ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, May 8, 2020

#1 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#1 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


ஹரிகதா2ம்ருதசார கு3ருக3
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது ||



ஜனனி பி11 பூ4 வாரித3ம்ப3
வெனிப பஞ்சாக்3னியலி நாரா
யணன த்ரிம்ஷதி1 மூர்த்திக3ள வ்யாபார வ்யாப்திக3
நெனெது3 திவ3ளெம்ப சமிதெ43
ளனு நிரந்தர ஹோமிஸுத பா1
வனகெ பா1வனனெனிப ப1ரமன பே3டு3 பரமசுக2 ||1


ஜனனி=தாய்
பித = தந்தை
பூ = பூமி
வாரித = மேகம்
அம்பர = ஆகாயம்
எனிப = என்னும்
பஞ்சாக்னியலி = இந்த ஐந்து வித அக்னியில்
நாராயணன = நாராயணனின்
த்ரிம்ஷதி மூர்த்திகள = 30 மூர்த்திகளின்
வ்யாபார = செயல்களை
வ்யாப்திகள = ஸ்ரீபரமாத்மனின் நிலைத்திருத்தலை
நெனெது = நினைத்து
திவஸகளெம்ப = தினங்கள் (நாட்கள்) என்னும்
ஸமிதெகளனு = சமித்துகளை
நிரந்தர = எப்போதும் / எந்நேரமும்
ஹோமிஸுத = ஹோமத்தை செய்தவாறு
பாவனகெ பாவனனெனிப = பவித்ரமான பொருட்களை பவித்ரமாக ஆக்குபவன் (அதற்கு பவித்ரத்தைக் கொடுப்பவன்) என்று அழைக்கப்படும்
பரமன = சர்வோத்தமனான பரமாத்மனிடம்
பரமசுக = மோட்சத்திற்காக
பேடு = பிரார்த்தனை செய்

முந்தைய பத்யத்தில், பரமாத்மன் அடைவதற்கு சுலபன் என்று சொல்வதற்காக, நான் ஸ்னானம் செய்வது, உண்பது, உடுத்துவது என அனைத்தும் பகவத்பூஜை என்று நினைத்தால் போதும். பரமாத்மன் மகிழ்வான். காட்டிற்குச் சென்று தவம் செய்தால் மட்டுமே முக்தி. இல்லையெனில் இல்லை என்று இல்லை - என்னும் பல கருத்துக்களை விபூதி சந்தியில் விளக்கினார் தாசராயர். 

இந்த சந்தியில், யாகங்களை செய்பவர்கள், நெருப்பின் முன் அமர்ந்து, கண்களை துன்புறுத்திக்கொண்டு ஹோமாதிகளை செய்வது மட்டுமே ஹோமம் அல்ல. அனுசந்தானத்துடன் பகவந்தனின் வியாப்தியை அறிந்து, தாய் தந்தை ஆகியோரின் சேவையே யாகம் என்று, பஞ்சமஹாசந்தி என்னும் இந்த சந்தியில் யாக லட்சணங்களை நிரூபிக்கத் துவங்கி, இந்த சந்தியின் சாரத்தை இந்த முதலாம் பத்யத்தில் சுருக்கமாகச் சொல்கிறார். 

அக்னி என்றால் நெருப்பு என்றும், காஷ்ட என்றால் சமித்து என்று மட்டுமே அர்த்தம் இல்லை. தாய், தந்தை, பூமி, மேகம், ஆகாயம் என 5 அக்னிகளில் நாராயணன், அனிருத்தாதி பஞ்சரூபங்களால் இருப்பது மட்டுமல்லாமல், தாய் முதலான ஒவ்வொரு அக்னியிலும் அனிருத்தாதி ஐந்து ரூபங்களால் வியாப்தனாக இருக்கிறான். அது எப்படியெனில்:

தாய் என்னும் அக்னியில் அனிருத்த ரூபன் இருக்கிறான். அந்த அனிருத்த ரூபத்திற்குள், அனிருத்த அனிருத்த, அனிருத்த பிரத்யும்ன, அனிருத்த சங்கர்ஷண, அனிருத்த வாசுதேவ, அனிருத்த நாராயண என 1 ரூபத்தில் 5 ரூபங்கள் இருக்கின்றன. இதைப்போலவே, தந்தையில், பிரத்யும்ன. அவரில், பிரத்யும்ன அனிருத்த, பிரத்யும்ன பிரத்யும்ன என 5 ரூபங்கள். ஆக, ஒவ்வொரு அக்னியிலும் 6 ரூபங்களும், மொத்தம் 5 அக்னிகளில் 30 ரூபங்களும் இருக்கின்றன. அல்லது, தாய், தந்தை முதலான ஒவ்வொருவரிலும் 5 ரூபங்கள். ஒவ்வொருவரிலும் அனிருத்தாதி 5 ரூபங்கள். ஆகமொத்தம் 30 ரூபங்கள் என அறியவேண்டும். 

இவனின் நடவடிக்கைகள் என்னவெனில், தாய்க்குள் இருந்து பிறக்க வைக்கிறான். தந்தைக்குள் இருந்து உயிரைக் கொடுக்கிறான். பூமியில் இருந்து தானியங்களை விளைவிக்கிறான். மேகங்களில் இருந்து தண்ணீரைக் கொடுக்கிறான். ஆகாயத்தில் இருந்து அவகாசத்தைக் கொடுக்கிறான். இப்படியாக, 5 அக்னிகளில் மொத்தம் 30 ரூபங்களால் செய்யும் வியாபாரங்களையும், இந்த அக்னிகளில் வியாப்தித்வத்தையும் நினைத்து, நாட்கள் என்பதே சமித்துக்கள். இந்த வகையில், பூஜாரூபமான ஹோமங்களை செய்தவாறு, பவித்ரமான பொருட்களுக்கு பவித்ரத்தைக் கொடுக்கும் பரமாத்மனை வேண்டினால், பரமசுகமான முக்தியைக் கொடுக்கிறான். 

***

No comments:

Post a Comment