ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 30, 2020

#25 - விபூதி சந்தி

#25 - விபூதி சந்தி


மாதரிஷ்வனு தே3ஹரத2தொ3ளு
ஸுதனாகி3ஹ சர்வகாலதி3
ஸ்ரீதருணி வல்லப ரதிகனெந்தரிது3 நித்யதலி |
ப்ரீதியிந்த3லி போ1ஷிஸுத வா
தாதபாதி33ளிந்த3 அவிரத1
ஈ த1னுவினொளு மமதெ1 பி3ட்டிஹனவனெ மஹயோகி3 ||25


மாதரிஷ்வனு = வாயுதேவர்
தேஹரததொளு = தேகம் என்னும் இந்த ரதத்தில்
சர்வகாலதி = அனைத்து காலங்களிலும்
ஸூதனு = சாரதி
ஆகிஹ = ஆகியிருக்கிறான். 
ஸ்ரீதருணி வல்லபனு = ஸ்ரீதேவி என்னும் தருணியின் பதியான ஸ்ரீபரமாத்மன்
ரதிகனெந்தரிது = ரதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று அறிந்து 
நித்யதலி = தினந்தோறும் (எப்போதும்)
ப்ரீதியிந்தலி = பக்தி விஸ்வாசங்களால்
வாதாத பாதிகளிந்தலி = காற்று வீசுவது முதலான செயல்களால்
அவிரத = திடமாக (இடைவிடாமல்)
போஷிஸு = நன்றாக கவனி
ஈதனுவினொளு = இந்த தேகத்தில்
மமதெ = அபிமானத்தை (ப்ரியத்தை)
பிட்டிஹனு = விட்டவன் (யார் விடுகிறார்களோ)
அவனே
மஹாயோகி = மஹா யோகி ஆகிறான். 

தேகம் என்னும் ரதத்தில் சாரதியாக இருப்பவர் வாயுதேவர். பாகவதத்தில் ‘மனோரஷ்மிபுத்திஸுதோ’ ‘புத்திந்து ஸாரதிம்வித்தி’ புத்தியை சாரதியாக சொல்லியிருப்பர். மேலும் ‘மூலவாயு ரக்‌ஷஸக்ஞஷ்சக்ரே த்வேஷபுண்யதுஷ்க்ருதி’ என்னும் ஆத்யாத்ம யோக வாக்கியத்திற்கேற்ப சக்கரத்தில் இருக்கும் அச்சாணியே வாயுதேவர் என்றும் சொல்லியிருப்பர். ஆனால், தாசராயரோ வாயுதேவரையே சாரதி என்கிறார். இதில் பரஸ்பரம் கருத்து வேறுபாடு வருகிறதே என்றால், அது அப்படியில்லை. 

புத்தியை சாரதியாகி சொல்லியிருப்பது, வெறும் புத்தியை மட்டும் குறிப்பதல்ல. அபிமானி தேவதைகளையும் சொல்கின்றனர் என்று கருத வேண்டும். அப்படியானாலும், புத்திக்கு அபிமானி, உமா, ப்ருஹஸ்பதி ஆகியோர்களே தவிர, வாயுதேவர் இல்லையே என்றால், அதற்கு விளக்கம் இதுவே. புத்தியில் சித்த, புத்தி, அஹங்கார, மனஸ் என்று 4 பகுதிகள் உண்டு. சஞ்சலம் பிறக்கும் இடம் மனஸ். நான், எனது என்று சொல்வது அஹங்காரம். இது இப்படிப்பட்டது என்று தீர்மானம் செய்வது புத்தி. பகவத் பாதாரவிந்தங்களில் திடமாக நிற்கும் புத்தியே சித்தம் எனப்படுகிறது. புத்தியில் சுபுத்தி, துர்புத்தி என்று இரு பாகங்கள் உண்டு. புண்ய கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது சுபுத்தி. பாவ கர்மங்களில் நம்மை ஈடுபடுத்துவது துர்புத்தி. இந்த இரண்டும் அல்லாமல், வெறும் பகவந்தனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் புத்தியே சித்த. 

இப்படியாக சித்தத்திற்கும் புத்திக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும், குருபாண்டவ நியாயத்தைப் போன்றது என்று சொல்லலாம். அது என்னவெனில், கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் குரு வம்சத்தில் பிறந்ததால் ‘கௌரவர்கள்’ என்னும் சொல், பாண்டவர்களுக்கும்கூட பொருந்தும். ஆனாலும் கௌரவர் என்னும் சொல் துரியோதனாதிகளை மட்டுமே குறிப்பதோடு நின்றுவிட்டது. ஆனால், பாண்டவ என்னும் சொல், கௌரவர்களைக் குறிப்பதில்லை. பாண்டுராஜனின் மக்கள் மட்டுமே பாண்டவர்கள் என்று குறிக்கிறது. இந்த பெயர் துரியோதனாதிகளுக்கு பொருந்தாது. 

ஆகையால், புத்தியின் இன்னொரு பாகமே சித்தம் ஆனாலும், வெறும் பகவந்தனைப் பற்றி சிந்திக்கும் புத்திக்கு மட்டுமே சித்தத்வம் இருப்பதால், சித்த என்னும் சொல், புத்திக்கு சேர்வதில்லை. புத்தி என்னும் சொல் சித்தத்தையும் குறிக்கும். புத்தியை பகவந்தனிடம் ஈடுபடுத்தினால் அதுவே சித்தம் ஆவதால், அதனை சுபுத்தி எனலாம். இப்படியாக, பகவந்தனில் ஈடுபட்டிருக்கும் புத்தியிலிருந்து வேறுபட்டிருக்கும் சித்தத்திற்கு வாயுதேவரே அபிமானி. ஆகையால், இங்கு புத்தி என்பது சித்தத்தையும் மற்றும் சித்த என்னும் சொல், அபிமானியையும் குறிக்கும். இப்படியாக சிந்தித்தால், சித்தாபிமானியான வாயுதேவரே, சாரதி என ஆகிறது. ஆகையால், தாசராயரின் வாக்கியத்திற்கும், பாகவதாதிகளில் இருக்கும் வாக்கியத்திற்கும் வேறுபாடு இல்லை என்று அறியவேண்டும். 

அச்சாணியை வாயுதேவர் என்று சொல்லும் ஆத்யாத்ம யோகத்தின் வாக்கியத்தின்படி, அச்சாணி ரூபமாகவும், சாரதியாகவும் வாயுதேவரே இருக்கிறார் என்று சொன்னால் அதில் தவறு எதுவும் இல்லை. 

ஸ்ரீபரமாத்மனே இந்த தேக ரதத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அறிந்து தினந்தோறும் அன்ன, பானாதிகளால் தினந்தோறும் இந்த தேகத்தைப் பார்த்துக்கொள். இந்த தேகம் என்னுடையது என்று நினைத்து, இந்திரிய அபிமானத்திற்காக மட்டும் சரீரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். இந்த தேகம் பரமாத்மன் அமரும் ரதம். ஆகையால் இதை கழுவுகிறேன், ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கிறேன் என்று ரதம் கெடாமல் இருப்பதற்காக அன்ன, பானாதிகளால் நன்றாக பாதுகாப்பேன் என்று சிந்தித்து பார்த்துக் கொள். எனக்கு வெயில் ஆகாது, மழை பிடிக்காது என்று இந்திரிய அபிமானத்திற்காக தேக அபிமானத்தை செய்யாமல், பகவத்ப்ரீதிக்காக மட்டும் சரீர போஷணம் செய்தவாறு, வெயில், குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு, நான் எனது என்னும் அபிமானத்தை விட்டு இருப்பவன் யாரோ, அவனே மஹாயோகி. 

