#33 - விபூதி சந்தி
நித4ன த4னத3 விதா4த1 விக3தா1
ப்யதி4க ஸமஸமவர்த்தி ஸாமக3
த்ரித3ஷக3ண ஸம்பூஜ்ய த்ரிககு3த்தா3ம ஷுப4நாம |
மது4மத2ன ப்4ருகு3ராம கோ4ட1க
வத3ன ஸர்வ பதா3ர்த்த2தொ3ளு து1தி3
மொத3லு தும்பி3ஹனெந்து3 சிந்தி1ஸு பி3ம்ப3ரூபத3லி ||33
நிதன = பிரளயகாரகனாகையால், பரமாத்மனுக்கு நிதன என்று பெயர்
தனத = ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவன் ஆகையால், தனத என்று பெயர்
விதாத = ஸ்ருஷ்டி கர்த்தன்
விகதாப்யதிகஸம = தன்னைவிட உத்தமரோ, சமரோ இல்லாதவன்
சமவர்த்தி = அனைவரிலும் சமமாக நிலைத்திருப்பவன்
சாமக = சாமவேதத்தால் புகழப்படுபவன்
த்ரிதஷகண சம்பூஜ்ய = 5 .. கணங்களால் பூஜிக்கப்படுபவன்
த்ரிககுப்தாம = ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் இருப்பவன்
மதுமதன = மது என்னும் தைத்யனைக் கொன்றவன்
ப்ருகுராம = பரசுராமன்
கோடகவதன = ஹயக்ரீவன்
ஷுபநாம = இப்படிப்பட்ட மங்களகரமான நாமங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
ஸர்வபதார்த்ததொளு = அனைத்து பதார்த்தங்களிலும்
துதிமொதலு = ஆதி முதல் அந்தம் வரைக்கும்
தும்பிஹனெந்து = வியாப்தனாக இருக்கிறான் என்று
பிம்பரூபதலி = உன் பிம்பரூபனாக இருக்கிறான் என்று
சிந்திஸு = நினைத்துப் பார்.
அனைத்து இடங்களிலும் இருப்பவனான ஸ்ரீபரமாத்மனை, தேகத்தில் பிம்பரூபனாக ஐக்ய சிந்தனை செய்யவேண்டும். எந்த பரமாத்மன், நிதன நாமகனாக பிரளயத்தை ஏற்படுத்துகிறானோ, அனைவரும் செல்வத்தைக் கொடுப்பவனாகையால் தனத என்று பெயரைக் கொண்டானோ, யார் ஸ்ருஷ்டியை செய்கிறானோ, எந்த பரமாத்மனுக்கு சமமோ, உத்தமரோ இல்லையோ, யார் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறானோ, அதாவது, பரமாத்மனுக்கு ஒருவரிடம் நட்பு, இன்னொருவரில் த்வேஷம் இல்லை என்று பொருள், அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப அவரவர்களுக்கு பலன்களைக் கொடுப்பதால், சமவர்த்தி என்று பெயருள்ளவன் என்று பொருள். சாமகானப்ரியன், பிரம்மாதி தேவதாகணங்களால் பூஜ்யன், ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று உலகங்களில் வசிப்பவன்.
இத்தகைய மங்கள நாமங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், மதுசூதனன், பரசுராமன், ஹயக்ரீவ என்னும் அவதார ரூபங்களால் அனைத்து பதார்த்தங்களின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் வியாப்தனாக இருக்கிறான். இத்தகைய ஸ்ரீஹரியே, அதே ரூபத்தினால் என் பிம்பரூபியாக இருக்கிறான் என்று நினைக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment