ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, August 31, 2020

26 - அவரோகண தாரதம்ய சந்தி

 

பாவபிரகாசிகை : சந்தி 26 : அவரோஹண தாரதம்ய சந்தி

/ அவரோஹண அனுக்ரமணிகா சந்தி

 

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

குறிப்பு:

 

தாரதம்ய விஷயத்தை முன்னர் ப்ருஹத் தாரதம்ய சந்தியிலும், குண தாரதம்ய சந்தியிலும் விவரமாக விளக்கியிருப்பதால், இந்த சந்தியில் பதத்திற்கான பொருள் மட்டும் விளக்கப்பட்டிருக்கிறது.

 

ஸந்தி ஸூசனை:

 

ஸ்ரீரமண நிஜப4க்தரெனிஸுவ

வாரிஜாஸன முக்2யனிர்ஜர

தாரதம்யவபேள்வ சம்க்‌ஷேபத3லி கு3ருப4லதி3 ||

 

பொருள்:

 

லட்சுமிபதியான ஸ்ரீபத்பனாபனின் நிஜ பக்தனான பிரம்மதேவரே முதலான தேவதைகளின் தாரதம்யத்தை, குருகிருபா கடாக்‌ஷத்தினால் சுருக்கமாக சொல்கிறேன் என்று இந்த சந்தியின் அபிப்பிராயத்தை தெரிவிக்கிறார்.

 

கேஷவகெ3 நாராயணிகெ3 கம

லாமீரணகெ3 வாணி

வீஷ ப2ணிப மஹேஷரிகெ3 ஷண்மஹிஷியர பத3கெ |

ஸேஷ ருத்3ரர பத்னியரிகெ3 ஸு

வாஸவ ப்ரத்4யும்னரிகெ3

ந்தோஷத3லி வந்திஸுவெ ப4க்திஞான கொட3லெந்து3 ||1

 

ஸ்ரீமன் நாராயணனுக்கும், அவனின் மனைவியான லட்சுமிதேவிக்கும், பிரம்ம வாயுகளுக்கும், சரஸ்வதி பாரதியருக்கும், கருட, சேஷ, ருத்ர, கிருஷ்ணனின் ஷண்மஹிஷியருக்கும், இவர்கள் அனைவரின் பாத கமலங்களுக்கும், சௌபர்ணி, வாருணி பார்வதியருக்கும், இந்திர காமனுக்கும், பக்தி ஞானத்தை வழங்குமாறு மகிழ்ச்சியுடன் வணங்குவேன்.

 

ப்ராணதே3வகெ3 நமிபெ காமன

ஸூனு மனு கு3ரு த3க்‌ஷ ஷசி ரதி

மானினியரிகெ3 ப்ரவஹதேவகெ3 ஸூர்ய ஸோம யம |

மானவிகெ3 வருணனிகெ3 வீணா

பாணி நாரத3முனிகெ3 நமிஸுவெ

ஞான ப4க்தி விரக்தி மார்க3வ திளிலெனகெ3ந்து3 ||2

 

அஹங்காரிக பிராணரை வணங்குவேன். மன்மதனின் புதல்வன் அனிருத்த, மனு, குரு, தக்‌ஷ, சசி, ரதி - இவர்கள் ஆறு பேருக்கும், ப்ரவஹ வாயுவிற்கு, சூர்ய, சந்திர, யம, ஷதரூபா - இவர்கள் நால்வருக்கும், வருணனுக்கு, நாரதருக்கும், ஞான பக்தி விரக்தி ஆகியவற்றை பெறும் வழியினை எனக்கு தெரிவிக்குமாறு வணங்குவேன்.

 

அனல ப்4ருகு3 தா3க்‌ஷாயணியரிகெ3

கனகக3ர்ப4ப்தருஷிக3ளு

கெ3ணெயெனிப வைவஸ்தனு மனு கா3தி4ம்ப4வகெ3 |

3னுஜ நிர்ருதி தார ப்ராவஹி

வனஜமித்ரகெ3 அஸ்வினி க3ணப

4னப விஷ்வக்ஸேனரிகெ3 வந்திஸுவெ நனவரத ||3

 

அக்னி தேவனுக்கு, ப்ருகு ரிஷிகளுக்கு, தாக்‌ஷாயிணியான ப்ரசூதி தேவிக்கு, பிரம்ம தேவரின் மக்களான ஏழு முனிவர்களுக்கு, இவர்களுக்கு சமமான வைவஸ்வத மனுவிற்கு, விஸ்வாமித்ரருக்கும், அரக்கனான நிரருதி, தாரா, ப்ராவஹி, மித்ர என்னும் சூரியன் ஆகியோருக்கு, அஸ்வினி, கணபதி, குபேர, விஷ்வக்சேன இவர் அனைவரையும் நான் எப்போதும் வணங்குவேன்.