***

#24 - விபூதி சந்தி

#24 - விபூதி சந்தி


ஈ ஷரீரவெ ரத21தா1ஸு
வாஸக3ளு புண்ட்ரக3ளு த்4வஜ ஸிம்
ஹானவெ சித்தவு சுபுத்தி4யெ கலஷ ன்மனவெ |
பாஷ கு3ண த3ண்டத்ரயக3ளு ஷு
பா4 ஷுப4த்வய கர்மசக்ர ம
ஹா சமர்த்தா4ஷ்வக3ளு த3ஷ கரணங்க3ளெனிஸுவுவு ||24


ஈ ஷரீரவெ ரத, சுவாஸகளு = நாம் தரித்திருக்கும் வஸ்திரங்களே
பதாக = த்வஜங்கள் (கொடிகள்)
புண்ட்ரகளு = 12 கோபிசந்தன நாமங்களே, த்வஜஸ்தம்பங்கள் (கருட முத்திரை என்றால் கருட த்வஜம் என்று அர்த்தம்)
சித்தஸுபுத்தியெ = பகவத் விஷயமான புத்தியே
கலஷ = ரதத்தின் கலச
ஸன்மனவெ = பகவத் பாதாரவிந்தங்களில் நிலைத்திருக்கும் மனமே
பாஷ = லகான் (குதிரைகளை பிடித்து இழுக்கும் கயிறு)
குண = சத்வ ரஜஸ் தமோ குணங்கள்
தண்டத்ரயகளு = குதிரைகளை அடிக்கும் குச்சிகள்
ஷுபாஷுபத்வயகர்ம = புண்ய பாப கர்மங்கள்
சக்ர = (இரண்டு) சக்கரங்கள்
தஷகரணங்களு = பத்து இந்திரியங்கள்
மஹாஸமர்த்தாஷ்வகளு = மிகவும் திறன் கொண்ட குதிரைகள்
எனிஸுவவு = என்று நினைத்து பூஜிக்க வேண்டும்

நம் தேகத்தை ரதம் என்றும், பரமாத்மன் அதில் அமர்ந்திருக்கிறான் என்றும் சிந்தித்து பூஜிப்பது ஒரு வகையான சாதனை என்று இரு பத்யங்களால் விளக்குகிறார் தாசராயர். 

தேஹோரதஸ்த்வம் த்ரியாஷ்வ: ஸம்வத்ஸர வயோகதி: |
மனோரஷ்மிர்புத்தி ஸுதோஹ்ருன்னீடோ த்வந்த்வ கூபர: ||
(பாகவத 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயம் 18ம் ஸ்லோகம்)

இந்த வாக்கியத்தின் சாரத்தையே தாசராயர் இங்கு விளக்கியிருக்கிறார். இந்த சரீரமே ரதம். நாம் தரித்திருக்கும் ஆடைகளே ரதத்தின் கொடிகள். 12 கோபிசந்தன நாமங்களே கருட சின்னத்தால் கூடிய த்வஜம். நம் சித்தமே பரமாத்மன் அமரும் சிம்ஹாசனம். பகவத் விஷயத்தில் ஈடுபடும் புத்தியே ரதத்தின் மேல் இருக்கும் கலசம். பகவத் பாதாரவிந்தங்களில் இருக்கும் மனமே குதிரையின் லகான் கயிறுகள். ‘ஸன்மனவுபாஷ’ என்று சொல்கிறார். பாஷ என்றால் கயிறு. இதை லகான் கயிறு என்று ஏன் அர்த்தம் கொள்ளவேண்டும் என்றால், பாகவத வாக்கியத்தில் ‘மனோரஷ்மிபி:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரத்தினாலும், ரதத்திற்கு வெறும் கயிறின் சம்பந்தம் இல்லாததாலும், மேற்சொன்ன அர்த்தத்தையே சொல்ல வேண்டியதாகிறது. ஸத்வரஜஸ்தமோ குணங்களே தண்டங்கள் (கொம்பு / குச்சிகள்). புண்ய பாவங்களே சக்கரங்கள். ஞானேந்திரிய கர்மேந்திரியங்கள் பத்து - இவையே மிகவும் புத்திசாலிகளான / திறன்களைக் கொண்ட குதிரைகள். 

***

Wednesday, April 29, 2020

#23 - விபூதி சந்தி

#23 - விபூதி சந்தி


மாரமண னரமனெகெ3 ஸுமஹா
த்4வார வெனிஸுவ வதனகொப்பு1
தோரண ஷ்மச்ருக3ளு கே1ஷக3ளெ ப1தாகெ13ளு |
ஊரி நடெ3வங்க்4ரிக3ளு ஜங்கெ43
ளூரு மத்4யோத3ர ஷிரக3ளா
கா3ரது3ப்ப1ரிகெ33ளு கோ1ஷக3ளைது3 கோணெக3ளு ||23


மாரமணன = லட்சுமிபதியின்
அரமனெகெ = அரண்மனை என்னும் இந்த சரீரத்திற்கு
சுமஹாத்வாரவெனிஸுவ = பெரிய வாயில்கள் எனப்படும்
வதனகெ = முகத்திற்கு
ஒப்புவ = அழகான
ஸ்மஸ்ருகளு = மீசைகள்
தோரண = தோரணங்கள்
கேஷகளே = கூந்தல்களே
பதாகிகளு = அலங்காரக் கொடிகள்
ஊரிநடெவ = நிலத்தில் ஊன்றி நடக்கும்
அங்க்ரிகளு = பாதங்கள்
ஜங்கெகளு = முழங்காலுக்குக் கீழ் பாகங்கள்
ஊரு = துடைகள்
மத்ய = நடுவே
உதர = வயிறு
ஷிரகளு = தலை, ஆகியவையே
ஆகாரத = வீட்டில் உப்பரிகைகள்
கோஷகளைது = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் ஐந்து கோஷங்களும்
கோணெகளு = கொட்டடிகள்

ஸ்ரீபதியின் அரண்மனை என்னும் இந்த தேகத்திற்கு மகாத்வாரம் போல இருக்கும் இந்த முகத்தில் இருக்கும் மீசைகளே தோரணங்கள். அதாவது ‘தோரணோsஸ்த்ரீ பஹிர்த்வாரம்’ என்னும் அமரகோச வாக்கியத்திற்கேற்ப, தோரணங்கள் என்றால், ஊருக்கு எல்லையில் இருக்கும் வாயில் என்று பொருள். கூந்தல் மயிர்களே த்வஜக் கொடிகள். பூமியில் ஊன்றி நடக்கும் பாதங்கள், அதற்கு மேல் முழங்காலுக்குக் கீழ் இருக்கும் பகுதிகள், துடைகள், வயிறு, தலை ஆகியவையே வீட்டின் உப்பரிகைகள். அன்ன, பிராண, மனஸ், விக்ஞான, ஆனந்த என்னும் ஐந்து கோஷங்களே ஐந்து கொட்டடிகள். இந்த விதமாக நம் தேகத்தையே பரமாத்மனின் அரண்மனை என்று சிந்தித்து பூஜை செய்வது ஒரு சாதனையாகும். 

***

#22 - விபூதி சந்தி

#22 - விபூதி சந்தி


உருபராக்ரம அரமனெகெ33
கரணக3ளு கன்னடி3ஸாலுக3
ளரவிதூ3ரன சத்3விஹாரக்கெ1 சித்த1 மண்டபவு |
மரளிபீ3சுவ ஷ்வாஸக3ளு சா
மர விலாஸினி பு3த்தி4 தா3மோ
3ரகெ சாஷ்டாங்க3 பிரணாமக3ளே ஸுஷயனக3ளு ||22


உருபராக்ரம = உரு = மிகச்சிறந்த பராக்ரமன = பராக்ரமசாலியான பரமாத்மனின் 
அரமனகெ = நம் இதயம் என்னும் அரண்மனைக்கு
தஷகரணகளு = ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5 என மொத்தம் 10 இந்திரியங்கள்
கன்னடிய சாலுகளு = வரிசையாக இருக்கும் கண்ணாடிகள்
அரவிதூரன = தோஷங்கள் இல்லாதவனான ஸ்ரீஹரியின்
ஸத்விஹாரகெ = நன்றாக நடவடிக்கை செய்வதற்கு
சித்த = நம் சித்தம்
மண்டபவு = மண்டபம்
மரளிபீசுவ ஷ்வாஸகளு = திரும்பத்திரும்ப வீசும் ஸ்வாசங்கள்
சாமர = சாமரங்கள்
புத்தி = புத்தியே
விலாஸினி = வேசிப்பெண்
சுஷயனகளு = நாம் படுத்திருப்பதே
தாமோதரகெ = தாமோதரனுக்கு
சாஷ்டாங்க பிரணாமகளு = சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் போன்றதாகும். 

