ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, May 31, 2020

#12 - பஞ்சதன்மாத்ர சந்தி

#12 - பஞ்சதன்மாத்ர சந்தி


பா4ரப்4ருன் நாமக1ஸாவிர
தா3ருனூரிப்பத்து நாலகு1
மூருதிக3ளு சராசரதி3 ர்வத்ர தும்பி3ஹவு |
ஆரு நாலகு ஜடக3ளலி ஹதி3
நாரு சேதனக3ளலி சிந்திஸெ
தோரிகொம்ப3னு தன்னரூபவ கல டா2வினலி ||12

பாரப்ருன் நாமகன = பாரப்ருத் என்னும் பெயருள்ள (பரமாத்மனின்)
சாவிரதார நூரிப்பத்து நால்கு = 1624
மூருதிகளு = ரூபங்கள்
சராசரதி = சராசரங்கள் நிறைந்த உலகத்தில்
சர்வத்ர = அனைத்து இடங்களிலும்
தும்பிஹவு = வியாபித்துக் கொண்டிருக்கிறார்
ஆரு நாலகு ஜடகளலி = ஸ்தூல தேகத்தில் இருக்கும், 6*4=24 ஜடபூதமான ப்ருதிவ்யாதி தத்வங்களில்
ஹதினாரு சேதனகளலி = 16 கலாபிமானிகளான 16 தத்வங்களில்
சிந்திஸெ = சிந்தித்தால்
சர்வடாவினலி = அனைத்து இடங்களிலும்
தன்னரூபவ = தன் ரூபங்களை
தோரிகொம்பனு = அபரோக்‌ஷத்தில் காட்டுகிறான்.

பாரப்ருத் என்னும் பெயருள்ள பரமாத்மனின் பெயர் எண்ணிக்கையின்படி = பா=4 ர=2 ப்ரு=6 த்=1, 4261 இதை வலப்பக்கமாக படித்தால், 1624 ஆகிறது. சராசராத்மக உலகத்தில் இவ்வளவு மூர்த்திகள் இருக்கின்றன. பிரபஞ்சத்தையே தாங்கியிருப்பதால், அதிலிருந்தும் பிராணிகளின் யோகக்‌ஷேம பாரத்தையும் தாங்குகிறான் என்று பொருள். ஆகையாலேயே, பரமாத்மனுக்கு பாரப்ருத்என்று பெயர். மற்றும் ஸ்தூல சரீரத்தில் இருக்கும் 24 தத்வங்கள், ப்ருதிவ்யாதி ஜடமாகையால் அவற்றில் தத்ரூபனாக இருக்கிறான். 16 கலைகளால் கூடிய லிங்க சரீரத்திலும், ஸ்தூல சரீரத்திலும்கூட ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, மகாபூதங்கள் 5, மனஸ் 1, இவற்றின் அபிமானி தேவதைகள் சேதனராகையால், ’16 சேதனர்களில்என்று சொல்கிறார்.

24ல் 16 சேதனர்களை மட்டும் ஏன் எடுத்துக்கொண்டார் என்றால், பஞ்சபூதங்களை எடுத்துக்கொண்டால், சூரியனை விட்டு அதன் கிரணங்கள் எப்படி வேறாவதில்லையோ, அதுபோல தன்மாத்ரா குணங்கள், ப்ருதிவி ஆகியவற்றை விட்டு தனியாக இருக்காமல், ப்ருதிவியின் குணம் கந்த, தண்ணீரின் குணம் ரஸ, இப்படி இவை ஒன்றுக்கொன்று சேர்ந்தே இருக்கின்றன. அவற்றிற்கு ஞானம் தனியாக இருக்காமல், ஞானேந்திரியங்களே இருப்பிடமாக இருப்பதால், அதாவது, கந்த குணத்தைக் கொண்ட பூத தத்வத்திற்கு மூக்கு இருப்பிடமாகவும், தேஜஸ் குணத்தைக் கொண்ட பூத தத்வத்திற்கு கண் இருப்பிடமாகவும் இருப்பதால், அந்த தன்மாத்ரா குணங்களை விட்டுவிட்டார்.

ஷோடஷ கலைகளில் இருப்பது புருஷ ரூபமாக இருக்கும் என்பதாலேயே, பரமாத்மனுக்கு ஷோடஷாத்மகஎன்னும் பெயர் வந்து என்று சொல்லும் பாகவத வசனங்களை அனுசரித்தே தாசராயரும் ஹதினாரு சேதனகளலிஎன்று சொல்கிறார் எனலாம்.

இப்படியே அனைத்து இடங்களிலும் இருந்து, நம் அனைவரின் யோகக்‌ஷேம நலன்களின் பாரத்தை சுமந்து, நம்மை காப்பாற்றுவான் என்று நம்பி, ஸ்வ-கர்த்ருத்வ-அபிமானத்தை துறந்து, பரமாத்மனை தியானிக்க வேண்டும். வீடு, காடு என்னும் இட வேறுபாடு இல்லாமல், அல்லது பிரம்மசார்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாஸ என்னும் வேறுபாடு இல்லாமல் எந்த நிலையில் இருந்தாலும், பக்தியுடன் பஜிப்பவர்களுக்கு அபரோக்‌ஷத்தில் தன் ரூபத்தைக் காட்டுவார்.


***

#11 - பஞ்சதன்மாத்ர சந்தி

#11 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஏகபஞ்சாஷத் வரணக3
மாகளத்ரனு சர்வரொளக3
வ்யாக்ருதா காஷாந்த வ்யாபிஸி நிக3மததி13ளனு |
வ்யாகரண பா4ரதமுகா2தி அ
நேக சாஸ்திர புராண பா4ஷ்யா
நீக13ள கல்பிஸி மனோவாங்மய நெனிஸிகொம்ப3 ||11

ஏகபஞ்சாஷத் வர்ணகத = அ முதலான 51 எழுத்துக்களின் தலைவனான
மாகளத்ரனு = லட்சுமிபதி
சர்வரொளகெ = அனைவருக்குள்ளும், வெளியேயும்
அவ்யாக்ருதா காஷாந்த = அவ்யாக்ருத ஆகாஷத்தின் வரை
வியாபிஸி = நிலைத்திருந்து
நிகமததிகளனு = வேத சமூகங்களை
வ்யாகரண = வியாகரண சாஸ்திரங்களை
பாரத முகாத்யனேக = பாரதத்திலிருந்து துவங்கி அனேக
புராண, பாஷ்யானீதகள = புராண, பாஷ்யங்களின் சமூகங்களை
கல்பிஸி = கற்றுக்கொடுத்து
மனோவாங்மய = மனோமயன் என்று
எனிஸிகொம்ப = சொல்லிக் கொள்கிறான்.

அ-காரத்திலிருந்து அனைத்து எழுத்துக்களிலும் வியாபித்திருந்து, அனைத்து சொற்களிலும் வியாபித்து, மனோமயனாக இருப்பதை விளக்குகிறார்.

அகாராதி 51 எழுத்துக்களின் தலைவனாக, ஸ்ரீலட்சுமிரமணன் அவ்யாக்ருத முதல் ஆகாயத்தின் வரை, அனைத்து இடங்களிலும், அனைவரிலும் நிலைத்திருந்து, வேத, பாரதாதி அனைத்து சாஸ்திரங்களையும், அவரவரின் தகுதிக்கேற்ப புரிந்துகொள்ளுமாறு செய்து, மனோமய, வாங்மயனென்று அழைத்துக் கொள்கிறான். [எந்தவொரு பாஷ்யமானாலும், புராணாதிகள் ஆனாலும், 51 அகாராதி எழுத்துக்களையும் கொண்டிருக்கிறது ஆகையால், அஜாதி பெயர்களில் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்று பொருள்].


***

Saturday, May 30, 2020

#10 - பஞ்சதன்மாத்ர சந்தி

#10 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஸுருசி ஷார்வரிகரனெனிஸி ச
ங்கருஷண ப்ரத்3யும்ன ஷஷி பா4
ஸ்கர ரொளகெ அரவத்ததி3க முன்னூரு ரூபத3லி |
கரெஸிகொம்ப3னு அஹ: சம்வ
த்ஸரனெனிப சுவிஷிஷ்ட நாமதி3
அரிதவரிகா3ரோக்ய பா4க்யவனீவனந்த3மய ||10

