ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, May 15, 2020

#14 - பஞ்சமஹாயக்ஞ சந்தி

#14 - பஞ்சமஹாயக்ஞ சந்தி


கோ3வுக3ளொளுத்கீ34னிஹ ப்ர
ஸ்தா1வ ஹீங்கா1ரரெடு ரூப1தி3
ஆவி அஜக3ளொளிஹனு ப்ரதிஹாராஹ்வ ஹயக3ளொளு |
ஜீவனப்ரத3 நித4ன மனுஜரொ
ளீவித3தொ3ளிக3 பஞ்ச ஸாமவ
ஜாவ ஜாவகெ1 நெனெவரிகெ3 ஐதினு ஜனுமக3||14


கோவுகளொளு = பசுக்களில்
உத்கீதனு = உத்கீத நாமக பரமாத்மன்
இஹ = இருக்கிறான்
ப்ரஸ்தாவ = ப்ரஸ்தாவ நாமகன்
ஹிங்கார = ஹிங்கார நாமகன்
எரடு ரூபதலி = இந்த இரு ரூபங்களால்
ஆவியஜகளொளு = செம்மறி ஆடுகளில் மற்றும் ஆடுகளில்
இஹனு = இருக்கிறான்
ஹயகளொளு = குதிரைகளில்
ப்ரதிஹாராஹ்வய = ப்ரதிஹார நாமகன் (இருக்கிறான்)
ஜீவனப்ரத = வாழ்க்கையைக் கொடுத்து அருளும் ஸ்ரீபரமாத்மன்
நிதன = நிதன நாமகனாகி
மனுஜரொளு = மனிதர்களில் இருக்கிறான்
ஈ விததலி = இப்படியாக
இஹ = இருக்கும்
பஞ்சஸாமவ = சாமவேதத்தால் புகழப்படுபவனான இந்த 5 ரூபங்களை
ஜாவ ஜாவகெ = ஒவ்வொரு நாழிகையிலும் (எப்போதும்)
நெனெவரிகெ = நினைப்பவர்களுக்கு
ஜனுமகள = பிறவிகளை
ஐதிஸனு = கொடுக்க மாட்டான் (மறுபிறவி இல்லாமல் செய்வான்).

சத்கதியைக் கொடுப்பவனாகையால், பசுக்களில் உத்கீத என்னும் பெயரைக் கொண்ட பரமாத்மன் இருக்கிறான். உத்கீத போன்ற பெயர்களின் குறியீடு என்னவென்று சாமவேதத்தை அத்யயனம் செய்பவர் அறிந்திருக்கிறார். உத்கீத, ப்ரஸ்தாவ, ஹிங்கார, ப்ரதிஹார, நிதன என்று சாமகானம் 5 விதங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்தில், நாராயண, வாசுதேவாதி 5 ரூபங்களால் பரமாத்மன் இருக்கிறான். இந்த ரூபங்களை யக்ஞ சாதனமான பஞ்ச பசுக்களில் சிந்திக்க வேண்டும். 

பசுக்களில் உத்கீத நாம நாராயண ரூபத்தை சிந்திக்க வேண்டும். செம்மறி ஆடுகளில் மற்றும் ஆடுகளில் அதே பெயரில், அதே ரூபமாக பரமாத்மன் இருக்கிறான். அவற்றில் முறையே பிரஸ்தாவ நாமக வாசுதேவ ரூபத்தையும், ஹிங்கார நாமக சங்கர்ஷண ரூபத்தையும் சிந்திக்க வேண்டும். குதிரைகளில் அதே ரூப அதே பெயரில் இருக்கிறான். அவற்றில் ப்ரதிஹார நாமகனாக ப்ரத்யும்ன ரூபியான ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான். 