பஹு பராக்ரமசாலியான பரமாத்மனின் அரண்மனையப் போன்றதாகும், நம் இதயம். இதற்கு, ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்னும் 10 இந்திரியங்கள் கண்ணாடியின் வரிசைகளைப் போன்று இருக்கின்றன. தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி, நன்றாக நடவடிக்கைகளை செய்வதற்கு, நம் சித்தமே மண்டபமாக இருக்கிறது. திரும்பத்திரும்ப நாம் விடும் ஸ்வாசங்களே அவனுக்கான சாமரங்கள். புத்தியே வேசிப்பெண். நாம் படுப்பதே, தாமோதரனுக்கு நாம் செய்யும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் என்று நினைக்க வேண்டும். 

***

Tuesday, April 28, 2020

#21 - விபூதி சந்தி

#21 - விபூதி சந்தி


இன ஷஷாங்காதிக3ளு லகுமி
வனிதெயரஸன த்வாரபாலக
ரெனிசுதிப்பரு மனத3வ்ருத்திக3ளெ பதா3தி13ளு |
அனுப4விப விஷயங்க3ளெ ப
ட்டணக்கெ ப3ப்ப பஸாதக3ளு ஜீ
வனு சுவர்த111ப்பக3ள கைகொம்ப3 ஹரி தானு ||21


இன ஷஷாங்காதிகளு = சந்திர சூர்யாதி தத்வாபிமானி தேவதைகள்
லகுமி வனிதெ = லட்சுமியென்னும் உத்தம ராணியின்
அரஸன = பதியான ஸ்ரீபரமாத்மனின்
த்வாரபாலகரு = த்வார பாலகர்கள்
எனிசுதிப்பரு = என்று அழைக்கப்படுகிறார்கள்
மனதவ்ருத்திகளெ = மனதில் தோன்றும் கோரிக்கைகளே
பதாதிகளு = காலாட்கள்
அனுபவிப = நாம் அனுபவிக்கும்
விஷயங்களெ = விஷய போகங்களே
பட்டணகெ = சரீரம் என்னும் இந்த பட்டணத்திற்கு
பப்ப = வரும்
பஸாரகளு = மிகப்பெரிய கடைகள்
ஜீவனு = ஜீவர்கள்
ஸுவர்த்தக = நல்ல வியாபாரி
கப்பகள = கப்பங்களை
ஹரி = ஸ்ரீஹரி, தான்
கைகொம்ப = ஏற்றுக்கொள்கிறான் 

லட்சுமிதேவியின் ரமணனான ஸ்ரீபரமாத்மனின் த்வார பாலகர்கள், கண்களுக்கு அபிமானி தேவதைகளான சந்திர, சூரியர்கள் என்று அறியவேண்டும். மனதில் அவ்வப்போது தோன்றும் கோரிக்கைகளே காலாட்கள். நாம் அனுபவிக்கும் விஷயபோகங்களே இந்த பட்டணத்திற்கு வரும் மிகப்பெரிய கடைகள். ஜீவனே அந்த பொருட்களை வாங்கும் நுகர்வோன். இதற்கான கப்பத்தை ஸ்ரீபரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான். 

***

#20 - விபூதி சந்தி

#20 - விபூதி சந்தி


தா4து13ளு ப்தாவரண உப
வீதி43ளெ நாடிக3ளு மத33ளு
யூத1பக3ளு சுஷும்ன நாடி3யெ ராஜபந்தா2|
ஈ தனூருஹக3ளெ வனங்க3ளு
மாதரிஷ்வனு ப1ஞ்சரூபதி3
பாத113ளெம்பரிக3ளனு ம்ஹரிப த1ளவார ||20


தாதுகளு = ரத்தம், மாமிசம், மஜ்ஜை என்னும் 7 பாகங்கள்
ஸப்தாவரணவு = 7 பிரகாரங்கள் 
நாடிகளு உபவீதிகளு = நாடிகளே குறுக்குத் தெருக்கள்
மதகளு = செல்வங்களால் வரும் கர்வம்
யூதபகளு = மத கஜங்கள்
சுஷும்னா நாடியே = தேகத்தின் நடுவில் இருக்கும் பிரம்ம நாடியே
ராஜபந்தான = ராஜ மார்க்கம் (ராஜவீதி)
ஈதனுருஹகளெ = முடிகளே வனங்கள்
மாதரிஷ்வனு = முக்யபிராண தேவர்
பஞ்சரூபதி = பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து ரூபங்களில்
பாதககளெம்ப = பாவங்கள் என்னும்
அரிகளன = எதிரிகளை
ஸம்ஹரிப = கொல்லும்
தளவார = ஆயுதங்கள்

த்வக், சர்ம, மாம்ஸ, ரக்த, மேதஸ், மஜ்ஜை, அஸ்தி என்னும் 7 பாகங்களே இந்த பட்டணத்தின் ஏழு பிரகாரங்கள். இளா பிங்களா ஆகிய நாடிகளே சிறிய குறுக்குத் தெருக்கள். கல்வி, செல்வங்களால் வரும் எட்டு துர்குணங்களே மதகஜங்கள். முக்யபிராணதேவர், பிராண, அபானாதி ஐந்து ரூபங்களால் காம, கிரோதாதி ஆறு எதிரிகளைக் கொல்லும் ஆயுதங்கள்.

***

Monday, April 27, 2020

#19 - விபூதி சந்தி

#19 - விபூதி சந்தி


மது4விரோதி4ய ப1ட்டணகெ பூ
ர்வத31வாடக3ளக்‌ஷி நாஸிக1
வத3ஷ்ரோத்ரக3ளெரடு த3க்‌ஷிண உத்த1ர த்3வார |
கு33 உபஸ்த23ளெரடு பஸ்சிம
131ளெனிபுவு ஷட்ரோஜவே
தன ஹ்ருத3யவெ மண்டப த்ரிகு3ணகளெ கலஷக3ளு ||19


மதுவிரோதிய = மது நாமக தைத்யனைக் கொன்ற ஸ்ரீபரமாத்மனின் 
பட்டணகெ = நம் இந்த சரீரமே அவன் பட்டணம். அத்தகைய பட்டணத்திற்கு
அக்‌ஷி = இரு கண்கள்
நாசிக = மூக்கு துவாரங்கள்
வதன = வாய் ஆகியவை
பூர்வத கவாடகளு = கிழக்கு வாசல்கள்
ஸ்ரோத்ரகளெரடு = காதுகள் இரண்டும்
தக்‌ஷிண உத்தர த்வார = வடக்கு தெற்கு வாசல்கள்
குத உபஸ்தகளெரடு = மல, ஜல த்வாரங்கள் இரண்டும்
பஸ்சிம கதகளெனிபுவு = மேற்கு வாசல்கள் எனப்படுகின்றன
ஷட்ஸரோஜவே = இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே
ஸதன = பரமாத்மனின் வீடு
ஹ்ருதயவெ மண்டப = இதயமே மண்டபம்
த்ருகுணகளெ = சத்வ ரஜஸ் தமோ குணங்களே
கலஷ = மண்டபத்தின் கலசங்கள் என்று அறியவேண்டும். 

