#22 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
சதுரவிம்ஷதி த1த்வதொ3ளு ஸ்ரீ
ப1தி1யு அனிருத்தா3தி3 ரூபதி3
வித1த1னாகி3த்த3கி2ல ஜீவர ஸம்ஹனனதொ3ளகெ3 |
வ்ரத1தி1யந்த3தி3 ஸுத்து1ஸுத்து1த1
பித்ருக3ளிகெ3 த1ர்ப1க1னெனிஸி கொ
ண்ட3துல மஹிமனு ஷண்ணவதி நாமத3லி நெலெஸிஹனு ||22
ஸ்ரீபதியு = லட்சுமிபதி
சதுரவிம்சதி தத்வதொளு = 24 தத்வங்களில்
அனிருத்தாதி ரூபதி = அனிருத்த, ப்ரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ என்னும் ரூபங்களால்
விததனாகித்து = நிலைத்திருந்து
அகிளஜீவர = அனைத்து ஜீவர்களின்
சம்ஹனனதொளகெ = தேகத்தில்
ப்ரததியந்ததி = கொடிகளைப் போல
ஸுத்திசுத்துத = படர்ந்துகொண்டு
பித்ருகளிகெ = அவரவர்களின் பித்ரு பிதாமகர்களுக்கு
தர்பகனெனிஸி கொண்டு = அவரவர்கள் செய்யும்
சிரார்த்தாதிகளால் திருப்தியடைபவன் என்று சொல்லிக்கொண்டு
அதுள மஹிமனு = சமமில்லாத மகிமையுள்ளவன்
ஷண்ணவதி நாமதலி = 96 சிரார்த்தங்களின் நாமங்களால்
நெலஸிஹனு = நிலைத்திருக்கிறான்.
முந்தைய பத்யங்களால் 24 தத்வங்களில் ஒவ்வொரு தத்வங்களிலும் இருக்கும் பகவத் ரூபங்களை தனித்தனியாக
சொல்லி,
இந்த பத்யங்களிலிருந்து 24 தத்வங்களில் ஒவ்வொரு தத்வத்திலும்
அனிருத்தாதி 4 ரூபங்கள் என, மொத்தம் 96 ரூபங்களில் இருந்துகொண்டு, ஸ்ரீபரமாத்மன் பித்ருகளை
திருப்திப்படுத்துகிறான் என்று சொல்கிறார்.
யாருமே தனக்கு சமம் இல்லாதவனான, மகா மகிமைகளைக் கொண்டவன் ஸ்ரீலட்சுமிபதி என்கிறார். அதுளமகிமன் என்னும்
பதத்திற்கு ஸ்ரீபதி 96 என்னும் குறியீடு சரியாகப் பொருந்துகிறது. அதாவது, ஸ்ரீபதி, லட்சுமிபதியாக இருப்பதாலேயே, அதுளமஹிமன் என்று பொருள்.
அது எப்படியெனில்: த்வாதஸ ஸ்தோத்திரம் 7ம் அத்தியாயத்தில், ஸ்ரீலட்சுமியின் மகிமைகள்
வர்ணிக்கப்படுகின்றன. அதில் ஒரு ஸ்லோகத்தை மட்டும் பார்க்கலாம்.
பிரம்மேஷ ஷக்ர ரவிதர்ம ஷஷாங்க பூர்வ கீர்வாண
சந்ததிரியம் யதபாங்க லேஷம் |
ஆஸ்ரீத்ய விஷ்வவிஜயம் விததாத்ய சிந்த்யா ஸ்ரீயத்கடாக்ஷ
பலவத்யஜிதம் நமாமி ||
பிரம்ம, ருத்ர, இந்திர, சூர்ய, யம,
சந்திர ஆகிய தேவதாகணம் எந்த ஸ்ரீலட்சுமியின் அதி அல்பமான, கடைக்கண் பார்வையில் பிரசாதத்தினேலேயே, இந்த பிரபஞ்சத்தில் வெற்றியைப் பெறுகிறார்களோ, அந்த லட்சுமி, எந்த ஸ்ரீபரமாத்மனின் கடாட்சத்தினால் அவள் பலம் பெறுகிறாளோ, அத்தகைய அஜிதனான ஸ்ரீபரமாத்மனை வணங்குகிறேன் என்று ஸ்ரீமத்வாசார்யர்
சொல்கிறார்.
மேலும் ‘யம் காமயேதந்தம்’ என்னும் ஸ்ருதி, லட்சுமிதேவியின் மகிமையை சொல்கிறது. இத்தகைய லட்சுமிதேவியின் பதி என்று
சொன்னபிறகு, அவருக்கு சமமானவர்கள் வேறு யார் இருக்கமுடியும்? ஆகையாலேயே, தாசராயர், ஸ்ரீபதி என்னும் சொல்லை, அதுளமகிமன் என்னும் சொல்லைக்
கொண்டு விளக்குகிறார். 24 தத்வங்களில், ஒவ்வொரு தத்வத்தில் அனிருத்தாதி 4 ரூபங்கள் இருந்து, மொத்தம் 96 ரூபங்களால் மரங்களை, கொடிகள் எப்படி சுற்றிப்
படர்ந்திருக்கிறதோ அது போல, இந்த மனுஷ்யாதிகளின் சரீரத்தில், சுற்றிக்கொண்டு, 96 ஸ்ரார்த்தங்களை செய்வித்து (96 ஸ்ரார்த்தங்களின் பெயர்களை
விவரத்தை முன்னர் 4ம் சந்தி, 23ம் பத்யத்தில் கொடுத்திருக்கிறோம்), தன்னுடைய நாமங்களாலும் அவற்றில்
இருந்து,
இந்த மனிதர்களின் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாதிகளை, ததபிமானிகளான வசுகண, ருத்ரகண, ஆதித்யகணங்களையும் திருப்திப்படுத்துகிறான்.
***
No comments:
Post a Comment