#15 - பஞ்சமஹாயக்ஞ சந்தி
யுக3சதுஷ்டயக3ளலி தா1னி
த்யுக3 ப்ரவர்த்தக த4ர்மக1ர்மக3
ளிகெ3 ப்ரவர்த்த1க1 வாசுதேவாதீ3ரெரடு3 ரூப
தெ1கெ3து3 கொண்டு3 யுகா3திக்ருது தா
யுக3ப்ரவர்த்தக நெனிஸி த4ர்ம
ப்ரகடகனு தானாகி3 ப4குதரிகீ3வ ஸம்பத3வ ||15
யுகசதுஷ்டயகளலி = க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுக என்னும் 4 யுகங்களில்
தானித்து = தானே இருந்து
யுக ப்ரவர்த்தக = யுக யுகாதிகளில் நடைபெற வேண்டிய தர்ம கர்மங்களை செய்பவனாக
தர்ம கர்மகளிகெ = அந்த தர்ம கர்மங்களுக்கு
ப்ரவர்த்தக = காரணனாக
வாசுதேவாதி = வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும்
ஈரெரடு ரூப = நான்கு ரூபங்களை
தெகெது கொண்டு = தரித்து
யுகாதிக்ருத் = யுகாதிக்ருத் என்னும் பெயரில்
யுகப்ரவர்த்தக = யுகத்திற்கு காரணமானவன் என்றும்
எனிஸி = பெயரைப் பெற்று
தர்ம ப்ரகடகனு = அந்தந்த காலத்தில் இருந்த மக்களால் அந்தந்த தர்மங்களை செய்விப்பவன்
தானாகி = செய்விப்பவனாக
சம்பதவ = செல்வத்தை. ஞானாதி ஈஸ்வர சம்பந்தமான செல்வங்களை.
பகுதரிகீவ = பக்தர்களுக்குக் கொடுக்கிறான்
க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்னும் 4 யுகங்களில், வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் ரூபங்களால் இருந்து ‘யுகாதிக்ருத் யுகாவர்த்தோ’ என்று சொல்வதைப் போல, யுகாதிக்ருத் என்னும் பெயராலும், க்ருத யுகத்திற்குப் பிறகு, த்ரேதா, அதன் பிறகு த்வாபர என அடுத்தடுத்து யுகங்களை தொடங்கி வைப்பவன் ஆகையால் யுகாவர்த்தன் என்றும், யுகப்ரவர்த்தகன் என்றும் பெயரைப் பெற்று அந்தந்த யுக தர்மங்களை, கர்மங்களை, அந்தந்த மக்களில் உள் இருந்து செய்து, செய்வித்து, தன் பக்தர்களிடமிருந்து யுகத்திற்கேற்ப நற்காரியங்களை செய்வித்து, செல்வங்கள் மட்டுமல்லாது, ஐஸ்வர்யம் என்னும் ஈஸ்வர சம்பந்தமான ஞானாதிகளைக் கொடுத்து அருள்கிறான்.
***
No comments:
Post a Comment