்கேற்ப, அவர்களில் நிலைத்திருப்பான் / சஞ்சரிப்பான். 

***


Sunday, March 29, 2020

#23 - வியாப்தி சந்தி

#23 - வியாப்தி சந்தி


வாரித3னு மளெகெ3ரெயெ பெளெதி3
பூ4ருஹங்க3ள சித்ரப2லரஸ
பே3ரே பே3ரிப்ப1ந்தெ13ஹுவித4 ஜீவரொளகி3த்து3 |
மாரமணனவரவர யோக்யதெ1
மீரத3லெ கு3ண க1ர்மக1ள அனு
சார நடெசுவ தே3வனிகெ3 வைஷம்ய வெல்லிஹுதோ3 ||23


வாரிதனு = மேகம்
மளெகெரெயெ = மழை பொழிந்தால்
பெளெதிஹ = விளைந்திருக்கும்
பூருஹங்கள = மரங்களின்
சித்ரபலரச = விதவிதமான பழங்கள் மற்றும் அவற்றின் சாறுகள்
பேரேபேரிப்பந்தெ = வெவ்வேறாக இருப்பதைப் போல
பஹுவித ஜீவரொளகித்து = அனைத்துவித ஜீவர்களிலும் இருந்து
மாரமண = லட்சுமிபதி
அவரவர யோக்யதெ மீரதலெ = அவரவர்களின் தகுதிக்கேற்ப
குண கர்மகள அனுசார = அவர்களின் குண, கர்மங்களுக்கேற்ப
நடெசுவ = பலன்களைக் கொடுப்பான்
தேவனுக்கு = ஸ்ரீஹரிக்கு
வைஷம்யவெல்லிஹுதோ = பாரபட்சம் எங்கிருக்கிறது? (இல்லை என்று பொருள்).

மேகங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி மழையைப் பொழிகிறது. ஆனால், அந்த நீரினால் விளைந்த மரங்களில் காய்க்கும் காய், பழம், மற்றும் அவற்றின் சாறு வெவ்வேறு விதமாக இருக்கின்றன. சில இனிப்பு, சில கசப்பு என வெவ்வேறாக இருக்கிறது. இதற்கு அந்த மரத்தின் ஸ்வரூபமே காரணமே தவிர, மண், நீர் இவையெல்லாம் எப்படி காரணம் ஆகாதோ, அப்படியே, ஸ்ரீபரமாத்மன், சாத்விகாதி மூன்றுவித ஜீவர்களிலும் இருந்து, அவரவர்களின் தகுதியை மீறாமல் (அதற்கேற்ப), சாத்விகர் மூலமாக சத்வ கர்மங்களையும், ராஜசர் மூலமாக பலவிதமான கலவையான (மிஸ்ர) கர்மங்களையும், தாமசர் மூலமாக தன்னில் த்வேஷங்களை உருவாக்கி, அந்தந்த கர்மங்களுக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறார். முக்கியமாக, ஜீவர்களின் சத்வாதி கர்மங்கள், கர்மபலன்கள், இவற்றிற்கேற்ப கர்மங்களை செய்து, பலன்களைக் கொடுக்கிறாரே தவிர, தனக்கு இவன் வேண்டியவன், இவன் வேண்டாதவன் என்னும் பாரபட்சத்தினால் பலன்களைக் கொடுப்பதில்லை. இதிலிருந்து பரமாத்மனுக்கு பாரபட்சம் இல்லை என்று தெரிகிறது. 

***

#22 - வியாப்தி சந்தி

#22 - வியாப்தி சந்தி


1ப்த1லோஹவு நோள்ப1 ஜனரிகெ3
சப்த1ஜிஹ்வன தெ1ரதி3 தோ1ர்பு1து3
லுப்த1பா1வக1 லோஹ கா1ம்பு3து3 பூ1ர்வதோ3பா1தி3 |
ப்த1வாஹன நிகி2ல ஜனரோ
ள் வியாப்தனாதுத3ரிந்த3 சர்வரு
ஆப்த1ராகி3ஹரெல்ல கா1லதி3 ஹித1வ கை1கொ1ண்டு3 ||22


