#38 - விபூதி சந்தி
ஏனு மாடு3வ க1ர்மக3ள லகு1
மி நிவாஸனி க3ர்ப்பிஸ னுஸ
ந்தா3ன பூர்வக1தி3ந்த3 ஸந்தே3ஹிஸதெ3 தி3னதி3னதி3 |
மானநிதி4 கை1கொ1ண்டு3 சுக2வி
த்தா3னத3ர ஸந்தெய்ப த்1ருணஜல
தே4னு தானுண்ட3னவரத1 பால்க3ரெவ தெ1ரனந்தெ1 ||38
ஏனுமாடுவ = எப்படியாவது செய்யும்
கர்மகளு = புண்யபாவ கர்மங்களை
லகுமி நிவாஸனிகெ = ஸ்ரீனிவாசனுக்கு
அனுசந்தான பூர்வகதிந்த = கர்மங்களை பரமாத்மனே செய்விக்கிறான் என்னும் சிந்தனையுடன்
ஸந்தேஹிஸதெ = எவ்வித சந்தேகமும் படாமல்
தினதினதி = தினந்தோறும்
அர்ப்பிஸெ = அர்ப்பித்தால்
மானநிதி = மானமே நிதியாக உள்ள ஸ்ரீஹரி
கைகொண்டு = ஏற்றுக்கொண்டு
சுகவித்து = சுகங்களைக் கொடுத்து
ஆனதர = பக்தனை
தேனு = பசு
த்ருணஜலதானுண்டு = புல்லைத் தின்று, நீரைக் குடித்து
அனவரத = எப்போதும் நிலைத்திருப்பவன்
பால்கரெவ = பாலைக் கொடுக்கும்
தெரதந்தெ = இதே போல
ஸந்தெயிப = மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்.
பாவ புண்ணிய காரியங்களை சந்தேகமில்லாமல் பரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும் என்கிறார் தாசராயர். நாம் தினந்தோறும் எந்த புண்ணிய, பாவ செயல்களை செய்தாலும், ‘நாஹம் கர்த்தா ஹரி:கர்த்தா’ என்ற சிந்தனையுடன், இந்த செயல்களை செய்தது நான் அல்ல, பரமாத்மன் செய்வித்திருக்கிறான் அதையே நான் செய்தேன் என்று நினைத்து, பாவங்களை நாம் பகவந்தனுக்கு சமர்ப்பித்தால் நமக்கு பாவம் வந்துவிடுமோ என்கிற சந்தேகம் இல்லாமல் அனைத்தையும் அவனுக்கு அர்ப்பித்தால், ஸ்ரீபரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு, பாவங்களை சுட்டு, பசு எப்படி புல்லைத் தின்று, நீரைக் குடித்து, பாலைக் கொடுக்கிறதோ, அப்படியே புண்யகர்மங்களின் பலன்களை அதிகப்படுத்தி, சுகங்களைக் கொடுத்து, நமக்கு அருள்வான்.
***
No comments:
Post a Comment