#16 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
தலெயொளிஹ நாராயணனு க3
ண்ட1லடி3 ஒட3லொளு வாசுதேவனு
ப3லத3லிஹ ப்ரத்3யும்ன எட3பா4க தொளக3னிருத்த4 |
கெ1ளகினங்கதி3 சங்கருஷணன
திளிது3 ஈபரி ஸகலதேஹக3
ளொளகெ3 பஞ்சாத்மக1ன ரூபவ நோடு3 கொண்டாடு ||16
தலெயொளு நாராயணனு = தலையில் நாராயணன் இருக்கிறான்
கண்டலெடெ = கழுத்தின் கீழ்
ஒடலொளு = வயிற்றில்
வாசுதேவன்,
பலதலி = உடம்பின் வலது பாகத்தில்
இஹ பிரத்யும்ன = பிரத்யும்னன் இருக்கிறான்
எடபாக = உடம்பின் இடது பாகத்தில்
அனிருத்த = அனிருத்தன் இருக்கிறான்
கெளகினந்ததி = கால் முதலான உடம்பின் கீழ் பாகங்களில்
சங்கர்ஷணன = சங்கர்ஷணன் இருக்கிறான்
திளிது ஈபரி = இப்படியாக அறிந்து
சகலதேஹகளொளகெ = உடம்பின் அனைத்து பாகங்களிலும்
பஞ்சாத்மகன ரூபவ = நாராயண வாசுதேவாதி 5 வ்யூஹ ரூபங்களை
நோடு = சிந்தித்து
கொண்டாடு = ஸ்தோத்திரம் செய்
16,17 இந்த இரு பத்யங்களிலும் நம் சரீரத்தில், நாராயணாதி பஞ்சரூபங்களை சிந்திக்கும் விதங்களையும், அதன் பலன்களையும் விளக்குகிறார்.
தலையில் நாராயணன், கழுத்திலிருந்து வயிறு வரைக்குமான உடம்பில் வாசுதேவன், வலது பாகத்தில் பிரத்யும்னன், இடது பாகத்தில் அனிருத்தன், வயிற்றின் கீழ் பாகத்தில் சங்கர்ஷணன், என நம் சரீரத்தில் பஞ்சாத்மகனான ஸ்ரீபரமாத்மன், நாராயணாதி 5 ரூபங்களில் வசிக்கிறான் என்று அறிந்து, சிந்தித்து, ஸ்தோத்திரம் செய்யவேண்டும்.
***
No comments:
Post a Comment