சுருசி ஷார்வரிகரனெனிஸி = சுருசி, ஷார்வரிகர என்னும் நாமங்களால், சங்கர்ஷண, பிரத்யும்ன ரூபங்கள்
ஷஷி பாஸ்கர ரொளகெ = சூர்ய, சந்திரர்களுக்குள்
அரவத்ததிக முன்னூரு ரூபதலி = 360 ரூபங்களில்
அஹ: = பகல் என்று அழைத்துக்கொண்டும்
சம்வத்ஸர நெனிபனு = சம்வத்ஸர என்று அழைத்துக் கொள்பவனும்
விஷிஷ்ட நாமதலி = இப்படி பற்பல நாமங்களில் அழைத்துக்கொண்டு
அரிதவரிகெ = அறிந்தவர்களுக்கு
நந்தமய = ஆனந்த ஸ்வரூபன்
ஆரோக்ய பாக்யவனீவ = ஆரோக்யத்தை, செல்வத்தை
ஈவ = கொடுக்கிறான்.

சந்திர சூர்யர்களில் பகவத் உபாசனையை எப்படி செய்யவேண்டும் என்று சொல்கிறார். ஆனந்தமயனான சங்கர்ஷணன், சுருசி நாமகனாகி, சூர்யனிலும், ப்ரத்யும்னன் ஷார்வரிக நாமகனாகி சந்திரனிலும் இருந்து, 360 பகல்கள் என்று அழைக்கப்பட்டும், 360 இரவு என்று அழைக்கப்பட்டும், மேலும், சம்வத்ஸர என்றும் அழைத்துக்கொண்டும் இருக்கிறான். இப்படி பற்பல நாமங்களால் அழைத்துக் கொள்கிறான் என்று அறிந்து, உபாசனை செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தை, செல்வத்தைக் கொடுத்து அருள்கிறான்.


***

#9 - பஞ்சதன்மாத்ர சந்தி

#9 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஐது3னூரெப்பத்த நாலகு
ஆதி4பௌ4திகத3ல்லி திளிவரு
ஐதெ3ரடு ஷத1 ஏகவிம்ஷதி ரூபவாத்4யாத்ம
பே43கள லின்னூர மூவ
த்தா13 மேலொந்ததி4க மூர்த்திக3
ளாத3ரதி3 தி4தை3வதொளு சிந்திபரு பூ4சுரரு ||9

ஆத்யாத்மாதிகளில் இருக்கும், சூர்யமண்டல மத்யவர்த்தியான நாராயணனின் ரூபங்களின் சிந்தனையைப் பற்றி சொல்கிறார்.

க்ருணி, சூர்ய, ஆதித்ய என்னும் நாமங்களால் ஆதிபூதாதி மூன்றில் அந்தந்த எண்ணிக்கையின்படி ஸ்ரீமன் நாராயணன் நிலைத்திருக்கிறான். க்ருணி=க்=4, ர்=2, ணி=5. வலது பக்கத்திலிருந்து பார்த்தால், 524 ரூபங்களால் ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்களில் இருக்கிறான். ஆத்யாத்ம என்னும் மனஸ் தத்வத்தில் சூர்ய நாமகனாகி, சூ=7, ர்=2, ய=1, 721 ரூபங்களில் இருக்கிறான். இந்த எண்ணிக்கையை ஏன் வலப்பக்கத்திலிருந்து மாற்றி படிக்கவில்லை என்றால், இந்த மந்திரத்தின் ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்பதில், சூர்ய என்னும் சொல் நடுவில் இருந்து, ஷடங்கன்யாசங்களில் கிரம, தலைகீழ்-கிரமங்களின் விதிகளின்படி மந்திரங்களை உச்சரித்தவாறு நியாசங்களை செய்யும்போது, கிரமத்திலும், தலைகீழ்-கிரமங்களிலும் சூர்ய என்னும் சொல் நடுவில் இருக்கிறது என்று குறிக்கிறது.

அது எப்படியெனில்:

ஓம் க்ருணி ஹ்ருதயாய நம:
சூர்யாய ஷிரஸே ஸ்வாஹா
ஆதித்யாய ஷிகாயை வஷட்
ஆதித்யாய கவசாய ஹும்
சூர்யாய நேத்ராப்யாம் வஷட்
க்ருணயே அஸ்த்ராய ஷட் - இதி திக்பந்த:

என்னும் தந்திரசாரத்தில் ஷடங்கன்யாசத்தை சொல்லியிருப்பர். இதிலிருந்து, இடமிருந்து வலமாக சொல்லும்போதும், க்ருணி, சூர்ய, ஆதித்ய என்று, சூர்ய நடுவில் இருக்கிறது. ஆதித்ய, சூர்ய, க்ருணி என்று வலமிருந்து இடம் படிக்கும்போதும், சூர்ய நடுவில் இருக்கிறான். இப்படியாக, சூர்யன் இப்படியும், அப்படியுமே சமமே என்னும் அர்த்தத்தைக் குறிப்பதாக, எண்ணிக்கையின்படி, 721 ஆகிறது. இதனை வலப்பக்கத்திலிருந்து படிக்கையில் 127 ஆகவேண்டியிருந்தது. அப்படி சொல்லாமல், 721 என்றே ஏன் சொல்லியிருக்கின்றனர் என்பதை என் அறிவிற்கு எட்டிய மட்டில் எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில், சங்கர்ஷண ஒடெயரு தமது வியாக்யானத்தில், ‘ஐது எரடுஷத ஏகவிம்ஷதிஎன்பதை, சூரியனின் கிரணங்கள் ஐந்து. பூர்வாதி நான்கு திசைகள் 4, ஊர்த்வ (மேல் திசை) 1 என, ஐந்து திசைகளில், திசைக்கு ஒன்றாக இரு நூறு., 5*200=1000 கிரணங்கள் என்றும், ஷத ஏக விம்ஷதி என்றால் 121 என்று சொல்லி, இந்த பத்யத்திற்கு க்ருணி: சூர்ய ஆதித்ய என்னும் மந்திரத்தில் சூர்ய சொல்லிற்கு அர்க என்னும் சொல்லை அனுசரித்து, அ=1 ர்=2 க=1 என்று சொல்லி, ஷத ஏகவிம்ஷதி = 121 ரூபங்களை ஆத்யாத்மத்தில் அறியவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்.

இவற்றில், படிப்பவர்கள் எந்த விளக்கத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதைப்போல, ஆதிதெய்வமான தத்வதேவதைகளில், ஆதித்ய= ஆ=1, தி=3, த்ய=2, 132 இதனை வலது பக்கத்திலிருந்து 231 ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று அறியவேண்டும்.


***

Friday, May 29, 2020

#8 - பஞ்சதன்மாத்ர சந்தி

#8 - பஞ்சதன்மாத்ர சந்தி


த்ருணமொத3லு பிரஹ்மாந்த ஜீவர
தனுக3ள த்ரயக3ளலி நாரா
யணன ஸாவிரதை3து3 நூரிப்பத்து மேலாரு |
3ணனெ மாள்பரு பு34ரு ரூபவ
க்4ருணிய சூர்யாதி3த்ய நாமக3
ளனுதி3னதி3 ஜபிசுவரிகீவாரோக்3ம்பத3||8

த்ருணமொதலு பிரம்மாந்த ஜீவர = கிருமியிலிருந்து பிரம்மதேவர் வரை இருக்கும் அனைத்து ஜீவர்களின்
தனுசதுஷ்டயரல்லி = ஸ்வரூபாதி 4 தேகங்களில்
நாராயணன = நாராயணனின்
ஸாவிரதைது நூரிப்பத்து மேலாரு = 5126
கணனெ மாள்பரு = எண்ணிக்கையால் சேர்த்து பார்க்கவேண்டும் மற்றும் த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்திஎன்னும் தியான ஸ்லோகத்தின்படி சூர்யமண்டல மத்யவர்த்தியான நாராயணனை நினைத்தவாறு, ஸ்ரீமதாசார்யர் தந்த்ரசாரத்தில் சொல்லியிருக்கும் 72 மகாமந்திரங்களில் ஒன்றான ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் சூர்ய அஷ்டாக்‌ஷர மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமென்று சொல்கிறார்.
க்ருணி சூர்யாதித்ய நாமகளனு = க்ருணி சூர்ய என்றும் ஆதித்ய என்றும் பெயர்களைப் பெற்ற, இந்த மந்திரத்தை,
அனுதினதி = தினந்தோறும்
ஜபிசுவரிகெ = ஜெபிப்பவர்களுக்கு
ஆரோக்ய சம்பதவ = ஆரோக்கியம், செல்வங்களை
ஈவ = கொடுப்பான்.

கிருமி முதற்கொண்டு பிரம்மர் வரை இருக்கும் அனைத்து ஜீவர்களின் 4 சரீரங்களில், உபாசனா செய்யவேண்டிய பகவத்ரூபங்களை சொல்கிறார்.

