ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, January 31, 2020

#7 - மங்களாசரண சந்தி

#7 - மங்களாசரண சந்தி

வேதபீ12 விரிஞ்சி ப4வ ஷ
க்ராதி3சுர விக்ஞானதா3யக
மோத3 சின்மயகா3த்ர லோக1பவித்ர சுசரித்ர |
ச்சேத3 பே43 விஷாத3 கு1டி1லா
ந்தாதி மத்ய விதூ3ர ஆதா3
நாதி3 காரண பாத3ராயண பாஹி சத்1ராண ||7

பொருள்:
வேதபீட - வேதங்களை பீடமாகக் கொண்ட
விரிஞ்சிபவ ஷக்ராதிசுர = விரிஞ்சி = பிரம்மதேவர். பவ = ருத்ரர். ஷக்ர = இந்திரன். ஆதி = ஆகிய. சுர = தேவதைகளுக்கு
விக்ஞானதாயக = விக்ஞான = விசேஷ ஞானம். தாயக = கொடுப்பவர்
மோதசின்மயகாத்ர = மோத = ஆனந்தம். சின்மய = ஞானம். காத்ர = தேகத்தைக் கொண்ட.
லோக = மூன்று உலகங்களையும்
பவித்ர = பவித்ரமாக மாற்றும்
ஸுசரித்ர = உத்தமமான மகிமைகளைக் கொண்ட
சேதபேத விஷாத குடிலாந்தாதி மத்யவிதூர = சேத = கத்தி முதலான ஆயுதங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். பேத = பாணங்களால் சரீரத்தை சேதப்படுத்துதல். விஷாத = துக்கமடைதல். குடில = நோய்களால் உடல் ஹீனமடைதல். இவற்றிலிருந்து, விதூர = இவை எவையும் பாதிக்காமல் தூரமாக இருப்பவன். (அதாவது மேற்சொன்ன தோஷங்கள் எதுவும் இல்லாதவன் என்று பொருள்).
ஆதானாதிகாரண = ஆதானாதி = பிரம்மாதிகளிடமிருந்து பூஜையை ஏற்றுக்கொள்ளல். காரண = காரணனான. சத்ராணா = ஸஜ்ஜனர்களை பாதுகாக்கும். பாதராயண = பதரி வ்ருக்‌ஷங்களால் சூழப்பட்ட. வனத்திற்கு பாதர என்று பெயர். அதையே தன் இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் இவருக்கு பாதராயண என்று பெயர். (அதாவது பதரிகாஸ்ரம-வாசி என்று பொருள்). அப்படிப்பட்ட வேதவியாச தேவரே,
பாஹி = உங்களுடைய சாஸ்திரங்களை சொல்வதற்கு புறப்பட்டுள்ள எனக்கு நற்புத்தியைக் கொடுத்து அருள்வீராக.

பொருள்:

'விதிஷக்ர பூர்வகீர்வாண விக்ஞானத மானதோஸ்மி’ என்னும் தந்திரசாரத்தின் வாக்கியத்திற்கேற்ப ‘விரிஞ்சிபவ ஷக்ராதி சுரவிக்ஞானதாயக’ ஆகிய சொற்களால் ‘வேதவியாஸர் ஒரு சாதாரண ரிஷி’ என்னும் பேச்சு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக வேதவியாசதேவரைப் பிரார்த்தித்து, தாரதம்யத்தின்படி முதலில் வாயுதேவரை வணங்கினாலும், த்வைத மதத்தை நிறுவியவரான, முக்திக்கு முக்கிய சாதனங்களான பஞ்சபேத தாரதம்யாதிகளை விளக்கிக் காட்டிய, வாயுதேவரின் அவதாரரான, சத்வைஷ்ணவர்களுக்கு முக்கிய குருகளான ஸ்ரீமத்வாசார்யரை இரண்டு பத்யங்களால் வணங்குகிறார் தாசராயர். 

***


Thursday, January 30, 2020

#6 - மங்களாசரண சந்தி

#6 - மங்களாசரண சந்தி

க்1ருதிரமண ப்ரத்3யும்ன நந்த3னெ
சதுரவிம்ஷதி த1த்1வப1தி தே
வதெக3ளிகெ3 கு3ருவெனிசுதிஹ மாருதன நிஜபத்னி |
சத11 ஹரியலி கு3ருகளலி ச
த்ரதிய பாலிஸி பா43வத பா4
ரத1 புராண ரஹஸ்ய த1த்வக3ளருபு1 கருணதலி ||6

க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ = க்ருதி நாமகளான ரமா தேவியரின். ரமண = கணவனான ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமகனான ஸ்ரீபரமாத்மனின். நந்தனெ = மகளான.
சதுரவிம்ஷதி தத்பதி தேவதெகளிகெ = 24 தத்வாபிமானிகளான தேவதைகளுக்கு 
குருவெனிஸுதிஹ = குரு என்று அழைக்கப்படும்
மாருதன = வாயுதேவரின்
நிஜபத்னி = நியத பத்னியான பாரதி தேவியே
ஸதத = எப்போதும்
ஹரியலி = ஸ்ரீபரமாத்மனிடம்
குருகளலி = பிரம்மதேவரில் துவங்கி நம் குருகளின் வரை, தாரதம்யத்தின்படி அனைத்து குருகளிடமும்
ஸத்ரதிய = விசேஷமான பக்தியை
பாலிஸி = கொடுத்து
கருணதலி = என் மேல் கருணையுடன்
பாகவத பாரத புராண ரஹஸ்யகள = பாகவத பாரதாதி புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் அரிய பகவத் தத்வங்களை
அருபு = தெரியப்படுத்து. 

பொருள்:
முந்தைய பத்யத்தில் சரஸ்வதி தேவியரை வணங்கி நற்புத்தியை வேண்டி, பின் அடுத்த கல்பத்தில் சரஸ்வதி பதவிக்கு வரப்போகும் பாரதி தேவியிடம் தன் இஷ்டார்த்தங்களை இப்படியாக வேண்டுகிறார். தாயே! பாரதி! நீ பிரத்யும்ன ரூபியான பரமாத்மன் மற்றும் கிருதி என்னும் லட்சுமிதேவியின் ரூபத்திலிருந்து பிறந்தவள். ஆகையால் உனக்கு லட்சுமி நாராயணரே தாய் தந்தையாக இருக்கின்றனர். உன் பதியோ 24 தத்வாபிமானி தேவதைகளுக்கும் குரு எனப்படுகிறார். இத்தகைய உன்னை நான் வேண்டிக் கொள்கிறேன். ஸ்ரீபரமாத்மனிடமும், அவரின் பரம பக்தர்களான உன் கணவர் முதலான அனைத்து குருகளிடமும் எனக்கு திடமான பக்தியைக் கொடு. மேலும் என்னிடம் தயைகூர்ந்து, நான் எழுத முற்பட்டுள்ள இந்த ஹரிகதாம்ருதசார என்னும் கிரந்தத்திற்குத் தேவையான, பாரத பாகவத புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் பகவத் தத்வங்களை எனக்கு புரியுமாறு / என் நினைவுக்கு வருமாறு எனக்கு அருள்புரிவாயாக. 

சிறப்புப் பொருள்:
பாரதி தேவியே பின்னர் சரஸ்வதிதேவியராக இருப்பார் என்பதை குறிக்கும் வகையில், பாரதி தேவிக்கு தனியாக நமஸ்காரங்களை செய்யவில்லை. அதிகார பேதம் இருப்பதால், பலன்களை மட்டும் தனியாக வேண்டியிருக்கிறார் என்பதை அறியவேண்டும். இந்த பாரதி தேவியர், கருட, சேஷ, ருத்ராதி தேவதைகளைவிட உத்தமர் என்பதை தெரிவிப்பதற்காக ‘க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ’ என்னும் பதத்தை உபயோகம் செய்திருக்கிறார். 

ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் பரமாத்மன், வாசுதேவன், சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 4 ரூபங்களை தரித்தார். அப்போது, பகவத் ஆணையின்படி ரமாதேவியும்கூட மாயா, ஜயா, க்ருதி, ஷாந்தி என்னும் 4ரூபங்களை தரித்து, பரமாத்மனின் அந்த நான்கு ரூபங்களுக்கு முறையே பத்னியானார். வாசுதேவ + மாயாவிடமிருந்து புருஷ என்னும் மகன் தோன்றினார். சங்கர்ஷண + ஜயாவிடமிருந்து ஸூத்ரன் (Soothra) என்னும் மகன் தோன்றினார். பிரத்யும்ன + க்ருதியிடம், ப்ரக்ருதி, ஸ்ரத்தா என்று இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். புருஷனுக்கு ப்ரக்ருதியும், ஸூத்ரனுக்கு ஸ்ரத்தாவும் மனைவியர் ஆயினர். இந்த புருஷனே பிரம்மதேவர். ப்ரக்ருதியே சரஸ்வதி. ‘ஸூத்ரம்ஸவாயு: புருஷோவிரிஞ்சி: ப்ரத்யும்னதஸ்சாத க்ருதௌ ஸ்த்ரியௌ த்வே’ என்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 3ம் அத்தியாயத்தின் வாக்கியம் இதற்கு ஆதாரமாகின்றது. ஸூத்ர நாமகரான பிரம்ம வாயுகளிடமிருந்து ஸூக்‌ஷ்மத்தில் கருட, சேஷ, ருத்ராதிகள் பிறந்தனர். இவர்களைவிட பாரதிதேவி உத்தமர் என்று சொல்வதைப் போலாயிற்று.

கருடசேஷஷஷாங்கதள சேகரர ஜனக - என்னும் மூன்றாம் பத்யத்தில் பிரம்மதேவர் கருடாதிகளுக்கு தந்தை என்று சொல்கிறார். 24 தத்வாபிமானிகளில் ஒருவரான வாயுதேவரை குரு என்று இந்த பத்யத்தில் சொல்கிறார். 24 தத்வங்கள் என்னவெனில்: ப்ருத்வ்யாதி மஹாபூதங்கள் 5, ஷப்தாதி தன்மாத்ரங்களான குணங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, சித்த, புத்தி, மனஸ், அஹங்கார தத்வங்கள் என மொத்தம் 24 தத்வங்கள் உள்ளன. இதில் சித்த தத்வத்திற்கு அபிமானியானவர் வாயுதேவர். இவரே அனைவரைவிடவும் உத்தமர். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதத்தில் மற்றும் விஷ்ணு ரகசியத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்னவெனில்:

ஒரு சமயம், 24 தத்வாபிமானிகளும் (வாயுதேவரைத் தவிர) தமக்குள் தாமே உத்தமர் என்று சொல்லி சண்டை போடத் துவங்கினர். அப்போது பரமாத்மன், ’ஹே தேவதைகளே, ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்? உமக்குள் இருக்கும் சக்தியை வைத்து யார் உத்தமர் என்று பார்ப்போம். இங்கே விழுந்திருக்கும் மிகப்பெரிய சரீரமானது, உம்மில் யார் நுழைந்தால் உயிர்பெற்று எழுகிறதோ, மேலும் யார் வெளியேறுவதால் உயிரற்று விழுகிறதோ அவரே உத்தமர் என்று நிர்ணயிப்போம். இப்போது உங்கள் சக்தியைக் காட்டுங்கள்’ என்றார். அப்படியே ஒவ்வொருவராக 23 தத்வாபிமானி தேவதைகள் நுழைந்தாலும், அந்த தேகம் எழுந்திருக்கவில்லை. 

‘சித்தேனஹ்ருதயம் சைத்ய: க்‌ஷேத்ரக்ஞ: ப்ராவிஷத்யதா |
விராட்ததைவ புருஷ: ஸலிலாதுததிஷ்டத: ||’

என்று சித்தத்தின் அபிமானியான வாயுதேவர் அந்த உடலின் இதயத்தில் நுழைந்த உடனேயே அந்த உடல் எழுந்தது. அடுத்து அனைத்து தத்வாபிமானியும் வெளியேறியபிறகும் அந்த உடல் விழவில்லை. வாயுதேவர் வெளியேறிய உடனேயே அந்த உடல் கீழே விழுந்தது. அப்போது கண் முதலான தத்வாபிமானி தேவதைகள், நாங்கள் 23 தேவதைகள் இல்லையெனில், வாயுதேவர் மட்டும் உடலில் இருந்து என்ன செய்வார்? என்று கேட்டனர். அதற்கு வாயுதேவர், தான் மட்டும் அந்த உடலில் நுழைந்து, 23 தத்வாபிமானிகளின் வேலைகளையும் தான் ஒருவரே செய்து காட்டினார். அதைக் கண்ட பிற அனைத்து தத்வாபிமானி தேவதைகளும், வாயுதேவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரிடம் சரண் புகுந்தனர். 

இது பாகவதாதிகளில் மிகவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரத்தின் பேரிலேயே, தாசராயர், வாயுதேவரை தத்வாபிமானி தேவதைகளின் குரு என்றிருக்கிறார். ‘நிஜபத்னி’ என்றதால், அவதார ரூப, மூல ரூபங்களிலும் கூட பாரதி தேவியரே வாயுதேவருக்கு மனைவியாகிறார் என்று அறியவேண்டும். இத்தகைய நற்குணங்களைக் கொண்ட பாரதியே! எங்களுக்கு ஹரி குருகளில் சத்பக்தியைக் கொடுத்து அருள்வாயாக என்று வேண்டுகிறார் தாசராயர். 

இப்படியாக தாசராயர் ‘நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் | தேவீம் சரஸ்வதிம் வ்யாஸம்’ என்னும் வசனத்தின்படி, பாரதி தேவியின் வரை தாரதம்யத்தின்படி வரிசையாக வேண்டினார். அடுத்து, பரமாத்மனின் அவதார ரூபமான மற்றும் பாரதாதி கிரந்தங்களை இயற்றியவரான ஸ்ரீ பாதராயண (வேதவியாஸ) தேவரை குருவாக நினைத்து வணங்குகிறார். ஸ்ரீமன் நாராயணனே வேதவியாஸராக இருந்தாலும், கிரந்தத்திற்கு காரணமானவனும், சர்வோத்தமனும் ஆன ஸ்ரீமன் நாராயணனுக்கு முதலில் வணக்கம் செலுத்தினார். அதிகார பேதத்தினால், அதாவது ஒரு குருவைப் போன்றவரான ஸ்ரீவேதவியாஸருக்கு தற்போது நமஸ்காரம் செய்கிறார் என்று அறியவேண்டும். 

‘வியாஸோகஸ்சனருஷி:’ என்று சில தாமஸ புராணங்களின் ஆதாரத்தில், சிலர் வேதவியாசரை வெறும் ஒரு சாதாரண ரிஷி என்று சொல்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் அப்படி நினைத்தே, தமது தமஸ் சாதனையை செய்துகொள்ளட்டும் என்று தற்போது வேதவியாசரை வணங்குகிறார் என்று கருட புராணத்தில் ஸூதர் ஷௌனகாதிகளுக்கு சொல்லியிருக்கிறார். 

ஸூதரின் வாக்கு: 
த்த்ராபிகாரணம் வக்‌ஷ்யேஸாதரேண முனீஷ்வரா |
வ்யாஸஸ்து கஷ்சனரிஷி: புராணே தாமஸேஸ்ம்ருத: ||
இதி ஞானாவலம்பேன தைத்யாதைத்யானுகாஸ்ஸதா |
ப்ரவிஷேயு:ர்ஹ்யந்ததம இஹிஹ்யந்தெ நமஸ்க்ருதம் ||
இதஞ்ச பரமம்கோப்யம் ஹ்ருதிதார்யன் நஸம்ஷய: ||

என்னும் வாக்கியங்களே மேலே சொன்ன விஷயத்திற்கு ஆதாரம் என்று அறியவேண்டும். இந்த காரணத்தினாலேயே தற்போது தாசராயர், வேதவியாஸ தேவரை வணங்குகிறார். 

***

Wednesday, January 29, 2020

#5 - மங்களாசரண சந்தி

#5 - மங்களாசரண சந்தி

சதுரவத3னனராணி அதிரோ
ஹித விமலவிக்ஞானி நிக3
ப்ரததிக3ளிக3பி4மானி வீணாபாணி பி3ரம்மாணி |
நதிஸி பே3டு3வெ4 ஜனனி லகுமி
1திய கு3ணகள துதிபுதகெ சன்
மதி1ய பாலிஸி நெலெஸு நீ மத்வத3தனதலி ||5

பொருள்:
சதுரவதனனராணி = சதுர்முக பிரம்மனின் மனைவியான
அதிரோஹித விமலவிக்ஞானி. அதிரோஹித = திரோஹித என்றால் மறந்து போகுதல். அதிரோஹித என்றால் அது இல்லாமை. அதாவது, எல்லாம் நன்றாக நினைவில் இருத்தல்.
விமல = அழகான
விக்ஞானி = சிறந்த ஞானமுள்ள
நிகமப்ரததிகளிகபிமானி = நிகம = வேதங்களின். ப்ரததிகளிகெ = குழுக்களுக்கு. அபிமானி = அபிமானியான. வீணாபாணி = வீணையைக் கொண்ட கைகளை உடைய. 
பிரம்மாணி = வேதங்களின் உபதேசங்களான அல்லது ஜகத்குருவான பிரம்மதேவரின் மனைவி
ஜனனி = தாயான சரஸ்வதி
நின்னன்னு நதிஸி = வணங்கி
பேடுவெ = வேண்டுவேன்
லகுமீபதிய = லட்சுமிபதியான ஸ்ரீமன் நாராயணனின்
குணகள = குணங்களை
துதிபுதகெ = ஸ்தோத்திரம் செய்வதற்கு 
ஸன்மதிய = சிறந்த புத்தியை
பாலிஸி = கருணையுடன் கொடுத்து
நீ = நீ
மத்வதனசதனதலி = மத் = என்னுடைய. வதன = முகம் என்னும். ஸதனதலி = வீட்டில். நெலஸு = குடியிருப்பாயாக.

பொருள்:
தாயே, சரஸ்வதி, நீ பிரம்மதேவரின் மனைவி. உனக்கு மிகத்தெளிவான ஞானம் எப்போதும் நிறைந்திருக்கிறது. வேத சமூகங்களுக்கு நீயே அபிமானியாக இருக்கிறாய். உன் கையில் எப்போதும் வீணை இருக்கிறது. (அந்த வீணையால், உன் கணவரைப் போற்றியவாறு, பகவத் குணங்களை மக்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறாய்). குருபத்னி எனப்படுகிறாய். லட்சுமிபதியை ஸ்தோத்திரம் செய்வதற்கு நான் முயன்று வருகிறேன். அந்த விஷயத்தில் தவறான ஞானம், சந்தேகங்கள் வராமலிருக்க ஸ்ரீ பரமாத்மனின் குணங்கள் அனைத்தும் எனக்கு கிட்டுமாறு, எனக்கு நற்புத்தியை கருணையுடன் அருள்புரிவாயாக. அதுமட்டுமல்லாமல், நீயே ஒரு ரூபத்தினால் என்னுடைய வாக்கினில் நின்று பகவத் விஷயங்களை நன்றாக பேசவைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 

சிறப்புப் பொருள்:
பிரம்ம தேவருக்கு, சர்வ தேவோத்தமத்வமும், ஜகத்குருத்வமும் எப்படி சொல்லியிருக்கிறார்களோ அவை சரவஸ்வதி தேவிக்கும் இருக்கின்றன என்ற சிந்தனையில் ‘ராணி’ என்னும் சொல்லால் தேவோத்தமத்வமும், ‘பிரம்மாணி’ என்னும் சொல்லால் குருபத்னித்வமும் இருக்கின்றன என்று சொல்கிறார். இதனால், புனருக்தி தோஷம் இல்லை என்று அறிய வேண்டும். 

அடுத்து, ஜகத்குருவான வாயுதேவரின் நியத பத்னியான மற்றும் வாக்கிற்கு அபிமானியான பாரதி தேவியிடம், ஹரிகதாம்ருதசாரத்தை சொல்வதற்கு நற்புத்தியைக் கொடு என்று வேண்டுகிறார். 

***

Tuesday, January 28, 2020

#4 - மங்களாசரண சந்தி

ஆரு மூரெரடொ3ந்து சாவிர
மூரெரடு ஷத ஷ்வாஸ ஜபகள
மூருவித ஜீவரொளக3ப்ஜஜ கல்பபரியந்த |
தா1 ரசிஸி சாத்வரிகெ3 சுக2 சம்
சார மிஸ்ரரிக34ம ஜனரிக
பார து3க்க23ளீவ கு3ருபவமான சலஹெம்ம ||4

பொருள்:
ஆறுமூரெரடொந்து சாவிர மூரெரடு ஷத ஸ்வாஸ ஜபகள = ஆறு மூரு (6x3=18) எரடொந்து (2+1=3) ஸாவிர, மூரெரடு ஷத = (3x2x100=600) ஆக மொத்தம் 21,600 ஷடக்‌ஷராத்மக ஹம்ஸ மந்திர ஜபத்தினை தினந்தோறும்.
மூரு வித ஜீவரொளகெ = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து
அப்ஜஜகல்ப பர்யந்த = பிரம்மகல்ப முடியும்வரை
தா ரசிஸி = தான் செய்து
ஸத்வரிகெ = சாத்விகர்களுக்கு
சுக = முக்தி சுகத்தை
மிஷ்ரரிகெ = ராஜஸர்களுக்கு
சம்சார = சுக, துக்கங்கள் கலந்த நித்ய சம்சாரத்தை
அதமரிகெ = தாமஸ ஜனர்களுக்கு
அபார துக்ககள = சகிக்கமுடியாத துக்கங்களைக் கொண்ட அந்தந்தமஸ்ஸினை
ஈவ = கொடுக்கிறார்
குருபவமான = குருமுக்யபிராண
யம்ம = நம்மை
ஸலஹு = பஞ்சபேத தாரதம்யாதி ஞானங்களைக் கொடுத்து அருள்வாயாக.

விளக்கம்:

ஹே பவமானனே. ஸாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, தினந்தோறும் 21,600 ஷ்வாஸ ஜபம் என்னும் ஹம்ஸ மந்திர ஜபங்களை, பிரம்ம கல்பத்தின் முடிவு வரைக்கும் செய்து, ஸாத்விகர்களுக்கு முக்தியையும், ராஜஸர்களுக்கு சம்சாரத்தையும், தாமஸர்களுக்கு அந்தந்தமஸ்ஸையும் வழங்குவதற்கு காரணமாக இருக்கிறாய். அத்தகைய நீ எமக்கு அருள்வாயாக. 

சிறப்புப் பொருள்:
'த்வச்சரணகளிகபிவந்திஸுவெ பாலிபுது சன்மதிய’ என்று பிரம்மதேவரிடம் நற்புத்தியை வழங்குமாறு வேண்டிய தாசராயர், அப்படியே வாயுதேவரிடமும் வேண்டாமல் ‘குருபவமான ஸலஹெம்ம’ என்று மட்டும் வேண்டியது எதற்காக? வாயுதேவரே அடுத்து பிரம்மபதவிக்கு வருகிறார் ஆகையால், பிரம்ம என்னும் சொல்லாலேயே வாயுதேவரை வணங்கியாயிற்று என்று சிந்தித்து வாயுதேவருக்கு என்று தனியாக வணங்கவில்லை. வாயுதேவரை தனியாக வணங்கக்கூடாது என்று விதி எதுவும் இல்லை. ஏன் செய்யவில்லையெனில், வாயுதேவருக்கும் பிரம்மதேவருக்கும் பதவியில் மட்டுமே பேதமே தவிர வேறு எந்த பேதமும் இல்லை. வாயுதேவரே பிரம்மதேவர் என்று மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே வாயுதேவரை தனியாக வணங்கவில்லை. ஆனாலும், வாயுபதவியில் இருந்துகொண்டு மக்களுக்கு உதவும் விதமே வேறு. பிரம்மபதவியில் இருந்துகொண்டு மக்களுக்கு உதவும் விதமே வேறு. ஆகையாலேயே, பிரம்மதேவரிடமிருந்து சித்த சுத்தியை மட்டும் வேண்டிக்கொண்டு, வாயுதேவரிடமிருந்து மக்களுக்கு உண்டாகும் மிகப்பெரிய உதவியை தெரிவித்து, அவரிடமிருந்து, தமக்கும் இந்த கிரந்தத்தைப் படிக்கும், கேட்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வேண்டுகிறார். 

வாயுதேவரால் மக்களுக்கு ஆகும் உபகாரம் என்னவெனில்: உலகத்தில் அனைத்து பிராணிகளும் மூச்சு விடுகிறார்கள்தானே? அந்த மூச்சினை வாயுதேவரே பிராணிகளில் இருந்துகொண்டு செய்விக்கிறார். அது ஒரு நாளுக்கு சுமார் (அதாவது 60 நாழிகைகளுக்கு) 21,600 என்று ஆகிறது. ஜீவராசிகள், தேவமனுஷ்யாதி வேறுபாட்டினால், சாத்விக, ராஜஸ, தாமஸ என்று மூன்று விதமாக இருக்கின்றனர். ஸ்வாஸத்தில் ஸ்வாஸ, உஸ்வாஸ, நிஸ்வாஸ என்று மூன்று விதங்கள் உண்டு. ஸ்வாஸ என்றால் மூக்கிலிருந்து காற்றை வெளியில் விடுவது. உஸ்வாஸ என்றால் காற்றை உள்ளிழுப்பது. நிஸ்வாஸ என்றால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். இன்று மூன்றும் சேர்ந்து ஸ்வாஸ எனப்படுகிறது. இதை மனுஷ்யாதிகள் ஒரு நாளைக்கு 21,600 முறை செய்கின்றனர். 

இந்த ஸ்வாஸமானது வெறும் ஸ்வாஸம் என்று அழைக்கப்படாமல், ஸ்வாஸ ரூபமான ஹம்ஸ மந்திர ஜபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹம்ஸ மந்திர ஜபத்தை, மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, வாயுதேவரே செய்து, ஜீவர்களால் செய்விக்கிறார். பிராணிகள் விடும் மூச்சினை ஹம்ஸ மந்திர ஜபம் என்று எப்படி சொல்வது என்றால், ஹம்ஸ மந்திரமானது ‘ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா’ என்னும் ஆறு எழுத்துக்களால் ஆனது. ஹம்ஸ என்னும் இரு எழுத்துக்கள் இடைப்பட்ட காலம். ஸோஹம் என்னும் இரு எழுத்துக்கள் உஸ்வாஸ காலம். ஸ்வாஹா என்னும் இரு எழுத்துக்கள் ஸ்வாஸ காலம். 

இந்த சோதனையை அனைவரும் செய்து பார்க்கலாம். வாயை நன்றாக மூடிக்கொண்டு மூக்கினால் மட்டுமே மூச்சு விடவேண்டும். மூச்சை இழுத்துப் பிடிக்கும்போது ‘ஹம்ஸ’ என்னும் இரு எழுத்துக்களை மனதில் சொல்லிக் கொள்ளவும். காற்றை இழுக்கும்போது ‘ஸோஹம்’ என்றும், காற்றை விடும்போது ‘ஸ்வாஹா’ என்றும் சொல்லவும். இதுவே ஹம்ஸ மந்திர ஜபமாகும். மூன்று வித ஜீவர்களுக்குள் இருந்துகொண்டு வாயுதேவர் இந்த ஹம்ஸ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாலும், அந்த மந்திர ஜபத்தின் பலனை, அந்த மூன்று ஜீவர்களுக்கும் மூன்று விதமாகக் கொடுக்கிறார். 

அது ஏனெனில், மந்திரத்தின் உபாஸனையின் வேறுபாட்டினால், அதன் பலன்களும் வேறுபடுகின்றன. சாத்விகர்கள் தாம் விடுவது வெறும் காற்று மட்டும் அல்ல, அது ஹம்ஸ மந்திர ஜபம் என்று அனுசந்தானம் (சிந்தனை) செய்கிறார்கள். இது எப்படியென்றால்: தந்திரசாரத்தில் சொல்லப்பட்டுள்ள 32 மஹாமந்திரங்களில் இது ஒரு முக்கிய மந்திரமாகும். ‘பூர்வேத்யு: ப்ராத: சூர்யோதயமாரப்ய அத்யஸூர்யோதய பர்யந்தம் மத்தேஹஸ்தித முக்ய ப்ராணக்ருதேன, முக்யப்ராணப்ரேரிதேன மயாக்ருதேனச ஷட் ஷதாதிக ஏகவிம்ஷ சஹஸ்ர சங்க்யாக ஸ்வாஸ ரூப ஷடக்‌ஷர ஹம்ஸமஹாமந்திரஜபேன பகர்வா முக்ய பிராணாந்தர்கத ஹம்ஸரூபி ஸ்ரீலட்சுமி நாராயண: ப்ரியதாம்’. இதன் பொருள் என்னவெனில்: நேற்றைய சூர்யோதயத்திலிருந்து இன்றைய சூர்யோதயத்தின் வரை நம்முள் இருக்கும் வாயுதேவர் செய்த மற்றும் அவரின் ப்ரேரணையினால் நான் செய்த 21,600 எண்ணிக்கையிலான ஸ்வாஸ ரூபங்களான 6 எழுத்துக்களால் கூடிய ஹம்ஸ மஹாமந்திர ஜபங்களால், முக்யபிராணனின் அந்தர்யாமியான ஸ்ரீலட்சுமி நாராயணன் ப்ரீதியாகட்டும்’ என்ற பொருளை சிந்தித்து, செய்த ஸ்வாஸங்களை பரமாத்மனுக்கு ஜப பாவனையுடன் சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை சொல்வார்கள். 

முக்யபிராணேன மத்தேஹே மந்த்ர த்ரயஜபஸ்ஸதா
அனுக்ரஹாயமே விஷ்ணு ப்ரீதயே க்ரியதேஹிஸ: |
ஏகவிம்ஷத் ஸஹஸ்ராத்மா ஸஷட்ஷதமஹர்னிஷம்
தத்ஸர்வம் விஷ்ணுபூஜாஸ்து ப்ரீயதாம் ப்ராணமாபதே ||4

இதன் பொருள்:
முக்யபிராண தேவர், என் தேகத்தில் இருந்துகொண்டு, ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா என்னும் மூன்று மந்திரங்களின் ஜபங்களை, எனக்கு அருள்வதற்காகவும், விஷ்ணு ப்ரீத்யர்த்தமாகவும் செய்துவருகிறார். இப்படியாக நான் இரவும் பகலுமாக செய்துவரும் 21,600 ஸ்வாஸ ரூபங்களான ஜபங்கள் அனைத்தும் விஷ்ணு பூஜையாகட்டும். இதனால், பிராணதேவருக்கும், லட்சுமிதேவிக்கும் தலைவனான ஸ்ரீபரமாத்மன் ப்ரீதனாகட்டும். 

இதைப் போலவே இன்னொரு ஸ்லோகமும் உண்டு. அதன் பொருளை மட்டும் தருகிறோம். இன்றைய சூர்யோதயத்திலிருந்து நாளைய சூர்யோதயம் வரைக்குமான 21,600 ஸ்வாஸரூப ஹம்ஸ மந்திர ஜபங்களை நம் தேகத்தில் இருந்துகொண்டு, தாமும் செய்து, நம்மிடமிருந்தும் செய்விக்க வேண்டும் என்னும் ஆசைகொண்ட முக்யபிராணதேவரின் விருப்பப்படி, நான் செய்வேன் என்று அடுத்து செய்யவிருக்கும் ஸ்வாஸ ஜபங்களுக்கு சங்கல்பம் செய்வர். என் தேகத்தில் இருக்கும் பிராண நாமக வாயுதேவரின் மற்றும் அபான நாமக வாயுதேவரின் உதவியாலும், தியான யோகத்தினாலும், இந்த ஸ்வாஸரூப ஹம்ஸமந்திர ஜபங்களை செய்வேன். இதிலிருந்து, ஹம்ஸரூபி பரமாத்மன் ப்ரீதனாகட்டும். என்று சங்கல்பம் செய்வர். 

இதற்கு வேறு மந்திரமில்லை. இவர் விடும் ஸ்வாச்சோஸ்வாஸங்களே ஜபங்கள் என்று அறியவேண்டும். ஹம்ஸ: ஸோஹம்: ஸ்வாஹா என்னும் மந்திரத்தின் அர்த்தத்தை, சாத்விகர்கள் அறிந்திருக்கும் விதம் எப்படியெனில்: ஹம்ஸ: = ’துக்கம் சர்வம் ஹந்தீதி ஹம்ஸ:’. அனைத்து துக்கங்களையும் நாசம் செய்பவனாகையால் அவன் ஹம்ஸன் என்று அழைக்கப்படுகிறான். ‘ஸோஹம்’ என்றால், அந்த ஹம்ஸனின் பிரதிபிம்பமே நான். ஆகையால் ஹம்ஸ என்னும் சொல் என்னையும் குறிக்கும். இது எப்படியென்றால், கண்ணாடியில் என் பிரதிபிம்பத்தைப் பார்த்தால், அது நம்மைப் போலவே தோன்றுகிறது ஆகையால், நானே அது என்று பிரதிபிம்பத்தை நினைக்கிறோம். நம் புகைப்படத்தை எடுத்து, அது யாருடைய படம் என்று கேட்டால், நம் பெயரையே சொல்கிறோம். ஆனால், அந்த புகைப்படத்திற்கும், அந்த படத்தில் இருப்பவருக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ அப்படியே ஸோஹம் என்னும் சொல்லால், அவனே நான் என்னும் அர்த்தம் இல்லை. அவனின் பிரதிபிம்பம் நான் என்று அறியவேண்டும். ஸ்வாஹா என்னும் சொல் வணக்கத்தைக் குறிப்பதாகும். இப்படியாக இந்த மந்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டு சாத்விகர்கள் உபாசனை செய்வதால், அவர்கள் சுக ஸ்வரூபமான முக்தியைப் பெறுகிறார்கள். 