தப்தலோஹவு = சூடான இரும்பு
நோள்ப ஜனரிகெ = பார்க்கும் மக்களுக்கு
சப்தஜிஹ்வன தெரதி = ஏழு நாக்குகளுள்ள அந்த நெருப்பில்
தோர்புது = தெரியும்
லுப்தபாவக = நெருப்பு தணிந்தபிறகு
லோஹ = அந்த இரும்பு
பூர்வதோபாதி = முதலில் இருந்ததைப் போலவே இரும்பாக
காம்புது = தெரிகிறது (அது போலவே)
சப்தவாஹன = ஏழு குதிரைகளைக் கட்டிய ரதத்தைக் கொண்ட சூர்ய ரூபியான உருக்ரம நாமக ஸ்ரீபரமாத்மன்
நிகிளஜனரொளு = அனைத்து மக்களில் இருந்து
வ்யாப்தனாதுதரிந்த = வியாப்தனாக இருக்கும் காரணத்தினாலேயே
சர்வரு = அனைத்து மக்களும்
எல்லகாலதி = அனைத்து காலங்களிலும்
ஹிதவ கைகொண்டு = ஒருவருக்கொருவர் உதவிகளை செய்தவாறு
ஆப்தராகிஹரு = மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று அன்பாக இருக்கின்றனர்.

ஆஸ்யத்வயம் ஸுதாம்ரோஷ்டம் ஸப்தஜிஹ்வா சமன்விதம் |
தக்‌ஷிணாஸ்யே சதுர்ஜிஹ்வாதி ஸ்ரோவ்யே வாமவக்த்ரகே ||

சப்தஜிஹ்வன என்றால் அக்னி என்று பொருள். அக்னிரூபத்தை வர்ணிக்கும் இந்த வேத மந்திரத்தில், அக்னிதேவருக்கு இரு முகங்கள், ஏழு நாக்குகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. வலது முகத்தில் நான்கு நாக்குகள்; இடது முகத்தில் மூன்று நாக்குகள் உள்ளன.

காய்ச்சிய இரும்பைப் பார்ப்பவர்களுக்கு அது நெருப்புத் துண்டு போலவே தெரியும். அதுவே ஆறிப்போனால், அது வெறும் இரும்புதான். அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன் அனைவரின் தேகத்தில் வியாப்தனாக இருப்பதால், மக்கள் அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் என்று நினைத்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, உதவி பெற்று வாழ்கின்றனர். பரமாத்மன் ஒருவருடைய தேகத்தில் இல்லையென்றால் அவன், ஆறிப்போன இரும்பு போல, அதாவது பிணம் போல, யாருக்கும் வேண்டாததாகிறான். மனைவியாளவனும்கூட பிணத்தைப் பார்க்க பயப்படுவாள். ஆகையால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது, அவர்களுக்குள் பரமாத்மன் இருப்பதாலேயே என்று அறியவேண்டும்.

***


Saturday, March 28, 2020

#21 - வியாப்தி சந்தி

#21 - வியாப்தி சந்தி

எல்லி கே1ளிதரல்லி நோடித
ரல்லி பே3டித3ரல்லி நீடித3
ரல்லி ஓடித3ரல்லி ஆடித3ரல்லே இருதி1ஹனு |
3ல்லித3ரிக3தி1 பல்லித3னு சரி
யில்ல இவகா3வல்லி நோடலு
கு2ல்ல மானவரொல்லன ப்ரதி1மல்ல ஜகக்கெ1ல்ல ||21

எல்லி கேளிதரு = எந்த இடத்தில் கதா ஸ்ரவணம் கேட்டுக் கொண்டிருந்தாலும்
எல்லி நோடிதரு = எந்த சல-அசல பிரதிமைகளில் பார்த்துக் கொண்டிருந்தாலும்
எல்லி பேடிதரு = எந்த பிரம்ம ருத்ராதி தேவதைகளை ஆராதனை செய்து அவர்களை வேண்டினாலும்
எல்லி நீடிதரு = பிரம்ம ருத்ராதிகள் யாரின் தவங்களை மெச்சி வரங்களைக் கொடுத்தாலும்
எல்லி ஓடிதரு = சம்சார சாகரத்தின் பிரச்னைகளை தாங்கமுடியாமல் எங்கு ஓடினாலும்
எல்லி ஆடிதரு = எந்த இடத்தில் பரமாத்மனின் நாமோச்சாரணை செய்து கொண்டிருந்தாலும் அல்லது பகவத் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாலும்
அல்லி இருதிஹனு = அங்கு இருக்கிறான்
பல்லிதரிகெ = அறிந்தவர்களுக்கு
அதிபல்லிதனு = மிகவும் தெரிந்தவன்
ஆவல்லி நோடலு = எந்த விதத்தில் பார்த்தாலும் / இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும்
இவகெ = இந்த பரமாத்மனுக்கு
சரியில்ல = சமம் இல்லை
குல்லமானவர = கர்வம், பொறாமைகளால் பூரணமான பக்தி இல்லாதவர்களின் / படாடோபமாக பூஜிப்பவர்களின் பூஜைகளை
ஒல்லனு = ஏற்றுக்கொள்வதில்லை
ஜகக்கெல்ல = அனைத்து உலகங்களிலும்
அப்ரதிமல்ல = யாராலும் வெல்லப்பட முடியாதவன்.

