#36 - விபூதி சந்தி
நதி3ய ஜல நதி3கெ3ரெவ தெ1ரத3
ந்த3த3லி ப4கவத்3தத்த த4ர்மக3
ளுத3தி4 ஷயனனிக3ர்ப்பிசுத1 வ்யாவ்ருத்த1 நீனாகி3 |
விதி4 நிஷேதா4தி3க3ளிகொளகா3
க3த3லெ மாடு3த1 த3ர்வியந்த3தி3
பது3மனாப4ன சகலகர்மக3ளல்லி நெனெயுதிரு ||36
நதிய ஜல = ஆற்று நீரை
நதிகெ எரெவந்ததலி = ஆற்றிலேயே (அர்க்யத்தை) கொடுப்பதைப் போல
பகவத்தத்த = பரமாத்மன் கொடுத்த
தர்மகளு = தர்மங்களை (பதார்த்தங்களை)
உததிஷயனனிகெ = பாற்கடலில் படுத்திருக்கும் ஸ்ரீஹரிக்கு
அர்ப்பிஸுத = அர்ப்பித்தவாறு
நீ = நீ
வ்யாவர்த்தனாகி = நானே செய்தேன் என்னும் சிந்தனையை விட்டு, அதாவது ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானத்தை விட்டு
விதி நிஷேதாதிகளிகொளகாகதலெ = செய்ய வேண்டியதை, செய்யக்கூடாதவற்றை, நானே செய்தேன், நானே விட்டேன் என்ற புத்திக்கு (அஹங்காரத்தை) ஆளாகாமல்
மாடுத = அ-ஸ்வதந்த்ரனான நான், பரமாத்மன் செய்வதைப்போல செய்வேன் என்னும் சிந்தனையுடன் கர்மங்களை செய்தவாறு
தர்வியந்ததி = கரண்டிகளைப் போல என்றால், சாம்பார், ரசம் என அனைத்து பாத்திரங்களிலும் கரண்டி எப்படி மூழ்குகிறதோ அது போல. அதாவது. அஸ்வதந்த்ரமான கரண்டி, தன்னை யார் பிடித்திருக்கிறார்களோ, அவர்கள் செய்வதற்கேற்ப வெவ்வேறு பாத்திரங்களில் மூழ்கி எழுகிறது என்ற உதாரணம் இங்கு சொல்லப்படுகிறது. சிலர் ஜீவருக்கு கர்த்ருத்வமே இல்லை என்னும் விஷயத்தில் கரண்டி உவமையை சொல்கின்றனர். அப்படி சொன்னால், சித்தாந்தத்திற்கும், லௌகிக உவமைக்கும் விரோதம் ஏற்படுகிறது. ரசம், சாம்பார் பாத்திரங்களில் மூழ்கும் கரண்டிக்கு எப்படி காரம், இனிப்பு ஆகிய துக்கங்கள் இல்லையோ, அப்படியே, ஜீவனுக்கும் நரக, ஸ்வர்க்காதிகளால் ஆகும் துக்க சுகங்கள் இல்லை என்று ஆகிறது. ’ஜீவோபிகர்த்தா’ ஆகிய வாக்கியங்கள் பயனில்லை என்று ஆகிறது. ஆகையால், கரண்டி உவமையை அ-ஸ்வதந்த்ர கர்த்ருத்வ விஷயத்தில் மட்டும் உவமை என்று நினைக்கவேண்டும்.
சகலகர்மகளல்லி = நாம் செய்யும் அனைத்து கர்மங்களையும்
பதுமனாபன = ஸ்ரீபத்பனாபனே ஸ்வதந்த்ரனாக செய்கிறான் என்று
நெனவுதிரு = நினைத்திரு.
***
No comments:
Post a Comment