ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, May 18, 2020

#21 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#21 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


ரூப1 புருஷோத்த1மனு ஸ்பர்ஷ
ப்ராபக1னு அனிருத்த3 ஷப்த3தி3
வியாபிஸிஹ ப்ரத்3யும்ன்யுபஸ்த4தி3 வாசுதே3வனிஹ |
தா1 பொ1ளெவ பா1யுஸ்த2னாகி3
யாப1தி1யு சங்கர்ஷணனு சு
ஸ்தா2பக1னெனிஸி பாத3தொ3ளு தா3மோத3ரனு பொ1ளெவ ||21

ரூப = ரூபகுணத்தில்
புருஷோத்தமன் = புருஷோத்தம ரூபி
ஸ்பர்ஷ ப்ராபகனு = ஸ்பர்ஷ குணத்தின் காரியத்தை செய்பவன்
அனிருத்த = அனிருத்தன்
ஷப்ததி = ஷப்த குணத்தில்
ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன ரூபி
வ்யாபிஸிஹ = வியாபித்திருக்கிறான்
உபஸ்ததி = உபஸ்த இந்திரியத்தில் வாசுதேவன்
பாயுஸ்தனாகி = குண இந்திரியங்களில்
ஜயாபதியு = ஜயா நாமகளான லட்சுமிதேவியின் பதியான சங்கர்ஷணன்
தா = தான்
பொளெவ = ஒளிர்கிறான்
பாததொளு = பாதங்களில்
தாமோதரனு = தாமோதரரூபி
ஆஹ = ஸ்திரமாக இருந்து
பொளெவ = ஒளிர்கிறான்

ரூபத்தில் புருஷோத்தமனும்;
ஸ்பர்ஷ குணத்தில் அனிருத்தனும்;
ஷப்த குணத்தில் ப்ரத்யும்னனும் ; இருக்கின்றனர்.
உபஸ்த இந்திரியத்தில் வாசுதேவனும்;
குணத்தில் சங்கர்ஷணனும்;
பாதங்களில் தாமோதரனும்; வியாபித்திருக்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும்.


***

No comments:

Post a Comment