ஸ்ரீபரமாத்மனின் கதையைக் கேட்பவர்கள், எந்த இடத்தில் அமர்ந்து அதைக் கேட்டாலும், அங்கு பரமாத்மனும் கேட்பவர்களில் இருந்து, அவனும் கேட்டுக் கொண்டிருக்கிறான். திடமான பக்தியுடன் பரமாத்மனையே நம்பி அவன் கதையைக் கேட்பவர்களுக்கு அங்கேயே தரிசனம் அளிக்கிறான். ஜனக மகாராஜா, தான் பாகவத சப்தாஹம் கேட்பதற்காக கங்கை நதிக்கரையில் ஒரு அழகான பந்தலைக்  கட்டி அங்கு ஒரு மனத்துடன் நின்று கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பந்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்று கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சனத்குமாரர் புராணத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி கேட்பவர்களின் த்ருடபக்தியை சோதிப்பதற்காக, ஸ்ரீபரமாத்மன் திடீரென்று அந்த பந்தலுக்கு தீ பிடிக்குமாறு செய்தார். தீயைக் கண்டவுடன், அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் பயந்தவாறு அனைத்து திசைகளிலும் ஓடத் துவங்கினர். சனத்குமாரர், மற்றும் கேட்டுக் கொண்டிருந்த ஜனக மகாராஜா இருவர் மட்டுமே அங்கு இருந்தனர். 

மக்கள், ராஜனைக் குறித்து - ‘ஹே ராஜனே, பந்தலில் தீ பிடித்திருக்கிறது. உடனடியாக எழுந்து வந்துவிடவும்’ - என்றனர். சனத்குமாரரை அவரின் உபன்யாசத்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த இருவரும் இந்த கூக்குரல்களை கேட்காமலேயே அமர்ந்திருந்தனர். சனத்குமாரர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, ராஜனோ அதை கேட்டவாறே இருந்தான். நெருப்பில் மண்டபம் முழுக்க எரிந்து போயிற்று. அந்த நெருப்பில், சனத்குமாரர் மற்றும் ஜனக மகாராஜா இருவரும் எரிந்து போயினர் என்று மக்கள் நினைத்தனர். சிறிது நேரத்தில் நெருப்பு அடங்கியது. அப்போது அங்கு வந்து பார்த்த மக்கள், இந்த இருவரும் அப்படியே அமர்ந்திருக்க, புராணம் நடந்து கொண்டிருந்ததைக் கண்டனர். 

அதைக் கண்டு வருந்திய மக்கள், நாம் அநியாயமாக புராணத்தைக் கேட்காமல் ஓடிவிட்டோம், எங்கு கதா ஸ்ரவணம் நடக்கிறதோ, அங்கு பரமாத்மன் கண்டிப்பாக இருந்தே இருக்கிறான். அத்தகைய பரமாத்மனின் சன்னிதானத்தில் நெருப்பு என்ன செய்துவிட முடியும்? நமக்கு இது தோன்றவில்லையே? ராஜன் திடபக்தி உள்ளவன். அவனை நெருப்பு எதுவும் செய்யவில்லை என்று நினைத்தனர். 18 புராணங்களில் ஒன்றான பிரம்மவைவர்த்த என்னும் புராணத்தில் இந்த கதையை சொல்லியிருக்கின்றனர். ஜனகராஜன் சாட்சாத்தாக அங்கு பரமாத்மனை கண்டான். மற்றும் ஸ்ரீபரமாத்மன் எங்கு பார்த்தாலும் இருக்கிறான். சுகாசார்யர் முதலான ரிஷிகள், எந்த இடத்தில் எந்த பொருட்களில் பார்த்தாலும் அவை அனைத்தையும் பகவத் ஸ்வரூபமாகவே பார்த்தனர். ஆகையால், எங்கு பார்த்தாலும் அங்கு அவன் இருக்கிறான் என்றனர். 

எங்கு வேண்டினாலும் அங்கு இருக்கிறான். அதாவது, பாணாசுரன் ஈஸ்வரனையும், ராவணன் பிரம்மனையும், மற்றும் சிலர் பார்வதி முதலானவர்களையும் வேண்ட, ஸ்ரீபரமாத்மன், பிரம்மாதி தேவதைகளில் தத்ரூபத்தினால் மகிழ்ச்சியடைந்து வரங்களைக் கொடுக்கிறான். பிரம்மாதிகளே வரங்களைக் கொடுக்கின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், பரமாத்மனே தத்ரூபியாகி இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?