கிருமி முதல் பிரம்மன் வரை இருக்கும் ஜீவரின் ஸ்வரூபம், லிங்க, அனிருத்த, ஸ்தூல என்னும் 4 தேகங்களில் நாராயணரூபியான ஸ்ரீபரமாத்மன் எண்ணிக்கையின்படி, ந+அ=5+1=6, ரா=2, ய=1, ண = 5. 6215. இவற்றை வலது பக்கத்திலிருந்து படித்தால், 5126 ஆகிறது. அல்லது, நா=5 ரா-2 ய=1 ண=5. 5215 அல்லது 5125 ஆகிறது. இவற்றுடன் நாராயண ரூபம் ஒன்றையும் சேர்த்தால், 5126 ஆகிறது. இவ்வளவு ரூபங்களால் வசிக்கிறான். ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் ஸௌர அஷ்டாக்‌ஷர மந்திரத்தை, தந்த்ரசாரத்தில் ஸ்ரீமதாசார்யர் 72 மகாமந்திரங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வனவாசத்தில் இருந்தபோது தர்மராஜன், பிராமண போஜனம் செய்வதற்கு வழியில்லாதவராக இருந்தார். இந்த மந்திரத்தினால் சூரிய ஆராதனை செய்து, அக்‌ஷய பாத்திரத்தைப் பெற்றார். ஆகையாலேயே, தாசராயர் ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:என்னும் மந்திரத்தை தினந்தோறும் ஜபம் செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் ஸ்ரீபரமாத்மன் கொடுக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.


***

#7 - பஞ்சதன்மாத்ர சந்தி

#7 - பஞ்சதன்மாத்ர சந்தி


ஈரெரடு தே3ஹோர்மி பூ4தக3
நாரதி4கத3ஷ ருக்3வினுத ல
க்‌ஷ்மீரமண விஷ்ண்வாக்ய ரூபதி3 சது:ஷஷ்டிகலா
தா4ரக1னு தானாகி3 பி3ரம்ம பு
ராரி முக்யரொளித்து தத வி
ஹார மாள்பனு சது:பாதா3ஹ்வயதி3 லோகதொ3ளு ||7

ஈரெரடுதேஹ = மேற்சொன்ன, ஸ்வரூபதேஹாதி 4 தேகங்களால் கூடிய ஜீவனின் ஸ்தூல சரீரம்
ஊர்மிபூதகளாரு = அஸ்தி, ஜாயதெ, பரிணமதெ, விவர்ததே, அபக்‌ஷீயதெ, விவஷ்யதெ என்னும் 6 அலைகள் கூடிய, இத்தகைய அலைகளால் கூடிய தேகத்தில்
சது:ஷஷ்டிகலா = 64 கலைகளால் கூடிய
தாரகன் = காப்பாற்றுபவன் அல்லது அனைவருக்கும் ஆதாரமானவன்
தானாகி, ஆரதிக தஷருக்வினுத = 16 ரிக்குகளால் கூடிய புருஷ சூக்தத்தினால் கூடியவனான ஸ்ரீலட்சுமி நாராயணன்
லட்சுமிரமண விஷ்வாக்ய ரூபதி = லட்சுமிபதியானவன், விஷ்ணு நாமகனான ரூபத்தினால்
பிரம்ம புராரி முக்யரொளித்து = பிரம்ம, ருத்ர, ஆகியோர்களில் இருந்துகொண்டு
சது:பாதாஹ்வயதி = தர்ம, சத்ய, தயா, தான என்னும் 4 பாதங்களில் தர்மபூதனாக
லோகதொளு = இந்த உலகத்தில்
ஸதத = எப்போதும், எல்லா காலங்களிலும்
விஹாரமாள்பனு = நடமாடுகிறான் (செயல்களை செய்கிறான்).

பிரம்மாதி தேவதைகளில் 4 பாத தர்மங்களை பின்பற்றியவாறு, 64 கலைகளையும் தரித்தவனாக இருக்கும் பகவத் ரூபோபாசனையை சொல்கிறார்.

பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும், ஸ்வரூப, லிங்க, அனிருத்த, ஸ்தூல என்னும் 4 தேகங்கள் உண்டு. இதில் 6 விதங்கள் இருக்கின்றன. அவை :

1. அஸ்தி: லிங்க அனிருத்த தேகங்களுடன் ஸ்தூல தேகத்தை அடைவதற்கு கிழக்கில் இருப்பது
2. ஜாயதி: ஸ்தூலதேகத்தைப் பெறுவது
3. பரிணயதி: ஷைஷவ அவஸ்தையைக் கடப்பது
4. விவர்த்ததி : யௌவனத்தை அடைவது
5. அபேக்‌ஷியதி : உடல் மெலிவது
6. வினஷ்யதி : அழிவது

என்னும் 6 அலைகள் உண்டு. இவற்றில், பிரம்ம வாயு சரஸ்வதி பாரதியர்களுக்கு மட்டும் கர்ப்ப பிரவேசம் இல்லை. பிரம்மதேவருக்கு அவதாரமே இல்லை. வாயுதேவரின் அவதார த்ரயங்களிலும், சுக்லஷோணித சம்பந்தத்தால் அவர் பிறப்பது இல்லை என்று அவரது சரித்திரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். ஆஞ்சனேய அவதாரத்தில், வாயுதேவர் பழத்தைக் கொடுத்தார் என்றும், அவர் மூலமாகவே அஞ்சனா கர்ப்பம் தரித்தாள் என்று சொல்லியிருப்பர்.

சுக்லஷோணித சம்பந்தமானால் மட்டுமே கர்ப்பத்தில் ஸ்தூல தேகம் உற்பத்தி ஆகும். அது இல்லாமல், இந்த உலகத்தில் பிறக்க வேண்டுமெனில், தம் விருப்பத்தினால், தம் நிஜ ரூபத்தினாலேயே ஒரு கர்ப்பத்தில் பிறந்தார் என்று நிச்சயமாகிறது.

கலிலம் ஏகராத்ரேண பாஞ்சராத்ரேண புத்துதம் |
தஷராத்ரேன கர்கந்து:பேஷ்யண்டம் வாதத:பரம் ||
வாஸேனது ஷிரோத்வாப்யாம் பாஹ்வாங்க்ராத்யங்க விக்ரஹ: ||

பாகவத 3ம் ஸ்கந்தத்தில் வரும் இத்தகைய வாக்கியங்களால், ஓர் இரவில் சுக்லஷோணிதம் கலக்கிறது. 5 நாட்களில் நுரைகள் தோன்றும். 10 நாட்களில் வீங்கிய கண்களைப் போல திடமாகிறது. பிறகு, பேஷே என்னும் உறையினால் சுற்றப்பட்டு, உலகத்தைப் போல வளர்கிறது. 1 மாதத்தில் தலை வருகிறது. 2ம் மாதத்தில் கை, கால்கள் முதலான அங்கங்கள் தோன்றுகின்றன. -- இந்த வாக்கியங்களால், சுக்லஷோணித சம்பந்தத்தினாலேயே கர்ப்பம் உற்பத்தி ஆகிறது என்று தெளிவாகிறது. அது இல்லாமல் ஆவதென்றால், தன் மகிமையினாலேயே, ரிஷிகளின் தபஸ் சக்தியினாலேயே, ஆகவேண்டுமே தவிர, வேறு வழி இல்லை. த்ருபதாதிகளின் உற்பத்தி சுக்லாதிகளின் சம்பந்தம் இல்லாமலேயே ஆனாலும், அது அவர்களது சாமர்த்தியம் இல்லை. தபோமகிமை என்று அறியவேண்டும்.

வாயுதேவர், தன்னுடைய சுய மகிமைகளாலேயே, எவ்வித கர்ப்ப சம்பந்தமும் இல்லாதவாறு ஹனும பீம அவதாரங்களை எடுத்தார் என்று அறியவேண்டும். மத்வவிஜயத்தில் ஸ்ரீமதாசார்யரின் ஜனனத்தைப் பற்றி ராஜீவ சத்புரவரம் புவனாதிராஜோ நிஷ்காஸர்ய பரமஸௌபகவான்வீஷ’ - மத்யகேஹ பட்டரின் மனைவி கர்ப்பிணி ஆனபிறகு, சம்பூர்ண லட்சணத்துடன் கூடிய அந்த தேகத்தில் இருந்த ஜீவனை வெளியே எடுத்து, எப்படி தான் கைப்பற்றிய நாட்டின் அரசனை துரத்திவிட்டு வெற்றி பெற்ற அரசன், தான் கோட்டையில் எப்படி நுழைவானோ, அது போல வாயுதேவரும் அந்த சரீரத்தில் பிரவேசம் செய்தார் என்று தெளிவாக வர்ணித்திருக்கிறார்.