19ம் பத்யத்திலிருந்து 23ம் பத்யம் வரைக்கும், இந்த சரீரத்தை பரமாத்மனின் பட்டணமாக அறிந்து, பூஜிக்கும் விதங்களைப் பற்றி கூறுகிறார் தாசராயர். 

நம் சரீரமே, மதுசூதனனின் பட்டணம் என்று சிந்திக்க வேண்டும். பட்டணம் என்று சொன்ன பிறகு அதன் லட்சணங்கள் எவை என்று சொல்கிறார். அது என்ன என்றால்:

கண்கள், மூக்கு த்வாரங்கள், வாய் இவைகளே இந்த பட்டணத்திற்கு கிழக்கு வாசல்கள். வலது காது தெற்கு கதவு. இடது காது வடக்கு காது. மல ஜல த்வாரங்கள் மேற்கு வாசல்கள். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதம் 4ம் ஸ்கந்தம் 29ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆதார ஸ்லோகங்கள் இவையே. 

நவத்வாரம் த்விஹஸ்தாங்க்ரிம் புரம்மனுத ஸாத்விதி |
அக்‌ஷிணீ நாஸிகே அஸ்யமிதி பஞ்சபுரஸ்க்ருதா: ||
தக்‌ஷிணாதக்‌ஷிண: கர்ண: உத்தராசோத்தர: ஸ்ம்ருத: |
பஷ்சிமே இத்யதௌத்வாரௌ குதஷிஷ்னாவிஹோதிதே |

நம் இதயத்தில் இருக்கும் ஆறு தள தாமரையே பரமாத்மனின் வீடு. இதயமே மண்டபம். ஸத்வரஜஸ்தமோ குணங்களே கலசம்.

***

#18 - விபூதி சந்தி

#18 - விபூதி சந்தி


கோ3ளக1வெ கு1ண்ட3க்னி க1ரணவு
மேலொத3கி33ஹ விஷய மிதெ4யு
கா3ளி யத்னவு கா1ம தூ4மவு ன்னிதா3னார்ச்சி |
மேளனவெ ப்ரஜ்வாலெ கி1டிக3ளு
தூ1ளிதா3னந்த33ளு த1த்த1
த்கா1ல மாது13ளெல்ல மந்த்ராத்4யாத்1ம யக்ஞவிது3 ||18


கோளகவெ = சூக்‌ஷ்ம ஸ்தூல சரீரங்களே
குண்ட = அக்னிகுண்டம்
கரணவு = இந்திரியங்களே அக்னி
மேலொதகிபஹ விஷய = அவ்வப்போது கிடைக்கும் விஷயங்களே
சமிதெயு = காஷ்டங்கள் (குச்சிகள்)
யத்னவு = முயற்சியே, காற்று
காம = விஷயத்தைப் பற்றிய ஆசையே
தூமவு = புகை
ஸன்னிதான = விஷயேந்திரியங்களுக்கும், விஷய போக்ய வஸ்துகளுக்கும் அருகில்
அர்ச்சி = அக்னி ஜ்வாலை
மேளனவெ = விஷயேந்திரியங்களுக்கும் போக்ய வஸ்துகளுக்கும் இருக்கும் பரஸ்பர சம்பந்தம்
ப்ரஜ்வாலெ = விசேஷமான ஜ்வாலை
கிடிகளு = ஒளி
தூளிதானந்தகளு = போகத்தினால் வரும் மகிழ்ச்சியே 
தத்தத்காலமாதுகளெல்ல = அந்தந்த காலங்களில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும்
மந்த்ர = மந்திரங்கள்
இது = இப்படி, சிந்திப்பதே ஆத்யாத்ம யக்ஞம் ஆகும். 

தேஹேந்திரியங்களின் செயல்களையே ஆத்யாத்ம யக்ஞங்களாக சிந்திப்பது என்பது பரமாத்மனின் பூஜை என்று சொல்கிறார் தாசராயர். 

ஸ்தூல மற்றும் ஸூக்‌ஷ்ம சரீரங்களே அக்னி குண்டங்கள். கண், காது ஆகிய இந்திரியங்களே அக்னி. கண், காது ஆகியவற்றால் செய்யப்படும் விஷயங்களான பார்ப்பது, கேட்பது ஆகியவையே காஷ்டங்கள். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் முயற்சிப்பதே காற்று. அந்த விஷய போகங்களைப் பற்றிய விருப்பமே புகை. கண், காது முதலான இந்திரியங்களுக்கு பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உரிய பொருட்கள் அதாவது அழகான ரூபமுள்ள பொருள், அல்லது இனிமையான பாடல் ஆகியவற்றின் சமீபமே (அருகாமையே) ஜ்வாலை. இந்திரியங்களுக்கு யோக்ய வஸ்துகள் கிடைப்பதே விசேஷ ஜ்வாலை. 

அதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே ஒளி. அந்தந்த காலத்திற்கேற்ப பேசும் பேச்சுக்களே மந்திரங்கள்.

இப்படி நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பகவந்தனுக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தையே சிந்திப்பதற்கு ஆத்யாத்ம யக்ஞம் என்று பெயர். பிரத்யட்ச யாகங்களை செய்வதற்கு, அக்னியின் முன் அமர்ந்து கஷ்டமான யக்ஞ யாகங்களை செய்தாலும், இந்த ஆத்யாத்ம யாகத்திற்கு சமமான பலன் கிடைக்காது. இந்த வகையான ஆத்யாத்ம யக்ஞமானது பரமாத்மனின் விசேஷமான பூஜை என்று அறியவேண்டும். த்ரவ்ய யக்ஞாதிகள் கஷ்டமானவை, பலன் குறைவு, ஆனால், இந்த யக்ஞமானது அதிக பலன்களைக் கொடுக்கக்கூடியது. 

’ஷப்தாதீன்விஷயானன்யே இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி’ - சில ஞானிகள் தாம் அனுபவிக்கும் விஷய போகங்களை, தம் சொற்களால், இந்திரியாக்னிகளில் ஹோமம் செய்வர். என்னும் கீதா வாக்கியத்தின் சாரமே இங்கு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

***

Sunday, April 26, 2020

#17 - விபூதி சந்தி

#17 - விபூதி சந்தி


சதுரவித4 புருஷார்த்த2 படெ3வரெ
சதுரத3ஷ லோக13ள மத்4யதொ3
ளித1ரு பா1யக3ளில்ல நோடலு சகலசாஸ்திரத3லி |
தத விஷயேந்திரயக3ளலி ப்ரவி
ததனெனிஸி ராஜிஸுவ லகுமி
பதிகெ3 ர்வமர்ப்பணெய மஹபூஜெ து3பாய ||17


சதுரவித புருஷார்த்த படெவரெ = தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கு புருஷார்த்தங்களைப் பெறவேண்டுமெனில்
சதுர்தஷ லோககள மத்யதொள் = 14 உலகங்களின் நடுவில்
சகல சாஸ்திரதலி = அனைத்து சாஸ்திரங்களில்
நோடலு = பார்த்தால்
இதருபாயகளில்ல = வேறு உபாயங்கள் இல்லை
ஸதத = எப்போதும்
விஷயேந்திரியகளலி = விஷய சுகானுபவத்திற்கு காரணங்களான ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களில் 
ப்ரவிததனெனிஸி = வியாப்தன் என்று நினைத்து
ராஜிஸுவ = ஒளிர்ந்து கொண்டிருக்கும்
லகுமிபதிகெ = லட்சுமிபதிக்கு
ஸர்வஸமர்ப்பணெய = அனைத்தையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்பதே
மஹபூஜெ சதுபாய = மகாபூஜை சரியான வழியாகும்

சகல சமர்ப்பணையினால் பரமாத்மனை தியானம் செய்வதைவிட மிகப்பெரிய சாதனம் வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறார். தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கு புருஷார்த்தங்களைப் பெறவேண்டுமெனில், இந்த 14 உலகங்களில் எந்த நற்சாஸ்திரங்களைத் தேடினாலும், ஞானேந்திரிய கர்மேந்திரியங்களில், தத்ரூபியாகி, தன் நாமங்களால் அந்தந்த இந்திரியங்களில் வியாப்தனான பரமாத்மனுக்கு, அந்தந்த இந்திரியங்களால் செய்த புண்ணிய பாபாதிகள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்வது என்பது மிகப்பெரிய மகாபூஜையே,  இதைத்தவிர வேறு உபாயம் இல்லை. 