தேன வினா த்ருணமபி ந சலதி - பரமாத்மன் இல்லாமல் பிரம்மாதிகளுக்கு அசையக்கூட சக்தி இருக்காது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதே ஆதாரத்தின்படி, பரமாத்மனே அவர்களின் உள்ளிருந்து வரங்களைக் கொடுக்கிறான் என்று தெரிகிறது. மேலும் பக்தியில் எங்கு வேண்டினாலும் அங்கேயே தரிசனம் அளிக்கிறான் என்னும் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. த்ருவன் காட்டினில் தவம் செய்து வேண்டிக்கொள்ள, அவனுக்கு அங்கேயே தரிசனம் அளித்தான். 

உடல் ஊனமான கூர்மதாஸன், ஆஷாட சுத்த ஏகாதசியன்று, பண்டரிபுரத்து பாண்டுரங்கனை தரிசனம் செய்யமுடியாமல் போய்விட்டதே என்று வருந்த, பாண்டுரங்கன் அவன் இருந்த இடத்திற்கே வந்து நின்றான். புண்டலீகனுக்காக ஆற்றங்கரையிலேயே தரிசனம் அளித்தான். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் பக்தியுடன், இலையையோ, புஷ்பத்தையோ, நீரையோ, பழங்களையோ சமர்ப்பித்தால் அவற்றை அங்கேயே ஏற்றுக்கொள்கிறான். 

எங்கு ஓடினாலும் அங்கு இருக்கிறான். அதாவது, பாகவத 10ம் ஸ்கந்தத்தில் :

மர்த்யோ ம்ருத்யுவ்யாளபீத: பலார்ய லோகான்ஸர்வான்னிர்பயம் நாத்யகர்ப்ப |
த்வத்பாதாப்ஜம் ப்ராப்யயத்ருச்சயாத்ய ஸ்வஸ்த:ஷேதே ம்ருத்யுரஸ்மாதபைதி ||

மரணம் என்னும் பாம்பிற்கு பயந்து மனிதன் இந்த உலகத்தில் எங்கு ஓடினாலும் அங்கு அவனுக்கு மரணம் கண்டிப்பாக உண்டு. அதுவே உன் பாதாரவிந்தங்களில் சேர்ந்தால், அப்போது மரணம் அவர்களை விடுகிறது. அப்போது மனிதன் பயமில்லாமல் நிம்மதியாக தூங்குகிறான். இப்படி மரணத்திற்கு பயந்து, மனிதன் எங்கு ஓடினாலும் ம்ருத்யு ரூபியாக அங்கங்கு பரமாத்மன் கண்டிப்பாக இருக்கிறான். அந்த பரமாத்மனையே நம்பினால் அந்த பயம் தேவையற்றதாக ஆகிறது.

எல்லி ஆடிதரல்லி இருதிஹனு - ஆடிதரெ என்றால் சொன்னால் என்று பொருள். விளையாடு என்னும் இன்னொரு பொருளும் உண்டு. இங்கு இந்த அர்த்தங்களும் சரியாக பொருந்துகின்றன. சிறு குழந்தைகள் மழலைச் சொற்கள் பேசியவாறு விளையாடினால், அந்த குழந்தைகளில் நிலைத்திருந்து பரமாத்மனே விளையாடுகிறான். சக்குபாய் தன் சிறிய வயதில், பொம்மைகளை வைத்து விளையாடும்போது, பாண்டுரங்கனின் பிரதிமையை வைத்து விளையாடி, அவனை வணங்குவதே விளையாட்டு என்று நினைத்து விளையாடினால், அவருக்கு பாண்டுரங்கன் எதிரிலேயே நின்றிருப்பதைப் போல தெரிந்ததாம். ஆடிதரே என்னும் சொல்லுக்கு ’சொன்னால்’ என்ற பொருளில், பிரகலாதன் தன் தந்தையைக் குறித்து - ‘இந்தத் தூணிலும் பரமாத்மன் இருக்கிறான்’ - என்று கூற, ‘சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்’ உண்மையான பக்தனான பிரகலாதனின் வாக்கியத்தை உண்மையாக்குவதற்காக அந்த தூணிலிருந்தே வெளிவந்தான் பரமாத்மன். 


பல்லிதரகதி பல்லிதனு - வேதங்களின் அபிமானியான ரமாதேவி மற்றும் பிரம்மதேவருக்கு பல்லவர்கள் என்று பெயர். ஆனாலும், பகவத் விஷயங்களை முழுமையாக யாரும் அறிய மாட்டார்கள். பரமாத்மனோ, இவர்கள் அனைவரின் ஸ்வரூபங்களையும் நன்றாக அறிவான். இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. நான், எனது என்னும் கர்வத்துடன், படாடோபத்துடன் செய்யும் பூஜைகளை அவன் ஏற்றுக் கொள்வதில்லை.

***