ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, May 19, 2020

#23 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#23 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


சதுரவிம்தி த1த்வதொ3ளு த
த்பதிக3 ளெனிஸுவ பி3ரம்மமுக தே3
வதெ13ளொளு ஹன்னொந்து3 னூரைவத்தெ1ரடு3 ரூப1 |
வித11னாகி3த்தெ3ல்ல ஜீவர
ஜத1ன மாடு3வகோ3சுக2 ஜக3
த்ப1தி1கெ3 ஏனாத3ரு ப்ரயோஜனவில்ல வத3ரிந்த3 ||23

சதுரவிம்சதி தத்வதொளு = 24 தத்வங்களில்
தத்பதிகளெனிஸுவ = தத்வாபிமானிகள் என்று பெயர் பெற்றிருக்கும்
பிரம்மமுக தேவதெகளொளு = பிரம்மன் முதலான தேவதைகளில்
ஹன்னொந்து நூரைவத்தெரடு ரூப = 1152 ரூபங்கள்
விததனாகித்து = வியாப்தனாக இருந்து
யல்லஜீவர = அனைத்து ஜீவர்களை
ஜதனமாடுவ = ரக்‌ஷணை செய்யும்
ஜகத்பதிகெ = இந்த பரமாத்மனுக்கு (இப்படி அனைவரையும் காப்பதினால்)
ஏனாதரு = ஏதாவது
பிரயோஜனவில்ல = பிரயோஜனம் இல்லை.

இந்த பத்யத்தினால், 24 தத்வங்களிலும், தத்வாபிமானி தேவதைகளிலும் இருக்கும் மொத்த பகவத்ரூபங்களையும் சொல்லியவாறு, தனக்கு எவ்வித பலனும் இல்லாமலேயே, உலகத்தைக் காக்கிறான் என்று பகவந்தனின் மகிமையை சொல்கிறார்.

24 தத்வங்களிலும், அந்த தத்வாபிமானி தேவதைகளான பிரம்ம முதலான தேவதைகளின் உள் மொத்தம் 1152 ரூபங்களால் ஸ்ரீஹரி வியாப்தனாக இருக்கிறான். அது எப்படியெனில்: தத்வங்கள் 24, மனஸ், புத்தி முதலான ஒவ்வொரு தத்வத்திலும் ஸந்த்ருப்த தத்வங்கள் என்று 24 தத்வகுணங்கள் சேர்ந்திருக்கின்றன. இந்த இரண்டையும் பெருக்கினால், 24*24 = 576 ஆகிறது. இதைப்போல, தத்வாபிமானி தேவதைகள் 24 ஒவ்வொரு தேவதைகளிலும் தனித்தனியாக 24 தத்வாபிமானிகள். இங்கும் 24*24 = 576. இந்த இரண்டையும் சேர்த்தால் 576+576 = 1152 ஆகிறது.

இவ்வளவு ரூபங்களால் வியாபித்திருந்து, அனைத்து ஜீவர்களையும் பாதுகாக்கிறார். ஆனால், ஜகத்பதியான பரமாத்மனுக்கு இதனால் ஏதாவது பலன் இருக்கிறதா? ஒன்றும் இல்லை. தேவஸ்யேஷ ஸ்வபாவோயம் ஆப்தகாமஸ்ய காஸ்ப்ருஹாஸ்ரீபரமாத்மனுக்கு இந்த உலகத்தைக் காக்கும் விஷயமானது, ஒரு விளையாட்டைப் போல, ஸ்வபாவமே தவிர, பூர்ணகாமனான ஸ்வாமிக்கு இதனால் ஆவது என்ன? என்னும் ஸ்ருதி வாக்கியங்கள் இதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன. (இந்த விஷயம் மங்களாசரண சந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது).


***

No comments:

Post a Comment