***

#16 - விபூதி சந்தி

#16 - விபூதி சந்தி


மன வசன காய ப்ரத3க்‌ஷணெ
அனுதி3னதி3 சர்வத்ர வியாபக1
வன ருஹேக்‌ஷண க3ர்ப்பிசுத1 மோதி3ஸு1லிரு சதத |
அனுப4வக்கெ1 தந்து3கோ1 சகல ஸா
தனக3ளொளகி3து3 முக்2ய பாமர
மனுஜரிகெ3 பே1ளித3ரெ திளியது3 பு34ரிக3ல்லத3லெ ||16


சர்வத்ர வியாபக = அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும்
வனருஹேக்‌ஷணகெ = தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீபரமாத்மனுக்கு
அனுதினதி = தினந்தோறும்
மனவசன காயக = மனோ, வாக், காயங்களால் செய்யப்படும் செயல்களே
பிரதக்‌ஷிணே = பிரதட்சிணை என்று நினைத்து
அர்ப்பிஸுத = அந்த பரமாத்மனுக்கு அர்ப்பணம் செய்து
ஸதத = அனைத்து காலங்களிலும்
மோதிஸுதலிரு = மகிழ்ச்சி அடைவாயாக
அனுபவகெ தந்துகோ = ஹே அதிகாரியான மனிதனே. நாம் சொன்னதை அனுபவத்திற்குக் கொண்டுவா. (சொன்னவாறு செய்)
ஸாதனகளொளகெ = முக்திக்காக நாம் செய்யும் சாதனைக்கான செயல்கள், பற்பல இருந்தாலும், அந்த சாதனைகளுக்குள், 
இது முக்ய = இதையே முக்கிய சாதனை என்று அறி
புதரிகல்லதெ = ஞானிகளைத் தவிர 
பாமர மனுஜரிகெ = அஞ்ஞானிகளுக்கு 
பேளிதரெ = இதைச் சொன்னால்
திளியது = இந்த விஷயங்கள் புரியாது.

மனதால், வாக்கினால், தேகத்தால் செய்யும் அனைத்து காரியங்களையும், ஸ்ரீபரமாத்மனுக்கு செய்யப்படும் பிரதட்சிணை என்று நினைத்து, அவற்றை ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து, மகிழ்ச்சி அடைந்துகொண்டிரு. இந்த விஷயங்களை சொல்லிப் பலனில்லை. அனுபவத்திற்குக் கொண்டு வா. முக்திக்கு இதைவிட சாதனை என்று எதுவும் இல்லை. ஆனால், இது சாதாரண மக்களின் மனதிற்கு புரிவது கஷ்டம். ஞானிகளுக்கு மட்டுமே புரியும் விஷயம் இது. அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்து என்ன பலன்? என்று உதாசீனம் செய்யவேண்டாம். புரியாத விஷயங்களை, குருகளிடமிருந்து அறிந்து, அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதே தாசராயரின் கருத்து. 

***

Saturday, April 25, 2020

#15 - விபூதி சந்தி

#15 - விபூதி சந்தி


பாபக1ர்மவு பா1துகெ13ளனு
லேப1னவு த்புண்ய ஷாஸ்த்ரா
லாப1னவெ ஸ்ரீதுளஸி ஸுமனோ வ்ருத்திக3ளு சுமன |
கோ1ப தூ41வு ப4க்தி பூ4ஷண
வ்யாபிஸி3 த்பு4த்தி ச1த்ரவு
தீ31வெ சுக்ஞான ஆரார்த்திக3ளெ கு3ணகத4||15


பாபகர்மவு = அஞ்ஞானத்தால், தெய்வ சங்கல்பத்தால் நடந்துவிட்ட பாப கர்மங்கள்
பாதுககளு = செருப்புகள்
ஸத்புண்ய ஷாஸ்த்ரா லாபனவெ = புண்ணியத்தை தரக்கூடிய சாஸ்திர பிரவசனம் அல்லது, சாஸ்திரம் சம்பந்தப்பட்ட பேச்சுகள்
அனுலேபனவு = சுகந்தம்
சுமனஸ்ஸு = சிறந்த கர்மங்களில் அல்லது பகவந்தனிடம் பக்தி கொண்ட மனம்
வ்ருத்திகளு = இந்திரியங்களின் செயல்கள்
சுமனா = புஷ்பங்கள்
கோபவு = பகவத் த்வேஷிகளில் செய்யும் கோபம்
தூபவு = தூபம்
பக்தி = த்ருடமான பக்தியே
பூஷண = ஆபரணங்கள்
வ்யாபிஸித சுபுத்தி = சத்விஷயங்களில் வியாபித்திருக்கும் உத்தம புத்தி
சத்ரவு = குடை
சுஞ்ஞானவெ = உத்தமமான ஞானமே
தீபவு = ஒளி
குணகதன = பரமாத்மனின் குணங்களை சொல்வதே
ஆர்திகளு = மங்களாரத்தி.

நம் மனப்பூர்வமாக பாவம் செய்யாமல், தெய்வ சங்கல்பத்திற்கேற்ப அஞ்ஞானத்தால் பாவங்களை செய்துவிட்டால், அவற்றை பரமாத்மனுக்கு பாதுகைகள் என்று சமர்ப்பிக்க வேண்டும். உத்தம புண்ணியத்தை தரக்கூடியதான நற்சாஸ்திர பாட, பிரவசனங்களே சுகந்தம் என்று நினைக்க வேண்டும். பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் இருக்கும் மனஸ்ஸே ஸ்ரீதுளசி. இந்திரியங்களின் செயல்களே புஷ்பங்கள். பகவத் த்வேஷிகளில் நாம் செய்யும் கோபமே, பரமாத்மனுக்கு தூபம் என்று நினைக்க வேண்டும். சத்பக்தியே ஆபரணங்கள். அனைத்து இடங்களிலும் வியாப்தனான பரமாத்மனிடம் நிலைத்திருக்கும் புத்தியே குடை. சுஞ்ஞானவே தீபம். பரமாத்மனின் குணங்களை வர்ணிப்பதே மங்களாரத்தி என்று நினைக்க வேண்டும். 

***

#14 - விபூதி சந்தி

#14 - விபூதி சந்தி


கோ3ளக13ளு ரமாரமணன நி
ஜாலயக3ள னுதினதி ஸம்ப்ர
க்‌ஷாலனெயெ ம்மார்ஜனவு க1ரணக3ளெ தீ3பக3
ஸாலு தத்தத் விஷயக3
ம்மேளனவே பரியங்க1 தத்ஸு2
தேளிகெ3யெ ஸுப்பத்திகா3த்ம நிவேத3னவே வஸன ||14


கோளகளு = கை கால்களால் ஆன இந்த ஸ்தூல தேகம், அதன் உள்ளே இருக்கும் அனிருத்த தேகம், லிங்கதேகம் ஆகியவை 
ரமாரமணன = ரமாபதியின்
நிஜாலயகளு = தேவாயலங்கள்
அனுதினதி = தினந்தோறும்
ப்ரக்‌ஷாலனவெ = தேகத்தை கழுவுவது (ஸ்னானம் செய்வது)
சம்மார்ஜனவு = பரமாத்மனின் கோயில்களை கழுவி, துடைப்பது
கரணகளெ = கை, கால் ஆகிய கரணங்களே
தீபகள சாலு = தீபங்களின் வரிசை
தத்தத் விஷயகள = சம்மேளனவெ = கண் காது ஆகிய இந்திரியங்களுக்கு, ரூப, ரஸ முதலான மாத்ரா குணங்களை பொருத்துவது.. அதாவது, கண்களால் பார்ப்பது, காதுகளால் கேட்பது என்று பொருள். இவையே, 
பரியங்க = படுக்கை
தத்சுக தேளிகெயெ = பார்த்து, கேட்டு அனுபவிக்கும் சுகமே
சுப்பத்திகெ = போர்வை
ஆத்ம நிவேதனெ = தன் சரீரத்தையே பரமாத்மனுக்கு சமர்ப்பணம் செய்வதே
வஸன = வஸ்திரம்.

