#8 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
பஞ்ச நாரிதுரக3த3ந்த3தி3
பஞ்ச ரூபாத்மகனு தா ஷட்
பஞ்ச ரூபவ த4ரிஸி த1த்த1ன்னாமதி3ம் கரெஸி |
பஞ்ச பாவக முக2தி கு3ணமய
பஞ்ச பூதா3த்மக ஷரீரவ
பஞ்ச வித3 ஜீவரிகெ3 கொட்டல்லல்லெ ரமிஸுவனு ||8
பஞ்ச நாரி துரகதந்ததி = 5 பெண்களை சேர்த்து அவர்களின் கை கால்களை குதிரையின் கை கால்களாக தோன்றுமாறு செய்து நிற்க வைப்பதற்கு பஞ்ச நாரி துரக என்று பெயர். இப்படியான பஞ்ச நாரி துரகனைப் போல
பஞ்சரூபாத்மகனு = நாராயணாதி 5 ரூபங்கள்
தா = தான்
ஷட்பஞ்ச ருபவ தரிஸி = நாராயண ரூபம் 1. அதில் நாராயணாதி ரூபங்கள் 5. இப்படி ஒவ்வொன்றிலும் 5*6=30 ரூபங்களை தரித்து
தத்தன் நாமதி கரெஸி = மேலே இருக்கும் பத்யங்களில் சொன்னதைப் போல, ஆகாஷாதி நாமங்களாலும், காஷ்டாதிகளில் அந்தந்த பெயர்களில் இருந்தும், காஷ்டங்களாக சிந்திக்கும் சூர்யாதி நாமங்களாலும் அழைத்துக்கொண்டு
பஞ்சபாவக முகதி = ஆகாஷாதி பஞ்சாக்னியின் முகத்தில்
குணமய = சத்வ ரஜஸ் தமோ குணாத்மகனான
பஞ்சபூதாத்மக = ப்ருதிவ்யாதி பாஞ்சபௌதிக சம்பந்தமான
ஷரீரவ = சரீரத்தைக் கொண்டவன்
பஞ்சவித ஜீவரிகெ = தேவ, கந்தர்வ, பித்ரு, மனுஷ்ய, அசுர என்னும் 5 வித ஜீவர்களுக்குக் கொடுத்து
அல்லல்லெ = அந்தந்த ஜீவர்களின் சரீரங்களிலேயே
ரமிஸுவனு = செயல்களை செய்கிறான்.
மேற்சொன்ன 7 பத்யங்களில் இருக்கும் விஷயத்தை, சாந்தோக்ய உபநிஷத் வாக்கியங்களின் அபிப்பிராயங்களைத் தொகுத்து சாரமாக இங்கு சொல்கிறார்.
பஞ்ச நாரி துரக என்றால் 5 பெண்களை சேர்த்து ஒரு குதிரை வடிவத்தைப் போல நிற்க வைப்பது. அவர்களின் கை, கால்களே, குதிரையின் கை, கால்களாக வைப்பது. ஒரு ரூபத்தில் ஐந்து ரூபங்களை சிந்திக்கும் இந்த படத்தை பல புத்தகங்களில் பார்த்திருக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், அந்த ரூபம் ஒரு குதிரையைப் போலத் தோன்றும். அப்படியே, நாராயண ரூபத்தினால் ஆகாஷனாக காட்டிக்கொள்வான். அதன் காஷ்டாதி ஸ்தானங்களில், சூர்யாதி ஐந்து பேரில், நாராயணாதி 5 ரூபங்களில் இருக்கிறான். இப்படி நாராயணாதி பஞ்சரூபி மற்றும் ஒவ்வொன்று ரூபங்களிலும் நாராயணாதிகள் என்றால், மொத்தம் 30 ரூபங்களை தரித்து, ஆகாஷாதிகளில், ஆகாஷாதி நாமங்களால் அழைத்துக் கொண்டு, சமித், புகை ஆகியவற்றில் அந்தந்த பெயர்களைக் கொண்ட, ஆகாஷாதிகளை அக்னியாக சிந்திக்கும்போது, காஷ்டாதி ஸ்தானங்களில் சிந்திக்க வேண்டிய சூர்யாதி நாமங்களால் அழைக்கப்பட்டு, ஆகாசாதி பஞ்சாக்னி முகத்தில், சாத்விக ராஜஸ தாமஸ குணங்களைக் கொண்ட பாஞ்சபௌதிக சரீரத்தை, பஞ்சவித ஜீவர்கள் என்றால், பாகவத 10ம் ஸ்கந்தத்தில் ‘யதோ யதோதாவதி தைவசோதிதம் மனோவிகாராத்மக மாத்மபஞ்சஸு’ என்னும் ஸ்லோகத்தின், விஜயத்வஜீய வியாக்யானத்தில் ‘ஆத்மபஞ்சஸு’ என்னும் பதத்திற்கு ‘தேவ, கந்தர்வ, பித்ரு, மனுஷ்யாசுர சேதேன பஞ்சானாம் ஆத்மனாம் மத்யே’ என்று சொல்லியிருக்கிறார். இதே ஆதாரத்தினால் 5 வித ஜீவரென்றால், தேவதைகள், கந்தர்வர், பித்ருகள், மனுஷ்யர், அசுரர் என்னும் 5 வித ஜீவருக்கு சரீரங்களைக் கொடுத்து, அவருக்குள் இருந்து நடவடிக்கைகளை செய்கிறான்.
***
No comments:
Post a Comment