உலகைக் காப்பவனான ஸ்ரீபரமாத்மன், மனிதர்களில் அதே ரூபத்தில், அந்த பெயரில் இருக்கிறான். அவர்களில் நிதன நாமக அனிருத்த ரூபத்தை நினைக்க வேண்டும். இப்படியான 5 ரூபங்களை ஒவ்வொரு கணமும் சிந்திப்பவர்களுக்கு, மறுபிறவி வராமல் அருள்கிறான். 

தாசராயர் சொல்லாமல் விட்ட நாராயண வாசுதேவாதி ரூபங்களின் சிந்தனை எதற்கு செய்யவேண்டும் என்று கேட்கலாம். நாராயணாதி ரூபியான பரமாத்மன் உத்கீதாதி சொற்களால் புகழப்படுகிறான் என்று சந்தோக்ய உபநிஷத் பாஷ்யத்தில் ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார். இதில் 2ம் அத்தியாயம், 6ம் கண்டத்தில்:

பஷுஷு பஞ்சவிதஞ் ஸாமோபாஸீதாஜாஹிங்காரோsவய: |
ப்ரஸ்தாவோகாவ உத்கீதோsஷ்வா: ப்ரதிஹார: புருஷோனிதனம் பவந்திஹாஸ்யபஷவ: 
பஷுமான்பவதிய ஏததேவம் விர்த்வா பஷுஷுபஞ்சவிதஞ் ஸாமோபாஸ்தே ||

பசுக்களில் 5 வித சாமத்தை நினைக்க வேண்டும் என்று தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லிய அர்த்தத்தை சொல்லி, இறுதியில் 5 வித சாமவேதத்தால் புகழப்படும் 5 ரூபங்களை யார் நினைக்கிறானோ, அவன் பசுவந்தன் ஆகிறான் என்று சொல்லியிருக்கிறார். அதாவது, பசு நாமக பரமாத்மனை அடைகிறான் என்று பொருள். இந்த உபநிஷத் பாஷ்யத்தில், 

ஸாதுத்வாத்ஸாம நாமானம் ஸமஸ்த குணபூர்ணத: |
ஸமஸ்தம்ய உபாஸீத நாராயண மனாமயம் ||
ஸர்வஸாம்னாம் தேவதேதி ஸமுக்த: ஸாதுதர்ம பாகிதி ஸாமஸம்ஹிதாயாம் ||
நாராயணாக்ய உத்கீத: உத்கீய: ப்ரணவேனயத் ||
உத்கச்சந்தி யதோஸ்மாத்வ வாஸுதேவாதி மூர்த்தய: |
ப்ரதமாவதார ரூபத்வாத்வாசுதேவ: பர:புர்மா ||
ப்ரஸ்தவோ நிதனஞ்சாபி ஸங்கர்ஷண: உதாஹ்ருத: | 
சங்கர்ஷணோஹி சங்கர்த்தா ப்ரத்யும்ன: பரமேஷ்வர: ||
ஹிங்கார இதி ஸம்ப்ரோக்தோ ஹீதிஸ்ருஷ்டிருதீர்யதே ||
ப்ரஸித்த தாஹிஸ்ருஷ்டி: ஸ்யாதனிருத்த: பரோவிபு: |
ப்ரதீஹார இதிப்ரோக்த: ஸஹிகார்யேஷ்டிதம் ஜகத் |
ப்ரதிப்ரதிஹரேன்மித்யம் மூர்த்திப்ரதிஹ்ருதேஸ்ததா |
பாலனாத்ஸுக காரித்வாத் பஷு நாமா ஜனார்த்தன |
முக்தஸ்தர்த்வா பவத்யேவ பஷு உபாஸகோ ஹரீரிதிச |
யக்ஞேனாஞ்சன ஹேதுத்வாத்தஜிஸ்தோ பகவானஜ: |
அவிஸ்தஸ்த்வ விரேபோக்த: ஊர்ணயா ஷீததோsவனாத் |
கௌஷ்சஸக்கதி ஹேதுத்வாத்கோஸ்த: ஸபுருஷோத்தம ||
அஸ்வஸ்சைவாஷு கந்த்ருத்வாத்புருஷ: பூர்த்திஹேதுத இதி ச |
அஜா இத்யாதி பஹுவசனம் பஹுரூபத்வாத்தகவத: || 6