தன் தேஹேந்திரியங்களால் தான் செய்யும் அனைத்து கர்மங்களும் பரமாத்மனின் பூஜை என்று எண்ண வேண்டும் என்னும் விஷயத்தை இங்கு விவரிக்கிறார் தாசராயர். விபூதி சந்தியென்று சொல்லிவிட்டு, இதற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை தாசராயர் இங்கு ஏன் சொல்கிறார் என்று கேட்கக்கூடாது. 

அது ஏனெனில், முந்தைய பத்யங்களில், தன் இந்திரியங்களிலும், பஞ்ச மஹாபூதங்களிலும், தன்மாத்ரா குணங்களிலும், விபூதியை சிந்தித்து பூஜிக்கும் விதத்தை சொல்லியிருந்தார். ‘சங்கோச விஸ்தராப்யாஞ்ச கதயந்தி மனீஷிண:’ என்னும் வாக்கியத்திற்கேற்ப, முதலில் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு, அதையே விளக்கமாக சொல்வது ஞானிகளின் சம்பிரதாயம் (வழக்கம்). அதைப் போலவே தாசராயரும், ’பாந்தளவெ மொதலாத’ என்னும் பத்யத்தினால் ஆகாயாதி ஒவ்வொன்றிலும் புதிது புதிதான பற்பல விதமான பூஜாசாதன த்ரவ்யங்களை சிந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அந்த பூஜா சாதனங்களையே இந்த பத்யங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகிறார். 

தேஹேந்திரியங்களால் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் பூஜை என்றே சிந்திக்க வேண்டும் என்று சொன்னது சம்பந்தமில்லாத விஷயங்கள் இல்லை என்று அறியவேண்டும். ரமாபதியான ஸ்ரீபரமாத்மனுக்கு, நம் ஸ்தூல தேகம், அனிருத்த தேகம், சூக்‌ஷ்ம லிங்க சரீரம் ஆகியவை தேவாலயங்கள் என்று நினைக்க வேண்டும். ஸ்னானங்களை செய்து நாம் தேகத்தை சுத்தம் செய்துகொள்வதே, பரமாத்மனின் கோயிலை நன்றாக கழுவித் துடைப்பது என்று நினைக்க வேண்டும். கை, கால்களே தீபங்களின் வரிசை. பார்ப்பது, கேட்பது ஆகிய விஷய அனுபவங்களே படுக்கை. அந்த அனுபவங்களால் கிடைக்கும் சுகங்களே போர்வை. தன் சரீரம், தன் மனைவி, மக்கள் ஆகிய அனைத்தையும் பரமாத்மனுக்கு ஒப்படைப்பதே வஸ்திரம். 

***

Friday, April 24, 2020

#13 - விபூதி சந்தி

#13 - விபூதி சந்தி


ஜலஜனாப4ன மூர்த்தி மனத3லி
நெலெகொ3ளிஸி நிஸ்சல ப4கு3தி1யலி
சளி பிஸிலு மளெ கா3ளிக3ள நிந்தி3ஸதெ நித்யத3லி |
நெலதொ3ளிஹ க3ந்த4வெ சுக2ந்த4வு
ஜலவெ ரஸ ரூபவே சுதீ3பவு
எலரு சாமர ஷப்த வாத்3ய க3ளர்ப்பிஸலு ஒலிவ ||13


ஜலஜனாபன = பத்பனாபனின்
மூர்த்தி = ராமகிருஷ்ணாதி ரூபங்களை
மனதலி = மனதில்
நெலெகொளிஸி = ஸ்திரமாக நிலைநிறுத்தி
நிஸ்சல பகுதியலி = த்ருட பக்தியில்
சளெபிஸிலு மளெ காளிகள நிந்திஸதெ = வெயில், மழை, குளிர் ஆகியவற்றை சகித்துக்கொண்டு 
நித்யதலி = தினமும்
நெலதலி = பூமியில்
இஹ = இருக்கும்
கந்தவெ = பொதுவாக இருக்கும் மணம்
சுகந்தவு = பரமாத்மனின் பூஜாசாதனமான சுகந்தம் 
ஜலவெ = தண்ணீரில் இருக்கும் சுவை குணமே அறுசுவை பதார்த்தங்கள்
ரூபவெ = அக்னியில் இருக்கும் ரூபகுணம். அதற்கு ஈடான பூஜாசாதனமான தீபம்.
எலரு = வாயுவில் இருக்கும் ஸ்பர்ஷ குணம்
சாமரவு = பூஜைக்கு பயன்படும் சாமரம்
ஷப்த = ஆகாயத்தில் இருக்கும் ஷப்த குணமே வாத்தியங்கள்
அர்ப்பிஸலு = இப்படியாக சிந்தித்து சமர்ப்பித்தால்
வலிவ = மகிழ்வான்

பஞ்சதன்மாத்ரா குணங்களில் பகவத்பூஜா சாதனங்களை சொல்கிறார். கமலனாபனின், ராமகிருஷ்ணாதி ரூபங்களை, த்ருடமான பக்தியினால், மனதில் நிலைநிறுத்தி, மாத்ரா ஸ்பர்ஷங்களால் ஆகும் குளிர், காற்று, வெயில், மழை, ஆகியவற்றின் தோஷங்களை திட்டாமல், அந்தந்த காலங்களில் பகவந்தனால் கிடைத்தவற்றால் திருப்திப்பட்டு, மனதிலேயே பரமாத்மனை பூஜித்தவாறு, ப்ருத்வி, அபு, தேஜஸ், வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் மாத்ரா குணங்களில் இருக்கும் மணமே சுகந்தம் என்றும், சுவையே அறுசுவையினாலான நைவேத்தியம் என்றும், ரூபமே தீபம் என்றும், ஸ்பர்ஷமே சாமரம் என்றும், ஷப்தமே வாத்தியங்கள் என்று நினைத்து பூஜித்தால், ஸ்ரீபரமாத்மன் நமக்கு அருள்வான். 

அதாவது, இந்த பூமியில் நாம் எங்கு இருந்தாலும், எவ்வகையான நறுமணத்தை நாம் முகர்ந்தாலும், ‘ஆஹா, எத்தகைய நறுமணம்! என்ன ஆனந்தம்!’ என்று நாம் மட்டும் திருப்தியடையாமல், அந்த நறுமணத்தை அதில் அந்தர்யாமியாக இருக்கும், கந்த குணத்திற்கான பூத தத்வ ரூபியான ஸ்ரீபரமாத்மனுக்கு இதையே நறுமணமாக அர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பிக்க வேண்டும். அறுசுவையில் இருக்கும் சுவையை, நாம் நாக்கின் மூலம் ஸ்வீகரிக்கும்போது, அந்த ருசியை, அதில் அந்த ரூபத்தால் இருக்கும் நம் நாக்கில் இருக்கும் பரமாத்மனுக்கு இந்த அறுசுவைகளின் சுவையை சமர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இதைப்போல, எந்த ரூபத்தைப் பார்த்தாலும், அந்த ரூபகுணங்களில் அதன் நாமகனாக இருக்கும் பரமாத்மனுக்கு நம் கண்ணிற்குத் தெரியும் தேஜோமய ரூபங்கள் அனைத்தும் தீபமாக சமர்ப்பிக்கிறேன் என்று நினைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் நாம் நொந்து போகும்போது, நல்ல தென்றல் வீசினால், அந்த ஸ்பர்ச சுகத்தை, ஸ்பர்ஷ குணத்தில் இருக்கும் பரமாத்மனுக்கு இது சாமரம் என்று சமர்ப்பிக்க வேண்டும்.