திரௌபதி, தன் முந்தைய பிறவிகளான இந்திரஸேனாதி அவதாரத்தில் நள ராஜனின் மகளாக பிறந்தார். அங்கு பாரதி தேவிக்கு கர்ப்பாவஸ்தையை சிந்திக்க வேண்டாமா என்றால், அங்கும் பாரதிதேவி ஷச்யாதிகளால் பிரார்த்திதராகி, தாம் கர்ப்பத்திற்கு வந்ததால், ஸ்வதந்திரமாக அந்த கர்ப்பத்திற்கு சம்பந்தப்படாமல், ஷச்யாதிகளுக்கு மட்டுமே, கர்ப்ப சம்பந்தத்தைக் கொடுத்தார் என்று அறியவேண்டும். ஒரே கர்ப்பத்தில், ஷசி, ஷாமலா, உஷா, பார்வதி என்னும் 4 தேவியர்களுடன் கூடி பாரதி தேவியர் வந்திருக்க, பாரதிதேவிக்கு மட்டும் கர்ப்ப சம்பந்தம் இல்லை, மற்ற ஷச்யாதி நால்வருக்கு இருக்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என்றால், தேங்காய் கொப்பரையாக இருக்கும்போது உடைத்தால், உள்ளிருக்கும் கொப்பரை எப்படி ஓட்டிற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறதோ, அது போல என்று சொல்லவேண்டும்.

இந்த தேகம் தன்னுடையது என்னும் அபிப்பிராயம் ஷச்யாதிகளுக்கு இருந்ததால், அந்த கர்ப்ப சம்பந்தம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது. அந்த தேகத்தின் மீதான அபிப்பிராயம், பாரதிதேவியருக்கு இல்லாததால், அவருக்கு கர்ப்ப சம்பந்தம் இல்லை என்று அறியவேண்டும்.

பிரம்ம வாயு, சரஸ்வதி பாரதியரைத் தவிர, தாரதம்யத்தில் அடுத்து வருபவர்கள் அனைவருக்கும் ஆறு அலைகளாலான அவஸ்தைகள் இருக்கிறது என்று அறியவேண்டும். பிரம்ம வாயுகளுக்கு ஸ்வரூப, லிங்க, அனிருத்த தேகங்களைக் கொண்டிருத்தல்; ஸ்தூல தேக ப்ராப்தி ஆகியவை உண்டு. ஆனால், கர்ப்பாவஸ்தைகள் இல்லை. வளர்வது, மெலிவது என நிலைகள் அவரது தேகங்களுக்கு இல்லை என்றாலும், 100 ஆண்டு ஆயுள் குறைந்துகொண்டு வருவதே அவருக்கான வளர்ச்சி / குறைவு நிலைகள் என்று அறியவேண்டும். இத்தகைய 4 தேகங்கள், 6 அலைகளாலான பிரம்மாதி அனைத்து சேதனர்களில் புருஷசூக்தத்தில் வர்ணிக்கப்படுபவனான ஸ்ரீலட்சுமி ரமணனான ஸ்ரீபரமாத்மன் விஷ்ணு ரூபத்தால் வியாப்தனாக இருந்து 64 கலைகளை தரித்திருக்கிறான்.

64 கலைகள் என்னவென்றால்:

1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2. இலிகிதம் - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் - மறை நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் - நய நூல்
8. ஜோதிடம் - கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை - யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் - தாள இயல்
27. அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை - மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37. உச்சாடனம் - ஓட்டுகை
38. வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் - மதன கலை
40. மோகனம் - மயக்குக் கலை
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46. தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் - கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் - வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் - சூனியம்

இப்படியாக 64 கலைகளை தரித்திருப்பவனாக, பிரம்மாதி அனைத்து சேதனர்களில் இருந்துகொண்டு, தர்ம, சத்ய, தயா, தான என்னும் 4 பாதங்களைக் கொண்ட தர்மத்தை நிறுவியவாறு, செய்தவாறு, சதுஷ்பாத என்று அழைத்துக் கொண்டு, அனைத்து உலகங்களிலும் நடமாடுகிறான் (தன் செயல்களை செய்கிறான்).


***