#19 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
மனதொ3ளிஹ கோவிந்த3 மாத4வ
க4னபஸக2 த1த்வத3லி நாரா
யண மஹத்த1த்வதொ3ளு அவ்யக்ததொ3ளு கே1ஷவனு |
இனிது1 ரூப1வ தே3ஹதொ3ளு சி
ந்த1னெயகை3வ மஹாத்மரிளெயொளு
மனுஜரல்லவரமரரெ ஸரி ஹரிக்1ருபா1ப3லதி3 ||19
மனதொளிஹ கோவிந்த = மனதில் கோவிந்தன் இருக்கிறான்
மாதவ = மாதவ,
கனபசக = குபேரனின் சகனான ருத்ரதேவரின்
தத்வதலி = அஹங்கார தத்வத்தில்
நாரயண மஹத்தத்வதலி = மஹத் தத்வத்தில் நாராயணன்
அவ்யக்ததலி கேசவனு = அவ்யக்த தத்வத்தில் கேசவன்
இனிது ரூபவ = இந்த விதமாக பகவத்ரூபங்களை
தேஹதொளு = நம் தேகத்தில்
சிந்தனெயகைவ = சிந்திக்கும்
மஹாத்மரிளெயொளு = மஹாத்மர்கள், பூமியில்
மனுஜரல்ல = சாதாரண மனிதர்கள் என்று அவர்களை
சொல்லக்கூடாது
ஹரிக்ருபாபலதி = பரமாத்மனின் க்ருபா பலத்தினால்
அவர்கள்,
அமரரே சரி = தேவதைகளே ஆவார்கள்.
மனஸ் தத்வத்தில் கோவிந்தனையும்;
அஹங்கார தத்வத்தில் மாதவனையும்;
மஹத் தத்வத்தில் நாராயனனையும்;
அவ்யக்த தத்வத்தில் கேசவனையும்; என சிந்திக்க வேண்டும்.
இந்த விதமாக தேகத்தில் ரூபங்களை சிந்திப்பவர்கள், சாதாரண மனிதர்கள் அல்ல. இவர்களை பகவத் கிருபைகளைக் கொண்ட தேவாம்சர்கள் என்றே
அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment