#9 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
விதி3 ப4வாதி ஸமஸ்தஜீவர
ஹ்ருத3யதொ3ளகே3 கா1த்மனெனிஸுவ
பது3மனாப4னு அச்யுதானந்தாதி3 ரூபத3லி |
அதி4 சுபூ4தாத்யாத்ம அதிதெ3ய்
வதொ3ளு கரெஸுவ ப்ராண நாகா3
பி4த3னு தஷரூபத3லி த3ஷவித4 ப்ராணரொளகி3த்து ||9
விதி பவாதி = பிரம்ம ருத்ரர் முதலான
சமஸ்த ஜீவர = அனைத்து ஜீவர்களின்
ஹ்ருத்யதொளகெ = இதயத்தில் இருந்து
ஏகாத்மனெனிஸுவ = ஒரு ரூபத்தினால் அழைக்கப்படுகிறான்
பதுமனாபனு = மூலரூபியான ஸ்ரீபத்மனாபன்
அச்யுதாதி அனந்தரூபதலி = அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் ரூபத்ரயங்களால்
ஆதிபூத, ஆத்யாத்ம, ஆதிதெய்வதொளு = அதிபூதத்திலும், ஆத்யாத்மத்திலும், ஆதிதெய்வத்திலும் இருந்து, ஆதிபூதாதி பெயர்களால் அழைக்கப்படுகிறான்.
பிராண = பிராணாபானாதி பஞ்ச பிராணனாகவும்,
நாகாபிதனு = நாக க்ருகள முதலான 5 பஞ்சப்ராணங்களின் பெயர்களைக் கொண்டவனாகவும்
இப்படியாக
தசவித பிராணரொளகித்து = பிராணாதி 5 பேர்களிலும், நாகாதி 5 பேர்களிலும், இருந்து,
தஷரூபதலி = 10 ரூபங்களால்
கரெசுத = அழைத்துக் கொள்ளப்படுகிறான்.
முந்தைய பத்யத்தில், த்ரிவித ஜீவர்களுக்கு பஞ்சவித சரீரங்களைக் கொடுத்து செயல்களை செய்கிறான் என்று சொல்லியிருந்தார். இங்கு, பஞ்சபூதங்களிலும், சரீரங்களிலும், தத்வாபிமானிகளிலும் கூட இருக்கும் பகவத்ரூபங்களை விவரிக்கிறார் தாசராயர்.
பாகவத 3ம் ஸ்கந்தம் 7ம் அத்தியாயத்தில்:
விபபாஜாத்மனாத்மான மேகதாதஷதாத்ரிதா |
ஸாத்யாத்மம் ஸாதிதெய்வஞ்ச ஸாதிபூத மிதித்ரிதா ||
விராட்ப்ராணோதஷவித ஏகதா ஹ்ருதயேனச |
ஆத்யவதார பூதனான பரமாத்மன், தன்னை ஒரு ரூபமாகியும், 10 ரூபங்களாகவும், 3 ரூபங்களாகவும் பிரிக்கிறான். ஆத்யாத்ம, ஆதிதெய்வ, ஆதிபூத என்னும் மூன்றில், மூன்று ரூபங்களாகவும், பிராணாதி 5, நாகாதி 5 என்று பிராணங்களில் 10 ரூபங்களாகவும் இருக்கிறான். இதற்கு ஆதாரம், மேற்சொன்ன ஸ்லோகத்தின் வியாக்யானத்தில்:
ததுக்தம் || பிராணாதி பஞ்சகஞ்சைவ ததா நாகாதி பஞ்சகம் ||
ஏவந்து தஷதாப்ராணா ஆத்யாத்மாதி த்ரிதாகிளா || இதி
பிராணாதி பஞ்சகம் என்றால், பிராண, அபான, வ்யான, உதான, சமான இவையே. நாகாதி பஞ்சகம் என்றால், நாக, க்ருகள, கூர்ம, தேவதத்த, தனஞ்சய என 5. இவையே 10 வகையான பிராணங்கள். ஆத்யாத்மாதி மூன்று பேதங்கள், இந்த 10 பிராணர்களில் இருக்கின்றன என்று பொருள். பிரம்மாதி சேதனர்களின் இதயத்தில், 1 ரூபம். ஆக இப்படியாக, ஒரு ரூபனாகவும், 10 ரூபங்கள் உள்ளவனாகவும் இருக்கிறான் என்கிறார். பிரம்ம ருத்ரர்களின் இதயங்களில் ஏகாத்மனாக, ஆத்யவதார பூதனான ஸ்ரீபத்பனாபன், அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் மூன்று ரூபங்களின் அனந்தானந்தத்தை ஏற்றுக்கொண்டு, அனைத்து சரீரங்களிலும், அத்யாத்ம, அதிதெய்வ, அதிபூத என்னும் மூன்று வித பிரதேசங்களில் வசிக்கிறான்.
அத்யாத்ம என்றால் சரீரத்தில் இருக்கும் கண், காது ஆகிய இந்திரியங்கள். அதிதெய்வ என்றால், தத்வாபிமானி தேவதைகள். அதிபூத என்றால் பஞ்சபூதங்கள். இவை ஒவ்வொன்றிலும், அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் மூன்று அகண்ட ரூபங்களிலும், பஞ்சபூத, இந்திரியங்கள், தத்வாபிமானிகளில் கண்டரூபியாகவும், இப்படி அச்யுதாதி அனந்த ரூபங்களால் வியாபித்துக் கொண்டிருக்கிறான். பிராண அபானாதி ஐந்து பிராணங்களிலும், நாகக்ருகள ஆதி 5 உப பிராணங்களிலும், இப்படியாக 10 ரூபங்களால் இருந்து, அந்தந்த பெயர்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
***
No comments:
Post a Comment