#5 - பஞ்சதன்மாத்ர சந்தி
***
ஈ ஷரீர சதுஷ்டயக3ளொளு
கோ1ஷதா4து1க3 பா4ரதிப ப்ரா
ணேஷ னிப்பத்தொந்து3 ஸாவிரதா3ரு நூரெனிப |
ஷ்வாஸரூபக ஹம்ஸ பா4ஸ்கர
பே4ஷரொளகி3த்த3வர கைபிடி3
தீ ஸரோஜ ப4வாண்ட3தொ3ளு ஸர்வத்ர தும்பி3ஹனு ||5
ஈ ஷரீர சதுஷ்டயகளொளு = மேற்கூறிய நான்கு விதமான
சரீரங்களில்
கோஷ = அன்னமய, பிராணமய, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய என்னும் 5 கோஷங்களில்
தாதுக = மேதஸ், மஜ்ஜ முதலான 7 தாதுகளில் வியாபித்திருக்கும்
பாரதிப ப்ராணேஷ = பாரதிரமண முக்யபிராணாந்தர்கதனான
ஹம்ஸ = ஹம்ஸரூபி ஸ்ரீபரமாத்மன்
இப்பத்தொந்து சாவிரதாரு நூரெனிப = 21,600 என்னும்
ஸ்வாசரூபக = ஹம்ஸ மந்திர ஜப என்னும் ஸ்வாச ரூபனாக
பாஸ்கர பேஷரொளு = இட வல மூக்குகளிலிருந்து வெளியேறும்
மூச்சுக்குக் காரணமான சூர்ய சந்திரர்களில் இருந்து
அவர = சந்திர சூர்யரின்
கைவிடிது = கைபிடித்து. அதாவது அவர்களின்
வழிகாட்டியாக
ஈ சரோஜ பவாண்டதொளு = இந்த பிரம்மாண்டத்தில்
சர்வத்ர = எல்லா இடங்களிலும்
தும்பிஹனு = நிலைத்திருக்கிறான்.
ஸ்வரூப தேகம் முதலான 4 தேகங்களில் முக்ய பிராணதேவர் இருந்து செய்யும் வேலைகளை சொல்கிறார். இந்த 4 சரீரங்களில், கோஷங்கள் 5. தாதுக்கள் 7. இவற்றில் இருக்கும் பாரதிரமண முக்யபிராணாருக்கு பதியான - அதாவது, ஸ்வாமியான ஸ்ரீபரமாத்மன், ஹம்ஸரூபத்தினால் பிராணதேவரில்
இருந்து 21,600 ஹம்ஸ மந்திர ஜபரூபமான ஸ்வாசங்களை, இடது வலது மூக்கினால் வரும்
ஸ்வாசங்களுக்கு காரணமான சந்திர சூர்யரின் வழிகாட்டியாக, அவர்களை காப்பாற்றியவாறு, இந்த பிரம்மாண்டத்தில் அனைத்து
இடங்களிலும் இருந்து நிலைத்திருக்கிறான்.
***
No comments:
Post a Comment