#9 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ஐது3னூரெப்பத்த நாலகு
ஆதி4பௌ4திகத3ல்லி திளிவரு
ஐதெ3ரடு ஷத1 ஏகவிம்ஷதி ரூபவாத்4யாத்ம
பே4த3கள லின்னூர மூவ
த்தா1த3 மேலொந்ததி4க மூர்த்திக3
ளாத3ரதி3 ஆதி4தை3வதொளு சிந்திபரு பூ4சுரரு ||9
ஆத்யாத்மாதிகளில் இருக்கும், சூர்யமண்டல மத்யவர்த்தியான நாராயணனின் ரூபங்களின் சிந்தனையைப் பற்றி
சொல்கிறார்.
க்ருணி, சூர்ய, ஆதித்ய என்னும் நாமங்களால் ஆதிபூதாதி மூன்றில் அந்தந்த எண்ணிக்கையின்படி
ஸ்ரீமன் நாராயணன் நிலைத்திருக்கிறான். க்ருணி=க்=4, ர்=2,
ணி=5.
வலது பக்கத்திலிருந்து பார்த்தால், 524 ரூபங்களால்
ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்களில் இருக்கிறான். ஆத்யாத்ம என்னும் மனஸ் தத்வத்தில் சூர்ய
நாமகனாகி,
சூ=7,
ர்=2,
ய=1,
721 ரூபங்களில் இருக்கிறான். இந்த எண்ணிக்கையை ஏன் வலப்பக்கத்திலிருந்து மாற்றி
படிக்கவில்லை என்றால், இந்த மந்திரத்தின் ‘ஓம் க்ருணி: சூர்ய ஆதித்ய:’ என்பதில், சூர்ய என்னும் சொல் நடுவில் இருந்து, ஷடங்கன்யாசங்களில் கிரம, தலைகீழ்-கிரமங்களின் விதிகளின்படி மந்திரங்களை உச்சரித்தவாறு நியாசங்களை
செய்யும்போது, கிரமத்திலும், தலைகீழ்-கிரமங்களிலும் சூர்ய என்னும் சொல் நடுவில் இருக்கிறது என்று
குறிக்கிறது.
அது எப்படியெனில்:
ஓம் க்ருணி ஹ்ருதயாய நம:
சூர்யாய ஷிரஸே ஸ்வாஹா
ஆதித்யாய ஷிகாயை வஷட்
ஆதித்யாய கவசாய ஹும்
சூர்யாய நேத்ராப்யாம் வஷட்
க்ருணயே அஸ்த்ராய ஷட் - இதி திக்பந்த:
என்னும் தந்திரசாரத்தில் ஷடங்கன்யாசத்தை
சொல்லியிருப்பர். இதிலிருந்து, இடமிருந்து வலமாக சொல்லும்போதும், க்ருணி, சூர்ய, ஆதித்ய என்று, சூர்ய நடுவில் இருக்கிறது. ஆதித்ய, சூர்ய, க்ருணி என்று வலமிருந்து இடம் படிக்கும்போதும், சூர்ய நடுவில் இருக்கிறான். இப்படியாக, சூர்யன் இப்படியும், அப்படியுமே சமமே என்னும்
அர்த்தத்தைக் குறிப்பதாக, எண்ணிக்கையின்படி, 721 ஆகிறது. இதனை வலப்பக்கத்திலிருந்து படிக்கையில் 127 ஆகவேண்டியிருந்தது. அப்படி சொல்லாமல், 721 என்றே ஏன் சொல்லியிருக்கின்றனர் என்பதை என் அறிவிற்கு எட்டிய மட்டில்
எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தில், சங்கர்ஷண ஒடெயரு தமது வியாக்யானத்தில், ‘ஐது எரடுஷத ஏகவிம்ஷதி’ என்பதை, சூரியனின் கிரணங்கள் ஐந்து. பூர்வாதி நான்கு திசைகள் 4, ஊர்த்வ (மேல் திசை) 1 என, ஐந்து திசைகளில், திசைக்கு ஒன்றாக இரு நூறு., 5*200=1000 கிரணங்கள் என்றும், ஷத ஏக விம்ஷதி என்றால் 121 என்று சொல்லி, இந்த பத்யத்திற்கு க்ருணி: சூர்ய ஆதித்ய என்னும் மந்திரத்தில் சூர்ய
சொல்லிற்கு அர்க என்னும் சொல்லை அனுசரித்து, அ=1 ர்=2 க=1 என்று சொல்லி, ஷத ஏகவிம்ஷதி = 121 ரூபங்களை ஆத்யாத்மத்தில் அறியவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்.
இவற்றில், படிப்பவர்கள் எந்த விளக்கத்தை
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதைப்போல, ஆதிதெய்வமான தத்வதேவதைகளில், ஆதித்ய= ஆ=1, தி=3,
த்ய=2,
132 இதனை வலது பக்கத்திலிருந்து 231 ரூபங்களை சிந்திக்க வேண்டுமென்று
அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment