ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, May 5, 2020

#34 - விபூதி சந்தி

#34 - விபூதி சந்தி


1ன்னடி3ய கைபி1டி3து3 நோட3லு
1ன்னிரவு வ்யா பவ்யதி3
கண்ணிகொ3ப்புவ தெரதி3 அனிருத்த3னிகெ3 ஈ ஜக3வு |
பி4ன்னபி4ன்னவெ தோ1ருதி1ப்புது3
ஜன்யவாது33ரிந்த3 ப்ரதி பி3
ம்ப3ன்ன மயகா3னெந்தரிது3 பூஜிலு கைகொம்ப3 ||34


கன்னடிய கைபிடிது = கண்ணாடியை கையில் பிடித்துக்கொண்டு
நோடலு = பார்த்தால்
தன்னிரவு = தன் உருவம்
ஸவ்யாபஸவ்யதி = இடது வலமாக
கண்ணிகெ = கண்ணிற்கு
ஒப்புவ = தெரிவது போல
அனிருத்தனிகெ, ஈ ஜகவு = அனிருத்தனுக்கு, இந்த உலகம்
பின்னபின்னவெ = வெவ்வேறாக
தோருதிப்பது = தோன்றுகிறது
ஜன்யவாதுதரிந்த = பிம்பரூபத்திலிருந்து தோன்றியதால்
ப்ரதிபிம்ப = தான் பிரதிபிம்பன்
அன்னமய = அன்னமயன்
எந்தரிது = என்று அறிந்து
பூஜிஸலு = பூஜித்தால்
கைகொம்ப = ஏற்றுக்கொள்வான். 

அனிருத்த நாமக பரமாத்மனுக்கு, இந்த உலகம் பிரதிபிம்ப ரூபமானது என்று சொல்லி, முந்தைய பத்யங்களில் கூறிய வியாப்தோபாசனையால் தெரியும் ஜீவ பரமாத்மனின் அபேத சந்தேகத்தை இங்கு பரிகரிக்கிறார். அது எப்படியெனில், தேகமே ரதம், பரமாத்மனே அதில் அமர்ந்திருப்பவன். ஆகிய பத்யங்களால் பரமாத்மன் வேறு (தனியான) ஜீவன் வேறு இல்லையோ என்னவோ என்னும் சந்தேகம் வந்தால் அதனை இந்த ‘கன்னடிய கைபிடிது’ என்னும் பத்யத்தில் தீர்த்து வைக்கிறார். 

கண்ணாடியை தன் கையில் பிடித்து தன் முகத்தைப் பார்த்தால், முகம் இடது வலமாக மாறித் தெரிவதுபோல, ஸ்ரீ அனிருத்த நாமக ஸ்ரீபரமாத்மனுக்கு, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பிராணிகளும், கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பத்தைப் போலவே வெவ்வேறு பிரதிபிம்பங்களாக தெரிகிறது. இதனால் பிம்பரூபியான மனிதர்களுக்கும், கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பங்களுக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ, அப்படியே, பரமாத்மனுக்கும், பிரதிபிம்பரூபிகளான ஜீவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்வது போல் ஆயிற்று. 

பிம்பரூபியான அனிருத்த தேவரால் இந்த உலகம் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருப்பதால், ஜீவர்களை பிரதிபிம்பர் என்று சொல்ல வேண்டியதாயிற்று. மேலும், அன்னமயனான பரமாத்மன், அனைவருக்கும் உள்ளே இருந்து, அன்னாதிகளை ஏற்றுக்கொண்டு, ஜீவர்களை திருப்திப்படுத்துவதால், அன்னமயன் என்று அறிந்து ‘பிம்போஸி பிரதிபிம்போஸ்மி’ - நீங்கள் பிம்பன். நான் பிரதிபிம்பன் - என்று அறிந்து பக்தியுடன் பரமாத்மனை பூஜித்தால், பரமாத்மன் அதனை ஏற்றுக்கொண்டு நமக்கு அருள்வான். 

***

No comments:

Post a Comment