ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, May 29, 2020

#8 - பஞ்சதன்மாத்ர சந்தி

#8 - பஞ்சதன்மாத்ர சந்தி


த்ருணமொத3லு பிரஹ்மாந்த ஜீவர
தனுக3ள த்ரயக3ளலி நாரா
யணன ஸாவிரதை3து3 நூரிப்பத்து மேலாரு |
3ணனெ மாள்பரு பு34ரு ரூபவ
க்4ருணிய சூர்யாதி3த்ய நாமக3
ளனுதி3னதி3 ஜபிசுவரிகீவாரோக்3ம்பத3||8

த்ருணமொதலு பிரம்மாந்த ஜீவர = கிருமியிலிருந்து பிரம்மதேவர் வரை இருக்கும் அனைத்து ஜீவர்களின்
தனுசதுஷ்டயரல்லி = ஸ்வரூபாதி 4 தேகங்களில்
நாராயணன = நாராயணனின்
ஸாவிரதைது நூரிப்பத்து மேலாரு = 5126
கணனெ மாள்பரு = எண்ணிக்கையால் சேர்த்து பார்க்கவேண்டும் மற்றும் த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்திஎன்னும் தியான ஸ்லோகத்தின்படி சூர்யமண்டல மத்யவர்த்தியான நாராயணனை நினைத்தவாறு, ஸ்ரீமதாசார்யர் தந்த்ரசாரத்தில் சொல்லியிருக்கும் 72 மகாமந்திரங்களில் ஒன்றான ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் சூர்ய அஷ்டாக்‌ஷர மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமென்று சொல்கிறார்.
க்ருணி சூர்யாதித்ய நாமகளனு = க்ருணி சூர்ய என்றும் ஆதித்ய என்றும் பெயர்களைப் பெற்ற, இந்த மந்திரத்தை,
அனுதினதி = தினந்தோறும்
ஜபிசுவரிகெ = ஜெபிப்பவர்களுக்கு
ஆரோக்ய சம்பதவ = ஆரோக்கியம், செல்வங்களை
ஈவ = கொடுப்பான்.

கிருமி முதற்கொண்டு பிரம்மர் வரை இருக்கும் அனைத்து ஜீவர்களின் 4 சரீரங்களில், உபாசனா செய்யவேண்டிய பகவத்ரூபங்களை சொல்கிறார்.

கிருமி முதல் பிரம்மன் வரை இருக்கும் ஜீவரின் ஸ்வரூபம், லிங்க, அனிருத்த, ஸ்தூல என்னும் 4 தேகங்களில் நாராயணரூபியான ஸ்ரீபரமாத்மன் எண்ணிக்கையின்படி, ந+அ=5+1=6, ரா=2, ய=1, ண = 5. 6215. இவற்றை வலது பக்கத்திலிருந்து படித்தால், 5126 ஆகிறது. அல்லது, நா=5 ரா-2 ய=1 ண=5. 5215 அல்லது 5125 ஆகிறது. இவற்றுடன் நாராயண ரூபம் ஒன்றையும் சேர்த்தால், 5126 ஆகிறது. இவ்வளவு ரூபங்களால் வசிக்கிறான். ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் ஸௌர அஷ்டாக்‌ஷர மந்திரத்தை, தந்த்ரசாரத்தில் ஸ்ரீமதாசார்யர் 72 மகாமந்திரங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வனவாசத்தில் இருந்தபோது தர்மராஜன், பிராமண போஜனம் செய்வதற்கு வழியில்லாதவராக இருந்தார். இந்த மந்திரத்தினால் சூரிய ஆராதனை செய்து, அக்‌ஷய பாத்திரத்தைப் பெற்றார். ஆகையாலேயே, தாசராயர் ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் மந்திரத்தை தினந்தோறும் ஜபம் செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் ஸ்ரீபரமாத்மன் கொடுக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.


***

No comments:

Post a Comment