காதுகளில் விழும் அனைத்து நல்ல சப்தங்களும், பரமாத்மனுக்கு வாத்தியங்கள் என்று சமர்ப்பித்து பூஜித்தால் வெயில், குளிர் ஆகிய பிரச்னைகள் ஜீவனுக்கு எப்படி வரும்? அவன் பகவத் அருளுக்கு பாத்திரனாவான். 

***

#12 - விபூதி சந்தி

#12 - விபூதி சந்தி


பா3ந்த3ளவெ மொத3லாது33ரொளொ
ந்தொந்த3ரலி பூஜா ஸுசாத3
வெந்தெ3னிசுவ பதார்த்த23ளு ப3கெ33கெ3ய நூதனதி3 |
ந்தணிஸி கொண்டி3ஹவு த்யானகெ
தந்தி3னிது சிந்திஸி சதா கோ3
விந்தனர்ச்சிஸி நோடு3 நலிநலிதா3டு கொண்டாடு ||12


பாந்தளவே = ஆகாயமே
மொதலாதுதரொளு = முதலான பஞ்சபூதங்களில்
ஒந்தொந்தரலி = ஆகாயம், வாயு, தேஜஸ், தண்ணீர், ப்ருத்வி இந்த ஐவரிலும்
பூஜா சுசாதன வெந்தெனிஸுவ = தேவரபூஜைக்கு சிறந்த சாதனங்கள் / பதார்த்தங்கள் 
பகெபகெய = விதவிதமான
நூதனதி = புதிதாக
ஸந்தணிஸி கொண்டிஹவு = நிரம்பியிருக்கும்
த்யானகெ தந்து = அந்த பதார்த்தங்களை தியானித்து
இனிது சிந்திஸி = இந்த விதமாக சிந்தித்து
ஸதா = அனைத்து காலங்களிலும்
கோவிந்தன = வேதங்களால் புகழப்படும் ஸ்ரீபரமாத்மனை
அர்ச்சிஸி = பூஜித்து 
நோடுதலி = கண்டு
நலிதாடு = நர்த்தனம் செய்
கொண்டாடு = ஸ்தோத்திரம் செய்

10ம் பத்யத்திலிருந்து, த்ரவ்யம், தேகம் ஆகியவற்றில் அகண்ட விபூதியை சிந்திக்க வேண்டுமென்றும், சித்த புத்தி ஆகியவற்றில், ஞானேந்திரிய கர்மேந்திரியங்களிலும்கூட பகவத் விபூதியை அறிந்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லி, 11ம் பத்யத்தில் பாவாத்வைத, க்ரியாத்வைத, த்ரவ்யாத்வைத என்று 10ம் பத்யத்தின் அர்த்தத்தை மேலும் விளக்கினார். இப்போது 10ம் பத்யத்தில் விடப்பட்ட பஞ்சமஹாபூதங்களில் அறியவேண்டிய விபூதியை விளக்குகிறார். 

பாந்தள என்றால் ஆகாயம் எனத் தொடங்கும் ஐந்து பஞ்சபூதங்கள். வாயு, அக்னி, நீர், பூமி இந்த ஐந்தினையும் சிந்திக்க வேண்டும். இவற்றில், ஒவ்வொன்றிலும் பற்பல விதமான புதுப்புது பூஜாசாதன பதார்த்தங்கள் இருக்கின்றன என்று நினைக்க வேண்டும். பூஜை என்றால், பிரதிமைகளை முன்னால் வைத்துக்கொண்டு, பூக்களால் அர்ச்சித்து பூஜிப்பது மட்டும் அல்ல. பூஜாசாதன த்ரவ்யம் என்றால், கந்த, புஷ்ப, நைவேத்தியம் என்று பொருள் அல்ல. மனதில் ஆகாயாதி பஞ்சபூதங்களின் உதவியுடன் கிடைக்கும் பூஜாசாதன பதார்த்தங்கள் பற்பல உண்டு. அவை புதிதுபுதிதாக கற்பனைக்கு வரும். 

அது எப்படியெனில்: ஆகாச தத்வம் நம் ஸ்ரோத்ர இந்திரியத்திற்கு சம்பந்தப்பட்டது. இதன் மாத்ரா குணம் கேட்பது (ஸ்ரவணம்). காதால் நாம் கேட்கும்போது சிறந்த உபன்யாசம், பெரியவர்கள் செய்திருக்கும் கன்னட கீர்த்தனைகள் ஆகியவற்றால் கர்ணானந்தம் கிடைக்கும்போது, இவை அனைத்தும் பகவத்பூஜை என்று நினைக்கவேண்டும். வாயு ஸ்தானம், நம் த்வக் இந்திரியம். அதன் குணம் ஸ்பரிசம். இதில் பெண்களின் ஸ்பரிசத்தையே சுகம் என்று நினைப்பவர்கள், இப்போது அல்ப சுகத்தை அனுபவித்து, பின்னர் கஷ்டப்படுவார்கள். ஆகவே, இதனை விரும்பாமல், த்வக் இந்திரியமானது, அவனின் பக்தர்களின் ஆலிங்கனத்திற்கே என்று சிந்திப்பது, அல்லது கிருஹஸ்தர்கள் தங்கள் துணைகளுடன் கூடுவது இந்திரிய சுகத்திற்கு என்று நினைக்காமல், பகவத் ப்ரீத்யர்த்தம் என்றும், சந்தான பிராப்தி என்பது பித்ரு ருணத்தை பரிகரித்துக் கொள்வதற்கும் என்று அறிந்து, இதுவும்கூட பூஜா சாதனை என்று சிந்திக்க வேண்டும்.

தேஜஸ் தத்வத்தின் ஸ்தானம் கண்கள். அதன் குணரூபம், பகவந்தனின் சலாசல பிரதிமைகளை பார்ப்பது, பகவத் பக்தர்களை பார்ப்பது. இவற்றிற்கு கண்களை பயன்படுத்துவதால், தேஜஸ்தத்வம் (அக்னி) பூஜாசாதனம் ஆகிறது. உதக தத்வத்தின் ஸ்தானம் நாக்கு. இதன் குணம் ரசம் (சுவை). பகவந்தனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பதார்த்தங்களை உண்பதே பூஜாரூபம். ப்ருத்வி தத்வத்தின் ஸ்தானம் மூக்கு. இதன் குணரூபம், கந்த (முகர்வது). பகவந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிர்மால்யாதிகளை முகர்வது என்பது பகவத்பூஜை. இதற்கு சாதனம் பூ (Bhu) தத்வம். இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இங்கு சிறிதே விளக்கியிருக்கிறோம். இதைப் போலவே, ஆகாசாதி ஒவ்வொன்று தத்வங்களும், அனேக வித பூஜாசாதனங்களையும், தத்தம் தகுதிக்கேற்ப (யோக்யதானுசார) புதிதுபுதிதாக விஷயங்களை அறிந்துகொண்டு, தியானம் செய்ய வேண்டும் என்று பாகவத 9ம் ஸ்கந்தம், அம்பரீஷோபாக்யானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஸவைமன: க்ருஷ்ணபதாரவிந்தயோர் வஜாம்ஸி வைகுண்ட குணானுவர்ணனே |
கரைஹரேர்மந்திர மார்ஜனாதிஷுஸ்ருதே சகாராச்யுத ஸத்யதோதயே ||
முகுந்த லிங்கலயதர்ஷனே த்ருஷௌதத்ப்ருத்ய காத்ரஸ்பர்ஷேங்கஸங்கம் |
ப்ராணஞ்ச தத்பாதஸரோஜஸௌரப ஸ்ரீமத்துலஸ்யாம் ரஸனாந்த தர்பிதே ||
பாதௌஹரே: க்‌ஷேத்ரபதானுஸர்பணி ஷிரோஹ்ருஷீகேஷ பதாபிவந்தனே |
காமந்து தாஸ்யே நது காமகாம்யயா ததோத்தம ஸ்லோகஜனாஸ்ரயாம்ரதிம் ||

அம்பரீஷன் தன் 
மனதினை பகவந்தனின் பாதாரவிந்தங்களிலும், 
வாக்குகளை வைகுண்டபிரதனான ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிப்பதற்கும், 
கைகளை ஹரியின் வீட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும், 
காதுகளை பகவத் கதைகளைக் கேட்பதற்கும், 
கண்களை பகவந்தனின் பிரதிமாதிகளை பார்ப்பதற்கும், 
தேகத்தை பக்தர்களை ஆலிங்கனம் செய்வதற்கும், 
மூக்கினை ஸ்ரீபரமாத்மனின் பாத கமலங்களுக்கு அர்ப்பித்த ஸ்ரீதுளசி ஆகியவற்றை முகர்வதற்கும்,
நாக்கினை பரமாத்மனின் நைவேத்தியைத்தை உண்பதற்கும்,
பாதங்களை தீர்த்த க்‌ஷேத்திர சஞ்சாரத்திற்கும்,
தலையை பரமாத்மனை நமஸ்கரிப்பதற்கும்,
பயன்படுத்திக் கொண்டிருந்தான். 

காம என்றால் ஆசை. தான் பகவந்தனின் தாசன் ஆகவேண்டுமென்ற காமம் மட்டும் வைத்திருந்தான். ரதி என்றால், உத்தம பக்தர்களின் சங்கமே சுகம் என்று நினைப்பது. ஆகையாலேயே ஸ்ரீஹரி, அம்பரீஷனின் பாதுகாப்பிற்காக, யாருக்கும் கொடுக்காத சக்ராயுதத்தை அவனுக்குக் கொடுத்தான். 

இதைவிட பூஜை என்றால் வேறு என்ன? பூஜா சாதனங்களாக இதைவிட பயன்படுத்தக்கூடியவை வேறு என்ன உள்ளது? ஆகையாலேயே தாசராயர், ஆகாசாதிகளில் புதிதுபுதிதான பூஜாசாதனங்களை சிந்திக்க வேண்டும் என்றார். இப்படியாக, அனைத்து காலங்களிலும் சிந்தித்தவாறு, பரமாத்மனை பூஜித்தால், அதிலிருந்து கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே தெரியுமே தவிர, அனைவருக்கும் இது சாத்தியமில்லை. ஆகையால், தாசராயர் அர்ச்சித்துப் பாருங்கள் என்றார். மகிழ்ச்சியுடன் குதித்து ஆடு. ஸ்தோத்திரம் செய். இதைவிட பெரிய சாதனை வேறு எதுவும் இல்லை. 

***

Thursday, April 23, 2020

#11 - விபூதி சந்தி

#11 - விபூதி சந்தி

பா4வ த்3ரவ்ய க்1ரியெக3ளெனிசுவ
ஈ வித3த்வைதத்ரயங்க3
பா4விஸுத சத்ப4க்தியலி ர்வத்ர மரெயத3லெ |
தா1வக1னு தா1னெந்து3 பிரதிதி3
ஸேவிஸுவ ப4குதரிகெ3 தன்னனெ
ஈவ கா1வ க்ருபாளு கரிவரகொ3லித3 தெரனந்தெ ||11

பாவ த்ரவ்ய க்ரியெகளெனிஸுவ = பாவாத்வைத, த்ரவ்யாத்வைத, க்ரியாத்வைத என்று புகழ்பெற்றிருக்கும்
ஈ வித = இந்த விதமான
அத்வைதத்ரயங்கள = மூன்று அத்வைதங்களை
பாவிஸுத = சிந்தித்தவாறு
ஸத்பக்தியலி = சாத்விக பக்தியினால் (எதையும் எதிர்பார்க்காத பக்தியால்)
சர்வத்ர = அனைத்து தேச, காலங்களிலும் 
மரெயதலெ = மறக்காமல்
தாவகனு நானெந்து = உன்னவன் நான் என்று
ப்ரதிதிவஸவு ஸேவிஸுவ பக்தரிகெ = தினமும் வணங்கும் பக்தனுக்கு
தன்னன்னு = தன் நிஜரூபத்தை
ஈவ = அபரோக்‌ஷத்தில் காட்டுவான்
கரிவரகெ = கஜேந்திரனுக்கு
ஒலித தெரதந்தெ = தக்க சமயத்தில் காப்பாற்ற வந்ததைப் போல
க்ருபாளு = கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி
காவ = காப்பாற்றுவான்

முந்தைய பத்யத்தில் சொல்லியிருப்பதையே இங்கு விவரிக்கிறார். 

பாவாத்வைத, த்ரவ்யாத்வைத, க்ரியாத்வைத என்னும் மூன்று அத்வைதங்களை சிந்திக்க வேண்டும். நூல்களை நெய்ந்து எப்படி ஆடையாக செய்கிறார்களோ, அது தனித்தனியாக இருந்தால் நூல் எனவும், ஆடையான பிறகு அந்த நூல்களே குறுக்கும் நெடுக்குமாக இருந்தாலும், அதை நூல் என்று சொல்லாமல், ஆடை என்று சொல்வதைப் போல, இங்கு ஆடைக்கும் நூலுக்கும் எப்படி வித்தியாசம் இருக்கிறதோ, அதுபோலவே விஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மன் உலகத்தை நூல்களைப் போல, கண்டரூபியாக வியாபித்து, அகண்ட ரூபத்தினால் பிரபஞ்சமாக தோன்றுகிறான். ஆகையாலேயே, பரமாத்மனுக்கு விஸ்வ என்று பெயர். ஜீவருக்கும், பரமாத்மனுக்கும், நூலுக்கும் ஆடைக்கும் பேதம் இருப்பதைப் போல, பேதம் இருக்கிறது என்று நினைப்பதே பாவாத்வைத. 

தான், தன் மனைவி மக்கள் ஆகியோர் செய்வது, பார்ப்பது என அனைத்து செயல்களும், ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் என்று நினைத்தவாறு, அவற்றை ஸ்ரீபரமாத்மனே செய்விக்கிறான் என்று, அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவத்ரூபங்களை ஒன்றாக சிந்திப்பதற்கு த்ரவ்யாத்வைத என்று பெயர். 

தான் செய்யும் அனைத்து கர்மங்களையும், தன்னில் இருந்து பரமாத்மனே செய்கிறான், செய்விக்கிறான் என்று சிந்தித்து, தன் ஸ்வாதந்த்ர்ய கர்மத்தை விட்டு, அனைத்தையும் பரமாத்மனுக்கே அர்ப்பிப்பதை க்ரியாத்வைத என்கிறோம். 


இது போல, மூன்றுவித அத்வைதங்களை சிந்தித்தவாறு, நிஷ்காமமான மற்றும் திடமான பக்தியினால், அனைத்து காலங்களிலும் (எப்போதும்) பரமாத்மனை மறக்காமல், ’ஸ்வாமி, நான் உன் தாசர்களில் ஒருவன்’ என்று பரமாத்மனை வணங்கினால், பரமாத்மன் அவருக்கு அபரோக்‌ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். ரூபாந்தரத்தில் பிரத்யட்சமாக வந்து, ஜகன்னாததாசர் ஆகியோருக்கு தரிசனம் அளித்ததைப் போல தரிசனம் அளிப்பான். முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றியதைப் போல, ஆபத்துக் காலத்தில் மேற்சொன்ன பக்தர்களை காப்பாற்றுவான். ஆகையாலேயே, பரமாத்மனை கருணாளு என்கிறார்.

***