தாமஸர்கள் இதற்கு எதிர்ப்பதமாக இருக்கின்றனர். அதாவது: ’யோஹம்ஸ: யார் ஹம்ஸனோ, ஸோஹம் - அவனே நான். ஸ்வாஹா - முன்னர் சொன்னதைப் போலவே. இப்படியாக, பரமாத்மனே நான் என்று உபாசனை செய்வதால், துக்க ஸ்வரூபமான தமஸ்ஸினை அடைகின்றனர். 

ராஜஸர்கள் இதன் சரியான அர்த்தத்தை அறியாமல், சந்தேகத்துடன் இருந்து, சுக துக்கத்தின் கலவையான நித்ய சம்சாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். 

இப்படி, மூன்றுவித ஜீவர்களும் தங்களின் வெவ்வேறான அனுசந்தானத்தினால், அதற்குத்தக்க பலன்களைக் கொடுக்கும் ‘குரு பவமான’, நம்மை காப்பாற்றட்டும். ராஜஸ, தாமஸ புத்திகளை விடுவித்து, சாத்விக பாவத்துடன் உபாசனை செய்வித்து, சத்கதியைக் கொடுத்து அருளட்டும் என்று தாசராயர் வேண்டிக்கொள்கிறார். 

அடுத்து, வாக்கிற்கு அபிமானியான சரஸ்வதிதேவியை வணங்குகிறார்.

***

Monday, January 27, 2020

#3 - மங்களாசரண சந்தி


நிருபமானந்தா3த்ம ப4வ நி
ர்ஜர சபா4சம்சேவ்ய ருஜுக3
3ரஸெ சத்வப்ரசுர வாணிமுக2சரோஜேன |
கருட சேஷ ஷஷாங்கத3ல சே
கரர ஜனக ஜகத்குரவே த்வ
ச்சரணகளிக3பி4 வந்திசுவே பா1லிபு1து சன்மதிய ||3

பொருள்:
நிருபமானந்த = உவமைகள் அற்ற அற்புத ஆனந்தத்தைக் கொண்ட. 
ஆத்மபவ. ஆத்ம = பரமாத்மனிடமிருந்து. 
பவ = தோன்றிய. அல்லது. 
நிருபமானந்தாத்மபவ = உவமைகள் அற்ற ஆனந்த ரூபமான பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து தோன்றிய. 
நிர்ஜரசபா சம்ஸேவ்ய. நிர்ஜர = தேவதைகளின். 
சபா = குழுவிடமிருந்து. 
சம்ஸேவ்ய = நன்றாக வணங்கப்படும். 
ருஜுகணதரஸெ = பிரம்ம பட்டத்திற்கு தகுதி பெற்ற கணங்களுக்கு தலைவனான. 
ஸத்வப்ரசுர = சத்வகுணங்கள் நிரம்பியவரான. 
வாணிமுகசரோஜேன. வாணி = சரஸ்வதி.
முகஸரோஜேன = முக கமலத்திற்கு
இன = சூரியனைப் போலிருக்கும்
கருட, சேஷ, ஷஷாங்கதள சேகரர = கருட, சேஷ, ருத்ரர்களின்
ஜனக = தந்தையான
ஜகத்குருவே = உலகத்திற்கு முக்கிய குருவான, ஹே பிரம்மனே
த்வச்சரணகளிகெ = உன் பாதாரவிந்தங்களை
அபிவந்திஸுவெ = வணங்குகிறேன்
ஸன்மதிய = (ஸ்ரீபரமாத்மனின் பாதாரவிந்தங்களில் என் மனம் லயிக்குமாறு) நல்ல புத்தியை
பாலிபுது = அருள் புரிவாயாக.

விளக்கம்:
யார் உவமைகள் கொடுக்க சாத்தியமில்லாத ஆனந்த ஸ்வரூபத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனின் சாக்‌ஷாத் சேவகனாக இருக்கிறாரோ, யார் மொத்த தேவ கணங்களால் வணங்கப்படுகிறாரோ, யார் நிர்மலமான சத்வ ஸ்வரூபனாக இருக்கிறாரோ, யார் சரஸ்வதிதேவியின் முக-கமலத்திற்கு தாமரையைப் போல இருக்கிறாரோ, யார், கருட, சேஷ, ருத்ரர்களுக்கு தந்தையாக இருக்கிறாரோ, அத்தகைய ஜகத்குருவான பிரம்மனின் பாத-பத்மங்களை நான் வணங்குகிறேன். எனக்கு நற்புத்தியைக் கொடுத்து அவர் அருளட்டும். 

சிறப்பு விளக்கம்:
பொதுவாக, மனஸ், புத்தி, சித்த ஆகிய மூன்றையும் ஒன்றாகவே நினைத்து நாம் பயன்படுத்தி வந்தாலும், இவை மூன்றும் வெவ்வேறு தத்வங்களாகவும், வெவ்வேறு தேவதைகள் அங்கு அபிமானியாகவும் இருக்கின்றன. மனஸ் என்றால் முதன்முதலில் பிறக்கும் சஞ்சல நிலை. புத்தி என்றால் அதை நிச்சயம் செய்யும் நிஸ்சல நிலை. சித்த என்றால் சத்-வ்ருத்தி. சந்திரன், மனோபிமானியாவார். புத்திக்கு அபிமானி ப்ருஹஸ்பதி மற்றும் உமாதேவி. சித்தத்திற்கு அபிமானி பிரம்ம மற்றும் வாயு. வாயுதேவரே அடுத்த கல்பத்தில் பிரம்ம பட்டத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் சமமே. ஆனாலும், பதவியில் வாயுவைவிட பிரம்மன் சிறிது அதிகமாக இருப்பதால், முதலில் பிரம்மதேவரை வணங்குகிறார் தாசர். ’நிருபமானந்த’ என்னும் பதத்தினால் உன் சரணங்களை வணங்குவேன் என்று கூறுகிறார். பிரம்மதேவருக்கு ஜகத்குரு பதவி எப்படி வந்தது என்றால்:

‘ஜகத்குருத்வமாதிஷ்டம் மயாதே கமலோத்பவ’. என்னால் உனக்கு ஜகத்குருத்வம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பரமாத்மன், பிரம்மதேவருக்கு சொல்ல்லியிருப்பதாக, தாத்பர்ய நிர்ணய 9ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நிர்ணயத்தில் இன்னொரு இடத்தில் ‘ஷண்ணவத்யங்குலோயஸ்து ந்யக்ரோதபரிமண்டல: சப்தபாதஷ்சதுர்ஹஸ்தோ த்வாத்ரிம்ஷல் லக்‌ஷணைர்யுத: அஸம்ஷய: சம்ஷயஸ்சித்குருக்தோ மனீஷிபி: தஸ்மாத்பிரம்மா குருர்முக்ய: சர்வேஷாமேவ சர்வதா’ என்றும் சொல்லியிருக்கிறார். இதன் பொருள் என்னவெனில்:

குருவின் லட்சணத்தை சொல்கிறார். 96 அங்குலம் உயரம் இருக்கவேண்டும். இரு கைகளை நீட்டினாலும் இதே அளவு இருக்கவேண்டும். 24 அங்குலத்திற்கு ஒரு முழம் என்று பெயர். அத்தகைய 4 முழங்கள் 96 அங்குலங்கள் ஆகின்றன. 4 முழங்களை காலடிகளால் அளந்தால் 7 காலடி ஆகவேண்டும். இப்படி இரு கைகள் நீட்டினால் வரும் அளவும், உயரமும் ஒன்றாக இருந்தால், அதற்கு ’ந்யக்ரோத பரிமண்டலம்’ என்பார்கள். 32 லட்சணங்கள் இருக்கவேண்டும். தனக்கு சந்தேகங்கள் எதுவும்  இருக்கக்கூடாது. மற்றவர்களின் சந்தேகங்களை சரியாக தீர்ப்பவராக இருக்கவேண்டும். இத்தகைய குணங்கள் உள்ளவரே குரு ஆவார். இத்தகைய அனைத்து லட்சணங்களையும் கொண்ட குரு பிரம்மன் ஒருவரே. வாயுதேவர், பிரம்மனுக்கு சமமானவர் என்பதாலும், பின்னர் இவரே பிரம்ம பதவிக்கு வரப்போகிறவர் என்பதாலும், வாயுதேவரும் குரு எனப்படுகிறார். இதற்கு நிர்ணய வாக்கியம் இருப்பதால் ‘ஜகத்குருவே’ என்று அழைத்திருப்பதாக அறியவேண்டும். 

’நிருபமானந்தாத்மபவ’ என்று, பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்திருக்கும் மகாமகிமர் என்று சொல்லியிருக்கிறார். மன்மதன்கூட பரமாத்மனின் மகனே. ‘நிர்ஜரசபா சம்ஸேவ்ய’ என்கிறார். தேவேந்திரன், தேவகணங்களால் வணங்கப்படுபவன். ‘முகாதிந்த்ராஸ்சாக்னிஸ்ச’ என்னும் வாக்கியத்தின்படி தேவேந்திரனும் பரமாத்மனின் மகனே. இப்படி இருக்கையில், பிரம்மதேவர் எப்படி சிறந்தவர் ஆகிறார் என்றால், ‘ருஜுகணதரஸெ’ என்றார். இந்த அதிகாரம் பிரம்மதேவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அதனாலேயே, பிரம்மர் ஜீவோத்தமர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, ருத்ராதி தேவர்களில் ரஜோகுணம் அதிகமாக காணப்படுகிறது. இவரில் அப்படி இல்லை என்பதற்காக ‘சத்வப்ரசுர’ என்கிறார். ‘விஷுத்தசத்வம் பிரம்மாக்யம்’ என்னும் பாகவத வசனத்தின்படி, இவரிடம் சத்வகுணம் அதிகமாக காணப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறார். இத்தகைய வாக்கியங்களால், இவருக்கு அசுராவேஷமோ, அஞ்ஞானாதி தோஷங்களோ இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

மேலும், நமக்கு ஒரு பெரிய அதிகாரியினால் ஒரு வேலை ஆகவேண்டுமெனில், நேரடியாக அவரிடமே போய் அதைப்பற்றி கேட்டால், அது நடக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், முதலில் அதிகாரியின் அன்பைப் பெற்ற ஒருவரின் கருணையைப் பெற்று, அவர் மூலமாக அந்த அதிகாரியைக் கண்டால், அந்த வேலை நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை உலக வழக்கத்தில் பார்க்கிறோம். இதன்படியே, தாசராயரும், பிரம்மனின் பரிவாரங்களில் மூத்தவரான அவரது மனைவியின் மூலமே அவரின் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று உத்தேசித்து ‘வாணிமுக ஸரோஜேன’ என்கிறார். சூரியனைக் கண்ட தாமரை எப்படி மலர்கிறதோ, அதன்படியே பிரம்மன் என்னும் சூரியனைக் கண்ட சரஸ்வதியின் முக- கமலம் மலர்கிறது என்னும் சிந்தனையுடன் இந்த பதத்தை பயன்படுத்தியுள்ளார். பொதுவாக கணவரின் முகத்தைக் கண்டால், மனைவிக்கு ஆனந்தம் உண்டாகிறது. இதிலிருந்து, அவரின் பதிவிரதமும், அவர்கள் இருவரின் மகிழ்ச்சியான தாம்பத்யத்தையும் அறியலாம். இப்படி வர்ணித்திருப்பதால், சரஸ்வதிதேவியரின் பிரசாதமும் கிடைத்து, அவர் மூலமாக, பிரம்மதேவரின் பிரசாதமும் கிடைக்கிறது என்பது தாசராயரின் அபிப்பிராயம். 

மேலும், ’கருட, சேஷ, ஷஷாங்கதள சேகரர ஜனக’ - கருட, சேஷ, ருத்ரர்களின் தந்தை என்று சொல்கிறார். இதற்கு ஆதாரம் என்னவெனில்: மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 3ம் அத்தியாயத்தில் ‘வ்யூடஸ்சதுர்தாபகர்வா’ என்னும் 9ம் ஸ்லோகத்திலிருந்து ‘தௌவாஹனம் ஷயனம் சைவவிஷ்ணோ:’ என்னும் 13ம் ஸ்லோகம் வரைக்கும் இவரின் சிறப்பினை விளக்கியிருக்கிறார் ஸ்ரீமதாசார்யர். இதன் பொருள் என்னவெனில்: ஸ்ரீபரமாத்மன், வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்தன் என்னும் 4 ரூபங்களை எடுத்திருக்கிறார். லட்சுமிதேவியும் 4 ரூபங்களை தரித்து, 4 ரூபங்களை எடுத்த பரமாத்மனுக்கு மனைவியாகிறார். அதில், வாசுதேவ நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் மாயாதேவி புருஷனைப் படைத்தார். சங்கர்ஷண நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் ஜயாதேவி, ஸூத்ரனைப் (Soothra) படைத்தார். ‘ஸூத்ரம் ஸவாயு: புருஷோவிரிஞ்சி:’. ஸூத்ரனே வாயுதேவர். புருஷன் பிரம்மதேவர். பிரத்யும்ன நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் கிருதிதேவி இரு பெண் மக்களைப் படைத்தார். முதலாமவள் ப்ரக்ருதி, இரண்டாமவள் ஷ்ரத்தா. இவர்கள் இருவரே சரஸ்வதி பாரதியர்கள். பிரம்மதேவரிடமிருந்து சரஸ்வதி ஜீவன், வாயுதேவரிடமிருந்து பாரதி காலனையும் பெற்றனர். இவர்களில் ஜீவனே சேஷன். காலனே கருடன். இவர்கள் இருவரில் ஒருவர் பரமாத்மனுக்கு படுக்கையானார். இன்னொருவர் வாகனமானார் என்று நிர்ணயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  

இதே அர்த்தத்தையே விஷ்ணுரகசியத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மதேவரிடமிருந்து ருத்ரதேவர் பிறந்தார் என்பதற்கு பாகவத நிர்ணயாதிகள் ஆதாரமாக இருக்கின்றன. சேஷ கருடர், பிரம்ம வாயுகளின் மக்கள் ஆனாலும், வாயுதேவரே கல்பத்தின் முடிவில் பிரம்மன் ஆகிறார் ஆகையால் தாசராயர், கருட, சேஷ, ருத்ரர்களை பிரம்மதேவரின் மக்கள் என்று சொல்கிறார். இத்தகைய பிரம்மதேவருக்கு நமஸ்காரங்களை சொல்லி, நல்லறிவைக் கொடுக்கட்டும் என்று வேண்டுகிறார். 

அடுத்த பத்யத்திலிருந்து, உலகத்திற்கு முக்கிய குருகளான ஹனும, பீம, மத்வ அவதாரங்களினால் ராம, கிருஷ்ண, வேதவியாஸரின் சேவையை செய்து, ஹரி சர்வோத்தம, வாயு ஜீவோத்தம என்னும் ஞானத்தினால் பஞ்சபேத, தாரதம்யாதிகளை அறிந்து பரமாத்மனை உபாசனை செய்வதே முக்திக்கு சாதனை என்று நிர்ணயித்து, ஜகத்குரு என்று அழைக்கப்பெற்ற வாயுதேவரை பிரார்த்திக்கிறார். 

***

Sunday, January 26, 2020

#2 - மங்களாசரண சந்தி

ஜக3து33ரனதி1 விமலகு3ண ரூ
1களனாலோசனதி3 பா4ரத
நிக3மத1திகளதிக்ரமிஸி க்ரியாவிசேஷக3|
3கெ33கெ3ய நூத1னவ கா1ணுத1
மிகெ3 ஹருஷதி3ம் பொ13ளி ஹிக்கு3
த்ரிகு3ணமானி மஹாலகுமி சந்தெய்சலு அனுதினவு ||2

ஜகதுதரன = இந்த உலகங்கள் அனைத்தையும் தன் உதரத்தில் வைத்துக்கொண்டிருக்கும் பரமாத்மனின், அதி அற்புதமான குணரூபங்களை.
அதி விமல = அற்புதமான.
குண = ஆனந்தாதி குணங்கள்.
ரூபகளன = மத்ஸ்யாதி அனந்தானந்த ரூபங்களை.
க்ரியா விசேஷகள = மூலரூப, அவதார ரூபங்களால் செய்யும் சிறந்த செயல்களை.
பாரத நிகமததிகளதிக்ரமிஸி = பாரத = ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படும் பாரதத்தை.
நிகமததிகள = வேதராசிகளை.
அதிக்ரமிஸி = மீறி (பாரதத்திலும், வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பகவத் மகிமைகளைவிட அதிகமானதாக)
ஆலோசனதி = ஆலோசனையுடன்
பகெபகெய = பற்பல விதமான
நூதனவ = புதுப்புது மகிமைகளை பார்த்தவாறு
மிகெஹருஷதிம் = மிகுந்த மகிழ்ச்சியுடன்
பொகளி = வணங்கி, போற்றி
ஹிக்குவ = பூரிப்படையும்
த்ரிகுணமானி = ஸ்ரீ, பூ, துர்கா என்னும் மூன்று ரூபங்களால், சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களுக்கு அபிமானியாக இருக்கும்.
மஹாலகுமி = மகாலட்சுமி
அனுதினவு = தினந்தோறும்
சந்தைஸலி = கிரந்தத்தை முடிக்கும் வேலை முதலான இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி அருளட்டும்.

பொருள்:
எந்த மகாலட்சுமியானவர், சத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அபிமானியாகி, ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி என்னும் மூன்று குணங்களால், ஸ்ருஷ்டி காலத்திலும், பாதுகாக்கும் காலத்திலும், உலகத்தை தன் உதரத்தில் வைத்துக்கொண்டு படுத்திருக்கும் பரமாத்மனை, பிரளய காலத்திலும் அரை க்‌ஷணமும் விடாமல் வணங்கிக்கொண்டிருக்கிறாள். அந்த பரமாத்மன் தன் அவதார மற்றும் மூல ரூபங்களால் எந்தெந்த வேலைகளை செய்துவருகிறாரோ, அந்தந்த வேலைகளில் சிறப்புகளை, அவனின் குணரூபங்களை ஆலோசனை செய்து அறிந்தவாறு; பாரதத்திலும், வேதராசிகளிலும்கூட சொல்லப்பட்டிருக்காத புதுப்புது பகவத் மகிமைகளை, குணரூபங்களை, ஒவ்வொரு நொடியும் கண்டவாறு, அந்த பரமாத்மனை போற்றிப் புகழ்ந்தவாறு, அவனின் மகிமைகளை எவ்வளவு பார்த்தாலும் அவனிடம் இருக்கும் மகிமைகளின் ஒரு சிறிய அம்சத்தைப் பார்ப்பதற்கும் சாத்தியம் இல்லை என்று வியப்படைகிறாள். இத்தகைய ரமாதேவி, நான் மேற்கொண்டிருக்கும் இந்த காவியத்தை முடித்துவைத்து, நமக்கு  தினந்தோறும் அருளட்டும்.

சிறப்புப் பொருள்:
முந்தைய ஸ்லோகத்தில் தாசர், லட்சுமியுடன்கூடிய ஸ்ரீபரமாத்மனை வணங்கியவாறு, இங்கு லட்சுமிதேவியிடம் தான் விரும்புவதை வேண்டுகிறார். அது என்னவெனில்: இந்த கிரந்தத்தை முடித்தல்; பகவந்தனிடம் திடமான பக்தி; அபரோக்‌ஷத்தில் பரமாத்மனை காணுதல்; முக்தி - இவை அனைத்தும் லட்சுமிதேவியின் அருளால் மட்டுமே ஆகவேண்டும். ஆகையால், ‘ஸந்தெயிஸலி’ என்றி சொல்லி, மேலே சொன்ன விஷயங்களை வேண்டுகிறார்.

ஸ்ரீபரமாத்மனின் அருளைப் பெறவேண்டுமென்றாலும், அவனை அபரோக்‌ஷத்தில் காணவேண்டுமென்றாலும், ஸ்ரீலட்சுமிதேவியின் அருள் தேவை ஆதலால், மோகனதாசர், ‘வெங்கடாத்ரி நிலயன, பங்கஜநாபன, தோரவ்வா லகுமி’ என்று பாடினார். நம் தாசரும் இதே அபிப்பிராயத்தில் ‘ஸந்தெயிஸலி’ என்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

‘த்ரிகுணமானி’ என்னும் சொல்லால், பிரம்மாதி எந்த தேவதைகளும் இல்லாத பிரளய காலத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி என்னும் மூன்று ரூபங்களால் த்ரிகுணங்களுக்கு அபிமானியாகி; அதாவது சத்குண அபிமானி = ஸ்ரீதேவி; ரஜோகுண அபிமானி = பூதேவி; தமோகுண அபிமானி = துர்காதேவி என்று த்ரிகுணமானியாகி, மூன்று ரூபங்களால் பரமாத்மனை சேவை செய்துவருகிறாள்.

’ஸ்ரீ பூர்மிரிதி ரூபாக்யாம் ப்ரக்ருதிர்விஷ்ணுனா ஸஹ || ஷேதே ஸ்ருதிஸ்வரூபேண ஸ்தௌதிப்ரஹ்மலயே ஹரிம்’ என்னும் பாகவத 10ம் ஸ்கந்த தாத்பர்ய நிர்ணயத்தின் வாக்கியத்தின்படி, பிரளயகாலத்தில் பூதேவி படுக்கை ரூபத்தில் வடபத்ர (ஆல இலை) ரூபத்தைப் பெறுகிறாள். ஸ்ரீதேவி, பரமாத்மனுடன் படுத்திருக்கிறாள். துர்காதேவி ஸ்ருதி ரூபமாக பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்கிறாள். ‘ந கடத உத்பவ: ப்ரக்ருதி புருஷயோரஜயோ:’ - பிறப்பு இறப்பு இல்லாத, ப்ரக்ருதி புருஷ நாயகரான லட்சுமி நாராயணனுக்கு, அழிவு என்பதே இல்லை. இவர்கள் இருவரும், பிரளய காலத்திலும்கூட கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே ஸ்ருதி வாக்கியத்தில் ‘உபய யுஜோர்பவந்த்யஸுப்ருதோ ஜலபுத்புதவத்’ - இவர்கள் இருவரும் சம்பந்தத்தாலேயே - நீரினால் நீரை அடித்தால் அலைகள் உருவாவதைப் போல, பிரம்மாதி ஜீவராசிகள் உருவாகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னொரு வேத வாக்கியத்தில் ‘யத உதகா த்ருஷிரனு தேவகணா உபயே’ எந்த காரணத்தால் ’ரிஷி:’ ஞானியான பிரம்மதேவர் உன்னிடமிருந்து பிறந்தாரோ, மற்றும் அனு = அவரைத் தொடர்ந்து, தேவகணா உபயே = பிரம்மாதி பதவியைப் பெறாதவர்கள், பின்னர் அந்தப் பதவிக்கு வரப்போகிறவர்கள் என இந்த இரு விதமான தேவதைகளும் பிறந்தனரோ, அந்த காரணத்தாலேயே இந்த உலகத்தில் படைப்பு, அழிப்பு ஆகியவை இல்லாதவன், உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறப்பு இறப்பு உள்ளவர்கள், அது இல்லாத உன்னைப் பற்றி முழுமையாக அறியமாட்டார்கள். உன் மகிமைகளை முழுமையாக நீ ஒருவன் மட்டுமே அறிவாய் என்று வேதங்கள் கூறுகின்றன.

பிரளய காலத்தில், பரமாத்மனின் சேவையை செய்தவாறு லட்சுமிதேவியானவர் மட்டும் இருப்பாரே தவிர பிரம்மாதி தேவதைகள் யாரும் இருப்பதில்லை என்று நிரூபித்ததைப் போலவும் ஆயிற்று. மேலும் ‘ஜகதுதரன’ என்று சொல்லி பிரளய காலத்தில் பரமாத்மனின் ஸ்திதி நிலையைக் காட்டுகிறார். அது எப்படியெனில்: ’ஸம்ஷாந்த ஸம்விதகிலம் ஜடரே நிதாய லட்சுமி புஜாந்தரகத: ஸ்வரதோபிஜாக்ரே’ என்ற மகாபாரத தாத்பர்ய நிர்ணய ஸ்லோகத்தின்படி, இந்த உலகத்தை தன் உதரத்தில் வைத்துக்கொண்டு, லட்சுமிதேவியரால் வணங்கப்பட்டு, பிரளய காலத்தில் பரமாத்மன் இருக்கிறான் என்று தெரியவருகிறது.

மேலும் ‘தஸ்யோதரஸ்த ஜகத:’ என்னும் நிர்ணய ஸ்லோகத்தினால், ஸ்ரீபரமாத்மன் பிரளய காலத்தில், தன் உதரத்தில் இருக்கும் ஜீவகணர்களை, ஸ்ருஷ்டிக்குக் கொண்டு வந்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப சாதனைகளை செய்வித்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுத்து, அருளவேண்டும் என்று, பிரளயத்தின் முடிவில் நிச்சயித்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிய வரும் விஷயங்கள் என்னவெனில்: பிரம்மாதிகள் இல்லாத பிரளய காலத்தில், பகவத் வியாபாரங்கள் எப்படி இருந்தன என்று பிரம்மாதிகளுக்கு தெரியாது. அப்போதும் ரமாதேவியர்கள் இருந்ததால், அப்போதைய அபாரமான பகவத் மகிமைகளை தொடர்ந்து பார்த்திருப்பதால், ஸ்ரீலட்சுமிதேவியர் மகாமகிமைகளைக் கொண்டவர்கள். லட்சுமிதேவியரின் ஞானத்தில் சிறிதளவுகூட பிரம்மாதிகளுக்கு இல்லை என்று இதிலிருந்து தெரியவருகிறது. உலக விஷயங்களைப் பற்றி பிரம்மதேவர் யோசித்தால், உள்ளங்கை நெல்லிக்கனி போல அவருக்கு அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. அதே சமயம், ரமாதேவியருக்கு அந்த விஷயத்தை யோசிக்காமலேயே தெரிந்து கொள்ளும் மகிமை இருக்கிறது. அப்படியிருந்தும், பரமாத்மனின் அதிவிமல குணரூபங்களை, மூலரூப அவதார ரூபங்களால் அவர் செய்யும் அபாரமான செயல்களை, பாரதத்திலும், வேத ராசிகளிலும் சொல்லப்பட்டிருக்கும் அந்த விஷயங்களைப் பற்றி யோசித்தே தெரிந்து கொள்கிறார். ஆனால், எவ்வளவு யோசித்தாலும், அந்த குணங்களைப் பற்றி முழுமையாக அறியமாட்டார் . இந்த விஷயத்தைப் பற்றி பாகவத பத்தாம் ஸ்கந்தத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

நனாமரூபே குணகர்மஜன்மபி
ர்னிரூபிதவ்யெஷவதஸ்ய ஸாக்‌ஷிண: |
மனோவசோப்யாமனுமேயவர்த்மனோ
தேவக்ரியாயா; ப்ரதியந்த்யதாபிஹி || (பாகவத 10-3-37)

தேவகியின் கர்ப்பத்தில் இருக்கும் பரமாத்மனை, பிரம்மதேவர் ஸ்தோத்திரம் செய்யும் சந்தர்ப்பத்தில், அவர் சொல்வது: ‘எலே ஈஷா! உன்னுடைய நாம ரூபங்களை, செயல்களாலோ, பிறவிகளை எடுத்தோ, குணங்களாலோ காண்பது சாத்தியமில்லை. குண, கர்ம, பிறவிகளால் அக்னியை காணமுடியும். எப்படியெனில், ஒளிமயமான காந்தியைக் கொண்டவன் என்ற குணங்களாலும், எதையும் எரிக்கும் சக்தி உள்ளவன் என்னும் செயலாலும், மரங்களை அழிக்கவல்லவன் என்று பிறப்பினாலும் அக்னியின் ஸ்வரூபத்தைக் காணமுடியும். இப்படி உன்னுடைய ஸ்வரூபத்தைக் காண்பதற்கு சாத்தியமில்லை. அப்படியெனில், குணரூபங்களே இல்லை என்பதா? உன்னுடைய குணரூபங்களை நீ மட்டுமே காண்பதற்கு சாத்தியம். நீ கண்டுகொண்டிருப்பதை பொய் என்று எப்படி சொல்வது? இதற்கு ஆதாரம் என்னவெனில்: ‘சர்வ நாமா, சர்வகர்ம, ரிக்மவர்ணம், கர்த்தாரமீஷம்’ என்னும் வேத மந்திரங்களின் ஆதாரத்தினாலும், மனதினாலும், வசனங்களாலும், நீ அபரிமிதமான குண நாமங்களைக் கொண்டவன் என்று அனுமானிக்க சாத்தியம் உள்ளதை பொய் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை என்பதே இதற்கு ஆதாரம்.

வேதங்களில் பகவத் மகிமைகளைப் பற்றி எவ்வளவு சொல்லப்பட்டிருக்கிறதோ, பிரம்மாதிகள் அவ்வளவு மட்டுமே அறிந்து, அவ்வளவே மகிழ்ச்சியை அடைகின்றனர். லட்சுமிதேவியரோ, வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பகவத் மகிமைகளை, யோசிக்காமலே அறியும் சக்தியைப் பெற்றிருக்கின்றனர். அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் அபாரமான குணங்களை யோசித்தவாறு, பரமாத்மனின் அனந்தானந்த ரூபங்களைப் பற்றி, ஒவ்வொரு ரூபங்களுக்குள்ளும் இருக்கும் அனந்தானந்த பாகங்களைப் பற்றி, ஒவ்வொரு பாகங்களுக்குள்ளும் இருக்கும் அனந்தானந்த செயல்களைப் பற்றி, ஒவ்வொரு செயல்களில் இருக்கும் புதுப்புது விஷயங்களைப் பற்றி, ஒரு நொடியின் அனந்தானந்த பாகங்களில், ஒரு பாகத்தின் மிகச்சிறிய காலத்தில் மிகத்தெளிவாக அறிந்து, ஒரு முறை கண்ட வியப்பினை மற்றொரு முறை காணாமல், புதிதுபுதிதான விஷயங்களையே காண்கிறார் என்றும், அந்த மகிழ்ச்சியிலேயே மூழ்கி, ஸ்தோத்திரம் செய்தவாறு, மெய்மறந்து, பூரிப்படைந்தவாறு இருக்கிறார்.

பிரம்மாதிகள், வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பகவந்தனின் மகிமைகளையே அபாரமாக அறிந்திருக்கின்றனர். அவர்கள் அறிந்திருக்கும் இத்தகைய மகிமைகள், லட்சுமிதேவியருக்கு மிகவும் குறைவானதாக தெரியும். இத்தகைய மகிமையுள்ள ரமாதேவி, மிகக்குறைந்த காலத்தில், பகவந்தனின் அபாரமான மகிமைகளைக் காணும் சக்தியுள்ளவர். புதிதுபுதிதாக பகவந்தனின் மகிமைகளை அவர் கண்டாலும், இன்னும் அவருக்குத் தெரியாத அத்தகைய மகிமைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆகையால், பகவந்தனிடம் இருக்கும் அபார குணங்களில் மிகச்சிறிய அளவையே மகாலட்சுமி அறிந்திருக்கிறார் என்று நாம் அறியவேண்டும். பரமாத்மன் ஒருவனே தன்னுடைய மகிமைகளை முழுமையாக அறிய வல்லவன் என்றும் அறியவேண்டும். இதே பொருளையே ‘சத்தத்வ ரத்னமாலா’ என்னும் கிரந்தத்தில் ‘விஷ்ணோர்குணா ந நந்தாம்ஷ்சத்ரஷ்டும் ஷக்தாபி ஹிஸ்புடம் | க்‌ஷணேக்‌ஷணே நவனவ சுவிஷேஷோபலம்பத ‘ (ஸ்லோகம் 126) ஆகிய வாக்கியங்களால் அறிந்து கொள்ளலாம்.

இத்தகைய மகிமைகளைக் கொண்ட ரமாதேவியின் அருள், நமக்கு கிடைக்குமாறு செய்து, தினந்தோறும் அவரை நம் அபரோக்‌ஷத்தில் காணுமாறு செய்து, நிர்விக்னத்துடன் இந்த கிரந்தத்தை முடிக்க வைத்து, நமக்கு அருளட்டும்.

இப்படியாக இதுவரை, பாக்யத்தைத் தரக்கூடியவரான மகாலட்சுமியை பிரார்த்தித்த தாசராயர், அடுத்து சதுர்முக பிரம்ம, வாயு இருவரும் வகுப்பில் சமமானாலும், பதவியில் சிறிது சிறந்தவரான பிரம்மதேவரைக் குறித்து வேண்டிக் கொள்கிறார்.

Saturday, January 25, 2020

#1 - மங்களாசரண சந்தி

ஸ்ரீரமணி 1ர க1மல பூஜித
சாருசரண சரோஜ பி3ரம்ம ச
மீர வாணி ப2ணீந்த்3ர வீந்த்3ர ப4வேந்த்3ர முக2 வினுத |
நீரஜ 4வாண்டோ33ய ஸ்தி2தி
காரணனே கை1வல்ய தா3யக
நாரசிம்மனே நமிபே11ருணிபுதெ3மகெ3 மங்க3ளவ ||1

ஸ்ரீரமணி = ஸ்ரீ ஆகிய மனைவியின்
கர = கைகளினால்
கமல = தாமரையினால்
பூஜித = பூஜை செய்துக்கொள்ளப்படும்
சாரு = அழகான
சரண = பாதங்கள்
சரோஜ = தாமரையைப் போன்ற
பிரம்ம = பிரம்மர்
சமீர = வாயுதேவர்
வாணி = சரஸ்வதி (& பாரதிதேவி)
பணீந்த்ர = சேஷதேவர்
வீந்த்ர = பறவைகளில் சிறந்தவரான கருடர்
பவ = ருத்ரதேவர்
இந்த்ரமுக = இந்திரன் முதலான அனைத்து தேவதைகள்
வினுத = வணங்கப்படுபவரான
நீரஜபவாண்ட = இந்த பிரம்மாண்டம்
உதய = படைத்தல்
ஸ்திதி = காத்தல்
காரணனே = காரணனான
கைவல்ய = பிரளய காலத்தில் இருக்கும் ‘கேவல’ நாமக ஸ்ரீஹரி
தாயக = கொடுப்பவன்
நாரசிம்ஹ = கம்பத்திலிருந்து வெளிவந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மன். மேலும் தோஷங்கள் இல்லாத முக்த ஜீவர்களுக்கு முக்தியை வழங்கக்கூடிய, நரசிம்மன் என்று அழைக்கப்படும் நாராயணனே (நான் உன்னை)
நமிபே = வணங்குகிறேன்
எமகே = இந்த கிரந்தத்தை படித்து, கேட்பவர்களுக்கு மற்றும் நம் சிஷ்யர்கள் என அனைவருக்கும்
மங்களவா = எந்தவித விக்னங்களில்லாத மங்களங்களை மற்றும் இந்த கிரந்தத்தை படித்து, கேட்பதால் கிடைக்கும் முக்தி என்னும் மங்களத்தை
கருணிபுது = கருணை காட்டுவாயாக

பொருள்:

நரசிம்மனே! ஸ்ரீமன் நாராயண! நீயே இந்த பிரம்மாண்டத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்கு காரணம். ஜீவர்களுக்கு முக்தியை கொடுப்பவனும் நீயாக இருக்கிறாய். சாக்சாத் ஸ்ரீலட்சுமியே உனக்கு மனைவியாக இருக்கிறாள். பிரம்ம ருத்ர ஆகிய அனைத்து தேவதைகளால் வணங்கப்படுகிறாய். இப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன். எனக்கு மற்றும் என் சிஷ்யர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த கிரந்தத்தை கேட்கும், படிக்கும் அனைவருக்கும் முக்தி / மோட்சம் எனப்படும் மங்களத்தை வழங்குவாயாக. 

விசேஷமான பொருள்:

கிரந்தங்களை துவக்கும்போது செய்யப்படும் மங்களாசரணத்தில் வணங்கப்படும் தேவதைகள் இரண்டு விதம். கிரந்தத்தில் போற்றப்படும் தேவதை மற்றும் இஷ்ட தேவதை. ஜோதிடம் முதலான கிரந்தங்களை இயற்றும்போது சூரியன் மற்றும் நவக்கிரஹ தேவதைகளை வணங்கி அந்த கிரந்தங்களை தொடங்குவது வழக்கம். இந்த கிரந்தத்திற்கு அந்த பரமாத்மனே சொல்லப்படும் விஷயமாக இருப்பதால், நாரசிம்மனே நமிபே என்று அவரையே வணங்கி துவக்குகிறார். நாரசிம்மனே என்னும் சம்-புத்தி சொல்லுடன், நின்னன்னு என்னும் சொல்லை சேர்த்து, நமிபே என்னும் உத்தமபுருஷக்ரியாபத (Third person verb - படர்க்கை, வினைச்சொல்) உடன் சேர்த்து, நான் என்னும் செய்பவரையும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். 

நரசிம்மனே, நான் உன்னை வணங்குகிறேன் என்று சொல்வதுபோல் ஆயிற்று. ஆனால், இந்த கிரந்தத்தின் கருப்பொருள் / விஷயம் ஸ்ரீமன் நாராயணன் ஆவான். பாகவத 7ம் ஸ்கந்தத்தில் வரும் நரசிம்ம சரித்திரத்தை மட்டும் இந்த கிரந்தத்தில் சொல்லவில்லை. மேலும் நரசிம்ம ரூபமானது, சர்வேஷ்ட தேவதை என்று போற்றப்படுவதில்லை. சிலர் ராம ரூபத்தை, சிலர் கிருஷ்ணாதி ரூபங்களை தங்களின் இஷ்ட தேவதையாக நினைத்து பூஜிப்பது வழக்கம். 

இந்த கிரந்தத்தில் போற்றப்படும் ரூபமும் இல்லை, சர்வேஷ்ட ரூபமும் இல்லை. அப்படியிருக்கும்போது, ஸ்ரீதாசர் நரசிம்மனை எதற்கு முதலில் வணங்குகிறார் என்றால், ஸ்ரீஜகன்னாததாசரின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர். மேலும் தாசரின் உபாசனா மூர்த்தியும் நரசிம்மனே. ‘பிம்பரூபோபாஸனம் சகார்யம் சத்பக்தி பூர்வகம்’ என்னும் பிரமாண வாக்கியத்தின் அடிப்படையில் இந்த ரூபத்தை முதலில் வணங்குகிறார். மேலும் நரசிம்ம ரூபம் தேவையற்றதை கொடுக்காமல், வேண்டியதை மட்டும் கொடுக்கும் ரூபமாகும். இதற்காகவும் நரசிம்மருக்கும் முதல் வணக்கம் அவசியமாகிறது. 

இந்த கிரந்தத்தின் கருப்பொருள் / விஷயம் ஸ்ரீமன் நாராயணன் ஆவான். ஆகவே இரண்டு ரூபங்களுக்கும் ஒரே முறையில் வணங்க வேண்டியதாயிற்று. ஸ்ரீஹரியின் மூலரூபத்திற்கும், ராம கிருஷ்ணாதி அவதாரங்களுக்கும் எந்தவித பேதமும் இல்லை. அப்படியென்றால் இது ராமன், இது கிருஷ்ணன், இது மத்ஸ்யன் என்று பெயரில் மட்டும் எதற்கு பேதம் வருகிறது? ஏனென்றால் ‘நஹிவிக்ருதம் த்யஜந்திகனகஸ்ய ததாத்மதயா’ என்னும் வேதவாக்கியத்துக்கேற்ப, தங்கத்தினால் காப்பு, தோடு முதலான அணிகலன்களை செய்தால், அவை வெவ்வேறு தோற்றம் உள்ளதாகவும், அணியும் அங்கங்களினால் வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றவே தவிர, மூலப்பொருளான தங்கத்தில் எப்படி வேற்றுமை இல்லையோ அதைப் போலவே, மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களில் பெயர் மட்டுமே வெவ்வேறாக இருக்கின்றதே ஒழிய குணங்கள் முதலானவைகளில் பகவத்ரூபங்களுக்கு எந்தவித பேதங்களும் இல்லை. ஆனால், மக்கள் அனைவருக்கும் அனைத்து ரூபங்களையும் பூஜிக்க அதிகாரம் இல்லை.

தத்ராபி ஹயக்ரீவ நாரசிம்ஹ வராஹகா: |
பார்கவஸ்சாதுராசாரை:னைவசேவ்யா: கதஞ்சன ||
ஏதன்மந்த்ரோபாஸகாயே யதிஸ்யை: பரதாரிண: |
மந்த்ரக்‌ஷோபோபவேத்தேஷாம் தத்காலேஷு பிஷாசகா: ||

விலம்பேனாபகாரூபி ஜாயதே நாத்ரசம்ஷய: |
ராமகோபாலகிருஷ்ணாத்யா ஹரிதாபூதராச்யுதா: ||
மத்ஸ்யவாமனகூர்மாத்யா: சர்வேஸ்யு: சௌம்யமூர்த்தய: |
நகுப்ஸந்தீதுராசாரை: சதாசாரை: பலாதிகா: ||

மேற்கண்ட விஷ்ணுரகஸ்யத்தின் வாக்கியங்களின்படி, ஹயக்ரீவ, நரசிம்ம, வரகாதி ரூபங்களை வணங்குவோர் மிகவும் ஆசாரத்துடன் இருக்கவேண்டும். அத்தகைய ஆசாரம் இல்லாதவர்கள், மேற்கண்ட ரூபங்களை வணங்கவேகூடாது. அப்படியே இந்த ரூபங்களை வணங்கி, நரசிம்ம மந்திரங்களை ஜபிப்பவர்கள், பிறன் மனை நோக்குபவர்களாக இருந்தால், பிசாசாக அலைவார்கள். அத்தகையவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும். இன்னும் அதிகமான கெட்டபலன்கள் நேரலாம். 

ராம, கிருஷ்ண, வாமனாதி அமைதியான ரூபங்களை குறைந்த ஆசாரத்துடன் வழிபட்டாலும், அவர்களுக்கு கோபம் உண்டாவதில்லை. அதையே ஆசாரத்துடன் செய்தால், அதிக பலன் கிடைக்கும். ஆகவே, இந்த ரூபங்களை யார் வேண்டுமானாலும் வணங்கலாம் என்று சிந்தாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து யார் யாருக்கு எந்த ரூபங்களை வணங்குவதற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிய வருகிறது. 

‘நாராயணாய பரிபூர்ண குணார்ணவாய’, “த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தி” இந்த மந்திரங்களினால் மூலரூபங்களை வணங்குவதற்கு எந்தவித விதிகளும் இல்லை. ஆகவே பாரதாதி கிரந்தங்களில் ‘நாராயணம் சுரகுரும்’ மற்றும் ‘பரந்தீமஹி’ என்ற வாக்கியங்களால் மங்களாசரணம் செய்திருக்கிறார். 

ஸ்ரீதாசரின் இஷ்டதெய்வம் மற்றும் உபாஸனா மூர்த்தி இரண்டும் ஸ்ரீநரசிம்மரே ஆவார். கிரந்தத்தில் பூஜிக்கப்படுபவன் - ஸ்ரீமன் நாராயணன். இந்த இரண்டு ரூபங்களையும் ஒரே சொல்லில் வணங்குவதற்காக - ’நாரசிம்மனே’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். நரசிம்ம என்னும் சொல், மூலரூபமான நாராயணனைக் குறிக்கும் சொல்லாக ஏற்றுக்கொள்ள முடியாது. நரசிம்ம என்னும் சொல்லை மூலரூபத்தையும் கூடவே அவதார ரூபத்தையும் குறிக்கும் சொல்லாக ஏற்றுக்கொள்ளலாம். நரனின் உடல் மற்றும் சிம்மத்தின் தலை சேர்ந்து நரசிம்மம் ஆனது என்று அவதார ரூபத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதுவே மூலரூபத்திற்கும் பொருந்தும். எப்படியென்றால் - அரா: என்றால் தோஷங்கள் இல்லாதவர். நாரா: என்றால் முக்தர்கள் என்று பொருள். இவர்களுக்கு சிம்மன் என்றால், சிறந்தவன் என்று பொருள். முக்தர்களால் வணங்கப்படுபவன் அல்லது முக்தர்களுக்கு அபயம் அளிப்பவன் என்று பொருள். இன்னொரு பொருள் என்னவென்றால், நார = தோஷங்கள் இல்லாதவன். சிம்ம = ரமா, பிரம்மா ஆகியோரைவிடவும் உத்தமன் என்று பொருள். 

விளக்கம்: சிம்ம என்னும் சொல்லின் மூலச்சொல்லான ’ம்ருகேந்திர’ என்னும் சொல்லை இங்கே பயன்படுத்தினால், ‘ம்ருகயந்தீ இதி ம்ருகா:’. ம்ருகா: என்றால் ரமா பிரம்மாதி தேவதைகள் என்று பொருள். ’யோம்ருகைதி ஹஸ்தக்ருஹீதபத்யயா’ மற்றும் ‘தமேவ தத்ஷாஸ்ரய ப்ருத்யவத்ஸலம் முமுக்ஷுபிர்ம்ருகை பதாப்ஜ பத்ததீம்’ ஆகிய பாகவத வாக்கியங்களே இதற்கு ஆதாரம் எனலாம். ம்ருகாணாம் இந்திர: = ம்ருகேந்திர: என்றால் ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன்.

‘நாரஷ்சாசௌ சிம்ஹஸ்ச நாரசிம்ஹ’ தோஷங்கள் இல்லாதவன், ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன் என்பதால் நரசிம்மன் என்று பெயர். அல்லது ’நாரம் ததாதி நார:’, நார என்றால் தோஷமில்லாத வைகுண்டம் என்று பொருள். தன் பக்தர்களுக்கு இதை கொடுப்பவன் ஆகையால் நார என்று பெயர். இங்கு ’நாரம் ததாதி இதி நாரத:’ என்றும் சொல்லமுடியும். ’நாரம் ததாதி இதி நார:’ - இது எப்படியென்றால் - சுதா கிரந்தத்தில், வைகுண்ட என்னும் சொல்லை பரமாத்மா என்று பொருள் கொள்ளுமாறு, ’வைகுண்ட ததாதி இதி வைகுண்ட:’ - வைகுண்டத்தை கொடுப்பவன் ஆகையால், பரமாத்மனுக்கு வைகுண்டன் என்று பெயர் சொல்லி அங்கேயே நிர்ணயம் செய்தார். 

வைகுண்டத்தைக் கொடுப்பவன் வைகுண்டன் என்றால், கடத்தைக் கொடுப்பவன் கடன் என்று பொருள் கொள்ளலாமா? 

ப்ரயோகேசதி நிமித்தானுசரணம்
நதுநிமித்தேசதி ப்ரயோகானுசரணம்

பிரயோகம் இருந்தால், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பிரயோகங்களை செய்யக்கூடாது என்று பொருள். 

எப்படியென்றால், யாராவது ஒருவர் தெருவில், தயிர், காய்கறி விற்றுக்கொண்டு வந்தால், அவர் பெயர் நமக்குத் தெரியாவிட்டால், அவரை ஏ தயிர், ஏ காய்கறி என்று கூப்பிடும் வழக்கம் உண்டு. அப்படியென்றால் அவரே தயிரா? அவரே காய்கறியா? என்று யாரேனும் கேட்டால், எனக்கு அவர் பெயர் தெரியாது. அவர் தயிர், காய்கறி விற்பதால், அவரை அப்படியே கூப்பிடுகிறேன் என்று சொல்லலாம். ஆகவேதான், பிரயோகம் இருந்தால் சந்தர்ப்பத்தை அனுசரித்து பயன்படுத்த வேண்டும் என்று பொருள். 

இதே உதாரணத்தை வைத்துக்கொண்டு, தயிர் கொண்டு வா என்று ஒரு இடையனைச் சொல்லக்கூடாது. ஆகவே பிரயோகத்தை சந்தர்ப்பத்தை அனுசரித்து பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீமன்நியாயசுதாவில் சொல்லியிருக்கிறார்கள். 

இதைப் போலவே, நார(வைகுண்ட)வை கொடுப்பவன் ஆகையால், பரமாத்மனுக்கு நார என்று பெயர். சிம்ம என்னும் சொல்லுக்கு ஏற்கனவே பொருளைப் பார்த்தோம். ஆகவே, நாரசிம்மன் என்னும் பெயர் மூலரூபத்தைக் குறிக்கும் சொல் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது அவதார ரூபத்தையே குறிக்கிறது என்று ஏன் சொல்லக்கூடாது? ஸ்ரீதாசர் மூலரூபத்தையே நினைத்து அப்படிச் சொன்னார் என்று ஏன் சொல்லவேண்டும் என்றால் - 

’நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ என்று உரிச்சொற்களைப் பயன்படுத்தி ஸ்ரீதாசர் பாடியிருப்பதால், மூலரூபத்தை வணங்குகிறார் என்று சொல்லலாம். அவதார ரூபங்களுக்கு பிரம்மாண்டத்தின் உருவாக்கல் போன்ற வேலைகள் இல்லை. பாகவத முதல் ஸ்கந்தத்தில், ஸ்ரீகிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்திலிருந்து துவாரகைக்குப் போகும்போது, பிராமணர்கள் பரமாத்மனை வணங்கும்போது, ‘அஷ்ரோயந்தாஷிஷ: சத்யாஸ்தத்ரதத்ர த்விஜேரிதா: | நானு ரூபானுரூபாஸ்ச நிர்குண்ஸ்யைகுணாத்மன: ||’ என்று வணங்கினர்.  இதன் பொருள் என்னவென்றால், பிராமணர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்கள், ஆங்காங்கே ஸ்ரீகிருஷ்ணனின் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தன. துஷ்டர்களை கொல். சாதுக்களை காப்பாற்று என்னும் பிரார்த்தனைகள், நிர்குணனான அதாவது பிரம்மாண்டத்திற்கு வெளியே வைகுண்டவாசியாக, சத்வ முதலான குணங்கள் நிரம்பிய, எதன்மேலும் பற்றற்று இருந்த மூலரூபத்திற்கு கேட்டது. 

