ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, May 22, 2020

#28 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#28 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

கேவாதி3 ஸுமூர்த்தி த்வாத3
மாஸ புண்ட்3ரக3ளல்லி வேத3
வியாஸ அனிருத்தா5தி3 ரூப13ளாரு ருது13ளலி |
வாவாகி3ஹ வெந்து3 த்ரிம்ஷதி1
வாரதி3 த்க1ர்ம த4ர்ம நி
ராஷெயிந்த3லி மாடு31ருணவ பே3டு3 கொண்டா3டு3 ||28

கேஷவாதி = கேஷவ முதலான
சுமூர்த்தி = தாமோதரன் வரைக்குமான 12 மூர்த்திகள்
த்வாதஸ மாஸ = மார்கசிர முதல் கார்த்திக வரைக்குமான 12 மாதங்கள்
புண்ட்ரகளலி = 12 ஊர்த்வ புண்ட்ர நாமங்களில்
ருதுகளில் = வசந்தாதி 6 ருதுக்களிலும்
வேதவியாசன், அனிருத்தாதி ரூபகளு = வேதவியாச + அனிருத்த முதலான 5 ரூபங்கள் = 6 ரூபங்கள்
வாஸவாகிஹவெந்து = வசிக்கிறான் என்பதை அறிந்து

த்ரிம்ஷதி வாஸதலி = 30 திதிகளில், நந்தா, பத்ரா, ஜயா, ரிக்தா, பூர்ணா என்னும் குறியீடுகள், பிரதமை முதல் பஞ்சமி வரை பொருந்துகிறது. இப்படியே ஷஷ்டி முதல் தசமி வரைக்கும், பின், ஏகாதசி முதல் பௌர்ணமி வரைக்கும், பின்னர் கிருஷ்ண பட்சத்தில் மூன்று முறையும் என, மொத்தம் 6 முறை வருகின்றன. 6*5=30 நாட்களில் நந்தாதி 5 திதிகளில், அனிருத்தாதி 5 மூர்த்திகள் என ஒரு மாசத்திற்கு 30 திதிகளில் அனிருத்தாதி 5 மூர்த்திகளையும், 6 முறை சிந்தித்தால், 30 மூர்த்திகள் ஆகின்றன. இந்த விதமாக 30 நாட்களில்,

நிராஷெயிந்தலி = காம்ய பலன்களை விரும்புவதை விட்டு
சத்கர்ம தர்ம = சத்கர்மங்களை, பாகவத தர்மங்களை
மாடு = செய்
கருணவ பேடு = காம்ய கர்மங்களை விரும்பாமல் / கேட்காமல், ஸ்வாமியின் கருணையை மட்டும் வேண்டு
கொண்டாடு = பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்.

நாம் தரிக்கும் 12 புண்ட்ரங்களில், 12 மாதங்களில், ருதுகளில், திதிகளில், சிந்திக்க வேண்டிய பகவத்ரூபங்களை இங்கு விவரிக்கிறார்.

மார்கசிரவில் துவங்கி கார்த்திக வரை, கேசவாதி தாமோதர வரைக்குமான 12 மூர்த்திகளை சிந்தித்து பூஜைகளை செய்யவேண்டும். தினந்தோறும் ஸ்னானாதி சங்கல்பம் சமயத்தில், வைஷாக மதுசூதன, கார்த்திக தாமோதர என சொல்ல வேண்டும். 12 புண்ட்ர நாமங்களில், ‘லலாடே கேஷவம் த்யாயேன் நாராயணம் அதோதரேஎன வாக்கியங்களைப் போல, கேசவாதி 12 மூர்த்திகளை சிந்திக்க வேண்டும். வசந்தாதி 6 ருதுக்களில் வேதவியாஸ, அனிருத்தாதி நாராயணா வரை 5. என மொத்தம் 6 ரூபங்களை தியானிக்க வேண்டும். பிரதமை முதல் பஞ்சமி வரை இருக்கும் நந்தாதி திதிகளில், அனிருத்தாதி 5 ரூபங்களை சிந்திக்க வேண்டும். நந்தாதி திதிகள் 6 முறை திரும்பத் திரும்ப வரும். அது போல, அனிருத்தாதி ரூபங்களை 6 முறை சிந்திக்க வேண்டும்.


இப்படி, 12 மாதங்களில், ருதுகளில், திதிகளில், பகவத் ரூபங்களை சிந்தித்து, பலன்களைப் பற்றிய ஆசையைத் துறந்து, சத்கர்மங்களான சத்யாதி கர்மங்களையும், முக்திக்கு வழியான தர்மங்களையும், விரத நியமங்களையும் செய்தவாறு, அவற்றை பரமாத்மனுக்கு சமர்ப்பித்தவாறு, பரமாத்மனின் கருணையை மட்டுமே வேண்டி, அவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும் என்பது பொருள்.

No comments:

Post a Comment