#33 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
***
கரண கு3ண பூ4தக3ளொளகெ3 த
த்வரரெனிப பிரம்மாதி3 தி3விஜரொ
ளரிது ரூபசதுஷ்டய க3ளனுதினதி சர்வத்ர |
ஸ்மரிஸுதனு மோதி3ஸுத1 ஹிக்கு3த
பரவஷதி3 பாடு3வவரிகெ3 த
ன்னிரவ தோ1ரிஸி ப4வவிமுக்தர மாடி3 போஷிஸுவ ||33
கரண = ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களில்
குண = குண த்ரயங்களில் அல்லது தன்மாத்ரா குணங்களில்
பூதகளொளகெ = பஞ்சபூதங்களில்
தத்வரரெனிப = அவற்றின் அதிபதிகள் எனப்படும்
பிரம்மாதி திவிஜரொளு = பிரம்மாதி தேவதைகளுக்குள்
ரூப சதுஷ்டயகளனு = அனிருத்தாதி ரூபங்களை
அரிது = அறிந்து
தினதினதி = தினந்தோறும்
சர்வத்ர = எல்லா பிராணிகளிலும்
ஸ்மரிசுத = நினைத்தவாறு
அனுமோதிசுத = நினைப்பவர்களைப் பார்த்து புகழ்ந்தவாறு
ஹிக்குத = மகிழ்ச்சிப்படுத்தி
பரவஷதி = மெய்மறந்து
பாடுவவரிகெ = பகவன் மகிமைகளை குறிக்கும் பதங்களை
பாடுபவர்களுக்கு
தன்னிரவ = தன் ஸ்தானத்தை அல்லது ரூபத்தைக் காட்டி
பவவிமுக்தர = பிறப்பு இறப்பு துக்கங்களிலிருந்து
முக்தராக
மாடி = செய்து
போஷிசுவ = காப்பாற்றுவான்.
தத்வங்களிலும், அபிமானி தேவதைகளிலும் அனந்தானந்த ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று மேற்கூறிய
பத்யங்களில் சொல்கிறார். இந்த ரூபங்களைத் தொகுத்து, சுலபமாக நினைவில் வைத்துக்கொண்டு உபாசனை செய்யும் வழியையும், அதன் பலன்களையும் இங்கு சொல்கிறார். ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, மனஸ் - இவற்றில் அனிருத்த
ரூபத்தையும், தன்மாத்ரா குணங்களில் அல்லது சத்வாதி குணங்களில் பிரத்யும்ன ரூபத்தை, பஞ்சபூதங்களை சங்கர்ஷண ரூபத்தையும், தத்வாபிமானிகளான பிரம்மாதிகளில்
வாசுதேவ ரூபத்தையும், இந்த விதமாக 4 ஸ்தானங்களில் நான்கு ரூபங்களையும் தினந்தோறும் அனைத்து பிராணிகளின்
தேகத்திலும் நினைத்தவாறு, மகிழ்ந்தவாறு, மெய்மறந்து பகவன் மகிமைகளைச் சொல்லும் பதபத்யங்களைப் பாடுபவர்களுக்கு, தன் அபரோக்ஷத்தைக் கொடுத்து சம்சாரத்திலிருந்து முக்தராக மாற்றி
காப்பாற்றுகிறான்.
விஷ்ணு சஹஸ்ர நாமாதிகளில், பகவன் நாமங்களை, அவற்றின் மகாமகிமைகளை விளக்கமாக சொல்லியிருப்பர். ஒருவேளை இந்த சஹஸ்ர
நாமத்தைப் படிக்க முடியாவிடில், இறுதியான ஒரு ஸ்லோகத்தைப்
படித்தால் மட்டுமே, சஹஸ்ர நாமம் படித்த பலன் வருகிறதென்று ‘நமோஸ்துsனந்தாய சஹஸ்ரமூர்த்தயே’ என்னும் ஸ்லோகத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
இதைப்போலவே படிக்கவேண்டிய கிரந்தங்கள் மிகவும்
அதிகமென்றும், அவற்றை தினமும் முழுவதுமாக படிக்கமுடியாது என்பதாலும், ஆதி-அந்த ஸ்லோகங்களை மட்டும் தனியாக தொகுத்து அதை மட்டும் படித்து வரும்
சம்பிரதாயமாக இருக்கிறது. ’சங்கோச விஸ்தராப்யாஞ்ச
கதயந்திமனீஷிண:’. ஞானிகள், விஷயங்களை, அதிகாரிகளை அனுசரித்து மிகவும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்வதைப்போல, ஒவ்வொருவரின் தேகங்களிலும்
அனந்தானந்த ரூபங்களை சிந்திப்பதற்கு சாத்தியம் இல்லாத அதிகாரிகள், அனைத்து பிராணிகளின் தத்வங்களில் / ததபிமானிகளான தேவதைகளில் 4 ரூபங்களையாவது சிந்தித்து க்ருதார்த்தர் ஆகவேண்டும் என்று இந்த உபாசனா
கிரமத்தை தொகுத்து சொல்லியிருக்கிறார் தாசராயர்.
***
No comments:
Post a Comment