படைத்தல் தொழிலாகட்டும், துஷ்டர்களை கொல்லும் செயலாகட்டும், தன் பக்தர்களை காப்பாற்றும் செயல்களாகட்டும் இத்தகைய அவதார ரூபங்களை எடுத்தே செய்வேன் என்று தீர்மானம் செய்துகொண்டிருப்பவன் ஆகையால், அதை எப்போதும் அவன் மீறுவதில்லை. 

ஒருமுறை தீர்மானித்துவிட்டால் இந்த மொத்த உலகத்தையே அழிக்கவல்லவன் ஸ்ரீஹரி. ஆனாலும் ராமாவதாரம் செய்து ராவணனை அழிப்பேன் என்றும், கிருஷ்ணாவதாரம் செய்தே கம்சாதி துஷ்டர்களை அழிப்பேன் என்றும் அவனின் சங்கல்பம். ஆகையால் அவனது சங்கல்பத்தை அவனே மீறுவதில்லை. 

ஆகையால் பிரம்மாண்டத்தின் உள்ளே எடுக்கப்பட்ட அவதாரங்கள், சத்வாதி குணங்களை ஏற்றுக்கொண்டு, துஷ்டர்களை அழிக்கும் அவதாரங்கள் ஆகையால், பிராமணர்களின் ஸ்லோகங்கள் / வேண்டுகோள்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஒப்புதல் ஆயிற்று. இதுவே பாகவத ஸ்லோகத்தின் பொருளாகும். இதைப்போலவே ஹிரண்யகசிபுவை அழித்து, பிரகலாதனை காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்த நரசிம்ம ரூபம், பிரம்மாண்டத்தின் படைத்தல் ஆகிய தொழில்களுக்கு ஏற்ற ரூபம் அல்ல.

ஆகையால், இங்கு ஸ்ரீதாசர் சொல்லியிருக்கும் நீரஜபவாண்ட முதலான உரிச்சொற்கள், மூலரூபத்தையே குறிப்பதாகையால், ஸ்ரீதாசரின் அபிப்பிராயம், மூலரூபம் மற்றும் அவதாரரூபம் இரண்டையும் சேர்த்து வணங்குகிறார் என்று இந்த ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது. 

நமிபே (வணங்குகிறேன்) என்ற சொல்லிலிருந்து, வணங்குவதை முக்கியமான செயலாகச் சொல்கிறார். ‘அதாதோ பிரம்மஜிக்ஞாசா’, ‘சத்யம் பரம் தீமஹி’, ‘பர்கோ தேவஸ்ய தீமஹி’, ஆகிய பிரம்மசூத்ர, பாகவத, காயத்ரி ஸ்லோகங்களிலிருந்து, தியானமே முக்திக்கு வழி என்று தெரிவதால், மங்களாசரணத்தில் தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். 

’நமஸ்கரிசுத்தேனே’ என்று இந்த கிரந்தத்தில் வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால், அதிகாரிகளைப் பொறுத்து, செய்யக்கூடிய செயல்களும் மாறுபடும். பிரம்மசூத்திரம், பாகவதாதிகளுக்கு தேவதைகளே அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார். பாகவதத்தில், ‘நிர்மத்ஸராணாம் சதாம்வேதம்’ என்று அதிகாரிகளைப் பற்றி சொல்லும்போது, தன்னைவிட உயர்ந்தவர்களிடத்தில் பொறாமை கொள்ளாதவர்கள் யாரோ, அவரே அதிகாரிகள் என்று சொல்லியிருப்பதால், உத்தமர்கள் மற்றும் தாழ்ந்த ஜீவர்கள் என்று யாரையும் கண்டுபிடிக்க முடியாததாலும், அத்தகைய உயர்ந்த ஞானம் தேவாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கும்; மனிதர்களுக்கு இருக்காது என்ற காரணத்தினால், தேவதைகளே அல்லது தேவதை அம்சம் பொருந்தியவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வதாக ஆயிற்று. 

ஆகவே பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தியானமானது, உத்தமஜீவிகளான ஞானியோகிகளுக்கும் பக்தியோகிகளுக்கும் மட்டுமே சாத்தியம் ஆகுமே தவிர, சாதாரண செயல்களைச் செய்துவரும் மனிதர்களுக்கு ‘கர்மணா ஞானமாதனோதி’ ‘கர்மண்யைவஹி சம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய: குருகர்மைவ கௌந்தேய’ என்று பல ஸ்லோகங்களில் சொல்லி, பிறகு படிப்படியாக பக்தி அதிகரித்து, பகவானின் மகிமைகளை அறிந்து அதன்பிறகு தியானம் செய்வதற்கு தகுதி பெறுவார்கள் என்று சொல்வதற்காகவே ‘நமிபே’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதாசர். 

நமஸ்காரம் என்பதும்கூட தியானம் இல்லாமல் தனியாகச் செய்யப்படுவது இல்லை. வெறும் கை கூப்புவதோ, கீழே விழுந்து வணங்குவதோ இல்லை. சாஷ்டாங்கமாக விழுவதே நமஸ்காரம். சாஷ்டாங்கம் என்றால் - உரஸா ஷிரஸா த்ருஷ்ட்வா மனஸா வசஸா ததா | பத்ப்யாம் கராம்ப்யாம் ஜானுப்யாம் ப்ரணாமோஷ்டாங்க ஈரித: - இதயம், தலை, பாதங்கள், கைகள், கால் முட்டிகள் ஆகியவை நிலத்தில் பதியுமாறு, கண்களால் பார்த்தவாறு, மனதினால் நினைத்தவாறு, வாயினால் ஸ்தோத்திரம் செய்தவாறு செய்யும் நமஸ்காரத்திற்கு சாஷ்டாங்கம் என்று பெயர். மனுஷ்யோத்தமர்களுக்கு இதுவே முக்திக்கான வழி. இதைப் பற்றி ஸ்ரீமதாசார்யர் சொல்வது:

ஏகோபி கிருஷ்ணஸ்ய சக்ருத்ப்ரணாமோ தஷாஷ்வ மேதாவப்ருதேனதுல்ய: |
தஷாஷ்வமேதீ புனரேதி ஜன்ம க்ருஷ்ணப்ரணாமோ நபுனர்பவாய||

பொருள்:

ஸ்ரீஹரியைக் குறித்து ஒரே ஒரு நமஸ்காரத்தையாவது விதிப்படி சாஷ்டாங்கமாக செய்தால், 10 அஸ்வமேத யாகம் செய்து, அவப்ருத ஸ்னானம் செய்தவனுக்கு எவ்வளவு பலன் வருமோ, அவ்வளவு பலன் வரும். ஆனால், பத்து அஸ்வமேத யாகம் செய்தவன் சுவர்க்கத்திற்குச் சென்று அவனின் புண்ணியம் குறையும் வரைக்கும் இருந்து, பின் மறுபடி பூமியில் பிறப்பான். ஸ்ரீகிருஷ்ணனை வணங்கியவன், முக்தியை அடைந்து, பத்து அஸ்வமேத யாகம் செய்தவன் சுவர்க்கத்தில் அனுபவித்த பலன்களை, இவன் நிரந்தரமாக அனுபவிப்பான். இவனுக்கு மறுஜென்மம் கிடையாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள். 

ஆகையால், முதலில் தியானத்துடன் கூடிய நமஸ்காரங்களை செய்து, இறையருளைப் பெற்று, பிறகு, தியானத்தினாலேயே முக்தியைப் பெறமுடியும் என்ற சிந்தனையுடன் தாசராயர், நமிபெ என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கவேண்டும். இதன் கருத்து என்னவென்றால், இந்த கிரந்தத்தை கேட்க, படிக்க முயலும்போது, நமஸ்காரங்களை செய்து, இறையருளைப் பெற்று, அடுத்தடுத்த சந்திகளைப் படித்து வந்தால், தியானம் மற்றும் ஞானம் இரண்டும் கிடைக்கும். ஆகவே முதலிலேயே ’நமிபெ’ என்னும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார் தாசராயர் என்று நினைக்கவேண்டும். இப்படி நினைத்து இந்த படிகளை ஏறியவரே, பாகவதாதிகளைப் படிப்பதற்கு தகுதி பெற்றவர் என்று சொல்வதாயிற்று. 

‘நாரசிம்ஹனே நமிபெ’ என்று சொன்னதாலேயே மங்களாசரணம் சொன்னது போலாயிற்று. அடுத்தடுத்த சொற்களை ஏன் சொன்னார்? 

பரமாத்மனை தியானம் செய்து நமஸ்காரங்களை செய்யவேண்டுமெனில், வஸ்து ஞானம் தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் இருப்பவனான பகவந்தனை தியானம் செய்வது என்றால் எப்படி? அதற்கு அந்த பரமாத்மனின் ஸ்வரூப ஞானம் அவசியம். ஸ்வரூப ஞானம் என்பது உபதேசம் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். எப்படியெனில்: ஒருவன் தான் எப்பொழுதும் கண்டிராத ஒரு பொருளைக் கண்டால், அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தானே அதனை தெரிந்து கொள்வது சாத்தியம் இல்லை. ஒரு பொருளை நாம் பார்த்திராவிடினும், அதன் லட்சணங்களை யாரேனும் நமக்கு உபதேசம் செய்திருந்தால், அத்தகைய பொருளை நாம் பார்த்தால், நாம் உபதேசம் பெற்ற பொருள் இதுவே என்று தெரிந்து கொள்ளலாம். 

உதாரணம்: பசுவைப் பார்த்திராத ஒரு குழந்தைக்கு பசுவைக் காட்டினால், அந்தக் குழந்தை அந்த பசுவின் வெள்ளை வண்ணத்தை வைத்தே அடையாளம் கொள்ளும். ஆகையால், பசுவைக் காட்டி சொல்வதைவிட, அதன் லட்சணங்களை நன்கு விளக்கிவிட்டால், அடுத்த முறை அந்தக் குழந்தை பசுவைப் பார்க்கும்போது தானே அடையாளம் கண்டுகொள்ளும். 

அதாவது: ‘சாஸ்னாதி மான் கௌ:’ - எந்த பசுவின் கழுத்தில் தோல் தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதுவே பசு என்று உபதேசம் செய்தால், இந்த லட்சணம் பசுவை விட்டு வேறு எந்த மிருகத்திற்கும் இருப்பதில்லை. ஆகையால் யாராக இருந்தாலும், இந்த அடையாளத்தினாலேயே பசுவை கண்டுகொள்ள முடியும். ஆகையால், எந்த லட்சணம் பரமாத்மனின் ஸ்வரூபத்தைக் காட்டுகிறதோ, பரமாத்மனைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாதோ, அத்தகைய லட்சணத்தை உபதேசம் செய்தால், இத்தகைய லட்சணங்கள் உள்ளவன் பரமாத்மன் மட்டுமே என்று நிச்சயமான ஞானத்தினால் அந்த பரமாத்மனைக் குறித்து உபாசனை செய்யமுடியும். ஆகவே இங்கு தாசராயர், ‘ஸ்ரீரமணி கரகமல பூஜித’ என்னும் வாக்கியத்தினால் ஸ்ரீபரமாத்மனின் லட்சணங்களை நமக்கு விளக்கியிருக்கிறார். 

பரமாத்மனின் லட்சணங்கள் என்று, தாசராயர் தனது கற்பனையில் வந்தவற்றை சொல்லவில்லை. ஸ்ரீவேதவியாசர் தமது பிரம்மசூத்திர பாகவதாதி கிரந்தங்களில், எந்த லட்சணங்களை, ‘ஜன்மாத்யஸ்யயத:’ என்னும் சூத்திரத்தினாலும், ‘ஜன்மாத்யஸ்ய யதோன்வயாத்’ என்னும் ஸ்லோகத்தினாலும் விளக்கியிருக்கிறாரோ, அத்தகைய லட்சணங்களையே இங்கும் சொல்லியிருக்கிறார். அதாவது: ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே கைவல்யதாயக’ என்கிறார். ’கேவலோ பகவான்விஷ்ணு: கைவல்யம் பரமம்பதம்’ - அதாவது அனாதி காலத்திலிருந்து முடிவில்லா காலம் வரைக்கும் பரமாத்மனே சுதந்திரமாக தான் மட்டுமே இருப்பதனால், ‘கேவலன்’ என்று அவனுக்கு பெயர் வந்தது. அவன் வசிக்கும் இடத்திற்கு கைவல்ய என்று பெயர். அதாவது அதுவே வைகுண்டம் என்று அறியவேண்டும். அப்படியே பிரளய காலத்திலும், பரமாத்மன் ஒருவனே தனியாக வசிப்பதால், பிரளயத்திற்கும் கைவல்ய என்றே பெயர் உண்டு. 

இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால், ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ என்னும் வாக்கியத்தினால், பிரம்மாண்டத்தின் படைப்பிற்கும், காத்தலுக்கும் மட்டுமே பகவந்தன் காரணன் என்று தெரிகிறது. ஆனால் பிரளயத்திற்கும் அவனே காரணன். ஆகையால், ‘கைவல்யதாயக’ என்னும் சொல்லினால், பிரளய காலத்திற்கும், முக்தியைக் கொடுப்பதற்கும் அவனே காரணன் என்று சொல்வதற்காக, கைவல்ய என்னும் ஒரு சொல்லே போதும் என்பதால், பிரளயம் மற்றும் முக்தியை தனித்தனியாக சொல்லாமல், தாசராயர், கைவல்யதாயக என்றே சொல்கிறார். ஆனால் நாம் கைவல்யதாயக என்னும் சொல்லை இரு முறை சொல்லி பொருள் கொள்ளவேண்டும் என்பது மறைபொருள். 

நீரஜபவாண்ட என்றால் பிரம்மாண்டம். அதன் உதயம் என்றால், படைத்தல், காத்தல். இதனுடன் நாசம் (பிரளயம்) மற்றும் நியமனம், ஞான, அஞ்ஞான, பந்த, மோக்‌ஷ என்னும் ஐந்தையும் சேர்த்துக் கொண்டு, படைத்தல் முதலான எட்டு வித வேலைகளையும் பரமாத்மாவினுடையதே என்று சொல்லவேண்டும். இப்படி எட்டு வித வேலைகளை ஏன் சொல்லவேண்டும் என்றால், ஸ்ரீமதாசார்யர், பிரம்மசூத்ர பாஷ்யத்தில் ‘உத்பத்தி ஸ்திதி சம்ஹாரானியதிர்ஞான மாவ்ருதி: | பந்த மோக்‌ஷௌச புருஷாத்யஸ்யாத் ஸஹரிரேகராட்’ என்று சொல்லியிருக்கிறார். 

இந்த ஆதாரத்தினாலேயே, அஷ்ட கர்த்ருத்வவும் பரமாத்மாவினுடையதே என்று சொல்லவேண்டும். ஆனால், தாசராயர், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஏன் எட்டு வேலைகளையும் சொல்லவில்லை என்றால், எப்போது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று முக்கியமான வேலைகளை சொன்னாரோ, இதர ஐந்து வேலைகளும் பரமாத்மாவினுடையதே என்று தானாக அறிந்து கொள்ளலாம் என்பதால் அவற்றை விட்டுவிட்டார். 

அப்படியெனில், ஸ்ரீமதாசார்யர் ஏன் எட்டினையும் தனித்தனியாக சொன்னார் என்றால், எந்தவொரு இடத்திலும் இவற்றை தெளிவாக சொல்லவில்லையெனில், அவற்றிற்கு வேறு யாரும் காரணம் என்ற நினைப்பு வந்துவிடுமோ என்ற எண்ணத்தில், தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால், இவற்றிற்கு பரமாத்மனே காரணம் என்று எந்த ஆதாரத்தில் சொல்லவேண்டும்? 