இவற்றின் பொருள் என்னவெனில்:

சமஸ்த குண சம்பூர்ணனாகையாலும், ஸாது ஆகையாலும், பரமாத்மனுக்கு சாம என்று பெயர். இப்படி அனைத்து சாமங்களால் புகழப்படுபவனும், அல்லது அனைத்து நாமங்களும் பரமாத்மனுடையதே என்று யார் உபாசனை செய்கிறார்களோ, அவன் முக்தியை அடைகிறான் என்று சாமஸம்ஹிதையில் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீநாராயணன், ப்ரணவ மந்திரத்தால் அறியப்படுபவன் என்பதாலும், அல்லது, நாராயண ரூபத்தினாலேயே வாசுதேவாதி மூர்த்திகள் பிறந்திருப்பதால், உத்கீத என்றும் அழைக்கப்படுகிறான். 

* முதலாம் அவதார ரூபமாகையால், வாசுதேவனுக்கு பிரஸ்தாவ என்று பெயர். 
* சம்ஹாரத்தை செய்பவன் ஆகையால், நிதன என்று சங்கர்ஷணனுக்குப் பெயர். 
* பரமேஸ்வரன் ஆகையால், ப்ரத்யும்னன். 
* ஹி என்றால் ஸ்ருஷ்டி என்று பொருள். ஸ்ருஷ்டி செய்பவன் ஆகையால், ஹிங்கார என்று ப்ரத்யும்னனுக்கு பெயர். * உத்தமரான பிரம்மாதிகளுக்கு தலைவன் ஆகையால், அனிருத்தன் என்று பெயர். 
* ஒவ்வொரு செயல்களிலும் இந்த உலகத்தை தவிர்ப்பனாகையால், பரமாத்மனுக்கு ப்ரதிஹார என்றும், அனிருத்தன் என்றும் பெயர். 
* உலகத்தை காப்பவன் ஆகையால், சுக-கரன் ஆகையாலும், ஜனார்த்தனனுக்கு பஷு என்று பெயர். 
* பஷுவந்தன் ஆகிறான் என்றால், முக்தனாகி, பஷு நாமக பரமாத்மனை சேர்கிறான் என்று பொருள். 
* யக்ஞத்திற்கு பயன்படும் பொருட்களாக இருப்பவனாகையால், அஜ என்று, ஆடுகளில் இருக்கும் பரமாத்மனுக்கு பெயர். 

* ஆவி என்றால் செம்மறி ஆடு. அவற்றில் இருக்கும் பரமாத்மனுக்கும் ஆவி என்று பெயர். 
* செம்மறி ஆட்டின் மயிர்களால் ஆகும் தாவளி, சால்வை, ஆகியவற்றால் குளிரிலிருந்து காப்பாற்றுகிறான் ஆகையால், பரமாத்மனுக்கு ஆவி என்று பெயர். 
* சத்கதிக்கு காரணனாகையால், பசுக்களுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மனுக்கு கோ என்று பெயர். 

* ஆஷுகந்தா = வேகமாக போகிறவன் ஆகையால் அஸ்வ என்று அஸ்வத்திற்குள் இருக்கும் பரமாத்மனுக்கு பெயர் உண்டு. 
* அனைத்தையும் முடித்து வைப்பதற்கு காரணனாகையால், பரமாத்மனுக்கு புருஷ என்று பெயர். 

இத்தகைய ஆதாரங்களை மனதில் வைத்தே, தாசராயர் பசுக்களில் பஞ்சசாமத்தை உபாசனை செய்யவேண்டும் என்று கூறுகிறார். 

***

No comments:

Post a Comment