ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, May 21, 2020

#26 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#26 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

மனதொ3ளு அஹங்கா1ரத3லி சி
ந்தனெய மாள்புது3 அந்த1ராத்மன
4ஸு1த்வதி3 பரமனவ்யக்த13லி ஞானாத்ம |
இனிது1 பஞ்சாஷத்வரண வே
த்3யன அஜாத்3யைவத்து1 மூர்த்திக3
ளனு தா ர்வத்ர தே3ஹக3ளல்லி பூ1ஜிபு1து ||26

ஆத்ம நாமதலி (முந்தைய பத்யத்திலிருந்து) : ஆத்ம நாமகனாக
மனதொளு = மனஸ் தத்வத்தில்
அஹங்காரதலி = அஹங்கார தத்வத்தில்
அந்தராத்மன = அந்தராத்ம ரூபத்தை
கனசுதத்வதி = மஹத் தத்வத்தில்
பரமன = பரமாத்மனை
அவ்யக்ததலி = அவ்யக்த தத்வத்தில்
ஞானாத்ம = ஞானாத்மனை
சிந்தனெய = சிந்தனையை
மாள்புது = செய்ய வேண்டும்
இனிது = இந்த விதமாக
பஞ்சாஷத்வர்ண வேத்யன = ஆகாஷாதி 10 எழுத்துக்களால் அறியப்படுபவனின்
அஜாத்யைவத்து மூர்த்திகளனு = அஜ, ஆனந்த ஆகிய 50 மூர்த்திகளை
ஸதா = சர்வ காலத்திலும்
சர்வத்ரதேஹத = எல்லா இடங்களிலும்
பூஜிபுது = பூஜிக்க வேண்டும்.

முந்தைய பத்யத்தில், லிங்க சரீரம் 16 கலைகளைக் கொண்டது என்றும், அதில் 15 கலைகளின் பகவத் ரூபங்களை சொல்லியிருந்தார். இப்போது மிச்ச ஒன்றான மனஸ் தத்வத்தையும், இதர தத்வங்களையும் சொல்லி, தேகங்களில் பகவத்ரூபங்களை பூஜிக்க வேண்டும் என்னும் விஷயத்தை சொல்கிறார்.

மனஸ் தத்வத்தில் ஆத்ம ரூபத்தையும்,
அஹங்கார தத்வத்தில் அந்தராத்ம ரூபத்தையும்,
மஹத் தத்வத்தில் பரமாத்ம ரூபத்தையும்,
அவ்யக்த தத்வத்தில் ஞானாத்ம ரூபத்தையும் சிந்திக்க வேண்டும்.

அ-காரம் முதல் க்‌ஷ-காரம் வரை மொத்தம் 51 எழுத்துகள். இந்த எழுத்துக்களுக்கான ரூபங்கள் தந்திரசாரத்தில் சொல்லப்பட்டுள்ளன. மாத்ருகான்யாசத்திலும் வருகிறது. அஜ, ஆனந்த, இந்திர, ஈஷான முதலான 51 ரூபங்களே இவை. ஆனால் இங்கு தாசராயர் 50 எழுத்துக்கள், 50 ரூபங்கள் என்று கூறுகிறார். ஏகபஞ்சாஷத் வர்ணானாம்என்னும் ஆசார்யரின் வாக்கியத்தால் 51 என்று வருகிறது.

இதன் அர்த்தம் என்னவெனில், அ முதல் ள வரைக்குமான 50 எழுத்துக்கள், அ=அஜ, ஆ=ஆனந்த, இ=இந்திர என அந்தந்த எழுத்துக்களே ரூபங்களை சொல்கின்றன. க்‌ஷ என்னும் எழுத்துக்கு மட்டும் அதன் ரூபத்தை சொல்லாமல், நரசிம்ம ரூபியான பகவந்தன் அந்த எழுத்தைப் பிரதிபலிப்பவனாக இருக்கிறான். ஆகையால், தாசராயர், பஞ்சாஷத் வர்ண வேத்யன் என்றார். க்‌ஷம் நரசிம்ஹாய நம: என்று மாத்ருகா மந்திரத்தில் வருகிறது. இதிலிருந்து அறிய வேண்டிய விஷயம் என்னவெனில்:

பஞ்சாஷத் வர்ணவேத்யனுஎன்னும் தாசராயரின் வாக்கியத்தால் 50 எழுத்துக்களால் அறியப்படுபவன் என்று அர்த்தம் ஆகிறது. ஆகையால், அ முதல் ள வரைக்கும் ஆகும் 50 எழுத்துக்களின் நாமங்கள், க்‌ஷ எழுத்தின் பிரதிபாத்யனான நரசிம்மரூபியின் குணங்களையே சொல்கிறது என்று பொருள். அது எப்படியெனில், அஜ=படைத்தல் பற்றிய ஞானம். ஆ=ஆனந்த ஸ்வரூப. இந்திர = பரம ஐஸ்வர்ய ப்ரதன். ஆகிய பகவத்ரூபங்களை வெளிப்படுத்தும் ரூபங்கள் 50. வேத்யனு = அறியப்பட வேண்டியவன், ஸ்தோத்திரம் செய்பவன், செய்விப்பவன் அவனே ஒரு ரூபத்தால் தன் மகிமையை உபதேசம் செய்தவாறு, இன்னொரு ரூபத்தினால் புகழ்ந்தவாறும் இருப்பவன் பரமாத்மனே ஆகையால், வேத்யரூபமான க்‌ஷகார பிரதிபாத்ய நரசிம்மரூபத்தை வேறாக எடுத்துக் கொண்டிருப்பதால், ஆசார்யரின் வாக்கியத்திற்கும், தாசராயரின் பத்யத்திற்கும் வேறுபாடுகள் இல்லை.

க்‌ஷகார சொல்லின் நரசிம்ம சொல்லுக்கு புருஷோத்தமன் என்று பொருள். புருஷ ரூபமே அவதாரங்களுக்கு, பிரம்மாதிகளை ஸ்ருஷ்டிப்பதற்காக எடுத்த ரூபம். பாகவத முதலாம் ஸ்கந்தத்தில்:

ஜக்ருஹே பௌருஷம்ரூபம் பகவான்மஹதாதிபி: சம்பூதம் ஷோடஷகல மாதைலோக ஸிஸ்ருக்‌ஷயா |
யஸ்யம்பஸி ஷயானஸ்ய யோக நித்ராம் விதன்வத: |
நாபிஹ்ருதாம்பு ஜாதாஸீத்பிரம்மா விஷ்வ ஸ்ருஜாம்பதி: ||

ஸ்ரீபரமாத்மன், முதன்முதலில் உலகத்தைப் படைக்கும் முடிவுடன் மஹத் தத்வம், அஹங்கார தத்வம், பஞ்சபூதங்களால் கூடிய 16 கலைகளைக் கொண்ட புருஷ ரூபத்தை ஸ்ருஷ்டித்தார். அதாவது, பிரளய காலத்தில் சயனம் செய்யும் ரூபத்தையே புருஷ ரூபத்தினால் தோற்றுவித்தார். எந்த பரமாத்மன், பிரளய தண்ணீரின் மேல் படுத்து, யோக நித்திரையை வெளிப்படுத்துகிறானோ, அந்த பரமாத்மனே பரம புருஷ ரூபத்தை வெளிப்படுத்துகிறான். அந்த பரமபுருஷ ரூபியான பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்தே பிரம்மதேவர் பிறந்தார் என்று கூறுகிறார்.

ஆகையால், பரமபுருஷ ரூபமே ஸ்ருஷ்டிக்கு காரணமான முதலாம் ரூபம். பரமபுருஷ என்னும் வாக்கியம் புருஷர்களில் சிறந்தவன் என்பதைக் குறிக்கிறது. அதுபோல, க்‌ஷ-க்‌ஷகாரம் குறிக்கும் நரசிம்ம சொல்லின் அர்த்தம், நர=புருஷ, சிம்ஹ=சிறந்தவன் என்பது. இந்த விதமாக 50 எழுத்துக்களால் புகழப்படுபவனான நரசிம்மன் என்று தாசராயரின் வாக்கியத்திற்கு, புகழும் ரூபங்கள் 50, புகழப்படும் ரூபம் 1 என மொத்தம் 51 ரூபங்களை அறியவேண்டும்.

இப்படி 51 எழுத்துக்களால் புகழப்படுபவனான பகவத்ரூபங்களை

அஜாய நம: முகே,
ஆனந்தாய நம: ஷிரஸி...

என்னும் மாத்ருகான்யாஸ கிரமத்தில் தேகத்தின் பாகங்களில் எப்போதும் நினைத்திருக்க வேண்டும் என்பது பொருள்.

***

No comments:

Post a Comment