எந்தவொரு சித்தாந்தத்தையும் விளக்கவேண்டுமெனில், பிரத்யக்‌ஷம், அனுமானம், ஆகமம் - இம்மூன்றில் ஒன்றை சொல்லவேண்டும். இப்பொது இந்த உலகத்தை பிரத்யக்‌ஷமாக பார்க்கிறோம். இதை யாரோ ஒருவர் படைத்திருக்கவேண்டும் என்பது அனுமானம். தாய் தந்தையர் இல்லாமல் குழந்தைகள் வரமுடியாது என்றும், யாரேனும் கட்டாமல் கட்டிடம் வராது என்பதும் நம் அனுபவத்திலிருந்து தெரிய வருகிறது. ஒருவரைப் பார்த்தால் இவருக்கு ஒரு பெற்றோர் இருக்கவேண்டும் என்றும், ஒரு கட்டிடத்தைப் பார்த்தால், இதைக் கட்டியவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படியே, பிரத்யக்‌ஷமான இந்த உலகத்தைப் பார்த்தால், இதனை படைத்தவர் ஒருவர் இருக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும். இதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். பரமாத்மனே இந்த உலகத்தைப் படைத்து காத்து வருகிறான் என்பதற்கு வேதங்களையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். 

’யதோவா இமானிபூதானிஜாயந்தே | யோனஜாதானி ஜீவந்தியஸ்சயந்த்யபி சம்விஷந்தீதி ||’
’அஹம்சர்வஸ்ய பிரபவோ மத்தஸ்சர்வம் ப்ரவர்ததே | ஸ்ரஷ்டாபாதா ததைவாத்தா நிகிலஸ்யைக ஏவது ||’

மேற்கண்ட வேத வாக்கியங்களே தகுந்த ஆதாரங்களாகும். அப்படியெனில், இதே வேதங்களில், பிரம்மதேவரே படைப்பவர் என்றும், ருத்ரரே அழிப்பவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. இதில் எது உண்மை? எது பொய் என்றால், வேதங்களில் வெகுசில இடங்களில் மட்டுமே இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து வேதங்களும், ஸ்ரீமன் நாராயணனே படைத்தல் முதலான தொழில்களை செய்பவன் என்றும், வேதங்களால் புகழப்படுபவன் என்றும் சொல்கின்றன. ஓரிரு இடங்களில் பிரம்ம ருத்ரரைப் பற்றி சொல்பவை, அந்தப் பெயர்களினால் அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனையே சொல்கின்றனவே தவிர, பரமாத்மனின் நாபிக் கமலத்திலிருந்து பிறந்த பிரம்மதேவரையோ, அவரிடமிருந்து பிறந்த ருத்ரரையோ சொல்வதில்லை. இந்த விஷயத்திற்கும் வேதங்களில் ஆதாரம் உண்டு. 

’யோதேவானம் நாமதா ஏகஏவ’. பிரம்ம ருத்ரர் இந்திராதி அனைத்து தேவதைகளின் பெயர்களையும் தாங்கி, யார் அனைவருக்கும் தந்தையாகி இருக்கிறானோ, தாயாகி இருந்து அனைத்து உலகத்தையும் படைத்திருக்கிறானோ, அனைத்தையும் அழிப்பவனாகவும் இருக்கிறானோ, அத்தகையவனை நாம் வணங்குவோம். 

‘ருஜந்த்ராவயதே யஸ்மாத்ருத்ர ஐத்யபிஷப்த்யதே’. அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியவன் ஆகையால், பரமாத்மனுக்கே ருத்ரர் என்று பெயர். ’பிரம்மபூர்ணா வித்யஸ்மாத்தாதோ:’. அனைத்து நற்குணங்களையும் கொண்டவன் ஆகையால், பரமாத்மனுக்கே பிரம்மன் என்று பெயர். ’பிரம்ம விஷ்ண்வேஷரூபாணி த்ரீணி விஷ்ணோர்மஹாத்மன: பிரம்மணி பிரம்மரூபர்ஸ் சஷிரூபி ஷிவேஸ்மித:’ ஸ்ரீவிஷ்ணுவிற்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வர என்று மூன்று பெயர்கள் உண்டு. 

நான்முக பிரம்மதேவரிடம் பிரம்ம பெயர் கொண்ட பரமாத்மன் இருந்து, படைத்தலை செய்கிறான். ருத்ரர் என்னும் பெயர் கொண்ட பரமாத்மன், ருத்ரரிடம் இருந்து, சம்ஹாரத்தை செய்கிறான். ஆகையாலேயே, பிரம்மதேவர் படைக்கும் தொழிலை செய்கிறார் என்றும், ருத்ரர் சம்ஹாரத்தை செய்கிறார் என்றும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தகைய பற்பல ஆதாரங்களினால், பரமாத்மனையே வேதங்கள், பிரம்ம ருத்ரர் ஆகிய சொற்களினால் புகழ்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். 

அனைத்து பெயர்களாலும் அழைக்கப்படுபவனாகிய ஸ்ரீபரமாத்மன், நாராயணன் முதலான சில பெயர்களை மட்டும் தான் வைத்துக்கொண்டு, பிரம்ம, ருத்ரர் முதலான தன் பெயர்களையே பிற தேவதைகளுக்கு கொடுத்திருப்பதால், அவர்களுக்கு அத்தகைய பெயர்கள் வந்திருக்கின்றன என்று அறியவேண்டும். இந்த விஷயத்தை ஸ்ரீமதாசார்யர் பிரம்மசூத்திர பாஷ்யத்தில் மிகவும் விளக்கமாகக் கூறியிருக்கிறார். மேலும் ‘கைவல்யதாயக’ என்னும் காரணப் பெயர், மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய விஷ்ணு ஒருவருக்கு மட்டும் உண்டே தவிர வேறு எந்த தேவதைகளுக்கும் இல்லை. 

‘விஷ்ணுர்ஹிதாதாமோக்‌ஷஸ்ய வாயுஸ்தததனுக்ஞயா’ அதாவது வழியைக் காட்டுபவன் ஒருவனே. விஷ்ணுவின் அனுமதியைப் பெற்று வாயுதேவர் கொடுக்கிறார் என்னும் ஆதாரத்தினால், பரமாத்மனே சர்வோத்தமன் என்றும், ஜகத் ஜன்மாதி காரியங்களை செய்பவன் என்றும், தாசராயர் கூறுகிறார். ‘பிரம்மசமீரவாணி பணீந்திரவீந்திர பவேந்திரமுகவினுத’ - பிரம்மன் முதலான அனைத்து தேவதைகளினால் வணங்கப்படுபவன் என்று சொல்வதாலும், ஸ்ரீவிஷ்ணுவின் சர்வோத்தமத்வத்தை நிர்ணயிக்கிறார். 

பாகவதத்தில் 12ம் ஸ்கந்தத்தில் வரும் - ‘யம் பிரம்மாவருணேந்திர ருத்ரமருத: ஸ்துன்வந்தி திவ்யைஸ்தவை:’ என்னும் வாக்கியம் இதற்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இரண்டாம் ஸ்கந்தத்தில், பிரம்மதேவர் தனது மகனான நாரதருக்கு உபதேசம் செய்யும் நேரத்தில் இவ்வாறு சொல்கிறார். ‘ஸ்ருஜாமி தன்னியுக்தோஹம் ஹரோஹரதி தத்வஷ: | விஷ்வம்புருஷரூபேண பரிபாதி த்ரிஷக்திபுக்’. நான் அந்த பரமாத்மனின் அதீனத்தில் இருந்து படைத்தல் தொழிலை செய்கிறேன். ருத்ரர் அவனின் அதீனத்தில் இருந்து அழிக்கின்றான். புருஷ ரூபத்தில் இருந்து விஷ்ணுவே அனைத்தையும் காக்கிறான். இப்படியாக, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வித வேலைகளும் பரமாத்மனுடையதே ஆகும். அதாவது, என்னுள் இருந்து படைப்பவனும், ருத்ரரின் உள் இருந்து அழிப்பவனும், அவனே. ஆகையால் இந்த மூன்று வேலையும் பரமாத்மனுடையதே என்று அறி. 

நாஹம், நயூயம்பததத்கதிம் விதுர்னவாமதேவ: கிமுதாபரேசுரா: |
யன்மாயயா மோஹித புத்தயஸ்விதம் வினிர்மிதம் ஸ்வாத்மசமம் விசக்‌ஷ்மஹே ||

நான் அந்த பகவத் ரூபத்தை முழுமையாக அறிய முடியாது. உன்னாலும் முடியாது. வாமதேவன் என்றால் ருத்ரதேவரால் அவரை அறிய முடியாது. இப்படிப்பவர்களாலே முடியவில்லை என்றால், மற்ற தேவதைகளைப் பற்றி என்ன சொல்ல? அவனின் சக்தியில் கட்டுப்பட்டு, அவனால் உருவாக்கப்பட்ட இந்த உலகத்தை அவனுக்கு சமமாகவே நினைக்கிறோம். அல்லது இதை உருவாக்கிய பகவந்தனை ‘ஸ்வாத்மசமம் விசக்‌ஷ்மஹே’. நம் தகுதிக்கேற்பவே அறிந்து கொள்கிறோம். இப்படியாக பிரம்மன் தனது மகனான நாரதருக்கு உபதேசம் செய்திருப்பதால், இந்த வசனமே, பரமாத்மன் பிரம்மாதி அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும். 

மேலும் இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் உதாரணமாகக் காட்டுகிறார் தாசராயர். ‘ஸ்ரீரமணி கரமகல பூஜித சாருசரண சரோஜ’. இந்த வாக்கியம் லட்சுமிவல்லபனைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. தன் மனைவியான லட்சுமிதேவியின் மூலமாக பூஜிக்கப்படும் அழகான பாதங்களைக் கொண்டவன் என்று சொல்வது, பிரம்மாதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவன் என்பதையும் சொல்கிறது. எப்படியெனில், அம்ப்ரிணி சூக்தத்தில் இருக்கும் லட்சுமிதேவியின் வாக்கியம். ‘யம் காமயேதம் தமுக்ரம் க்ருணோமிதம் பிரம்மாணம் தம்ரிஷிம் தம்சுமேதாம்’. அதாவது யாரை ருத்ரராக நியமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அவரை ருத்ரராக நியமிக்கிறேன். யாரை பிரம்மனாக நியமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அவரை பிரம்மனாக நியமிக்கிறேன். 

இப்படியாக லட்சுமிதேவி, பிரம்மருத்ரர்களை நியமிக்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்று சொல்லி இறுதியில், ‘மமயோனி ரப்ஸ்வா அந்தஸ்சமுத்ரே’ இப்படிப்பட்ட எனக்கு தலைவனானவன், சர்வாந்தர்யாமியான, பாற்கடலில் படுத்திருக்கும் ஸ்ரீபரமாத்மனே. அத்தகையவனின் அருளினாலேயே எனக்கு இந்த சக்தி உண்டாயிற்று என்று சொல்லியிருப்பார். இப்படி, பிரம்ம ருத்ரர்களை படைக்கும் ஆற்றல் கொண்ட ரமாதேவியால் பூஜை செய்யப்படும் பாதங்களைக் கொண்டவன் என்று சொன்னபிறகு ஹரி சர்வோத்தமன் என்று சொல்லும் விஷயத்திற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?

இத்தகைய நற்குணங்களைக் கொண்டவனான, தோஷங்கள் அற்றவனான ஸ்ரீமன் நாராயணனே ! நான் உன்னை வணங்குகிறேன். எனக்கு மங்களத்தை அளிப்பாயாக என்பதே இந்த ஸ்லோகத்தின் சாரம் ஆகும். 

‘ஜன்மாத்யஸ்ய யதோன்வயாதிதரத:’ என்னும் பாகவதத்தின் மங்களாசரண ஸ்லோகத்தில் எந்த அர்த்தத்தை சொல்லியிருப்பாரோ, அதே அர்த்தத்தையே மேலும் விளக்குமாறு பாகவத தாத்பர்ய நிர்ணயத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பார். 

ஸ்ருஷ்டிஸ்தித்யப்யயே ஹானியதித்தஷிதமோ பந்தமோக்‌ஷாஸ்ச யஸ்மா
தஸ்ய ஸ்ரீபிரம்மருத்ர பிரப்ருதிசுரநரத்தீஷ ஷத்வாத்மகஸ்ய |
விஷ்ணோர்யஸ்தா: சமஸ்தா: சகலகுணநிதி: சர்வதோஷவ்யபேத:
பூர்ணானந்தோவவ்யயோ யோ குருரபி பரமஸ்சிந்தயே தம் மஹாந்தம் ||

பொருள்:
பிரம்ம, ருத்ர முதலான தேவதைகள், மனிதர்கள், தைத்யர்கள் மற்றும் அசையும், அசையாப் பொருட்களைக் கொண்ட இந்த உலகத்தை, எந்த இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், ஞானம், அஞ்ஞானம், பந்தம், மோட்சம் ஆகிய அனைத்தையும் அவரவர்களின் தகுதிக்கேற்ப கொடுக்கிறானோ, யார் அனைத்து குணங்களின் நிதியாகி இருக்கிறானோ, எந்தவித தோஷங்களும் அற்றவனோ, ஜகத்குருவாக இருக்கிறானோ, சர்வோத்தமனோ அத்தகைய மகானை நான் வணங்குகிறேன். 

இதே பொருளையே ஒரு வரியும் விடாமல், ஸ்ரீமதாசார்யரின் சொல்லிற்கு உரையைப் போல, தாசராயர் தனது மங்களாசரண ஸ்லோகத்தில் எழுதியிருக்கிறார். 

’ஸ்ரீரமணி கரகமல பூஜித’ என்னும் வாக்கியத்தின் பொருளை உணர்ந்தால், மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள் அப்படியே வந்திருப்பதை உணரலாம். மேலும் இந்த ஸ்லோகத்தின் பொருளையும், சொற்களின் பொருளையும் விளக்கிக் கொண்டே போனால், இந்த கிரந்தம் மேலும் நீளமாகிவிடும் என்னும் காரணத்தினால், நாம் மேலும் எழுதவில்லை. 

காயத்ரி வேதங்களின் தாய் என்று கருதப்படுகிறாள். இந்த வேதாந்தங்களின் பொருள் அனைத்தும் இந்த கிரந்தத்திலேயே இருக்கிறது என்று சொல்வதற்காக இந்த ஸ்லோகத்தில் காயத்ரியின் பொருளும் இருப்பதை பார்க்கலாம். அதாவது - ‘தத்சவிதுர் வரேண்யம் ! பர்கோ தேவஸ்ய தீமஹி ! தியோயோன: ப்ரசோதயாத்’. இதன் பொருள். 

ய: - யார். 
ந: - நமக்கு. 
திய: - அறிவை. 
ப்ரசோதயாத் - கொடுக்கிறானோ. 
தஸ்ய - அப்படிப்பட்ட. 
தேவஸ்ய - படைத்தல் முதலான தொழிலை விளையாட்டாக (எந்தவித ஆயாசமும் இல்லாமல்) செய்பவன். 
சவிது: - படைப்பவனான சூரிய நாமகனான ஸ்ரீமன் நாராயணன் 
வரேண்யம் - பிரம்மாதி அனைத்து தேவதைகளால் வணங்கப்படுபவனான. 
பர்க: - ஒளியின் ரூபமான 
வபு: - உடலை
தீமஹி - வணங்குகிறேன்

இதுவே காயத்ரியின் பொருள். இதையே தாசராயர் முதல் ஸ்லோகத்தில் விளக்கியிருப்பார். அதாவது, ‘தியோயோன: பிரசோதயாத்’ என்பதற்கு நிகராக ‘கருணிபுதெமகெ மங்களவ’ என்று சொல்லலாம். எந்த பரமாத்மன் நமக்கு நல்லறிவைக் கொடுத்து, அந்த வேலைகளை செய்வித்து, அதற்கான பலன்களையும் கொடுக்கிறானோ, அத்தகைய பரமாத்மன் நமக்கு மங்களத்தை தரட்டும் என்று கேட்கிறார் என்பதை அறியவேண்டும். (யார் நமக்கு புத்தியைக் கொடுக்கிறானோ, அவனை வணங்குகிறேன். எனக்கு மங்களத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவனையே வேண்டுகிறேன்). 

தேவஸ்ய சவிது: என்னும் சொற்களுக்கு படைத்தல் முதலான தொழிலை செய்பவன் என்று பொருள். இதற்கு சமமாக ‘நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே’ எனலாம். வரேண்யம் என்றால் அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன் என்று பொருள். இதற்கு சமமாக - ’பிரம்ம சமீரவாணி பணீந்திர வீந்திர பவேந்திர முகவினுத’ எனலாம். பர்க: என்றால் கஷ்டங்களைப் போக்குபவன், ஒளிமயமானவன் என்று பொருள். இதற்கு சமமாக - ’நாரசிம்மனே’ எனலாம். அஞ்ஞானத்தை விலக்கும் விஷயத்தில் சிம்மத்தைப் போலிருப்பவன். அல்லது நாரனாக (தோஷங்கள் இல்லாதவன்), முக்தர்களின் நடுவில் அவர்களுக்கு தலைவனாக, ஒளிமயமாக இருப்பவன் என்று பொருள். 

தீமஹி என்னும் சொல்லிற்கு, பிரம்மசூத்திரத்தில் இருக்கும் ‘அதாதோ பிரம்மஜிக்ஞாஸா ! ஜன்மாத்யஸ்யயத: ! சாஸ்திரயோனித்வாத் ! தத்து சமன்வயாத்’ என்னும் நான்கு சூத்திரார்த்தங்களை இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். ஆக, பாகவத, பாரத, நிர்ணயாதி கிரந்தங்களும் இதில் அடங்கியிருக்கின்றன என்று உணரலாம். இந்த ஸ்லோகத்தை ‘சந்தி சூசனை’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது, இந்த சந்தியில் எதை விளக்குகிறேனோ, அதன் பொருளையே இந்த ஸ்லோகத்தில் அடக்கியிருக்கிறேன் என்கிறார். 

மத்வ மதத்தினர் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இந்த சந்தியில் அடக்கியிருக்கிறார். அது என்னவென்றால் - ‘ஸ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர: சத்யம் ஜகத்தத்வதோ பேதா ஜீவகணா: ஹரேரனுசரா: நீசோச்ச பாவம் கதா: ! முக்திர்னைவ சுகானுபூதிரமலாம் பக்திஸ்ச தத்சாதனம் ஹ்யக்‌ஷாதி த்ரிதயம் பிரமாணமகிலம் நாயைக வேத்யோ ஹரி:’ 

இதன் பொருள்:
ஸ்ரீமன் மத்வ மதத்தில், ஹரியே சர்வோத்தமன். ஜகத் சத்தியம் (உண்மை). ஜீவகணர்களில் பேதம் உள்ளது. அவர்கள் பரமாத்மனின் கிங்கரர்கள் (அதீனர்கள்). தாரதம்யத்தில் இருப்பவர்கள். ஸ்வரூபானந்தத்தைக் காண்பதே முக்தி. திடமான பக்தியே முக்திக்கு சாதனம். பிரத்யட்சம், ஆகமம், அனுமானம் என்பவை மூன்று ஆதாரங்கள். இந்த விஷயங்களையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார். நாரசிம்ஹனே என்னும் பதத்தினால் ‘ஹரி’ சர்வோத்தமன் என்பதை நிரூபித்திருக்கிறார். ‘நாரசிம்ஹ’ என்னும் சொல்லின் வியாக்யானத்தால் இந்த அர்த்தங்கள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். 

பிரளய காலத்திலும்கூட முக்தர்கள் இருப்பதால், அப்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பவன் பரமாத்மனே. ஆக, பரமாத்மனும், முக்த பிரம்மாதிகளும் அனாதி காலத்திலும் இருப்பதால் ‘ஜகத் மித்யா’ என்று சொல்வதற்கில்லை. ஆகையால், ஜகத் சத்யம் என்று அறியவேண்டியிருக்கிறது. பிரம்மாதி ஜீவகணங்களால் கூடிய, சேதன அசேதனர்களால் நிரம்பிய இந்த உலகம் உண்மையானது என்னும் விஷயத்தில், நாரசிம்ஹ என்னும் சொல்லினால், முக்தியில் ஆதரவு கொடுப்பவன் என்னும் குணங்களை குறிப்பதாலும், பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவன் என்று சொல்வதாலும், ஜகத் சத்யம் என்று சொல்ல வேண்டும். 

பிரபஞ்சம் பஞ்ச பேதாத்மகம் என்பதை ஸ்ரீரமணிகரகமலபூஜித, பிரம்ம சமீர வாணி இத்யாதி வர்ணனைகளால், லட்சுமி பிரம்மாதி ஜீவராசிகளுக்கும் பரமாத்மனுக்கும் பேதம் இருக்கிறது என்று சொல்லியாயிற்று. அரசன் மற்றும் அரசனின் கீழ் இருப்பவர்களுக்கு எப்படி பேதம் இருக்கிறதோ, அப்படியே ஸ்வாதந்த்ர - அஸ்வாதந்த்ர பேதங்களால், ஜீவ பரமாத்மனுக்கு நடுவில் பேதம் இருக்கிறது என்று அறியவேண்டும். பிரம்ம, சமீரவாணி என்று சொல்லி, லட்சுமி, பிரம்ம, வாயு என்னும் இவர்களிடமும், அதாவது ஜீவ ஜீவர்களுக்கு இடையே பேதம் இருக்கிறது என்றும் சொல்லியாயிற்று. 

நீரஜபவாண்டோதய ஸ்திதி காரணனே என்று சொல்லி, பிரம்மாண்டாதி ஜடங்களுக்கும், பரமாத்மனுக்கும் பேதம் இருக்கிறது என்று சொல்கிறார். பானைக்கும் பானை செய்பவருக்கும் எப்படி பேதம் இருக்கிறதோ, அப்படியே பரமாத்மனிடமிருந்து ஸ்ருஷ்டியான பிரம்மாண்டத்திற்கும் பரமாத்மனுக்கும் பேதம் உள்ளது. பிரம்மாண்டாதி ஜடங்களுக்கும் பிரம்மாதி ஜீவராசிகளுக்கும் பேதம் இருக்கிறது என்று மேற்சொன்ன விஷயங்களிலிருந்தே அறியலாம். பிரம்ம, சமீரவாணி முதலான வாக்கியங்களால் பிரம்ம, வாயு ஆகியோரின் ஜடதேகங்களுக்கும் பரஸ்பரம் பேதம் இருக்கிறது. 

இப்படியாக : 1. ஜீவ பரமாத்ம பேத. 2. ஜீவ ஜீவ பேத. 3. ஜீவ ஜட பேத. 4. ஜட பரமாத்ம பேத. 5. ஜட ஜட பேத. என்னும் ஐந்து பேதங்களை முக்கியமாக அறியவேண்டும் என்று சொல்கிறார். மேலே சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளிலேயே அதாவது: ஸ்ரீரமணி, பிரம்ம, சமீர, ஆகிய சொற்களால் ரமா பிரம்மாதிகள் அனைவரும் பரமாத்மனின் கிங்கரர்கள் என்று அறியலாம். மற்றும் இதிலிருந்தே ’பவேந்திரமுகவினுத’ என்னும் சொல்லால் ரமா, பிரம்மாவிலிருந்து இந்திரன் வரை தாரதம்யத்தை சொல்லி, ‘இந்திரமுகவினுத’ - ‘முக’ என்று சொல்லி, மனுஷ்யோத்தமர்கள் வரை தாரதம்யத்தை சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். இப்படியான தாரதம்யத்தை தெளிவாக அறிந்துகொள்வதால், தூய்மையான பக்தி உண்டாகிறது. {இதை நிறுவும் பிரத்யட்சம் முதலான ஆதாரங்கள், இந்த பத்யத்தின் துவக்கத்திலேயே விளக்கப்பட்டுள்ளது). 

ஆகையால், ஸ்வரூபானந்தத்தைக் கொடுப்பவனான என்பதை கைவல்யத்தைக் கொடுப்பவனான (கைவல்ய தாயக) என்று சொல்லலாம். ஸ்வரூபானந்தத்தைக் கொடுப்பவன் என்பதை மங்களத்தைக் கொடுப்பவன் என்னும் சொல் விளக்குகிறது. இப்படி, முதல் பத்யத்திலேயே சந்தியின் நோக்கத்தை முழுமையாக காட்டியிருக்கிறார் தாசர் என்பதை அறியலாம். 

இப்படியாக, சாட்சாத், ஜகதீஷ்வரனான ஸ்ரீபரமாத்மனுக்கு முதல் பத்யத்திலிருந்து, மங்கள ரூபமான நமஸ்காரத்தை செய்து, பிறகு பாக்யத்தைக் கொடுக்கக்கூடிய ரமாதேவியரை வணங்கியிருக்கிறார். ‘ஸ்ரீரமணிகரகமல பூஜித’ என்னும் பத்யத்தில், லட்சுமிதேவியரால் வணங்கப்படுபவனான பரமாத்மனை தானும் வணங்கியிருக்கிறார். ஆகையால், லட்சுமிதேவியருக்கு தனியாக நமஸ்காரத்தை செய்யாமல் ‘ஸலஹலி’ (காப்பாற்றட்டும்) என்று மட்டும் சொல்லியிருக்கிறார். 

லட்சுமி நரசிம்மன் என்று ஏன் சேர்த்து வணங்கவேண்டும்? லட்சுமிதேவிக்கு தனியாக ஏன் நமஸ்காரம் செய்யவில்லை என்றால், லட்சுமிதேவியை விட்டு, பரமாத்மனுக்கு தனியாக பூஜை முதலானவைகளை செய்தால், அதை பரமாத்மன் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், பரமாத்மனை விட்டு லட்சுமிதேவிக்கு பூஜைகளை செய்தால், அதை அவள் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், பாகவதம் மற்றும் ஹரிவம்சங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஹரிவம்சத்தில் ‘ஆஸ்சர்யோபாக்யானம்’ என்னும் இதிகாசம் உண்டு. அதை நிர்ணயத்தின் 20வது அத்யாயத்தில் 33 முதல் 77 வரையிலான ஸ்லோகங்களில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருப்பார். அதன் விஷயம் என்னவென்றால்:

ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் வசித்திருந்தபோது, அதன் அழகினைக் கண்டு மகிழவேண்டும் என்று பல தேசங்களிலிருந்து பல அரசர்கள் அங்கு வந்தனர். அவர்களில் பாண்டவர்கள், கௌவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீகிருஷ்ணன், ரைவத பர்வதத்திற்கு அழைத்து வந்து, தகுந்த உபசாரங்களை செய்து, அவர்களுடன் பேசியவாறு அமர்ந்திருந்தான். அப்போது அந்தரிக்‌ஷத்திலிருந்து இறங்கி வந்து, நாரதர், ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, ‘நீ ஆச்சரியன். தன்யன்’ என்று கூறினார். ‘நீயே சர்வோத்தமன். உனக்கு சமமானவர்கள் யாரும் இல்லை’ என்பதே இதன் பொருள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘தக்‌ஷிணாபிஸ்ஸாகம்’ என்று பதிலளித்தான். நாரதர் அதனை ஆமோதித்தார். 

இதற்கு என்ன பொருள் என்று அங்கிருந்த அரசர்கள் புரியாமல் முழிக்க, அவர்களுக்கு அதை விளக்கவும் என்று நாரதரிடம் ஸ்ரீகிருஷ்ணன் கேட்டுக்கொண்டான். அப்போது நாரதர் ‘அரசர்களே கேளுங்கள். ஒரு நாள் நான் கங்கை நதியில், மலை போன்ற ஒரு பெரிய ஆமையைக் கண்டேன். அதைக் கண்டு வியப்படைந்தேன். அதனிடம் ‘நீ மிகவும் ஆச்சரியமான பிராணி. நீயே தன்யன்’ என்றேன். அதற்கு அந்த ஆமை ‘ஹே நாரதரே. அல்பனான என்னை எப்படி வர்ணித்தீர்? இந்த கங்கையைப் பார். என்னை போன்ற எவ்வளவு பிராணிகளைக் கொண்டிருக்கிறது. அவளுக்கு முன் நான் எவ்வளவு சிறியவன்’ என்று சொன்னது. அப்போது நான் கங்கையை வணங்கி ‘நீ மிகவும் ஆச்சரிய ஸ்வரூபள். நீயே தன்யள்’ என்றேன். அதற்கு கங்கையானவள் ‘என்னைப் போல பல நதிகளைக் தன்னுள் அடக்கியிருக்கும் கடல் எவ்வளவு பெரியது?. அதற்கு முன் நான் மிகவும் சிறியவள்’ என்றாள். 

நான் அங்கிருந்து புறப்பட்டு நேராக வருணனிடம் சென்று ‘ஆச்சரியன், தன்யன்’ என்றேன். அப்போது வருணன், தன்னைப் போன்ற பல கடல்களை தன்னுள் அடக்கியிருக்கும் பூமியைக் காட்டினான். பின், பூமி ஸ்வரூபளான உமாதேவியை வணங்கினேன். ‘என்னை ஒரு பாய் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன பர்வதங்கள்’ என்றாள். பர்வதா அபிமானிகளான கருட, சேஷ, ருத்ர தேவதைகளைக் கண்டு ‘நீங்கள் ஆச்சரிய ஸ்வரூபர்கள். தன்யர்’ என்றேன். அதற்கு அவர்களோ ‘ நம்மைப் போல பல பர்வதங்களைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டம் இருக்கும்போது நம்மை ஏன் புகழ்கிறீர்கள்?’ என்றனர். ஆகவே நான், பிரம்மாண்டத்தையே தேகமாகக் கொண்டிருக்கும் பிரம்மதேவரே உத்தமர் என்று அறிந்து, அவரை வணங்கினேன். அவரோ, வேதங்களே உத்தமமானவை என்று கூறினார். ஆகவே, வேதரூபமான லட்சுமிதேவியை வணங்கினேன். அவளோ யக்ஞத்தை போற்றினாள். 

யக்ஞரூபியான ஸ்ரீமன் நாராயணனே, ஸ்ரீகிருஷ்ணரூபியாக அவதரித்திருக்கிறான். அவனிடம் சென்றால் என் பிரச்னை தீரும் என்று நினைத்து நான் இங்கு வந்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி ‘நீ ஆச்சர்ய ஸ்வரூபன். நீயே தன்யன்’ என்றேன். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘தக்‌ஷிணாபிஸ்ஸாகம்’ என்று பதிலளித்தார். இங்கு என் பிரச்னை தீர்ந்தது. இதன் பொருள் என்னவென்றால், யக்ஞத்தையே பெரியது என்று நினைத்தால், தக்‌ஷிணையுடன் கூடிய யக்ஞமே பெரியதாகும். யக்ஞம் என்றால் பரமாத்மன். அவனே ஸ்ரீகிருஷ்ணன். அந்த ஸ்ரீகிருஷ்ணன் சொன்னது ‘தக்‌ஷிணைகளால் கூடிய நான் தன்யன்’. தக்‌ஷிணை என்றால் ஸ்ரீலட்சுமிதேவியின் பெயர். அது எப்படி என்றால் (மகாபாரத தாத்பர்ய நிர்ணய அத்தியாயம் 20) :

சர்வோத்தம: கிண்டுயதாது ஸாமே வாமார்த்தரூபா தக்‌ஷிணா நாமதேயா |
யஸ்மாத்தஸ்யா: தக்‌ஷிணத: ஸ்திதோஹம் தஸ்மான்னாம்னா தக்‌ஷிணேத்யேவ ஸாஸ்யாத் ||73

இதன் பொருள் என்னவெனில்: நான் எப்போதும் உத்தமனே ஆனாலும், ஸ்ரீலட்சுமிதேவி எப்போதும் என் இடது பக்கத்தில் பாதி சரீரத்தைக் கொண்டு, எனது பாதி உடலாகவே காட்டிக்கொள்கிறாள். அவள் என் தக்‌ஷிண பாகத்தில் (எப்போதும் வலது பக்கத்தில் இருப்பதால், அவளுக்கு தக்‌ஷிணா என்றும் பெயர் உண்டு. அவள் என் உடலில் பாதியை எடுத்துக் கொண்டிருப்பதால், அவளுக்கு அர்த்த நாராயணி என்றும் பெயர் உண்டு) எப்போதும் இருக்கிறாள் என்று பரமாத்மா சொல்கிறார். ஆகையால், தான் எப்போதும் லட்சுமிதேவியுடனேயே பூஜையை ஏற்றுக்கொள்பவன் என்று சொல்கிறான். 

’‘தக்‌ஷிணாபிஸ்ஸாகம்’ தக்‌ஷிணைகளால் என்று பன்மை எதற்கு? அதாவது, அவதார ரூபங்களை, மூல ரூபங்களை வணங்குவதற்காக, லட்சுமிதேவி பல ரூபங்களை தரித்திருக்கிறாள்’ என்று நாரதர் கூறினார். பிறகு, அங்கிருந்த அனைவரும் ருக்மிணி சமேத ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினர் என்று நிர்ணயாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, லட்சுமி சமேதனான பரமாத்மனையே பூஜிக்க வேண்டும் என்ற் விதியின்படி, தாசர் லட்சுமி சமேதனான பரமாத்மனை முதலாம் பத்யத்தில், பாக்யத்தைக் கொடுப்பவளான ரமாதேவியிடம், தமது இஷ்டார்த்த சித்திகளைக் கொடுக்குமாறு வேண்டுகிறார்.