#26 - விபூதி சந்தி
ப4வவெனிப1 வனதி3யொளு கர்ம
ப்1ரவஹதொ3ளு சஞ்சரிஸுதிஹ தே3
ஹவ ஸுனாவெய மாடி3 தன்னவரிந்த3 ஒடகூ3டி3 |
தி3வஸ தி3வஸக3ளல்லி லகுமி
த4வனு க்ரீடி3பனெந்து3 சிந்திஸி
ப1வனனய்ய ப4வாப்தி4 தா3டி1ஸி பரமசுக2வீவ ||26
பவவெனிப = சம்சாரம் என்னும்
வனதியொளு = கடலில்
கர்ம = புண்ய பாப கர்மங்கள் என்னும்
ப்ரவஹதொளு = ஆற்றில்
சஞ்சரிசுதிஹ = பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும்
தேஹவெ = தேகத்தையே
ஸுனாவெய = உத்தமமான படகாக ஆக்கி
தம்மவரிந்தலி = தம் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன்
திவஸ திவஸகளல்லி = தினந்தோறும் (எப்போதும்)
லகுமீதவனு = லட்சுமிபதி
க்ரீடிபனெந்து = விளையாடுகிறான் என்று
சிந்திஸி = சிந்தித்து
பவனனய்ய = வாயுதேவரின் தந்தையான ஸ்ரீபரமாத்மன்
பவாப்தி = பிறவிக்கடலை
தாடிஸி = தாண்டச் செய்து
சுகவீவ = சுகத்தைத் தருகிறான்.
சம்சாரம் என்னும் கடலில், புண்ய பாபாதி கர்மங்கள் என்னும் ஆற்றில், பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் வந்து போய்க்கொண்டிருக்கும் இந்த தேகத்தை, ஸ்ரீபரமாத்மன் தன் படகாக ஆக்கிக்கொண்டு, தன் பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளுடன் சேர்ந்து, தினந்தோறும் (எப்போதும்) அந்தப் படகில் அமர்ந்து விளையாடுகிறான் (தன் நடவடிக்கைகளை செய்கிறான்), என்று நாம் இந்த தேகத்தை பரமாத்மன் வசிக்கும் இடமாக நினைத்து, இது நமது என்னும் அபிமானத்தை விட்டால், பிராணபதியான ஸ்ரீபரமாத்மன் நம்மை சம்சார சாகரத்தை தாண்டச் செய்து, பரமானந்தத்தைக் கொடுக்கிறான்.
***
No comments:
Post a Comment