 

உக்த தே3வர்க்க3ளனுளிது எ

ம்பத்தயிது3 ஜனருக3ளு மனுக3ளு

த்2ய ச்யாவன யமளரிகெ3 கர்மஜரெனிஸுதிப்ப |

கார்தவீர்யார்ஜுனனெ ப்ரமுக2

தஸ்த2ரிகெ3 பர்ஜன்ய க3ங்கா3

தி3த்ய யம ஸோமானிருத்34ன பத்னியர பத3கெ ||4

 

உக்த சேஷசதஸ்தர்கள் - உத்தம வகுப்பில் சேர்ந்தவர்கள் 15 தவிர மீதம் 85 பேர். மனுகள், உசித்யர், ச்யாவன யமளர், கர்மதேவதை என்று அழைக்கப்படும் கார்த்தவீர்யார்ஜுன் முதலான முக்கிய 100 பேருக்கு, பர்ஜன்ய என்னும் சூரியன், கங்கா, சஞ்ஞா, ரோஹிணி, ஷாமளே, அனிருத்தனின் மனைவி உஷா - இவர்களின் பாத கமலங்களை நான் வணங்குவேன்.

 

ஹுதவ ஹர்த்தா4ங்கி3னிகெ3 சந்த்3ரன

ஸுதபு34கெ3 நாமாத்மிக உஷா

திகெ3 சா2யாத்மஜ ஷனைஸ்சரகா3னமிபெ தத |

ப்ரதி தி33லி பி33தெ3 ஜீவ

ப்ரததி மாடு3வ கர்மக3ளிக3தி4

பதி எனிப புஷ்கரன பாதா3ம்பு4ஜக3ளிகெ3 நமிபெ ||5

 

ஹுதவஹன = அக்னிபுருஷன்,

அர்த்தாங்கி = அவரின் மனைவி ஸ்வாஹாதேவி,

புத, அஸ்வினியின் மனைவி உஷா, சனீஸ்வர - இவர்களை எப்போதும் வணங்குவேன். அனைத்து ஜீவர்களும் செய்யும் கர்மங்களுக்கு அபிமானியான புஷ்கரனின் பாத கமலங்களை நான் வணங்குவேன்.

 

ஆனமிபெ ஆஜானஜரிகெ3 க்ரு

ஷானுஸுதரிகெ3 கோ3வ்ரஜதொ3ளிஹ

மானினியரிகெ3 மௌனிஜன ஷதன்யூன ஷதகோடி |

மானிபிதரிகெ3 தே3வ மானவ

கா3 ப்ரௌட3ரிக3வனி பரிகெ3

மானிவான தா3சவர்க்க3கெ நமிபெனனவரத ||6

 

அஜானஜ தேவதைகளுக்கு, அக்னியின் புதல்வர்களான 16,100 பேருக்கு, கிருஷ்ணருடன் இருக்கும் கோபிகா ஸ்த்ரீயருக்கு, சிரபித்ருகளுக்கு, 100 கோடிக்கு 100 குறைவான முனிவர்களுக்கு, தேவகந்தர்வ, மனுஷ்ய கந்தர்வர்களுக்கு, சக்ரவர்த்திகளுக்கு, ரமாபதியான ஸ்ரீபரமாத்மனின் தாசர்களான மனுஷ்யோத்தமர்களுக்கு என இவர்கள் அனைவரையும் நான் எப்போதும் நமஸ்காரம் செய்வேன்.

 

அனுதினவ னுக்ரமதொ3ளவரோ

ஹணதரதமவ ப4க்தி பூர்வக

நெனெவரிகெ34ர்மார்த்த2 காமாதி33ளு ப2லிஸுவுவு |

வனஜம்ப4வ முக்2யரவயவ

ரெனிஸுவ ஜக3ன்னாதவிட்ட2லகெ3

வினயதி3ந்த3லி நமிஸி கொண்டா3டு3தி3ரு மரெயத3லெ ||7

 

அனுக்ரமணிகா தாரதம்யத்தை தினமும் படிப்பவர்களுக்கு, தர்மார்த்த காம மோட்சம் என்னும் புருஷார்த்தங்கள் கிடைக்கும். பிரம்மாதி தேவதைகள் அனைவரும் ஸ்ரீஜகன்னதவிட்டலனுடன் இருப்பவர்கள். ஆகையால், அவர்கள் அனைவருக்கும் என் மரியாதைபூர்வமான நமஸ்காரத்தை செலுத்தி, மறக்காமல் அவர்களை தினந்தோறும் வணங்குவேன்.

 

அவரோகண தாரதம்ய சந்தி என்னும் 26வது சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 

***